செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நிறைவெழுதிப் போகும் என் வீதியில்
பெயர்
பெயராமல்
சில ஆத்மங்களின்
குடியிருப்பில்
என் குதங்கள்
உயிர்ப்பெழுதும் போதினில்
என் இருப்பிருக்கும்
இவர்களின் பெயரில்
என் நெருப்பிருக்கும்


இதை
நாளையே என்
நா
வண்மையால்
நாடி எடுத்து
பொடிகளற்றி ஒரு பொய்கை வரையும்
பேறில்
என் பொறுப்பின்
இருப்பு
இறுமாப்பெய்யும்.

வசிட்டர்களை
வரலாற்றில்
படித்த எனக்கு
விசிட்டர்களாக
என்
தொடர்பில்
வகுப்பெடுக்கும்
வருணர்களிற்கு
வசந்தமான
வருடல்களுடன்
வாழ்த்தெழுதும் பேறகற்றினால்
என்
பெயர் தவிரும்.
 
துயர் தரும் சேதிகள் தவிர்க்க
துஞ்சாமல் என் தொடர்பெழுதலில்
படரும் ஒரு பாக்கியம்.
வெட்டொன்று துண்டிரண்டென
வேய்தலில் அவன் பாங்கில்
நெஞ்சகம்
நெருடி
வாயார
வருடுகின்றேன்.
பஞ்சாட்சரம்*
சரம்
மொய்ய
சுரம் பாடும்
இவன்
சரங்கள்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அறிந்ததுவும்
அறியாததவுமாய்
அகிலத்தில்
ஆயிரம் பாயிரங்கள்
ஓராயிரமிராய்
ஒன்றித்து
ஒப்புவமையற்று
ஒருக்க(ளி)ழித்து
விழித்து
விழுமியம் காணும்
விற்பகர்கள் அற்றதாய்
வினைகள்

இங்கு
விளையாடும் விகற்பத்தில்
விதி சொல்லி
வீதி அழித்து
மதியழிக்கும் மடமையின்
மகிமையின் கோலங்கள்
ஞாலங்களில்
எத் தீர்ப்பும் இன்றி
தித்திப்புக்கள்
திசை மாற
தீ
ஆசைத் தீயில்
அவனியின் அவலங்கள்.
ஆறாமல்
அவலக் காலங்களின்
மாயங்கள்.

மலங்கும் மடமையில்
துலங்காத தீபங்களாய்
சீலங்கள் சீரிழியும்-
சிறப்பதன் திறப்புக்கள்
துருப் பிடித்து
இன்று
மதம் பேசும் மடமையின்
கரங்களில்
மனிதம் விழித்தாலும் சாகும்.

விதியென ஓலம் போடும்
ஒரங்களில்
மதத்தின் மருமைகள்
மெதுமையாய்
சிரிக்க
வாழ்வறுத்து போகின்றது
மனிதக் கோடுகள்..

சனி, 4 ஆகஸ்ட், 2012


மனித சமூக வியாபாரத்தின்
மிகப் பெரிய மூலதனம்
கடவுள் எனும் கற்பனைக் பொருள்.

இந்த வியாபாரமும்
அதனூடான மூட நம்பிக்கையும்
இதனூடாக விழையும்
இம்மியும் பயனற்ற
இடரும்
எந் நாளும் அற்றுப் போகாது.

வலிமையற்ற வலிமையது
பலனே அற்ற பாதையது
புலனே ஏற்காது -ஆயினும்
புடம் சரியாத பூர்வீகமது.

ஏமாற்றுபவர்கள்
இருக்கும் வரை ஏமாறுபவர்கள்
இருப்பார்கள் என்பதன்
எளிமையான விளக்கவுரையிது.

தாற் பாரியமும்
தர்மம் என்பார்
தகமும் இதுவென்று தாயக்கட்டை வீசும்
தப்பான சமூகத்தின்
ஒப்புவமையும்
ஒவ்வாமையும்
ஒற்றி நிற்கும் சாரம் இதுதான்

இத் தளை
கவிழ்ந்தால்
தார்மீக சமூகம்
தளைத்தே ஓங்கி விடும்.
சுனை பாயும் சுகலயம்
சுட்டு வீழ்த்தப்பட்ட
தட்டுக்களின் த(ட)டையம் புரிவீரே!

மனித சமூகத்தின்
மூலப் பொருளின் பெரு வியாபாரி
கடவுள் எனும் கற்பனைக் காண்டமே.
மூடப் பழக்கம் முடங்க
தேடாமலே எம் சுதந்திரம் சுகிக்கும்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012


 மனக் கணக்கில்
ஏதோ மதி மயக்கம்?
கனக்கும் நினைவுகளால் வந்த தயக்கமா?
உவக்கும்
இது
உனக்கும் எனக்குமென எண்ணுவது பேதமை.
அது
தனிக் கணக்கு.

மனிதக் கணக்கு எப்போதுமே தவறுமா?
இல்லை
மாந்தர்களின் மையல்களில்
சாந்தமற்ற சந்தங்களில்
வசந்தமற்றுப் போனதாய்
வகுக்கும் சில நிலைகளில்
எந்தன் சிலை தவறி வீழ்ந்திடுமா?
இல்லை
எமது
சிலைகளும் சில்லான சிலிர்ப்பான
எண்ணங்களும் அதன் வண்ணங்களும்-

மனம் விட்டு
மதி திறந்து உரையாட
இரையாகிப் போனதாய்
தம்
உணர்வென சில மானிடங்கள்
தம் மதியை ஒரு
குச்சொழுக்கில் விரவி விட்டு
விதண்டாவாதம் பண்ணுவது விதியா?

இல்லை
புரிந்துணர்ணை புதை குழி தோண்டி
பரிந்துரை செய்யும் வையகங்களில்
மனக் கணக்கும்
மானக் கணக்கும்
சிலரின்
இரைப் பைகளில்
எம்
துரவுகளை துளாவி
அலசி
அவித்தெறிந்து போன தடயம் ஆறாமல்
அடுத்த அசைவில்
என்ன இசைவு வரும்?

நேற்றைய உரையாடலில்
தெளிவான சேதி ஒன்று
வீச்சற்றுப் போய்
திசைக் கொருவராய் தசை பிடுங்கி
தாளம் போடும்
யாலங்களினால் உன் மனக்கணக்கை
மரக்கையிலிட்டு மசித்து விடு
சேதி இதுவாக
என் செவிப் பறை நாண
தணலில் இட்டு என் சந்தங்களை -----??

புதன், 1 ஆகஸ்ட், 2012


ஏகாந்தம் ---
காந்தமானதாக கனக்கும் மனம்.
ஏகாந்தம் இனிமையானதா?
ஏந்தும் எந்த வழியிலும் சிலுவையானதாகவே
எனக்குபடுகின்றது.

தனிமையில் என்ன இனிமை காணமுடியும்?
தயாரிக்கும் தார்மீகமெனில்
அப்போதும் தனிமை எனக்கு கொடுமையானதே.
ஏது
செய்தாலும் யாராவது அரற்றுவதற்கு
எனக்கு ஒரு பக்கத் துணைவேண்டும்.
அன்றேல்
ஏதும் என்னால் ஆற்ற முடியாது.
எழுதும் போதும்
இடையிடையே ஏதாவது கதைத்தால்
தடையாக இருந்தாலும் ஒரு
உடை ஒன்று ஒன்றும்.

கற்பனைக் குதிரையில்
நான் என்றுமே சவாரித்ததில்லை.
வெறும் விற்பனங்கள் சூடி
வறுமையை வேய்ந்ததில்லை.
ஆதலில்தானோ
தனிமை
எனக்கு
கனிமையகற்றி போகின்றது?

உண்மையில்
தனிமையில்
இனிமை காணுபவர்கள்
காணலாமென காதலிப்பவர்கள்
என்
களத்தில் தளமிடுங்கள்.
தனிமை
ரொம்பவும் கொடுமையே எனக்குள்.

வலைப்பதிவு காப்பகம்