திங்கள், 16 நவம்பர், 2015

நியம் புரி நயமாக

இருள் சூழ நின்றது எந்தன் வாழ்க்கை -அதில்
மருள் சூழ்ந்து கொண்டது என்ன சேர்க்கை?
அருளாக வந்தாளே எனது வாழ்வில் -அது
அகமேவி கொண்டதே நல்ல சேர்க்கை.

நிழலாகி கொள்வதில் அவளது சந்தம்.
அந்த நியத்தில் முதிர்ந்தெழுந்ததே எந்தன் சாந்தம்
வியாபமாய் விழித்தவளே எனது துணைவி -என்றும்
வீழாமல் விழித்ததே எமது பாதை.

வருவதும் போவதும் சுற்றமாகலாம்.
என்றும் வருந்தாமல் சூழ்பவள் துணைவியாகலாம்.
தருவதும் இழப்பதும் சுற்றத்தின் சூழல்-எதையும்
தாங்கி துணை (வ)தருபவளே சுகந்தமான துணைவி

வாய்த்தெழுந்து கொண்டதால் வறுமை போனது.
அதன் வயல் காட்டில் என்றுமே பசுமை படர்ந்தது.
தீதெழுதிக் கொண்டதால் சில சகாயம் கழன்றது.
அந்த தீயில் நாம் வீழாததால் விபரம் வென்றது.

இருள் சூழ நிற்பேனா என வாழ்வில்
இதயம் கொண்டு வாழ்வீரே நல் இணைகள் சூட
மருள் என்பது என்றுமே மாயையாகும்.
இதில் மனதிருத்தி வெல்வதே யோகமாகும்.

வலைப்பதிவு காப்பகம்