செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இல்லை என்ற சொல்லே என்றும் இல்லையாக வேண்டும்..




இல்லை என்ற சொல்லே என்றும் இல்லையாக வேண்டும்........பாரதியார்


நிர்வாக குழுமத்திற்கு மற்றும் அங்கத்தவர்கள்.பெற்றோர்கள் மிக்க கவனத்திற்கு!

கீழே வரும் இல்லை எனும் பதத்திற்கு உங்களின் தார்மீக பதில் வேண்டி தொடர விழைகிறேன்.

மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது எனில் .மாற்றம் எனும் திறன் கோரி!

1.நிர்வாக கூட்டத்திற்கு நிர்வாக உறுப்பினர்கள் நேரத்திற்கு சமூகமளிக்கிறார்களா?

2.அங்கத்தவர்கள்?

3.நடைபெறும் கூட்டம் முழுமையாகும் வரை இவர்கள் யாபேரும் சபையில் உள்ளார்களா?

4.முன்பள்ளியில் நடக்கும் நிகழ்விற்கு முதலில் பெற்றோர்கள் யாபேரும் நேரத்திற்கு சமூகமளிக்கிறார்களா?

5.ஆயின் அவர்களால் தங்களின் உற்றார்களை அதாவது உறவினர்களை உள்வாங்க முனைகிறார்களா?

6.எந்த நிகழ்வை எப்போதாவது நேரத்திற்கு ஆரம்பித்தீர்கள் மற்றும் முடித்தீர்கள் எனும் வரலாறு உங்களின் பாதையில் என்றாவது மலர்ந்ததுண்டா?

7.இன்னமும் வினாக்கள் உண்டு..


 நிற்க ஆக இதற்கொல்லாம் பதில் இல்லை என்பதை தவிர நீங்கள் மாற்று வழி ஏதாவது காண முனைகிறீர்களா?அதற்கும் இல்லை என்பதே பதிலாக...
எமது பார்வையில் இதற்கொலாம் ஒரே பதில் நேரத்திற்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் சற்று நெகிழ்வு தன்மையை அகற்றி காத்திரமாக செயல்பட முனையணும்.ஆரம்பம் சற்றே கடினம்தான் இது ஒரு பொது வெளி ஆயிரம் பிரச்சனைகள் வரும் வரணும் கலங்கணும் வாதங்கள் வரணும் பின் தெளியணும்.அப்போதே இந்த நேரங்களை கைக்கொளும் ஆற்றல் பிறக்கும்,

இதை செய்ய முனையாத தலைமையாலும் செயலாளராலும் எவ்வித பிரயோசனமும் சனத்திற்கும் வெகு ஜனத்திற்கும் இல்லை,

சரியான ஒரு தெளிவான கலந்துரையாடல் மூலமே இதை பின்பற்றலாமே தவிர நீங்கள் குறியிடும் சம்பிரதாயங்களோ அன்றி ஒழுங்கு முறைகளையோ இதன் மூலமே அரங்காக்கிக் கொளலாம் என்பதை கருத்தில் கொள்க.
இதற்கெல்லாம் ஒரு புரிந்துணர்வுகள் விட்டுக் கொடுத்தல் அறிவுப் பூர்வமான விளக்கங்கள் தேவை என்பதே யதார்த்தமாகும்.
இனியும் தொடர்பெழுதிக் கொள்ளல் விவேகமானதல்ல எனும் நிலையில் நான்..
நன்றி.




தமிழ்ச் சமூகத்தின் நேரகால கடைப்பிடிப்புக்கள்.


தமிழ்ச் சமூகத்தின் நேரகால கடைப்பிடிப்புக்கள்.

இதை சொன்னாலென்ன சொல்லாட்டால்தான் என்ன எங்களிற்கு வெட்கம்.ரோசம்.ஏன் அவமானம் கூட கிடைக்காது.ஏனென்றால் பாருங்கோ இது பழக்க தோசம்.இன்று நேற்று வந்ததல்ல என்றைக்கு நாங்கள் புலம் பெயர்ந்து அயல் மண்ணில் வேலைக்கு வெளிக்கிட்டமோ அன்றைக்கே எழுதாக் கடனாக இந்த நேர.கால ஒழுங்குகளை கைவிட்டிட்டோம்.வெள்ளைக்காரனிட்டை எதை பழகினமோ இல்லையோ இந்த நேரங்களை கடைப்பிடித்தலை ஒருபோதும் பழகி கடைப்பிடித்து ஒழுகமட்டும் பழகவே இல்லை.

என்ன இந்தாள் விசர்க்கதை எழுதுது என்று யோசிக்கிறிகள்தானே அப்பவே விளங்கீட்டுது நீங்கள் ரைமை கீப்பண்ண மாட்டீங்கள் என்று.
இல்லையென்ண்டால் மினைக்கெட்டு இதை வாசிப்பிகளே.


 இஞ்சை பாருங்கோ எண்டைக்கு இந்த வீடியோ எண்டு தமிழ் சனங்களின்ரை புழக்கத்திற்கு வந்துதோ அண்டைக்கு ஆரம்பிச்சது இந்த பேப்பழக்கம்.
ஒரு கல்யாண வீடு.சாமத்திய சடங்கு எண்ட புழுத்தல் சமாச்சரம்.குடி புகுதல்.நான் வீட்டை சொன்னான்.மற்றது இந்த பிறந்த நாள் கொண்டாடுறது.இதிலை இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை விடுவம்.மற்றதற்கெல்லாம் நாள்.கோள் பார்த்து அந்த காலத்திலை எங்கடை பீட்டன்.கொள்ளு தாத்தா.தாத்திமார்கள் ஒரு ஒழுங்கிலை எல்லாம் செய்தினம் எண்டு புழுகிற இந்த சனங்கள் இப்ப கல்யாண வீட்டிற்கு ஐயர் வரவில்லை வீடியோகாரன் லேட் எண்டு சொல்லி சும்மா ஒரு பூராயத்திற்கு நாள்.கோள்பார்த்ததை எல்லாம் கைவிட்டு இவங்கள் வந்தாப் பிறகுதான் எல்லாம் செய்ய துவங்குவினம்.

இத்தனை மணிக்கு தாலி கட்டு எண்டு பெரிய விலாசமாக இந்தியாவிலை சிங்கப்பூரிலை காட் அடித்து தெரிஞ்ச.தெரியாத ஒரு நாள் கண்டு பழகிய எல்லாருக்கும் காட் வைப்பினம்.ஆனால் பாருங்கோ ஐயர் வந்தால் வீடியோக்காரன் வரான்.வீடியோக்காரன் வந்தால் ஐயர் வரார் இப்படியே சாட்டுச் சொல்லி பார்த்த நன்நாள் இராகு கேது என நட்சத்திரங்கள் குழம்பி போனப்பிறகு ஒரு மாதிரி தாலி கட்டிவினம்.அதுவும் குறிக்கப்பட்ட நேரம் ஓய்ந்து போனபின்.........???

இப்படித்தான் பாருங்கோ இஞ்சை சாமத்திய வீடு எண்டால் என்ன அந்தியட்டி திவசம்.மேலும் திதி எண்டு இந்த புல மக்கள் அடிக்கிற லூட்டி இருக்கே அது பெரிய பொரியல் பாருங்கோ.....

அதை எழுதினால் நான் சொல்ல வந்த விடயம் திசை மாறிடும்.என்ன சொல்ல வாரன் எண்டால் நீங்கள் எதுவுஞ் செய்யுங்கோ அது உங்கடை காசு.கடன்காசு.ஏன் வட்டிக்காசாய் கூட இருக்காலாம்.ஆனால் விருந்துக்கு எண்டு கூப்பிடுகிற ஆட்களின்ரை நிலைமையை கொஞ்சம் யோசியுங்கோடாப்பா எத்தனை தடவை சொன்னாலும் அடம் பிடிப்பீங்கள்.கொண்டாட்டங்களை அந்த குறிப்பிட்ட நேரங்களிலை செய்து முடிக்கும் ஆற்றல் தேவை பேக் காரணங்களை சொல்லி மற்றவரை குழப்பதையுங்கோ.

ஆட்கள் வரல்லை.ஐயர் வரல்லை இதெல்லாம் வேண்டாம் பாருங்கோ. நீங்கள் இதை முன்னோடியாக ஆட்கள் வந்தாலும் .வராட்டாலும் குறிப்பிட்ட நேரத்திலை குறிப்பிட்ட அல்லது நீங்கள் கொண்ணாட விரும்பும் எந்த கொண்டாட்டங்களையும் அந்தந்த நேரத்தில் ஆரம்பியுங்கோ.வரும் சனங்கள் வந்தே தீரும்.
யோசிக்காமல் பாருங்கோ லொள்ளு....
இந்த கோயிலை மணி !அடிச்சால்சனங்கள்விழுந்தடித்துவருதுகளோஇல்லையோ?.தியேட்டரிலை மணி அடிச்சால் வெளியிலை நிற்கிற சனங்கள் உள்ளே வருகுதுகளோ இல்லையோ?


 ஜெயிலில் மணி அடிச்சால் சோறு வருகுதோ இல்லையோ?அதே போல நீங்களும் ஆட்களை உங்கடை நேரத்திற்கு இழுக்க வேணும் எண்டால் ஒரு ஒழுங்கான ஆயத்தத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களின் சகல கொண்டாட்டங்களையும் ஆரம்பியுங்கோ..சனங்கள் அந்த நேரத்திற்கு வந்து அவை அவையின்ரை ஒத்துழைப்பை தந்து சகலரும் குறைகள் இருந்தாலும் வேளைக்கே சொன்னமாதிரி செய்திட்டீங்கள என்ற திருப்தியுடன் ஏதாவது பிழைகள் இருந்தால் அந்த குறையிலும் நிறைகளை முன் மொழிந்து ஒத்திசைந்து போவினம்.பஸ்சோ.ரயிலோ நேரத்திற்கு வரல்லை எண்டால் புறு.புறுக்கும் எம் இனமே.நீங்களும் நேரத்திற்கு எதையும் கடைப்படிக்கவில்லை எண்டால் எந்த வில்லையை நாம் போடுவது?

உங்கை என்ன நடக்குது எண்டால் ஒண்டும் சரியான ஆயத்தங்கள் இல்லை.பேந்து ஆளாளிற்கு குறைகள்.பிழைகள் கண்டு பிடிக்கிறது அந்த நேரத்தில் வீணான வாதங்கள்.

ம்ம்ம்ம் ...என்னத்தை சொல்ல மனம் இப்ப எண்டாலும் கொஞ்சம் ஆறினால் ....???
ஒண்டை மட்டும் உறுதியாகவும்.தெளிவாகவும் சொல்வதெண்டால் குறிக்கப்பட்ட நேரத்தில் குறிக்கப்பட்ட விடயங்களை செய்து என்றும் முன்மாதிரியாக திகழுவது எனது பார்வையில் மட்டுமல்ல பலரது பர்வையிலும் காத்திரமாக தெரிவது ஒன்றே ஒரு நிகழ்வு அது மாவீரர் நினைவெழுச்சி தினமாகும்.அது புலத்திலும் சரி .நிலத்திலும் ரைம் கீப் எண்டால் ரைம் கீப்தான்.அங்கை சகலரும் எதிர் பார்ப்பது தலைவரின் உரை என்பதை கவனத்தில் கொள்க!

புரிஞ்சு நடவுங்க இனியெண்டாலும் எதை .எதை .எப்ப .எப்ப. யார் மூலம் நடைமுறைப்படுத்த நேரங்களை.அதற்குரிய நிகழ்வுகளை நிர்ணயிங்கள்....யார் லேட்டானும் தவிருங்கள்.....யாவும் நலமாகட்டும்.....

அதை விட்டு தலை பேசல்லை பிரதம விருந்தினர் பேசல்லை.நேரங்கள் காணாது.குழந்தைகளிற்கான நிகழ்வுகள். தகவுகள் எண்டு இனியாவது காரணங்கள் சொல்லி ரணமாக்காதீர்கள்........

இது பொதுவாக நம்மவர்கள் மத்தியில் நடந்த.நடக்கின்ற.இனியும் நடக்கப் போகின்ற காரியமாகும்.ஆனால் இனியாவது ரைமை கீப்பண்ணி ரைமை காதலியுங்கள்..நேரங்கள் உங்களை காதலிக்க........

தொடர்ந்து எழுத வைக்காதீர்கள்...
நன்றி

இது பொதுவாக எறியப்பட்ட தொப்பி அளவோ இல்லையோ என்னுட ன் ஆக்கிமெண்டிற்கு மட்டும் வந்து ரைமை வேஸ்ட் ஆக்காதீங்கோ...

காலத்தை காதல் செய்யுங்கள்........வள்ளுவர் சொன்னதை மீண்டும் இரை மீட்டல் அழகல்ல.

வலைப்பதிவு காப்பகம்