சனி, 28 பிப்ரவரி, 2009

வளம் சேர்க்க விழைந்திரு


வளம் சேர்க்க விழைந்திரு
இதைப்பார் அழகானதுதான்., இயல்பானதுதான், ஆயினும் அற்ப வாழ்வு எத்துணைமென்மையிருந்தும்யதார்த்தவாழ்விருந்தும்,இருப்பைதனமாக்கிக்கொள்ள ,அதற்குள்ளும் போராட்டவாழ்வு, இருந்தும், மீள்வது முடியாததாகி விடுகின்றது.எந்த பிறவிக்கும் இதே நிலைதான் நிலுவையில் உள்ளது.புரிந்து கொள்வதிலும்,ஆதங்கம்கொள்வதிலும்பயன்என்ன?வாழ்வுநிலைகொள்ளவேண்டுமெனில்போராடுவதைதவிரவேறென்னவேண்டுதல்களைஇறைஞ்சமுடியும்.வலம்வர,பலம்பெறு,பலம்பெற,வளம்பெறு,வளம்பெற,களம்பெறு.களம்
இதுதான்உன்நோக்கம்எனில்சுற்றம்கவனி,யதார்த்ததைபரிந்துணர்ந்துகொள்,
இதுதான்நிலையெனில்கொஞ்சம்நிதானம்கொள்,சந்தர்ப்பந்தங்களைஉளவுகொள்,உடந்தைநிலைமைகளை,உனதாக்கிக்கொள்,உரிமைகளைஉன்வசமாக்கு,அதாவது ஆயுதங்களை,அது வார்த்தைகளாகட்டும்,அல்லது புனிதமான உன் சொந்தங்களாகட்டும்,உனக்காகவே,உன்அல்லதுநீசார்ந்தஉறவுகளாகட்டும்,
உன் பலம்,, சொந்த நலனை பேண அனுமதியாதே,அது சமூகம் சார்ந்த பொது நலனாக மட்டுமே இருக்கட்டும்,சமூகம் சார் நலன் உன் சார் நலன்களை அது நிச்சயமாக பேணும்.மீனாக இருந்தால் நீயும்,அது சார் சமூகமும் நிச்சயம் நலன் பெறும்.
இதையே கவிஞனின் வரியிலே முடிக்க எண்ணுகின்றேன்.
காட்டில் நிலவாய்,கடலில் மழையாய்,
பிறந்தால் யாருக்கு லாபம்.
பசியில் உணவாய் ,பகையில் துணையாய்,
இருந்தால் ஊருக்கு லாபம், இருந்தால் ஊருக்கு லாபம். நன்றி.

சிந்தையில் உருவாகும் பரிணாம வளர்ச்சி


<p> சிந்தையில் உருவாகும் பரிணாம வளர்ச்சி

தொன்மையான எண்ணம், என்றாலும் மறுபக்கம் சிந்தனை, என்றாலும் தேக்கமில்லாத நோக்கம் ஒன்றுதான். எனினும் மாறுபட்ட முயற்சி அல்லது சிந்தையில் உருவாகும் பரிணாவளர்ச்சி என்பது, ஏற்ற கால வளர்ச்சியின் அல்லது உருவாக்கத்தின் புறச்சூழலின், அதாவது உலக ஓழுங்கிற்கமைய
தேர்வுகளின் வாதைகளையும்,பாதைகளையும் மாற்றி அமைத்து நோக்கினை நோக்கி சீராக நடை போட வேண்டிய காலக் கடமை ஆற்றவேண்டிய ஆளுமைகளை, செயற்திறன் சார் வினையுடன், ஆழக் கைகோர்த்து வீரியநடை போட துறைசார் நிபுணர்களையும்,இளஞ்சந்ததி
யினையிரையும், ஆர்வலர்களையும், அணி சேர்க்கவேண்டிய அவசர தேவை, நிர்ப்பந்தம் ஒன்று இங்கே நியம் தரிசிக்கின்றது. இது தேச விடுதலை நோக்கிய பயணம்,உதிரிகளை பற்றிய சிந்தனைகள் அறவே அற்றுப்போகவேண்டியதுதான், நிந்தனைகளைப்பற்றிய சிந்தனைகளை புறந்தள்ளி,காலச்சழற்சியின் பரிமாண,பரிந்துரைகளை முன்நோக்கி நகர்த்தல் இங்கே முகிழ்ந்தெழவேண்டியதோர் தேவை உள்ளதைகவனத்தில் கொள்ளவேண்டிய காலக்,காவியக் கடனாகும்,அசையா மலையும் ஆழக்கடலும்,ஆதிமனிதனின் ஆழுமைக்கு உட்படுத்தப்பட்ட காலம் உண்டு,
ஆசைகள் இங்கே அவலத்தை அரங்கேற்றியமையால் இன்று மீண்டும் ஓர் போர்க்கரங்கள் எங்கள் திசை நோக்கி அசைக்கப்பட்ட அவலம் தொடர் கதையானது,ஆயினும் தீர்க்கமான போராளியின் போர்த்திசை கொண்ட எங்கள் இளைய தேசக் குஞ்சுகள் அடைகாத்து விடை காட்டி மாவீர்ராகி,வளம் சேர்த்த எங்கள் வையகம் விடிகின்றவேளையிது, தூங்குப
வரை விட்டு தாங்குபவரின் பாரச்சுமையை நாமும் மனமாக பகிர்ந்து கொள்வோம்,அதையும் ஆவலாக,ஆசையாக,மேலோங்கிய ஆதங்கங்கள் மடி சுரக்க,விடி வெள்ளி சுமந்து வந்தவரின் தேகம்இளைப்பாற,இங்கிதமாய் நம் மடி சுமந்து,அவர்களை ஆசுவாசப்படுத்துவோம்,இந்த நினைவு வெறும் நினைவில்லை,காலம் இயைந்து நம் காவியத்தலைவன் கனன்று விதைத்த
அதன் அறுவடை,அநுபவிப்பதற்க்கு மட்டும் நாம் ஆசைப்படவில்லை,அதன் ஆதார்சங்களையும்,அடி வேர்களையும்,நாமும் ஓர் வகையில் தாங்கிய சிறியதாயினும் ஓர்விழுதானவர்கள் என்றவகையிலும்,எம்அடிவேர்,தாயகம்,
அதன் ஒவ்வொரு அங்குலமான நிலத்திலும், எமது ஏக்கங்களின் தாக்கம் அடி ஒற்றி,ஆர்ப்பரித்து,நினைவிலும், கனவிலும் ஆழ நீரோடி நீக்கமற நிலைத்து நிற்கின்ற, அந்த நினைவழியா,அகமகற்றா தாகத்தின் தாக்கமல்லவா இது? குருதியோடும் நரம்பில் நாளும்,நாடும் உணர்வின்
ஆழம்,இந்த நிலையில் என்போல் ஆர்ப்பரிக்கும் எத்தனையோ ஆத்மார்த்த விடுதலை விரும்பிகளின் ஆதங்கத்தின் சார்பாக, என் ஆன்ம திருப்தியின் நிலையாக,மீண்டும் தொடருவேன்,

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

ஆதங்கம் ஆக்கிரமித்த நெஞ்சின் சந்தம்


நியாயமான,யதார்த்தத்தை முன்னிறுத்தி திருசெ.யோகியின் நிலைப்பாடே இன்று களம்,புலம் வாழ் தமிழீழத்தை நேர்மையாக யாசிக்கும் தமிழுலக மக்களின் ஏகோபித்த நிலையாகும்.எந்த வல்லரசையும் அசைக்கும் செயற்திறன் மிக்க போராளிகளும்,இவர்களை ஈகத்தினூடாக இயக்கும் பெருந்தலைவன் இயங்குவான் என்பதை மீண்டும் இகத்திற்கு இயங்கு தளமாக தமிழீழம் இயங்குவதை நிலை நிறுத்தி எங்கள் தமிழீழ தாகத்தை நிறைவாகக் கொள்வோம்.சத்தியமாய் மலரும் தமிழீழம்.புலம் பெயர் சமூதாயம் தன் பாரியபெரும் பணியை புலத்தில் ஆரம்பித்து விட்டார்கள்.இதயசுத்தியுடன் இனிமையாய் காண்போம்,இழப்புக்கள் எமக்கு புதியனவல்ல,வல்லவர்கள் வீழும்போதும் வலிமையான விதையெறிந்தே போனார்கள்,வராலாறாய் தமிழீழம் கண்ட பாடம்.உறுதியுடனே புலம் பெயர் தமிழர்களும் எம் தார்மீகத்தலைவன் பின்னால்,வலிகளையே வலிமையாக்கி வரைந்தெடுப்போம் வதையில்லா தமிழீழத்தை.எத்தகு இடர்களையும்,எத்தர்களின்பித்தலாட்டங்களையும்,பிணந்தின்னிபேரினவாதிராஜபக்ஸாவின்அத்தனைஆக்கிரமிப்பு,அட்டகாசங்கட்கும்,நிலையான,இறுதியான,உறுதியான ஆப்பு எம்மவர்களால் இரட்டைமடங்காக கொடுக்கப்படும் ஓர்ம்ம் அதிவிரைவில், அரங்கேறும் திருநாள், வரும்நாள் எமதான அவலங்களும்,வார்த்தைகளிற்கப்பாற்பட்ட ஆதங்கங்களும்,ஓரளவேனும் எமை ஆசுவாசுப்படுத்தும்,இதுவரை இழந்த எமதான மக்களின்,மாவீர்ர்களின் ஆத்ம சாந்தி நிலைப்பெறும்,வெல்வோம்,பகையே உனதான ஈமங்கள் வன்னியில் அசுமப்படும்.எம் மக்கள் சிந்தியது வெறும் கண்ணீரும், குருதியும் மட்டுமில்லை,இவையனைத்தும் ஈழ வேள்விக்காக இழையப்பட்ட கேள்விகள் ஊடான யாகங்கள் பகையே! இதையெல்லாம் நீ முழுமையாக புரியுங்காலம் எமதான தமிழீழமண் தேசியக்கொடியுடன் ஆடசிபுரியத்தொடங்கி விடும்.இதுவரையான கனவுகள் இனித்தான் முழுமையான நனவுகள் சொல்லிற்கு முன் செயல்காண் தலைவனால் முன்மொழியப்படும் நாளின் நெருக்கத்தோடு வாஞ்சையுடன் வசந்தம் சந்தமாக எமதான தேசியகீதம் அதோ,அதோ எவ்வளவு இனிமையாக எம்மவர்களால் இசைக்கப்படும் அந்த வசந்த விழாவிற்காக பகை உனை எரிக்க,ஓடும் குதிரையின்,வீசும் புயலையும் வேடிக்கை பார்க்க விட்டபடி எம் தேசப்புயல்கள் களம் காண,வலுப்பெறும் ஆக்கிரமிப்பிற்கு ஆளான நெஞ்சின் சந்தம். இன்றைய செய்திகளும்,நாளை வலம் வர இருக்கும் வசந்தங்களும்,இப்படித்தான் காலச் செய்தியாக கட்டியம் கூறி நிற்கும்.
நன்றி
தும்பையூரான்

விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?


எமதான உறவுகளும்,உற்றார்,சுற்றம் எல்லோருமே தினம்,தினம் ஆக்கிரமிப்பாளனின் எறிகணையால் நிதமும் இறந்தும்,படுகாயமுற்று,எவ்வித முதலுதவிகளுமற்று,மருந்து,சிகிச்சை,ஆதார்ச மருத்துவம்,உணவு,தங்ககம்,உடை,ஒரு குடில்கூட அற்ற எவ்வித உதவிகளுமற்று,அநாதையாக,அனுசரணைக்க எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்று வாழ்வா,சாவா,என்ற எதுவித தெரிவுமற்ற கொடுமையான,வார்த்தைகளிற்குள் வசப்படுத்தமுடியாத கொடூரமான வாழ்வை எந்தவிதமான பற்றுக்களிற்கும் உட்படுத்தமுடியாத விலங்கைவிடவும் அவல வாழ்விலும்,தங்கள் வலிமையை,அதனூடான போராட்டத்தின் வலுவில் தங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதிவரை துணைபோகும் வரலாற்றுப் பணியில் தம்மை ஈடுபடுத்தி,களம் காணும் வல்லமையை புலம் பெயர்ந்து வாழும் நாம் இன்னமும் வீச்சாக எமதான அதி உச்ச பங்களிப்பால் மேம்படுத்தவேண்டிய,முக்கியமான,அதிமுக்கியமாக கவனிக்கப்படவேண்டிய காலக்கடமைக்கு உட்பட்டுள்ளோம்.இது தவிர்க்கவோ,அன்றி ஒத்தி வைக்கவோ முடியாத அறமாகும்.ஆயின் இதில் எத்தனை வீதமான புலம் பெயர் சமூகம் தன் கரங்களை களம் நோக்கி நீட்டியுள்ளது என்பதை கவலையுடன்தான் நோக்க வேண்டியுள்ளது.உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.இங்கு ஜேர்மனியை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டால் புலம் பெயர் தமிழர் ஏறக்குறைய 80,000பேராவது இருக்கும்.இந்த தொகையில் சர்வதேசம் நோக்கி எமதான இந்த அவல நிலையை ஆர்ப்பாட்டங்கள்,கவனயீர்ப்பு போராட்டம் மூலம் பங்கு எத்தனை வீதம்? ஒரு 20%கூட இல்லை என்பது வேதனையளிப்பதாகவே உள்ள இந்த நிலை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடாக இல்லை.ஏன் இன்னமும் விழிப்பணர்ச்சியற்று இருக்கின்றார்கள்.சரி மறு வளமாக நிதிப்பங்களிப்பை நோக்கின் கடைசி வேலை செய்யும் மக்கள் தொகையை 40000பேர் என எடுத்துக்கொண்டாலும் இவர்கள் தமதான நிதிப்பங்களிப்பை முழுமையாக ஆற்றி இருந்தால்,இப்படியே உலகம் முழுதும் புலம் பெயர் சமூகம் தங்கள் ஆழுமையான, முழுமையான பங்களிப்பை காலக் கனிவான கடந்த கால எல்லையில் ஆற்றியிருந்தால்,அதாவது வலிமையே வாழ்வு தரும் என்றபேரிகை மூலம் தலைவன் இட்ட வேண்டுகோளுடன் இயைந்திருந்தால்,இன்று நிலையே வேறு.சரி இப்போ, என்ன இந்த நிலையிலும்,, ஏதாவது சாட்டுக்கூறி தனதான தேசியப் பணியை ஒத்தி வைக்கும்,அல்லது மறுப்பளித்து ஏதாவது காரணம் கூறி ஏய்த்து திரிவதை விட்டு சீரிய காலக்கடமையாற்றி எமதான தேசியத்தையும்,இனத்தையும்,மண்ணையும், மீட்பதற்காய் களம் காணும் எமது தேசிய வீர்ர்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக சூரியத்தலைவன்,தேசியத்தலைவன் இவர்களிற்கு நாம் எமதான நேரிய,சீரிய,வினைத்திறன் மிக்க பங்களிப்பால் கரம்பற்றி எமதான வரலாற்றுப்பங்களிப்பை நிறைவாக்கி,நமதான மண்ணைமீட்கும் எமதான விடுதலை வீரர்களை இன்னமும் உரமேற்றி ,,விடுதலை காண விரைந்து செயலாற்றுவோமாக.புலம் பெயர் தமிழ் சமூகமாகிய நாம் 100%பங்களிப்பை எமதான விசாலமான நெஞ்சகத்தால் தங்ககமாக்கி தரணியில் எம் தேசம் மலர தானைத்தலைவனின் பாதையில் அணி திரண்டு,செயலாக்கி செம்மையாய் படைப்போம் தமிழீழம்.

தும்பையூரான்

வாகையின் முடி சூடி வசந்தமினி வாழ்வென்றே


08.02.2009
அரற்றுகின்றோம் அரவணைப்பின்றி,ஆயினும் எழுகின்றோம்
தரணியில் ஏற்றுவோம் தமிழீழக்கொடியன்று ஆதலால்
எழுகின்றோம் இயலுமான நன்நம்பிக்கையின் குரலால் இருக்கின்றான்
தழுவும் தமிழை தாயாகிக் காப்பாற்றும் தன்னலமற்ற தலைவன்
ஆதலால் எழுகின்றோம் இன்னமும் வீச்சாய்.

விசனங்கள், விசும்பல்கள், வீரம் ஓய்ந்திடுமோ என்றான
ஆதங்கங்கள், அத்தனையையும் அகத்தில் விறைப்பாக்கி,
ஓங்கி ஓர்மமாய் ஒருகுடையின் கீழ் திரண்டோம் நிலை சாயோம்
விரிகின்றோம் வியாபித்திருக்கும் தரணியெல்லாம் வீரியமாக்கி எம்
தலைவனது வீரியத்தை தழும்பாத தாகத்தை முறுக்கேற்றி.

ஆசனங்கள் அவர் வேய்வார் ஆரியத்திற்காய் அவாள் காய்வார்
சேதனங்கள் வந்தாலும் வேதனங்களாக்கி எம் வீரம்
சேதாரமாக்காமல் சேரும் களமாக்கிடுவான் வேலுப்பிள்ளை மறவனவன்
ஆதாரமாக்கி இனி ஆக்கிவைக்கும் தமிழீழம்.
செத்து மடிந்தாலும் சொத்தையாகி போகாரவர்,சத்தியமாய் தமிழீழம்
ஆக்கி வைத்தே அவர் வாழ்வார் அதுதான் எம் பிரபாகரம்.

இழப்புக்களால் வளர்ந்ததுதான் எங்களான தலைவன் படை
இத்தனை தெரிந்திருக்கும் இவன் கேளான்
தொடரும் படை நடத்தி
அத்தனையும் இழப்பதற்காய் அண்டையிலே வந்துள்ளான்
போரதின் சூட்சுமத்தை போராளன் எல்லாளன்
தானறிவான்
போற்றி வைக்கும் நிலையெடுத்தான் ஏற்றி வைக்கும் ஈகத்தாலே
வந்தனிடும் வெற்றி வாகை வாஞ்சையானதால்
இன் ஈழம் இனி ஈழம்
கேட்டதுண்டா,சமீபத்திய சேதியெல்லாம்
வாகையின் முடி சூடி வசந்தமினி வாழ்வென்றே.

தும்பையூரான்

இனி செவிக்கெட்டும் செய்திகளெல்லாம் வெற்றிச் சங்கொலிதான்



வளம் கொழிக்கும் வன்னியில் இருந்து வீர
வளம் வீழ்ந்து போனதாக செய்திகள் வருமென்று
காத்திருந்த வானரங்கள் இன்று முகம்
கறுத்து இடர் தோய்த்து இடி வீழ்ந்ததால்
வரப்பறுந்து போயிங்கு வாடிப்போயினராம்

எத்தனை நாளிங்கு குப்பை கொட்டுவதாய்
எண்ணியே ஈனத் தனம் ஏய்த்திருப்பார் அது அத்துணை
அற்றுப்போய் அரற்றுகின்ற நாளதற்கு இன்று
ஒத்திகை பார்ப்பதற்காய் புலிகள் வீசு குண்டு
விமானத்தை ஓர்ம்மாய் வீழ்த்திவைத்து இவர்
அத்தனை பேர்க்கும் மறு ஓய்வில்லை என்பதாய்
சூசகமாக விதி தூதொன்றால் அதிர வைத்தான்

முடிவல்ல இது ஆரம்பத்தின் ரம்பம் என
ஆக்கி வைத்த அக்னி பிரவாகத்தின்
முதல் அம்பு இது, இன்னமும் நாகாஸ்திரம் எப்போ என
நாதியற்று ஆக்கிரமிப்பு இராணுவம் ஆகுதியாகி
உடலது அனலாக இணைப்பறுந்து போயி
கடலது உதவி எதிர்பார்த்து நிற்குமோ?

எந்த நிலை ஏற்றாலும் கடன் நிலுவைதனை மீட்டெடுத்து,
அந்த நிலையாக்கி உந்தன் ஆக்கிரமிப்பை அறுத்தெறிந்து,
சொந்த நிலை மாற்றி எம் சோகம் உமதாக்கி,
சந்தங்கள் பாட எமை சாசுவதமாக்கி வைப்பான்.
பந்தங்கள் யாதுமற்று பாழாய்ப்போகும் உன் சந்ததிகள்,இதை
நிந்தனது சொந்தமாக்கி, எமதான வீர்ர் நிந்தனிற்கு பரி(சா)க்கி


எந்த வரி கொண்டு எமை ஏளனமாக்கி மேய்வதற்காய்
சொந்த முகவரி தொலைத்தெடுக்க தொலைதூரம் போய் மாய்மார்
இந்த நிலை தலையெடுக்கும் காலம் ஊட்டி நிலைகொள்ளும்
அந்தக்காலம் அந்திம காலம் ஆக்கிரமிப்பாளனை நாடியே
எந்த நொடியும் நோக்கி உனதாண்டூ ஊழிக் காற்றாய்.

இனி வரும் செய்திகள் காதில் ஒப்பாரி வைப்பதாய்
ஓங்காரமாகி எமதான செவியண்டை அண்டாது.
தனி யொரு ஈழம் மலர் செண்டெடுத்து தண்டெடுத்து,
ஊதி வரும் சேதி கேட்க உற்றார்,உறவினரே,எமதான
தமிழீழ நல் உறவுகளே
வரும் செய்திளெல்லாம் வெற்றிச் சங்கொலிதான்.
நயம் கொள்க வீர காவியம் அதனைச் செப்ப
லயம் கொள்க சிலாபித்திருக்க,சிரம் கொள்க
சீரியலான,சிறப்பான கலம் கொள்க காலப் பரசவத்தால்
தலைவன் கொண்ட,அவன்சேனை கொண்ட அற வெற்றி வேய.

நிமிர்ந்தெழு வீரச் சங்கொலித்த பிரபாகரம் கொள்
உணர்ந்தெழுக அவன் படையாற்றிய பிரளயம் வெல்ல
உதித்தெழுத உன் ஊடான நல் பங்களிப்பை உவந்தளித்து
உரிமம் கொள் உதயமாகுது உயர்வான,உயிரான,நமதான தமிழீழம்


நயமாகும்,நன்றியுடன்
தும்பையூரான்




வலைப்பதிவு காப்பகம்