சனி, 11 ஆகஸ்ட், 2012

அறிந்ததுவும்
அறியாததவுமாய்
அகிலத்தில்
ஆயிரம் பாயிரங்கள்
ஓராயிரமிராய்
ஒன்றித்து
ஒப்புவமையற்று
ஒருக்க(ளி)ழித்து
விழித்து
விழுமியம் காணும்
விற்பகர்கள் அற்றதாய்
வினைகள்

இங்கு
விளையாடும் விகற்பத்தில்
விதி சொல்லி
வீதி அழித்து
மதியழிக்கும் மடமையின்
மகிமையின் கோலங்கள்
ஞாலங்களில்
எத் தீர்ப்பும் இன்றி
தித்திப்புக்கள்
திசை மாற
தீ
ஆசைத் தீயில்
அவனியின் அவலங்கள்.
ஆறாமல்
அவலக் காலங்களின்
மாயங்கள்.

மலங்கும் மடமையில்
துலங்காத தீபங்களாய்
சீலங்கள் சீரிழியும்-
சிறப்பதன் திறப்புக்கள்
துருப் பிடித்து
இன்று
மதம் பேசும் மடமையின்
கரங்களில்
மனிதம் விழித்தாலும் சாகும்.

விதியென ஓலம் போடும்
ஒரங்களில்
மதத்தின் மருமைகள்
மெதுமையாய்
சிரிக்க
வாழ்வறுத்து போகின்றது
மனிதக் கோடுகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்