வியாழன், 4 மே, 2017

சிந்தனையும் செயற்பாடும்.


சிந்தனையும் செயற்பாடும்

மனித நாகரீகம் தோன்றி ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் நல்ல சிந்தனைகளின் பிரதிபலிப்பாக பண்பாடும் அது சார் நாகரீகமும் என்றும். எப்போதும் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த பரிமாணத்தை எட்டிச் செல்கின்றன.அதற்கான வழியாக மனித வாழ்வின் தேடல்களின் மூலம் ஏற்பட்ட சிந்தனையும் செயற்பாட்டின் மூலமே என்றும் வழிகாட்டியாக அமைந்தது என்றால் மிகையாகாது.

இங்கே தூய சிந்தனைகளின் வெளிப்பாடாக பண்பாடு மட்டுமல்ல பல புரட்சிகரமான அதேவேளை மக்களிற்கு பயன்தரக்கூடிய பல மாற்றங்களை செயலாக்க மனிதனின் நற் சிந்தனைகளே வழி வகுக்கின்றன.

அது ஆண்டிகள் தொடக்கம் அரச இயந்திரம் வரை முகிழ்கின்றன.ஒரு சமுதாய மாற்றம் வேண்டி அதன் வாழ்வியலிற்கு மிக அத்தியாவசியமான தேவைகளை மனிதனின் நற் சிந்தனைகளே உருவாக்குகின்றன.
அவை விஞ்ஞானமாக மாற்று வடிவம் கொள்ளும்போது அறிவியல் சார் நிலைப்பாடாக மாற்றம் அடைகின்றன.

ஆக,
பல கேள்விகளே வாழ்வின் திறவு கோலாக வயப்படுகின்றன.இதற்கு மூலமாக சிந்தனையின் வெளிப்பாடாக கேள்விகள் பிறக்கின்றன.

மேலும் தோல்விகளின் ஏற்படும்போது மனிதன் பட்டறிவு கூட வெற்றிக்கு ஏதுவான சிந்தனையாக வினாக்கள் தொக்கி அதற்கான விடைகள் மலர சிந்தனையே அடிகோலுகின்றன.

இப்படியாக எழும் ஆழமான சிந்தனகள் யாவும் முழுமை அடைந்ததில்லை.அது ஒரு தனிப்பட்டவரின் சமுதாய சிந்தனையாக எழும்போது பல தரப்பட்ட காரணங்களினால் அவை ஒரு வடிவம்கூட பெறுவதில்லை.ஒரு சிலரின் கருத்துக்ளின் முரண்பாடால் அவை சாசுவதமாக இருந்தாலும் முளையிலேயே மரணித்தும் விடுகின்றன.

சில சிந்தனைகளின் பரிமாணம் அவரின் தனிப்பட்ட விடா முயற்சியினால் பற் பல தோல்விகளின் பின் மிகப் பெரும் வெற்றியை தழுவிக்கொள்கின்றன.

அவை சமுதாய கொள்வனவுகளினால் அதாவது நாளாந்த தேவைகளை சுலபமாக்கும் விஞ்ஞானம்சார் செயற்பாடுகளினால் மனித நுகர்வு சக்தியை மேம்படுத்தும் நோக்கங்களை கொண்டிருப்பதால் அந்த சிந்தனைகள் துல்லியமாக மக்களை சென்றடைந்தன..

அதற்கு எத்தனையோ பல வித உதாரணங்கள் உண்டு. நாம் நாளாந்தம் நுகரும் பல விதமான வீட்டு உபகரணங்கள் அதற்கு சான்றாகும்.

இங்கே நான் குறியிடும் சிந்தனை என்பது ஒரு வட்டத்திற்குள் மட்டுமே அடக்கி இச் சிறு கடடுரையை முடிக்கிறேன்.

எமது ஊரில் ஒரு சொந்தமான கட்டிடத்தில் ஒரு நிரந்தரமான சனசமூக கட்டுமானம் தேவை என சிந்தனை வயப்பட்டபோது,இது நடக்கின்ற காரியமா என அங்கலாய்பே முதலில் தோன்றியதாக அறிந்தேன்.

அது இனிதே அரங்கேற ஒரு அரும்புகள் பாடசாலை தேவை என எழுந்த சிந்தனை.அதன் செயலாக்கம் யாவும் வெற்றி.

இங்குதான் செயற்பாட்டைப்பற்றி சற்று விரிவாக எழுத முனைகிறேன்.

நல்லதொரு சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்த இந்த அரும்புகள் முன் பள்ளி ,சனசமூக நிலையம் அதன் நோக்கத்தை கட்டுமானம் தவிர மற்றைய நிலையில் முழுமை அடைந்ததா என பார்த்தால் அங்கு வெறுமைதான் மிஞ்சுகின்றது.

இங்கு நான் குறியிட விரும்பும் முழுமையற்ற செயலாக பார்ப்பது!
சமூகநாடியின் பால் ஊரவர்களின் அக்கறையற்ற தன்மையே.மேலும் கலைசார் வடிவங்களை அரங்கேற்ற ஊரவர்களின் பங்களிப்பு சார் செயற்பாடு நிறைவாக இல்லை.

ஊரக மக்களின் பெரும் பங்களிப்புடன் வருடா வருடம் வெளியிடப்படும், சமூகநாடி,மற்றும் கலை விழா சார் இயங்கு நிலை மந்தமாக அல்லது காத்திரமான நோக்ககற்றி புலப்படுவது நியமாகும்,

ஏன் இந்த மந்த நிலை?
தமிழர் சார் விழா,களியாட்டம்,ஆலயம் சார் திருவிழா இவைகளில் காட்டும் ஈடுபாடு அல்லது ஊக்கமான செயற்பாடு ,
மிகவும் அத்தியாவசியமான கருத்து சார் வெளிப்பாட்டிலோ அன்றி கலை சார் வெளிப்பாட்டிலோ ஊரவர்களின் இயங்கு நிலை அன்றி ஒத்திசைவான செயற்பாடு ஏதும் பெரிதாக.நிறைவாக இலங்கு சார் செயற்பாட்டில் இருப்பதாக ஒரு ஊகம்கூட பண்ணமுடியாத புறச்சூழல் எம் கண்முன்னே யதார்த்தமாக விரிகின்றது.

புல.நில வாழ் மக்கள் யாபேரும் சேர்ந்து செம்மையாக செயற்படவேண்டி யாதார்த்த காலத்தில் உள்ளோம் என்மதை மனதிற் கொண்டு ஆவன செய்ய எம்மை நாமே உற்சாக வயப்படுத்துவோமாக.

சமூக நாடி மூலம் ஊரவர்கள்,இளையோர்கள் ஏன் எமதூரகத்தில் உள்ள புத்திமான்கள்,இளைஞிகள்,மாணவர்கள் சகலரும் சேர்ந்து தங்களின் எதிர்பார்ப்பை அல்லது மேன்மையான சிந்தனையை எழுத்து மூலம் தெரியப்படுத்துவதன் மூலம் ஒரு சமூக மாற்றத்திற்கு அல்லது சமூக மேம்பாட்டிற்கு ஒரு அபூர்வமான மிக அத்தியாவசியமான பரிந்துரையை முன்வைக்கலாம்,

மேலும் கலை சார் ஆர்வங்களின் மூலம் தங்களது ஆளுமையான திறமைகளை நிருபிக்க இந்த அரங்கை பாவித்து தம்மையும் தமக்குள் அடங்கியிருக்கும் பன் முக ஆற்றல்களை மற்றவர்களிற்கு ஊட்டுவதன் மூலம் பல திறமைசாலிகளை அடையாளம் காட்டலாம் அல்லவா?

ஒவ்வொரு மனிதர்களிற்குள்ளும் ஏதோ ஒரு வகை ஆற்றல்கள், ஆளுமைகள் நிரம்பியிருக்கின்றது என்பது எவ்வளவு நியமோ அதை எமது அரங்கின் மூலம் மக்களை ஆட்படுத்தும் நிலைமைகள் மென்மேலும் வளர எமது அரங்கையும்,சமூகநாடி எனும் சஞ்சிகையையும் மிகவும் ஆழமாக பயன்படுத்தி அடுத்த சந்ததியிடம் காத்திரமாக ஒப்படைக்கும் ஆளுமைகளும் நிறையவே உண்டு அல்லவா?இது எமது தார்மீக கடன் அல்லவா?

எமது ஊரில் ஒரு நிரந்தரமான சனசமூக நிலையமும்,அரும்புகள் பாடசாலையும்,மெருகேற அது சார் அரங்கமும் சமூகநாடியும் ஊரவர்களால் பயன்படுத்தி காட்டவேண்டிய காலக் கடமையை செவ்வனே செய்தால் மாத்திரமே சன சமூக நிலையமும்.அரும்புகள் பாடசாலையும் எமது ஊரிற்கு இன்றியமையாத தேவை எனும் சிந்தனையின் செயலாக்கத்திற்கு மகுடம் சூட்டும்.


எனவே உங்களின் கூரிய சிந்தனையால் எழுச்சி பெற்ற இந்த இரு கட்டுமானங்களும் நிலைத்து சமூக சேவை ஆற்ற வேண்டுமெனில் உங்களிற்காக எதிர்பார்த்து நிற்கும் இந்த கலை விழா எனும் களத்தையும்.சமூகநாடி எனும் தளத்தையும் சீராக்கி முன் நகர்த்த உங்களின் சிறப்பான ஒத்துழைப்பை சனசமூக நிலைய நிர்வாகத்தின் கரங்களை ஆழமாக பற்றி செயற்படுவதன் மூலமே ஊரிற்கு இன்றி அமையாத தேவை என்பதை புலப்படுத்தும்.

அத்துடன் இந்த கட்டுமானங்களை பாராமரித்து எதிர்கால சந்ததியிடம் காத்திரமாக ஒப்படைக்க வேண்டிய சீரிய பொறுப்பு தற்போது ஊரில் வாழும் அனைத்து மக்களிடமும் இருக்கும் பொரும் பொறுப்பு என்பதை மனதிருத்தி அதற்காக உங்களால் ஆன நிதி மற்றும் காத்திரமான கருத்துக்கள்,எதிர்பார்ப்புக்கள் அத்தனையையும் மனம் விட்டு கதைத்து செயலாக்கம் பெற முடிந்தளவு உங்களின் இருப்பை நிலை நாட்டவும்.

அஃதின்றேல் ஊரில் இசைவாக்கம் அடைந்த இரு கட்டுமானங்களிற்கும் நிதி தந்து ஊக்கப்படுத்தியவர்களின் வெறுப்பையும்.எதிர்கால நிதி பங்களிப்பையும் நிராகரிக்கப்ட்டு நிர்க்கதியாகும் நிலைக்கு தள்ளமாட்டீர்கள் எனும் ஆழமான எதிர்பார்ப்புடன் இந்த சிறு கட்டுரையை முடிக்கின்றேன்.

நன்றி.
செயலாக்கம் பெறும் எந்த சிந்தையும் வீணாவதில்லை.அது கைகூடும் ஊரக கரங்கள் உறுதியாக கை கொடுத்து செயற்பட்டால்.

என்றும்
ஊரகனாக
இருப்பதில் மகிழ்வெய்தும்
மணியம்..குமார்

திங்கள், 16 ஜனவரி, 2017

நான் பாயிரம் பாடிட பல்லவி நீதானே

பூவிற்குள் ஆயிரம் பூமாலை.....எந்தன்
தேர்வுக்குள் ஆயிரம் பாமாலை .....இந்த
பூமகள் ஊர்வலம்தான்..கவி பூணுது
உன் முகம்தான்..நான் பாயிரம் பாடிட
பாவை இவள்தானே.

கண்ணிற்குள் மின்னிடும் தோரணமாய்
கவி பின்னிட நாயனமாய்.இவள் கைத்தாங்கல்
நான் கொண்டேன். காதல் மணமும் கொண்டேன்.
பூமகள் ஊர்வலம்தான்
கவி பூணுது உன் முகம்தான்.

இவள் பார்வைகள் தண்மை ஒளி .அதில்
படர்ந்திடும் சலங்கை ஓலி
மனம் கானம் இசைத்திட காரணம் யாரிவள்
பூமகள் ஊர்வலம்தான்.
கவி பூணுது உன் முகம்தான்

இசை புல்லாங்குழல் இவள் தேகமாய்
இழை பூவின் மணம் மன வாசமாய்
ஒளிர்கின்றாள் ஓவியமாய்.என்னில்
இசை(க்)கின்றாள் காவியமாய்.

நான் பாயிரம் பாடிட பல்லவி நீதானே.
பூமகள் ஊர்வலம்தான்
கவி பூணுது உன் முகம்தான்.

வலைப்பதிவு காப்பகம்