திங்கள், 1 ஜூன், 2009

ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.


வீற்றிருக்கும் வீரியம் அகம் நோற்றிருக்கும்,
நேற்றிருந்த நிலை என்றும் தேற்றம் புலர்த்தும்,
கற்றிருந்த களம் தனை புனர்த்தும்,காலை
ஒற்றி நின்றே காலக் கானமிசைக்கும்.அங்கு
வற்றியதெல்லாம் வசம் வகைத்திருக்கும்.

தூற்றி நிற்கும் பகை பாட்டிசைக்கும்,அது
வேற்றிருக்கும்,வேதினி பூண்டிருக்கும்.
ஊற்றிருந்த உற்றம் உறைந்திருக்க,அவர்
பூண்டிருந்த பூப்புக்கள் எல்லாம் புதைந்திருக்க.
வேண்டிருந்த புலம் வேர்த்திருக்க,நாளை
மாண்டிருந்த வீரம் காண்டிருக்கும்,காலம்,
மீட்டிசைக்கும் மானம் மீட்டிருக்க,வாட்டி நின்ற
வாகை வசம் நுழைய யாம் சூட்டியிருப்போம்,
மிகையான விதனங்களை,நூதனங்களை.

சுழலும் காலம் சூனியம் விரட்டும்,
விழலும் ஞாலம் விரயம் சாற்றும்,
கழலும் எல்லாம் கர்வம் கலைக்கும்,
மழலை எல்லாம் மாவீரம் பாடும்,
கழலையான காயம் மாற்றும்,காலக்,
காற்றும் கலந்தே கனதி ஊட்டும்.

நல் நம்பிக்கை ஒன்றே நாளை ஒற்றும்.
வல் வீரம் ஒன்றே வாழ்வை வளைக்கும்,
சொல்லா வல்ல சோகம் சோதி இழக்க,
கல்லாளனும் தன் களமிழக்க,வில்லாள
பெருஞ்சோதி ஒன்று வேதினியில் காலப்
பிரசன்னம். பிரபாகரம் எனும் பேர் சூடி…

மாண்டதான வீரம் மறுபடியும்,
காலம் அகண்டதான தாளம் அதை அகற்றி
விதண்டாவாத,விற்பனங்கள்,வினையறுத்தான
சொற்பதங்கள்,
அத்தனையும் ஆங்கே அருக்கொள்ள,
வித்தகங்கள் விதைத்து ஆரோகணிப்பான்,எங்கள்
முத்தங்கள் எல்லாம் முகை சூட.
வீரியன் பெயரும் பிரபாகரன்,அந்த
ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்