சனி, 29 மே, 2010

காலமது நொடித்திருக்க காயம் மாறும்.


நான்!
காத்திருப்பேன் ஒரு கதை படிக்க,
காலமது நொடித்திருக்க காயம் மாறும்
காலம் காத்திருப்பேன்.

கோலம்
அது கோடிட்ட கோலங்கள் கோர்வைகள்
...மடிந்திருக்க,-
நான்
யாத்திருப்பேன் அதன் யதி,
அணை தரும்
சுதி, லயம்
லாயிக்கும் லயங்களில் லாவண்யம் பூத்திருக்க.

நான்
வேர்த்திருப்பேன் அந்த வேதனை தந்த ரணம்
இதில் வேடிக்கை மனிதங்கள் கோடிட்ட
கொய்யங்கள்,
கொத்தடிமைகள்,
கொடுமைகள்
அவை யாவும் அரண் மீட்கும்
உரிமங்கள் உயர்வாகும்.

நாம்
பூத்திருப்போம்-புவி வாழ்வில்
புனருத்தாரணங்கள் புடம் சூட
மனுதாரங்கள் மதிப்பளிக்க -நாம்
மகிழ்ந்திருப்போம்.
எங்கள் கொற்றங்கள் அன்று
கொலுவீற்றிருக்க.
புல வாழ்வு எந்த நிம்மதியையும்,மகிழ்வையும் தைப்பதில்லை.ஒன்றின் இழப்பில்தான் மற்றொன்றின் உயிர்ப்பு.
ஆம்!
மண்ணையும்,ம(மா)னத்தையும் இழந்து
பொன்னையும், பொருளையும் கூடவே
இருளையும் பெற்றுள்ளோம்.
மானசீகம் ஒன்று உண்டல்லவா?இது
மண்ணைப் பற்றிய சிந்தனையும்,அதன் வாசம் தடவிய வந்தனையுமே தவிர வேறென்னவாக
வளத்தை எண்ணமுடியும்.

அனுதினமும் இந்த யாப்பு மனவெரிவான ஏக்கமாக அதன்தாக்கம் அதுதான் நீங்கள் காணும் எனதான ஆக்கம்.
ஆயினும் அதுவும் ஒரு தாக்கத்தின் பிரதி விளைவாக காலம் அது காட்டும்.
வெறும் விளம்பரங்களில் குளிர் காயும் எண்ணம் தரித்திலோம்.

பகிர்ந்து கொள்ள பல விடயங்கள் உண்டு.எனினும்
காலத் தயக்கம் எம் க(ன)ணம் மொள்ளும்.

தொடரும்....

சனி, 22 மே, 2010

யார் இறந்தால்,யாரிழந்தார்?


வலி!
அது எனக்கு வலிக்கவேவில்லை.இந்த
பலி சுமந்து ஆற்றிய வேதனையின்,
சுவடுகள் கூட என்னை சுடவில்லை.
ஏனெனில்!
...நான் அந்த மண்ணிலும் இல்லை.ஏன் இப்போதும்
நான் அம் மண்ணின் மைந்தனும் இல்லை.

எப்படி இந்த வேதனைகளின் கொடுமைகள்
எனை சுடும்?
அல்லது-
எப்படி என்னால் அந்த ரணங்களின்
கதங்கள் எனை கவ்வும்?நான்
வெளிநாட்டின் வேதகன்.

துப்பாக்கி குண்டின் சத்தங்கள் கூட,
என் செவி மொள்ளவில்லை.ஈர
காற்றில் கலந்த கந்தக நெடிகூட
என் நாசி நுகரவில்லை.
அவர்களின் உத்தமமான,உயர்வான
போராட்டத்தின் பொறிகூட என்னை பாதிக்கவில்லை.
நான்தானே பக்குவமாக புலம் பெயர்ந்து விட்டேனே?
எனக்கென்ன ம(ரண)னக் கவலை?

இராணுவத்தின் வக்கிரகங்கள் எனை-
வலமாக்கவில்லை.பேரினவாதிகளின்
ஆழிக்கூத்து எனை சீண்டவில்லை.ஆகவே
அதுவரையில் அவர்களின் அனந்தம் நன்றே.

ஒரு முடறு நீர்க்கு அந்த
உறவுகள் பாடாய் பட்டதை,அதன் ஐீவித
வேதனைகள்--
பாலுக்கழுத பச்சிளம் பாலகரின் அழுகுரலும்,
எந்த பாலுக்கும் வழியின்றி அந்த தாயவள் பட்ட
வேதனைகள்,
வாழும் வயது முற்றி இயங்க முடியாமல்
அந்தரித்த எங்களின் முதியவர்கள்,
சுந்தர வயதில் சுகவாழ்விற்காய்
சுந்தரிகளின் அவலங்கள்!
வாலிப வயதில் வளமாக்க வாழ்வை
வையத்தில் வகுக்க வாய்த்த என்
வாலிபர்கள்,

அத்தனை உறவுகளும் போட்டதை போட்டபடி,
அடுத்த விநாடியில் எந்த நாடிகளை,
இழப்போமன அறியாமல்,அடுத்த வேளை கஞ்சிக்கு கூட,
கூடமில்லா கூடறுந்த என்-
உறவுகளின் எந்த வேதனையும் என்னை பாதிக்கவே இல்லை.

ஏனெனில்,
நான் இங்கு வசந்தம் விரித்த,
வயலில் அதன் வயப்பில்,
என்னை கறுப்பனே வெளியேறென,
எனை விரட்ட துடிக்கும்,
நாசிகளின் கொதிப்பு எனக்கு பழகி,
உடலும்,மனமும் அதனதன் இயல்பிலேயே
எருமை மேல் பெய்த மழையாக,
காலம் செல்ல அதுவே இயல்பாக --

உணர்வுகளின் சூட்சுமமும்,
உணர்ச்சிகளின் லயமும் எனக்கு எந்த ரீதியிலும்
எனை வதைக்கவில்லை.
எனக்கு எப்படி பிறக்கும் ரோசமும்,மானமும்,வெட்கமும்
உப்பு போட்டு தின்றதே எல்லாம் தின்பதற்கே தவிர,
உணர்வினிர்க்கில்லையே!

இல்லவே இல்லை-
எந்த கருமாந்த உணர்வும் எனக்கு
இல்லவே,இல்லை.
என்னமோ நடக்குது,நடந்தது.
யார் இறந்தால்,யாரிழந்தார்?
எதை இழந்தார்?ஏன் இழந்தார்?
எதற்காக இப்படி?
இவைகள் எல்லாம் எனக்கு சம்பந்தமே
இல்லாத கேள்விகள்.

நான் புலத்து குடிமகன்.
என் சுற்றமும்,முற்றமும்
ஏன் சகல உறவுகளும்,உணர்வுகளும்
இந்த புல முற்றத்து கொற்றமே.

முள்ளியவளை எங்குள்ளது?அதன்
பாரிய சரிதம் இப்போ யாது?அங்கு இறந்தவர்கள்
என் உறவும் இல்லை,அதனால் எனக்கு ஏந்த
உணர்வும் இல்லை.

நான் புலத்தில் மலர்ந்த புதியவன்.
என்னை எந்த உணர்வுகளும்,
ஏன் எதுவுமே!
எனை பாதிக்கவில்லை.
நான் இந்த நாட்டு குடிமகன்.
யார் அழுதாலும்,யார் செத்தாலும்
எவர் முட்கம்பிக்கள் வதைந்தாலும்.
எந்த புதைகுழிக்குள் எவரை புதைத்தாலும்,

எவரை சிங்களன் பாலியல் வன்புணர்ந்தாலும்,
யாரின் மார்பகத்தை அவன் அறுத்தாலும்
அரிந்தாலும்,
எவன் பெண்டிரை ஆமி புணர்ந்தாலும்,
எனக்கென்ன!
நான்
புலத்தில்
பிரசாவுரிமை பெற்ற,
ஈன(ழ)த் தமிழன்.
எனக்கு எதுவுமே வலியில்லை.ஆரியன்
தின்று,குதறி,எரித்து,புதைத்த,வன்புணர்வுகளின்
வலிகள் அதன் அலங்கோலங்கள்,
வலித்தெடுத்த வதைகள்--இன்னபிற
இழவுகள்.

எதுவுமே என்னை ஆக்கிரமிக்கவில்லை.
ஆனால்
எனக்கு என் மண்வேண்டும்.
யார் குத்தியென்றாலும் எனக்கு
அவலமில்லா அவல் வேண்டும்.

ஒன்று தெரியுமா?
நான்
தமிழனே இல்லை.
யேர்மனிய,கனடிய,பாரிசு,சுவிட்சர்லாந்து,
ஏன் சர்வதேச குடியுரிமைக்காய்
களம் தேடும் புலக் குடிமகன்.
வாழ்க சிறீலங்காவின் பேரினவாதம்!???!

நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.


வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயா
வீணர்கள் விளையாடும் வீதியல்லவா ஐயா
விபூதி பூசினாலும் வினை விடுமா ஐயா -நாம்
எந்த சந்நிதியில் தரிப்பெழுத சதி விழும் ஐயா?

நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.
பாழும் பரமர்கள் பதிலற்று பாவிகள்.
வேரும், விழுதுமாய் வேய்ந்த பகை நாள் குறிக்க,
ஆருமற்ற அனாதியாய் யார் ஆய்ப்பார்?

இத்தனை அவலமும் சுமந்த எந்தன் சுற்றம்.இன்னும்
எத்துணை சுமை,சுமக்க அவர் வாழ்வு பறித்தான்?
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல்,
நெஞ்செரிக்கும் நியங்கள் எந்த கொம்பன் எமை அணைப்பான்?

விடிவு நொடிகளுக்கு மட்டும்தானா?
நொடிக்கும் எமக்கில்லையா?
வல்ல எம் வயலர்களை வார்ந்தெடுக்க பகைக்கு
பாதை விரித்த பாரதமே பதில் இறுப்பாயா?

உனையே துணையென தலைவன் துய்த்த-
பெரும் கணையை,
துப்பிய பெருந் துரோகத்தின்,
வேரே நீதான்.
இத்தனை அழிவின் அரூப அற்பனே!
கால ஓட்டத்தில் உனதான காத்திரமான பதிலாய்
எம் பாதத்தில் நீ இறைஞ்சும் பாத்திரம் ஏற்பாய்.
பார் இது ஒன்றும் பாஞ்சாலி சபதம் இல்லை.

செவ்வாய், 18 மே, 2010

கரி நாள் இன்று.



வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்
வாழ்ந்த இனம்,
வாகையே வகையாய் வயல் மீட்ட வள்ளல்கள்,
தோகை விரித்தாட தோட்டம் அமைத்த தோகையர்கள்,
பாகைகளால் பருதி பருத்து பரவி,விரவியிருந்த
பரிவுகள் எல்லாம் பாவிகளால்,
பறி்தெடுக்கப்பட்ட,
கரி நாள் இன்று.

மாற்றம் அதற்கு மட்டும்தான் மாற்றம் மையல் விரிக்காது.
ஆனால்!
மாற்றம்!
சுழலும் இந்த பூமிப் பந்து
சுமந்து வரும்....
நாள் ஒன்று நயக்கும்.
நலிந்து கொய்யப்பட்ட எங்கள் தோட்டம்-
நயப்பெழுதி நயனம் நயக்கும்.

ஈகத்தார்க்கு இரப்பெழுதும் மனம்,
இகத்தில் இதயத்தில் மட்டுமே எழுதட்டும்.
சொல்லிற்கு முன் செயலாக்கும் சேடியர்கள்,
செய்கை நியம் மொய்ய நாம்-
பொய்கை பொலிவுற போற்றும் எம் வழி செல்வோம்.

நேற்றைய போலவே பொழுது மட்டுமே விடியும்,
நாம் பொருதும் போக்கில் மாற்றம் மருவ,
பொலிவுற ஓா்மம் ஓங்க உலகொழுங்கு மாறும்.
விதைத்த உடன் எதுவும் அறுவடையாகாது.நாம்
விரிந்திருந்தால் வினைகள் விடையிறுக்காமல் ஓயாது.

நீதிக்கு தண்டனையை எந்த நிர்மலன் தொகுப்பான்?
போதித்த புத்தனின் பொய்மையில் உலவ?
சாதிக்கும் சரித்திரம் தர்மம் நிலை நாட்டும்.
பாதித்த எங்கள் பரப்பெழுதி ஊட்டும்.

சனி, 15 மே, 2010

கோவணமும் ஆவணமின்றி அகலும்.


வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,
எத்தகம் மூடி சிதைத்தார்கள்?
உன் சித்தகத்தில் சிறக்கல்லையா?
பித்தகங்கள் பிறவியாக பிடரி வழி
பிறழ்ந்த சிங்களனவன் பிஞ்சு முதல்-எங்கள்
உறங்கு குழிவரை உயிர்த் தண்ணி பறித்தான்.

பொது மக்களின் புதை குழியில் நாளை இவர்
"மா"?வீரக்குதூகலம் கலக்க -எந்த
"பா" ஏந்தினார்கள்?ஆம்
அரக்க சிந்தையர்கள் கால,காலமாக... களி(ழி)க்கும்,
அனந்த நிலையது அவர்கட்கும் பொருந்தும்.
எந்த போதினி போற்ற பொய்கை கலந்தார்.

எம் இன அவல "சா"க்களில்:இவர்கள்
"சா"க்கடை திறப்பு.நாம் தீக்குளித்து
எரிந்த மேட்டில் சாம்பல் இன்னமும்
கரையவில்லை.
காயவில்லை!
கல,கலக்கின்றான்
சிங்களக் காடையவன்-பேரினவாத
தெருக் களத்தில்.

புலத்து நண்பனே!
என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்?
உன் கடனாற்ற!
வழமைபோல்
வேற்று முகம் காட்டி எந்த தோற்றுவாயில்
உன் வரப்பெழுதுவாய்?

இப்பவும் நீ தூங்க நாளை
உன் வீட்டு முற்றம் மட்டுமல்ல-நீ
கட்டியிருக்கும் கோவணமும் ஆவணமின்றி அகலும்.
விழித்திருக்க,
விவேகமாக செயலாற்று.அஃதின்றேல்
உன் முகவரியை மாற்றினாலும்-உன்
பிறப்பதை மாற்றமுடியாது.அது
உன் ஆயுள்வரை வரையறையின்றி
சந்ததி வரை வரப்பிளக்க வழியாகும்.

பசித்திரு!
பாரில் எப்போதும் விழித்தெழு -நாளை
ஊரில் உன் உறுப்பெழுத.

நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.


நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.
நிதம் அதை மனமது சாடும்.
பேரவலச் சாவதை இனமது மறக்குமா?
ஈனச் சாவென்றே மாற்று முகம் சூட்டுமா?
துரோகம் பெருந் துரோகம்,
எங்கள் இன மக்களை இழந்ததை நினைக்கால்
பெருந் துரோகம்.
இதயத்திற்கு மட்டுமல்ல!
இனத்திற்கே இழைக்கும் பெருந் துரோகம்.
ஈனச் சிங்களன் எங்கள் பெரு நிலத்தில்
ஈற்றில் ஈத்தியதை, வகை,தொகையின்றி வதைத்ததை,
எரித்ததை,உழக்கி எம் வயலெரித்ததை,
ஈகச் சுடர்களின் ஈர நிலத்தையும் இன்றும்
இழிவாக கரைத்ததை,
ஊர் கூடி உலகறிய உணர்வால் ஒன்றி,
உரத்து சொல்லாவிடில் பெருந் துரோகம்.
நமக்கு நாமே உந்தும் பெருந் துரோகம்.

வலைப்பதிவு காப்பகம்