வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மீண்டும் மீட்புக்களில்!




காதல் மடல் விரிய
கானமாய் மனம் விரியும்.
சாதல் அது சாயும்,
நுாதலுடன் நுதம் சூடும்.
நூதனமாய் நுகரும்
போதிலெல்லாம் காதலே காவலாக!

நினைவொற்றி செல்கின்றது கடந்த கால நியங்கள்.
தனைப் பற்றிய பழைய வைகைகளில்
பருவ காலங்கள் படமாய் ஓடுகின்றது.
மருவியதுவும்,கருகியதுமாக
ஒரு கால வெள்ள நீரோட்டம்
பெரு நிறைவாய் நினைவாய்
வயம் மீட்டிப் பார்க்கும் போதிலெல்லாம்
காதலே காவலாக!

இழந்தவைகளும்,
அதை மீண்டும் மீட்டதுவுமாக
களங்கள் கனம் எழுதிக் கொள்கின்றது.
அன்றடைந்த காயங்களிலும் ஒரு
கலயம் சூழ்ந்ததாக
அலையாய் ஒரு அற்புதமான புலர்வுகளால்
தனை மறந்து மத்தப்பாய்
மெய் சிலிர்த்து மேனி மேவும்
தழுவல்களில்
காதலே காவலாக!

மீட்டியும், மீட்டும் பார்க்கின்றேன்,
மீளாத சோதர தொடர்புகளென்ற
தொப்பிள் கொடியுறவுகள்
என்
சோலையில்
பூப்பறிக்க கூட பாதம் பதியாரா
என்கின்ற ஏக்க வலிகள்
என்
நெஞ்செரித்த நினைவுகள்
தண்மை பரவி மென்மையாய்
மெருகேற்றிய தடத்தில்
தொடர் பதிவேற்றி
தொழுகை யாக்கின்றது.
அதுவும்
காதலே காவலாக!

படரும் பாதை இனியும்
இனிமையாக இளமை சூட
வாழ்வெழுதிப் போக வகை யாவும்
வாய்ப்பாக அன்றைய காதலே
என்றும்
இளமை ஏற்றிக் கொள்கின்றது.
காதலே காவலாக!


வலைப்பதிவு காப்பகம்