செவ்வாய், 19 ஜூன், 2012

வினைத் திறன் வேண்டி
வினையாற்ற
விளைவோ விடியலகற்ற
உளையும் மனம்
செல்லரிக்கும் நியங்களால்
இதயம் கழுவ
இறைந்து உறைந்தே போகின்றது மனம்.

இயலாமை என ஏதும் உண்டா?
தினம்
வினவுகின்றது சுயம்-என்
இனம்,அதன் முற்றம்
காலாவதியான கலத்தை
இரைமீட்டு!--

இவர்களிடை
சில மோதல்களை தவிர்க்க
ஏது செய்யலாம்?
விடை உண்டு.
அதற்கான தடைகளை
எப்படி அகற்றுவது?

நாமோ இங்கு
ஆற்ற வேண்டிய செயலோ அங்கு
இங்கிருந்து பார்த்தால்
கடல் வானத்தை தழுவுவது போல் தோற்றம்.
நான் போகினும் நாள் போகினும்---ம்
மடல்களினால் ஆகலாம்.
ஆனது பல நியங்கள்.
ஆயினும்!
திடமான செய்கையெனில்
தோட்டத்தில்தானே தேடணும்.
எம் தேட்டங்கள் உணர்ந்தால்??___
தேடலே தேவையில்லை.

தேட்டம் உணர்ந்ததாக நானும்
உணர்கின்றேன்.
பாட்டமாய் அது பதட்டம் நீங்கும்.
காட்டமாய் வாதித்தார்கள்.
இல்லை ஆழமாய்
சுவாசித்தே வாசித்தார்கள்
ஆதலால்

ம்!
பார்ப்போம்.
கலங்கி தெளிந்தாயிற்று.
கலமும் உடனாயிற்று.
இனி
களத்தில்தான் தடம் வேயணும்.
வேய்வார்கள் எம் வேதியரெனும்
நன் நம்பிக்கையில்
திடமாகவே நான்.

திருப்பம் வரும்
அது
விருப்பேற்றி வரும்.
எரிவதை எடுக்க
கொதிப்பு தானாகவே மதிப்படக்கும்.
இப்போ
அனலை மட்டும்-
அதன் கனலை மட்டும்
அகற்றவா?
ஆற்றவா?
இல்லை
அடுப்பையே தகற்கவா?

சற்று பொறுத்தே பொதி உடைக்கலாம்.
சுமக்கலாம்
ஆசுவாசித்தே ஓயும் மனத்தை என்ன செய்ய?
உறக்கத்திலும்
உசாவான வேலைத் திடலிலும்
நினைவுகளும்
நியங்களும் தீண்டும்
இந்த வடத்தை???

திங்கள், 18 ஜூன், 2012



http://www.youtube.com/watch?v=LNdsa7GfM04&feature=player_embedded

சனி, 9 ஜூன், 2012

நினைவுகளை உறுத்தும்
செயற்பாட்டை வலியுறுத்தா
நனவுகளை உனை சிதைக்க
நியமெழுத ஊடுகின்றேன்.

யாரையும் சாடும் எண்ணம் அறவே இல்லை.
ஆயினும்
யாரும் சாராமல் யதி சூடியவனை வரையாமலும்
இருக்க முடியவில்லை.
பேரிற்காகவோ அன்றி
பெயர்ச்சிக்காகவோ அன்றி
ஊரிற்காக உதவும் கரம் நீட்டிய அந்த
நீட்சியை
தரவிறக்காமல் தணிவதில்லை என் தகவிறக்கங்கள்.

நிலையில்லா இடம் தேடி
நிரந்திர இடம் நாடி
பரந்த மனங்களின் பதம் நாடி
நிறைந்த நிமிர்வால் நிலையெழுதிய
தரத்தில் தாகம் நிறைத்த சன சமூக
திறப்பு விழாவின்
சிரத்தையில் அகம் நிறைய
அட்சய பாத்திரமாய்
அன்று பெரும் பதிவெழுதிய பாக்கியம்
பெற்றவன் பாலேசன்.

கணணி ஒன்று
காலத்தேவை கருதி
கடமையாற்றிய காலக்கடனில்
பெருமை மிகு பேறு பெற்றவன்
விழாவன்று
உண்டிகள் ஊருக்கு உவந்தளித்த சேவையில்
தனித்துவம் ஆற்றியவன்

கட்டுமான தேவை கருதி
கனதியான நிதியும்
நெருடா உளமும்
நேர்த்தியான நெடுவான் வளமும்
நோக்கிய நின்மதிக்கு
எனதான தொடுதள நன்றிகளை
உவப்பாக உரித்தாக்க
தெளிவான தெரிவெடுத்தேன்.

உரித்தானவனே
உளக் கொள்
உவந்திருப்போம்.
உடமைகளை கடமையாக்கி
கடந்தவனே
காரியம் கைகூட என் கரந் தந்தவனே
நேரிய வழியில்
நெய்ந்தாய் நேர்கொள்வோம்.

வலைப்பதிவு காப்பகம்