செவ்வாய், 30 ஜூன், 2009

எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..


அன்றொருநாள் என் அயலவன்,
ஏன்? என் சொந்தக் குருதியின் சொத்தவன்,
இன்றுவரை எங்கென்று இல்லாதிருப்பவன்,
வெறும் நினைவுகளிற்குள்
இப்போது!
எப்போதாவது இதயம் நெருட,
உண்மையை கூறினால்,
வெறும் சிலாகிப்பிற்குள் மட்டும் செழிப்பானவன்,

நடந்த சம்பவம் ஏறக்குறைய
இற்றைக்கு இருபதிற்கு மேல்
ஆண்டுகள் அவ்வளவு அசுரத்தனமாக,
அகலம் ஆற்றி அகிலம் ஆர்க்க ஆருமின்றி.

பிறப்பிடம் என்னிடம்தான்
என் ஊர் அதுதான் தும்பையூர்,
அங்குதான் பிறப்பில் இருந்து
பிடிமான படிப்புவரை,

தொடர்ந்து படிக்கும் வாசல் அவன் வீடுவரை
நிலைக்கவில்லை,
பொருளாதாரம் அவனை துரத்த
தொழில் தேடவேண்டிய தேடல்
வாகன ஓட்டியாக ஒருவாறு தன் தாயின்
சாமர்த்தியத்தால் அந்த தடையை தாண்டுகின்றான்.

சீட்டு!
ஊரில் இவர்களின் உன்னதமான ஓர் மாற்று வருவாயின்,
மைல்கல்.
உண்மையும் இதுதான்,
சொந்தமாக தொழிலாற்ற ஓர் வாகனம் ஒன்று,
தன் காலில் தாங்கி தரமேற்ற உற்றவகையென,
ஒற்றைக்காலில் நின்று,
தன் தாயின்,
சீட்டு வருவாயையும்,
சகோதரியின் கை,செவி வழி நகைகளையும்,
பணமாக்கி கையில் பத்திரமாகத்தான் ரூபா
ரொக்கத்தையும்,

ஒரு விவேகமான விடையாக தன் வாழ்வின்,
சகோதரங்களின் எதிர்காலமும் தன் கையில்,
இந்தப் பணமூலமே மூலதனமாக வண்டி ஏறி
வன்னி கடந்து வவுனியா வந்தடைந்தான்.
தகப்பனின் உறவுமுறை ஒருவர் மூலமும்,
இன்னமும்
வாகனம் பற்றி வாசம் தெறித்த
எவர் என்று தன் மைத்துனன் மூலம் அறிமுகம்
ஆற்றப்பட்ட ஓர் அகத்தானுடனும்,
வவுனியில் வாசம்.

சில,பல வாகனங்களை
சிரமமாக சிரம் கொண்டான்,
விலை என்ன என்பதையும் விவேகமாகவே
விகன்றான்,
முயல்வான முடிவான முற்றான தொகை கொண்டு
மற்ற நாள் பொழுதில் வருவதாக தகம் கொண்டான்.

அன்றுதான் அவன் ஆவியின் அற்ப ஆயுள் என்பதை
என்றுதான் எவர் எப்படி எடுத்தறிவார்?
தன் கைப்பணத்துடன்
தரமான,தனக்கு தகமான வாகனம் இதை எப்படியும்
எனதான ஏற்றமாக்கும் எண்ணத்தின்
வண்ணத்துடன் வாகனம் ஒன்றில் வாசமறியாத
வவுனியாக வாழ் வாசி ஒருவருடன்?

ஏன்?
எப்படி என்பதைக்கூட விளக்கமான விளக்கம் வீட்டி,
தன் மூலதனமான முழுப் பணத்தையும் கொண்டு
முன் முகமன் மூட்டியவனின் வாகனத்தில்
தனதான வாகனம் வாங்கும் வாசையான வகையுடன்

இடையில் இராணுவம் இவர்களை மறிக்க,
சோதனை என்பதான சோடினைகளிற்குள் இவன்
சோதாரப்படுத்தப்பட,
இவனின் இருந்த இத் தொகைப்பணம்
இயமனின்
இருண்ட நாக்காய் தொங்க
விசாரணை என்ற பெயரில் இவன் தனியாகவே
தனிமைப்படுத்தப்பட்டு,

ஒட்டுக் குழுவின் ஓங்கார துணையுடன்
வெட்டுவான்களின் வேக முகாமிற்கு அல்லது?
ஏதும் தரவற்ற தமைப்பில்
போனவன் இன்றுவரை எங்கென்றில்லாமல்????

இது போன்ற போக்கற்ற போக்குகள்
இன்றுவரை வன்னியில் அதுவும்
புயல்களின்
புண்ணிய பூமியில் வன்னியில் வாகம் வகைந்ததாக,
புலர்ந்ததாக
எந்த புண்ணியவானும் புனைகதை கூட
வெறும் வாய் மொள்ள முடியாது.
புலர்விற்கு கூட புயற்ற முடியாது,

இன்று செய்தி,
வன்னியில் என்றாவது முகாமில்
முகம் மூட்டும் முகவரி இழந்த தமிழன்
சுயாதீனமாக குடியேறுமிடத்து????
கூடவே ஆரியனின்
அறுப்பழிக்கும் ஆமியும்
அங்கு வதியுமாம்.

பலம் வற்றிப் போனால்,
வலம் வறண்டு போகும்.
புலம் புலர்ந்து போன எம்
பூமிப் புதல்வரிற்கு,
பூடகமாக புலையர் பூட்டும்
பூதாகரமான புனர் வாழ்வை
புலம் வாழும் நாம் எந்த ஏற்ற வழியை
கலம் கொண்டு கரமேற்றப் போகின்றோம்?

மேலே வரைந்த வாதை ஒன்றும்
கற்பனையில்லை,
காலக் கொள்வனவில் இன்றும் எம்மில்
காதம் கருக்கும் சதையுடன் சாறிய சாரம்.
இதைவிட இன்னமும் எத்தனையோ?
நெஞ்சம் நெரிக்கும் வஞ்சகக்கதைகள்,

இதை நான் இப்போ வரித்ததன் வாசம் வருடும்
நோக்கமே இனியும் இராணுவத்துடன்,
ஒட்டுக் குழுவின் ஒற்றர்களே எம்மை
வற்ற வைக்க,வதைக்க வயமாக இயங்கப்போகின்றான்.
இராணுவத்தின் இரும்புக்கரங்களை இதம் இறுக்கும்
இரையல்கள்,இரையர்கள்.

காலங்கள் எம் காத்தை முந்திய மூச்சடைத்த
முகவரிக்கே முகமாட வைத்துள்ளது,
நாம் மீண்டும் முப்பது வருடத்திற்கு முந்தைய
முகவரி மூட்டும் முயல்விற்குள்,
எந்த ஆர்ப்பனவுகளும் எமை ஆட்கொள்ளாது.
இயலாமை இருளிற்குள் இதம் இயற்றப் போகின்றோமா?

இல்லை,
எனக்கும் என் சிற்றறிவிற்கும் ஏதும் சிந்தையில்
சிலாகிக்கவில்லை.
உனக்குள் உறையும் உற்ற வழியிருந்தால்?????

என் சுற்றமே!
சுடு மொழியால் சுட்டு,
ஓற்றுமையின் ஓரம் தறித்த
ஒட்டுண்ணிகளே!
ஒட்டுக் குழுக்களே!

சுதந்திரத்தின் சூட்சுமம் சூரிக்கா சுரையர்களே!
சுந்தரர்களின் சுயங்களை தன்
இந்திரியத்திற்காக இழையறுத்த ஈனர்களே!
சிறு மதியர்களே சிங்களவனின் சீலம் சிரித்த,தரித்த
தற்கர்களே!

இனியும் உனக்கு ஏதும் உதயமாக வேண்டாம்,
நாயிற் கிடையாய் கிடந்த கீனர்களே!கீர்த்த
எம் வீரம் விழைத்த வீரியத்தை
அகமாற்றா அற்பர்களே!

கொற்றமே!
விறபனம் விதைக்கும் விகற்பமே!
குற்றமது கூற்றம் குறைக்க
குயல்வாயா?எம்
அயல்களெல்லாம் தம்
வயல்களில் கயல்கள் காக்க?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்