செவ்வாய், 31 மார்ச், 2009

எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.


உபத்திரவம் ஈய்ந்தவர்கள்,உவாதையால் உழன்றிருக்க
உத்திரவாதம் உய்த்தவர்கள் உவகையால் நிறைத்திருக்க
பத்திரமாய் எங்கள் தாயுமானவர்கள்,மனம் பாகாய் பசிந்திருக்க
சித்திரமாய் சிந்தை கொள் சித்தம் சிறந்திருக்கும்.எங்கள்
ஈழம் தகைந்திருக்கும்.

இரவு,பகலென்றில்லாமல் இழவு தரிக்க வைத்த ஈனர்
இதய நோயால் இடர்கள் இரைக்க வைத்த பேயர்.
தரவு,மரபு தெரியாத் தண்டனையாய் தகைத்த ஊனர்
உறவழித்து,இனமழித்து,உற்ற சுகம் துய்ப்பாரா?,உறுக்கும்
ஈழ நகை தவிர்ப்பாரா?

ஓராயிரம் எறிகணைகள் ஓய்வின்றி ஓட்டிய இருளர்,
ஓராயிரம் இன,சனங்களை தயவின்றி சாய்த்த மிருகர்,
பாயிரம் பாடிடவா பார்த்திருப்பார் எங்கள் வீர்ர்?ஆரியர்
பாடை ஏற்றி எங்கள் வன்னியிலே புதைத்திருப்போம்.உதய
ஈழம் அங்கே தகைத்திருப்போம்

துவண்டிருக்கும் சொந்தம் சுவாசம் மீட்டிருக்க,
வண்டிருக்கும் மலர் வசந்தம் பூண்டிருக்க,
செண்டிருக்கும் மன சந்தம் அகண்டிருக்கும்.
கண்டிருக்கும் மான உயர் மகிழ்விருக்க,
கொண்டிருக்க கோலம் தளிர்ந்திருக்கும்.


ஈட்டிருக்கும் இகம் பார்த்திருக்கும்,சுக
ஏட்டிருக்கும் பாட்டிருக்கும் லயம் சேர்ந்திருக்க,
மாய்ந்திருக்க பகை ஆக்கிரமிப்பின் சுருதி துவண்டிருக்கும்.
சாய்ந்திருக்க சுழல் ஓய்ந்திருக்கும்,எந்த வையகமும்,
சார்ந்திருக்க எங்கள் தேசம் கொடி யாத்திருக்கும்.

தேர்ந்திருப்பான் சூரிய ஒளி சூட்சுமம் தூய்த்த,
எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
வீசி வரும் சுகந்த காற்றெடுத்து உகந்த ஊர்தெளித்த,
தாகத்திற்கும்,ஈற்றெடுத்த ஈழத்திற்கும் உயிர் தந்த மொழியானவன்.
தமிழீழ விழியானவன்.

ஞாயிறு, 29 மார்ச், 2009

பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்


விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விதிமுறைகள் ஏதும் இந்த புவனத்தில் இல்லை,மாற்றம் உண்டாக்கும் ஒவ்வொரு மாறுதலுமே இந்த பூமியை அடுத்த கட்டத்திற்கு மென்மையாக இட்டுச்செல்கின்றது.அது விஞ்ஞானமாகவோ,அன்றி மெஞ்ஞானமோ?எதுவாகிலும் பரிணாம வளர்ச்சி என்பது இப்படியான விமர்சனம் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு இவ்வகை விமர்சனம் ஓர் அடிப்படையை இட்டு வைக்கின்றது.

ஆயினும் தற்போதைய இக் காலகட்டத்தில் இந்த விமர்சனம் ஆக்க பூர்வமற்றதாகவே உள்ளது.சில சமயங்களில் இவ் விமர்சனம் இருப்பதையும் கெடுத்த கதையாக மாற்றும் அபாயமும் இதில் அமைந்திருப்பதை அவதானமாக பரிசீலிக்க வேண்டிய நுட்பம் அவசியமாகின்றது.சிலர் இதை மாற்றுக் கருத்து என்ற போர்வையில் ஊடறுத்து,ஏற்கக்கூடியதான கருத்தாக்க முனைவதை தற்போதைய கால கட்டம் உணர்த்தி நிற்கின்றது. இந்த கைங்காரியத்தை ஒட்டுக்குழுக்கள்தான் முன் நின்று தடத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.

தேன் தடவிய விசத்தை எம்மோடு ஒட்டி உறவாடி,பரிதாபம் எனகின்ற முகத்திரையையின் போர்வையில்,அனுதாபம் என்கின்ற பார்வையில் அணுகமுனைவதை பல சந்தர்ப்பங்கள் காட்டி நிற்கின்றன. உதாரணமாக,எமது ஒலி,ஒளி பரப்பு நிகழ்வுகளில்,மற்றும் ஊடகங்களில் எமது விடுதலைசார்ந்த போராட்டங்களின் யதார்த்த நிலைப்பாடுகளில்,ஆக்கிரமிப்பு ராணுவம் எமது மண்ணில் ஏற்படுத்தும் அவலங்களின் நிலைப்பாடுகளை,மனிதத்தன்மைக்குஅப்பாற்பட்ட அழிவுகளை, சர்வதேச உலகிற்கு,எமதான மக்களின் பார்வைக்கு கொண்டு வரும் இந்த மனிதாபிமான நிகழ்வுகளில்,தமது பொய்யான முகம் தரித்து,போலியான உரையாடல்களை முன் வைத்து,எமதான பார்வையில்,செயலில்,நீதியான உணர்வில் ஒரு தேக்கத்தை,முடக்கத்தை உண்டாக்க முனைகின்றனர்
.இந்த இழிவான செயலை இந்த வட்டுடை தரித்த,கோடரிக் கொம்புகள்தான்,தமதான முட்டாள் தனமான ஊடுருவல்கள் மூலம் தங்களை தாங்களே இனம் காட்டி,எமதான உணர்வுகளை முடமாக்குவதாக எண்ணி எங்கள் இனமான தன்மையை,அதனூடான பங்களிப்புக் களை ,கொச்சைப்படுத் முனைவதை எம்மில் சிலர் புரிந்து கொள்ள முனைய வேண்டும்,இது காலமறிந்து,இந்த ஞாலத்தில் எமதான விடுதலையின் வீச்சை முன் நகர்த்த இப்படியான தடைக்கற்களை இனம் பிரித்து அறிவதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்,அது மட்டுமில்லை இவர்களை அந்த தடத்திலேயே களைந்தெறிய ஆவன செய்ய வும் வேண்டும்.

இதன் மூலம் நாம் எங்களை மேலும்,இன்னமும் வீச்சாக்கி செயற்படுத்தலை,முனைப்பாக்க உளவுரணை இன்னமும் செறிவாக்கி, மென்மேலும் எமதான புலம் பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய,எமதுமக்களின்தேவையைகளத்தில்அதீதமாகபூரணமாக்கவேண்டிய,ஊர்வலங்கள்,கண்டனப் பேரணிகள்,கவனயீர்ப்புப் போராட்டங்கள்,இன்னமும் விடுதலையை வீச்சாக்கி காலப் பணியாற்றவோமாக. அத்துடன் வன்னியில் இத்தகைய இழப்புக்களிலும்,தமதான உளவுரணின் ரதத்திலே மட்டுமே தங்கி வாழும் எம் இன மக்களில் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய,வணங்கா மண் போன்ற சேவைகளை புலத்தில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எமது தாயகம் நோக்கி செலுத்தக்கூடிய மிகவும் தேவையான,சேவைகளை ஆற்ற எம்மை நாமே பூரணமாக உள் வாங்குவோம்.

களமும்,புலமும் இந்த கட்டுமானப்பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க வீச்சமுறும் எங்கள் விடுதலையின் நெருப்பு,இது போன்ற ஓர் காலம்,எமதான விடுதலையின் பேரொளியை சுமந்து வருங்காலம் கனிந்துள்ளது. இனியும் காலத்தை தாமதப்படுத்தாமல் களப் போராளிகளின் கரங்களையும்,எமது தேசியத் தலைமையையும் ஆழக் கரங்கொண்டு,அகமாக சிரமேற்றுவோம், புலத்தில் தமிழினத்தின் தேசியக்கொடியையும்,தமிழினத்தின் தேசியத் தலைவனின் ஓளிப் படங்களையும் தோளிலே தாங்கி எமதான தேசியக் கடமையை,எமதான திறன் கொள்,உளவுரணால் நிறைவாக்குவோம்.அது நிதி சார்ந்ததாகவும்,நீதி சார்ந்ததாகவும் மிளிரட்டும்.அதன் பேரிகையால்தான் எமது விடுதலை எமதாகும்.

இந்த கருவிகள் எம் வசமாக புல் உருவிகள் ஆங்கே களையப்பட்டு,நல் விதைகள் ஆங்கே உரிமம் கொள் நிலை பேணும்,எம்நிலை சாரும்.பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம் ஆகவே,மாற்றுக்கருத்து,வேற்றுப்பார்வை எனும் கோதாக்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒரே அணியில் எமது நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் இனவாத சிங்கள இராணுவத்தையும்,பேரினவாத அரசியந்திரத்தையும்,அவர் தம் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தி சர்வதேசமும் எமதான விடுதலையை அங்கீகரிக்க வேண்டி,புலத்தில் ஒன்று சேர்ந்து வளமான செயல்பாடுகளை ஆற்றுவோம்.தற்போதைக்கு எந்தவிதமான அர்த்தமற்ற விமர்சனங்களையும்,மாற்றுக்கருத்தென்ற முட்டாள்தனமான வாதங்களையும் புறந்தள்ளி,நியாயமான எமதான விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து,எங்கள் விடுதலையின் வீரியத்தை,உறுதியாக்கி,ஆனதான பங்களிப்பை தளமாக்கி,களத்தை விரிவுறச் செய்து எமதான இலட்சியத்தை அடைவதற்காக முழுமையாக பங்காற்றுவோம்.வெறும் சொற்கட்டுக்களை புறந்தள்ளி,தேசக்கடமையை விரிவாக்கி,நிறைவாக்குவோம்.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

சனி, 28 மார்ச், 2009

விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?


எமதான உறவுகளும்,உற்றார்,சுற்றம் எல்லோருமே தினம்,தினம் ஆக்கிரமிப்பாளனின் எறிகணையால் நிதமும் இறந்தும்,படுகாயமுற்று,எவ்வித முதலுதவிகளுமற்று,மருந்து,சிகிச்சை,ஆதார்ச மருத்துவம்,உணவு,தங்ககம்,உடை,ஒரு குடில்கூட அற்ற எவ்வித உதவிகளுமற்று,அநாதையாக,அனுசரணைக்க எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்று வாழ்வா,சாவா,என்ற எதுவித தெரிவுமற்ற கொடுமையான,வார்த்தைகளிற்குள் வசப்படுத்தமுடியாத கொடூரமான வாழ்வை எந்தவிதமான பற்றுக்களிற்கும் உட்படுத்தமுடியாத விலங்கைவிடவும் அவல வாழ்விலும்,தங்கள் வலிமையை,அதனூடான போராட்டத்தின் வலுவில் தங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதிவரை துணைபோகும் வரலாற்றுப் பணியில் தம்மை ஈடுபடுத்தி,களம் காணும் வல்லமையை புலம் பெயர்ந்து வாழும் நாம் இன்னமும் வீச்சாக எமதான அதி உச்ச பங்களிப்பால் மேம்படுத்தவேண்டிய,முக்கியமான,அதிமுக்கியமாக கவனிக்கப்படவேண்டிய காலக்கடமைக்கு உட்பட்டுள்ளோம்.இது தவிர்க்கவோ,அன்றி ஒத்தி வைக்கவோ முடியாத அறமாகும்.ஆயின் இதில் எத்தனை வீதமான புலம் பெயர் சமூகம் தன் கரங்களை களம் நோக்கி நீட்டியுள்ளது என்பதை கவலையுடன்தான் நோக்க வேண்டியுள்ளது.உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.இங்கு ஜேர்மனியை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டால் புலம் பெயர் தமிழர் ஏறக்குறைய 80,000பேராவது இருக்கும்.இந்த தொகையில் சர்வதேசம் நோக்கி எமதான இந்த அவல நிலையை ஆர்ப்பாட்டங்கள்,கவனயீர்ப்பு போராட்டம் மூலம் பங்கு எத்தனை வீதம்? ஒரு 20%கூட இல்லை என்பது வேதனையளிப்பதாகவே உள்ள இந்த நிலை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடாக இல்லை.ஏன் இன்னமும் விழிப்பணர்ச்சியற்று இருக்கின்றார்கள்.சரி மறு வளமாக நிதிப்பங்களிப்பை நோக்கின் கடைசி வேலை செய்யும் மக்கள் தொகையை 40000பேர் என எடுத்துக்கொண்டாலும் இவர்கள் தமதான நிதிப்பங்களிப்பை முழுமையாக ஆற்றி இருந்தால்,இப்படியே உலகம் முழுதும் புலம் பெயர் சமூகம் தங்கள் ஆழுமையான, முழுமையான பங்களிப்பை காலக் கனிவான கடந்த கால எல்லையில் ஆற்றியிருந்தால்,அதாவது வலிமையே வாழ்வு தரும் என்றபேரிகை மூலம் தலைவன் இட்ட வேண்டுகோளுடன் இயைந்திருந்தால்,இன்று நிலையே வேறு.சரி இப்போ, என்ன இந்த நிலையிலும்,, ஏதாவது சாட்டுக்கூறி தனதான தேசியப் பணியை ஒத்தி வைக்கும்,அல்லது மறுப்பளித்து ஏதாவது காரணம் கூறி ஏய்த்து திரிவதை விட்டு சீரிய காலக்கடமையாற்றி எமதான தேசியத்தையும்,இனத்தையும்,மண்ணையும், மீட்பதற்காய் களம் காணும் எமது தேசிய வீர்ர்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக சூரியத்தலைவன்,தேசியத்தலைவன் இவர்களிற்கு நாம் எமதான நேரிய,சீரிய,வினைத்திறன் மிக்க பங்களிப்பால் கரம்பற்றி எமதான வரலாற்றுப்பங்களிப்பை நிறைவாக்கி,நமதான மண்ணைமீட்கும் எமதான விடுதலை வீரர்களை இன்னமும் உரமேற்றி ,,விடுதலை காண விரைந்து செயலாற்றுவோமாக.புலம் பெயர் தமிழ் சமூகமாகிய நாம் 100%பங்களிப்பை(,சரி
ஊது குழல்களை நான் இங்கு இம்மியேனும் குறியிடவரவில்லை,)அதாவது உண்மையான, ஆழுமையான, அகங்கொண்டோர்கள்,இங்கு நிதியென வரும் போது,தங்களை தாங்களே புறமாக்கும் யுக்திகளை புறந்தள்ளி நீதியான பங்களிப்பை திறனாற்றவேண்டியது காலக் கட்டாயம் ஆகின்றது,இன்னமும் சொல்லப் போனால்,வட்டிக்கும்,சீட்டுக்கும்,ஊதாரி செலவிற்கும் பணம் உள்ள சிலர் பங்களிப்பு எனும் பாரிய பொறுப்பை புரிந்துணர்வின்றி புறந்தள்ளுவதை விட்டு யாக வேள்விக்கு நெய் ஊற்றவேண்டியது தார்மீகம் என்பது எனது அடிப்படை,அகங்கொள் விதியாகும்.
அதாவது தேசியத்தை யாசகமாய் யாசிக்கும் தமிழீழ உணர்வு கொண்டோர்கள் சிலர் வெறும் நா வழி பங்காற்றுகின்றார்களே தவிர செயலில் எதையும் 1%கூட நிதியாக தமதான பங்காக ஒப்பேற்றவில்லை என்பது நான் நடைமுறையில் கண்ட
நிஜமாமும்.இவர்கள் இன்னமும் தம் மீதும்,தமிழினத்தின் மீதும்,ஏன் தன் நம்பிக்கையற்ற மாந்தராகவே உள்ளனர்,மேலும் சிலர் தன் வீடு பற்றியெரியும்போதே தவிக்கின்றனர்,எம் விடுதலை வீரத்தை,அவர் தம் ஈகத்தை
கொச்சைப்படுத்தி தம்மை தானே இழிவாக்கத்திற்கு, உட்படுத்தி,உபத்திரப்படுத்து
கின்றனர்,மற்றவர்கட்கும் தன் மாந்தை புத்தியை காட்டி,மற்றவர்களையும்,அதாவது
உண்மையில் உழைப்பவர்களையும் உள,புற உழைச்சல்களிற்கு உட்படுத்தி,உளவுரணை குலைக்கும் இழிவுத்தன்மையில் தம்மையறிந்தும்,அறியாமலும் முட்டாள்தனமாக முனைந்ததை எனதான சொந்த அனுபவத்தில் கண்டு அறியாமையை நீக்கியுள்ளேன்,எனவே கைகூடும் எங்கள் விடுதலையின் அகங்களில் கை வைப்பவரை அடையாளம் கண்டு,ஒன்றில் களையெடுங்கள் அல்லது புறந்தள்ளி எமதான விடுதலை போரை நிமிர்வாக்குவோம்.
எமதான விசாலமான நெஞ்சகத்தால் தங்ககமாக்கி தரணியில் எம் தேசம் மலர தானைத்தலைவனின் பாதையில் அணி திரண்டு,செயலாக்கி செம்மையாய் படைப்போம் தமிழீழம்.
இது இறுதிப் போரடா தமிழா
உள உறுதி பேணடா தமிழா
இகத்தில் ஈழ மலர்வடா தமிழா,நீ
இசைந்து இயங்கடா தமிழா,
இன்னல் களையும் வீரப் போர்,
இனிய மலர்வாகும் தமிழா,உன்
நிதியை ஆற்றடா தமிழா,நிலை
தனையை மாற்றுவான் தலைவன்,உன்
உரிமையை போற்றடா தமிழா,உளம்
உவகையாக்குவான் மறவன் எங்கள் தலைவன்
உன் நிறத்தை மாற்றுவான் தலைவன் நிச
முகத்தை மீட்டுவான் அவன் தகைகள்
நிழல் வாழ்க்கை தூற்றுவான் பகலன்,நிறை
வாழ்க்கை நீட்டுவான் நிறைவன்,எங்கள்
தலைவன் தானைத் தலைவன்
தமிழீழத் தலைவன் தார்மீகத் தலைவன்
தேசியக் கொடி தகைந்த தலைவன்


தமிழ் தேசியம் ஆக்கிய தலைவன்,

வெள்ளி, 27 மார்ச், 2009

களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்



செருக்களமாடுவதுவும்,
செந் தமிழ்ஈழம் மீட்க,
மருக்களமின்றி மடிவதுவும்,
மா வீர்ர் நிலையென்றால்,


தருக்களமாடி வரும்,
தமிழீழ விடுதலைப் புலிகட்கு,
உற்ற நிதி அளிப்பதுவும்,
உரத்த பங்கு ஆற்றுவதுவும்,
புலம் பெயர் தமிழீழ மக்களது
ஊக்க உணர்வன்றோ!,உந்து சக்தி நாமன்றோ!,

காத்து,
துயர் தீர்த்து,
நீர்க்க பகை விரட்டி,
பூக்க உளம்தழுவ, நாம்,,,அவர்
கரம் பற்றும் கருவிக்காய்,களமாடும்
உள(ண)ர்விற்காய்,தமிழர்
புனர் வாழ்விற்காய்,கிட்டு மருத்துவ நிதிக்காய்,
நடமாடும் திலீபன் மருத்துவ காப்பகத்திற்காய்,
செஞ் சோலையின் உயிர் நிலைக்காய்,

உரமேற்ற வழி சமைப்பதுவும்,
உயர்ந்த நிலையாக்குவதுவும்,
உயிராக்கி பணி ஏந்துவதுவும்,
உரிமையான, எமதான களப்பணியன்றோ?

உயர்வான இந் நிலையை,
உதவும் இந்த கருமத்தை,உடன் கடனாற்றாமல்,
உதாசீனம் செய்து விட்டால்,என்றோ
ஓர் நாள் நாம் ஏகமாக புலம்ப நாள் ஒன்று கூடிடும்.
ஆதலால்
தொலை நோக்கு நிலையெடுப்போம்,
தொலையாத பணி முடிப்போம்.


முழங்கிடும் சங்க நாதம்,
முடிவின்றி போரொலியாய்,
விளங்கிடவா வழி செய்வோம்?,அன்றி
துலங்கிடும் தமிழீழம்,தூய்மையாய் தளைந்திட
இனியொரு விதி செய்வோம்,
எம் இனமான பணி முடிப்போம்


(09.01.2000)

வியாழன், 26 மார்ச், 2009

நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து

விடுதலையின் வேள்வி கீதம் முழங்கும் போது,
வித்தகர்கள் நித்தமும் பேரிகையாய் முழக்கும் போது,
வீர மறவர் ஈகம் உனை சூழவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

பெருந் தலைமை புலம் நோக்கி திரும்பும் போதும்,
பெருந்துயரம் எமை இழந்து தனிக்கும் போதும்,
விடுதலையின் வேட்கை உனக்குள் விரியவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

மறவர் எங்கள் வீரர் வினையாற்றலை,
பகையும் விலகி விழிக்கும் போது,
விடுதலையின் தாகம் உனை சூழவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

அண்ணன் பார்வை அனலாய் பொழியும் போது,
கரும்புலிகள் ஈகம் தணலாய் எரிக்கும் போது,
விடுதலையின் வேகம் உன்னை செதுக்கவில்லையா?
வித்தாகி எறிந்த விதை உன்னில் விளையவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

அலைகளாய் அணிகள் ஆர்ப் பாரிக்கும்போது,
ஆக்கிரமிப்பு வெறியர் கூட்டம் கரியும் போது,
மீளும் நிலங்கள் எங்கள் வசமாகும்போது,
மீட்டு விடுதலை வேங்கை வீரம் மிளிரும் போதும்,
விடுதலையின் ஊட்டம் உன்னில் ஊறவில்லையா?
விதி மாற்றி புது பறநானூறு படைத்த வீரம்,புதிய
விதிகள் விரித்த போதும்,
சுதந்திரத்தின் சுகானுபவம் உனை சுமக்கவில்லையா?
வெற்றி எம் வசம்,தமிழீழ தேசம் எம் வசம்.

வான் படையின் வலிமை தன்னை வனைக்கும் போதும்,
தான் படையை தர்மப்பதல்வர் தறித்த போதும்,
வனமுக எதிரியை வதைத்துலர்த்தும் போதும்,
வளமான வீரியம் உன்னகத்தில்,
விரியவில்லையா ?விடுதலையின்
விம்பம் உனக்குள் விதையவில்லையா?


ஆயின்,நீ

எமது தமிழினத்தின் அசல் வித்தல்ல,நீயோ
விச விந்து,ஈழத்தில் உதிர்ந்த உசாத்து.

புதன், 25 மார்ச், 2009

சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்


நெஞ்சகத்து கூட்டினுள்ளே செல்லரிக்கும் நிகழ்வு (இழவு)தந்து
எந்தகத்து கூட்டுக்குள்ளே போனீர்?எங்கள்
தங்ககத்தை தாண்டி எங்கு போனீர்?

தஞ்சமென்று போவதெந்த வலையத்தில்?,நீவர்
நெஞ்செரிந்து போனதெந்த நிலையத்தில்?
சொந்தமிங்கு கரியுதே கனத்தையில்,,இந்த
வெம்மை என்று தீருமெந்த அமைதியில்?


நிர்கதியாய் நிற்பதுவா விதியாய்?இந்த
நினைவழியா நாட்கள் என்ன சதியா?
ஊர் அழித்து போனதென்ன மதியா?எங்கள்
சீர் மக்கள் ஆனாரோ சீந்தான கதியாய்?

பூக்களைப் போல அல்ல நிந்தன் வாசம்,எந்த
புரிந்துணர்வில் பிரிந்ததுங்கள் தேகம்?
பாக்களிலே படிந்திராத பாசம்,உம்மை
பரிந்துணர்ந்து கொண்டதெங்கள் தேசம்.

வேரறுந்து போவதென்ன மோசம்?இங்கு
பாரினிலே வந்ததெங்கள் சோகம்.
ஊரெழுதி நிதம் தோறும் வாடும்,உங்கள்
பேரெழுதி எங்கள் நெஞ்சம் வேகும்.

வேகும் நிலை மாறும்,எந்த
வேதனையும் இனிமேல் சாகும்,தங்க
வேதம் தாங்கி தரமாகும்,இந்த
நெய்தல் கொள நிலம் நிரலாகும்.


உங்கள் ஆகுதிகள் களமாக்கும்,
எங்கள் தங்ககங்கள் தரமாகும்,
நிந்தன் நினைவுகளால்,நிசமாகும்,
கனலும் தாகங்களால்,நிலையாக்கி உரமாக்கும்,
உங்கள் யாகத்திற்கு சமர்ப்பணமாகும்,

தமிழீழ மலர்வால்,உயர்வான தலைவனால்.
சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்,
தமிழீழ தேசியம்,அது
தமிழீழத் தேசியக்கொடியின் தகவான இசைவாகும்
….

திங்கள், 23 மார்ச், 2009

தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்


மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்,சிங்கள
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்
தன் மானம் சிறக்கும்,எம் மானம் பெருகும்
எங்கள் ஈழம் மலரும்,தமிழ் ஈழம் மலரும்.

சினத்தை வெல்லுங்கள் சிந்தை சிறக்கும்
சிறக்கும் சிந்தையால் சீர் வழி திறக்கும்
திறக்கும் வழியால் தீரம் வளரும்
வளரும் தீரத்தால் வீரம் பெருகும்,எங்கள்
மானம் மெருகும்,தமிழ் மானம் மிளிரும்

குணத்தை தீற்றுங்கள் பண்பாட்டின் வழியே,சீர் கெட்ட
நிலையை மாற்றுங்கள் போரின் வழியே
நிரலாய் செல்லுங்கள் தகையும் தாகமே,
நிறைவாய் வெல்லலாம் அண்ணன் அணியே,
எங்கள் அண்ணன் வழியே,எங்கள் அண்ணன் மொழியே
மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்,எங்கள் மானம் சிறக்கும்


நீத்து, நிலை பேணுங்கள் நியாயம் நமதே,உற்று
உள உரண் பேணுங்கள், பாதை தெளிவே,எங்கள்
பாதை தெளிவே.
தெளிவுற ஆளுங்கள் எங்கள் தேர்வு ஒன்றே,
தீர்வு யாவும் மாற்றலாம் ஆக்கம் நமதே,தமிழ் ஈழம் நமதே.

தமிழீழ!
கொடியை ஏந்துங்கள் மக்கள் நிரையே
அடியை அகற்றும் புலிவீரம் தன்னிலே
வெல்வோம் வெல்வோம் என்று வேகம் கொள்ளவே
கொள்வோம்,கொள்வோம் எங்கள் ஈழமண்ணையே
தமிழ் ஈழ மண்ணையே,தமிழ் எங்கள் அன்னையே,
ஈழம் எங்கள் நிலையே,வென்று செல்வோம் நிறைவே.
தமிழ் ஈழம் நமதே.

தும்பையூரான்
23.03.2009

மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட


தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ்
தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன்
சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை
நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சுவாசிப்போம்.

தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம்
வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம்
வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள்
தேச விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம்.

வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம்
வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ்
மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால்
முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம்

கந்தக காற்றினி தேசத்தில் வீசாது,
பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது.
மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி
பூந்தளிர் பாலகர் பூம்புனல் பாடிட,
பூத்திடும் ஈழமலர் புன்னகை வீசிடும்.


தூற்றிடும் பகை எமை வாழ்த்திட வாழ்வோம்,
போற்றிடும் வகை புதுச் சாரலாய் சொரிந்திட,
மாற்றிடப் புகல் வாழ்வினை மாற்றுவோம்.
தோற்றிய தமிழீழ மண்ணிலே புலர்வோம்.

முப்படையும் அணி வகுத்து நடந்திட
முத்தமிழும் இசை இயங்கி வாழ்த்திட
மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
மாவீரத் தானை தலைவன் கொடி ஏற்றிட
பாரிலே பூத்த தமிழன்னை சலங்கையிட,அந்த
பூரிப்பிலே எங்கள் தாகம் தணியுமே.
மாவீரக் கனவே கயலாய் ஒளிருமே.
22.03.2009
தும்பையூரான்.

சனி, 21 மார்ச், 2009

பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?


விதை, விதைத்த மாவீர்ர் விருட்சங்களாய், இன்று
வன்னியிலே திரண்டிருந்தார் வெளிச்சங்களாய்
பதை பதைத்து ஆக்கிரமிப்பு படை மிரண்டது,அங்கு
விதையிழந்த நிலங்களெல்லாம் வசமாகுது எங்கள்
சுவாசமானது.

அலையடித்த நிலையினிற்கே அழிந்து போனவன்,ஒரு
புயலடித்து களம் சுரைக்க என்ன ஆகுவான்?
நெருப்பெரிந்த தேசமடா எங்கள் தேசம்,பெரும்
நெருப்பினிலே வளர்ந்தவனே எங்கள் தலைவன்,
தமிழீழத்தலைவன்

பெருமையிலே ஒருக்களித்து போகாதவன்,எந்த
கருமையிலும் நிலைகுலைந்து ஓயாதவன்
ஒளிக்கதிராய் எங்களின வழியானவன்,என்றும்
ஒரு கருத்தே உலகெறிந்து உயிரானவன்,எங்கள்
உதிரானவன்.

நெக்குருகி,நிலைதவறி போனவனில்லை,என்றும்
நொருங்கிப் போகா மக்களவன் காவலின் எல்லை
ஊனுருக்கி,உயிரெறிந்து எல்லை மீட்டவர்,அவர்
தானுருகி தமிழீழத்திற்காய் தனையெரித்தவர்,எங்கள்
நிலை யாத்தவர்.

வேளை வரும் போதினிலே வேதனையில்லை,அந்த
ஒலை எமதாகும் வரை ஓய்வேயில்லை,சித்த
வேதனையும் எங்கள் வசம் வாசம் பேசுமே,சுரந்த
சுகந்தமான சேதி வர சோகம் ஓயுமே,எங்கள்
தாகம் தீருமே,தமிழீழ தாகம் தீருமே.

மீட்டெடுத்த மானம் என்றும் விலை போகுமா?மண்ணில்
பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
ஊட்டி வைத்த தலைவன் அவன் வீரம் ஏந்துவோம்,இசை
பாட்டெடுத்து வானுயர புகழ் நாட்டுவோம்,
தமிழீழ கொடி ஏற்றுவோம்.

.தும்பையூரான் 21.03.2009

புதன், 18 மார்ச், 2009

பொங்குமோ உளம் திரிந்து?


ஏங்கும் மனதாலும்
தாங்கும் செயலாலும்
தூங்கும் நிலை மறந்து
தூயதான விடியலிற்காய்
தூய்மைகள் அங்கே வியூகமாய்

பொங்கும் நாள் தேடி
பூம்புனல் தானாகி
எங்கும் மங்களமாய்
எங்கள் மண் எமதாக்க
துய்ப்பதற்காய் சுதந்திரத்தை
தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர்
களம் காண நோக்குகையில்,

புலம் பெயர்ந்து நிலம் நோக்கும்
பலம் வேர்க்க உளம் நோகும்
இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும்
இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே
ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க
மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக
இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே
இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.

தும்பையூரான்
இடுகையிட்டது
14.01.2009
தளம்,களம்

songs

ஞாயிறு, 15 மார்ச், 2009

செயற்பாடுகள் ஒரு பார்வை



சமகால அரசியல்
தாயக உறவுகளே!
முதற் கண் தமிழ் மணம் வீச தாயக வணக்கம். இந்த நேய மிகு ஆக்கம் மூலம் தங்களான பார்வைக்கு நான் வைக்கும் சீரிய வேண்டுகோள்,

ஏதிரியானவன் நமதான தாயகப் பரப்பில் ஆழக் கால் ஊன்றி,அநியாயமாக எத்தனையோ எமதான உறவுகளை,சொந்தங்களை,சுற்றம் சூழ் அயலவர்களை நாளுக்கு நாள தனதான எறிகணைகளாலும்,பல் குழல் பீராங்கிகளாலும் கொன்று குவித்து நரபலி எடுத்து

தனதான ஈகக் கடவுளிற்கு எமதான உடன் பிறப்புக்களின்குருதியால்ரத்தாபிசேகம்செய்கின்றான்.

இந்தஅநியாயமான,ஈனத்தனமான,ஈவிரக்கமே அற்ற இனவெறியர்களின் தாங்கொணக் கொடுமையால் ஒவ்வொரு நிமிடமும் நாம் எமது இன மக்களை இழந்துகொண்டிருக்கின்றோம்.

எமதான விடுதலை வீரர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (அது குறுகிய இடமாயிருந்தாலும்)வாழவே விரும்புகின்றார்கள்.இது அந்தஇடத்தில்வாழும்மக்களின்வாக்குமூலம்,இந்தநிலையை பலர் இணையத்தளத்தின் மூலம்,பார்த்தும் செய்திகள் வாயிலாக அறிந்தும் இருப்பீர்கள்.

ஆக மொத்தத்தில் அங்கு வாழும்,அதாவது இத்தனை இன்னல்கட்கு மத்தியில் உள்ள மக்களின் அடிப்படை அபிலாசைகள் என்ன?

இல1.நமதான மண்ணில் எம்மை சுதந்திரமாக வாழவிடுங்கள்

இல2.விடுதலை புலிகளே எமக்கான உண்மையான பாதுகாவலர்கள்

இல3.நாம் எந்த சூழ் நிலையிலும் வன்னி மண்ணை விட்டு வரமாட்டோம்

இல4.சர்வ தேசமே எமதான விடுதலையை அங்கீகரி

இல5.மருந்து,உணவு,தடைகளை நீக்கி எமதான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்

இல6;.எல்லாவற்றிற்கும் மேலாக அநியாயமான இந்த யுத்தத்தை நிறுத்தி விடுதலைப்புலிகளுடன் நீதியான,நியாயமான,உண்மையான பேச்சுவார்த்தைகளை

நியாயப்பூர்வமாக ஆரம்பித்து,அதை சர்வதேச கண்காணிப்பு மூலம் நடைமுறைப்படுத்து.

இல7.எமதான சுயநிர்ணய உரிமையை அங்கீகரி,எமது தேசியம்,தாயகம்,எமதான வாழ்வுரிமை,இவைகளை ஏற்றுக்கொள்.இல்லையேல் நாம் இயல்பாக பிரிந்து செல்ல அனுமதி.


இப்போதுள்ள நிலைமையில் வன்னி வாழும் தமிழின மக்கள் யாரையும்,எந்த நாட்டையும் எங்களை புலிகளிடம் இருந்து காப்பாற்று என கூக்கிரலிடவில்லை,மாறாக மேற் குறிப்பிட்ட அம்சங்கள் அடங்கிய கோரிக்கைதான் வன்னி வாழ் தமிழரின்(உலக,தமிழீழத் )எதிர் பார்ப்பு.

இதுதான் உண்மை,இதுதான் யதார்த்தம்,இது மறுக்க, மறைக்கமுடியாத தாற்பாரிய நடைமுறை.எந்த நிலையிலும் வன்னி வாழ் எமதான உறவுகள் ஆக்கிரமிப்பு ராணுவத்தையோ,பேரினவாதம்கக்கும் எந்த சிங்களவனிடமோ தங்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றுமாறோ,வன்னியில் இருந்து வெளியேற்றுமாறோ வீரமண் வன்னி வாழ் தமிழினம் கேட்டுமாயவில்லை.

மறு புறமாக கூறின் அதாவது சரியான யதார்த்தத்தை விளங்கக்கூறின்.

அது மேலே கூறப்பட்டதான நிதர்சனமே தவிர வேறில்லை.இதுவரையில் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் சென்ற மக்களிற்கு என்ன நடந்தது?என்ன நடக்கும்? என்ற யதார்த்ததுடனான அக,புற சூழல் புரியாத மாக்கள் இல்லை இவர்கள்.

இந்த தள நிலைகளை புரிந்தும்,புரியாமல் வேசம் போடும் பல முட்டாள்கள்.வன்னியில் புலிகள்தான் மக்களை தடுத்து வைப்பதாகவும்,மனித கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் ஏகமாவே ஊழைக் கூச்சல் போட்டு தமது சிங்கள எசமான்களிற்கு விசுவாசத்தை காட்டி எமதான இனத்தை வித்து பிழைப்பு நடத்தி வருகினறார்கள்.இனமான உணர்வு எதுவுமற்ற இந்த ஏதிலிகள் காலம் பூராகவும் ஏதிலிகளாகவே வாழ விரும்புகின்றனர்.ஊது குழல்கள் தாமாக ஏதும் சுயமாக சிந்திக்க தலைப்படாதுகள்.

ஏனெனில் இதுகளெல்லாம் அஃறிணைப்பிறவிகள்.தேசம்,தேசியம்,வாழ்வுரிமை,வரலாறு மிக முக்கியமாக தமிழர் அவர்தம்,வாழ்வும்,போராட்டமும்,அதனதன் சுய வரலாறு,இனப்பிரச்சனையின் ஆரம்பம்,அதனூடாக சிங்களம் வளர்த்தெடுத்த இனவாதம்,அதன் பரிமாண வளர்ச்சி,ஆரியன்இதனூடாகவளர்த்துவிட்ட திராவிட எதிர்ப்புணர்ச்சி (காழ்ப்புணர்ச்சி)மேலோங்கிய இனவாதம்,வளர்த்துவிட்ட பேரினவாத,சிங்கள நாடு,தமிழர் வந்தேறு குடியேறிகள் என்ற வரலாற்று திரிப்பு,இதற்கு துணை போன கடந்த கால சில தமிழின போலி அரசியல்வாதிகள் செய்த வரலாற்று பிழைகளினாலான தற்போதைய இந்த அவலம,,,,,,

இது எதுவுமே இப்படியான ஜந்துகளிற்கு புரியாமல் இல்லை.இன்றைய செய்தியைப் பார்த்தால் களநிலவரம் புரியும் ஆயினும் அடிமையாக ஏறக்குறைய 300 ஆண்டுகளிற்கு மேல் வாழ்ந்த இந்த தமிழினத்தில் ஓர் வகையினர் சுதந்திரம் சார்ந்த எந்த தொலை நோக்கும் அற்ற ஓர் பரம்பரை வர்க்கமாக, இன்றும் வால்பிடி ஊடகமாக செயல்படுவதைப்பற்றி இனியும் சிந்திக்காமல் அதாவது குரைக்கும் நாய்களிற்கு கல்லெறிந்து காலம் ஆற்றாமல் எமதான சீரிய விடுதலைசார் காலப்பணியாற்ற எவ்வித வேற்றுமையையும் இல்லாமல் கால,களப்பணியாற்ற,
புலம் வாழ் தமிழர்களே இப்போதைய எழச்சியை மெருகேற்றி,மேலதிகமான பங்களிப்பை நல்கி வீறுகொண்டெழுவோம.

இந்த காலப்பணியில் எமதான பங்களிப்பு மழுங்கடிக்கப்பட்டால் தமிழினம் மீளுவது எந்த கொம்பனாலும் நினைத்து பார்க்கமுடியாத அழிவாகவே முடியும்.எனவே எமதார்ந்த உறவுகளே எந்த அக,புற காரணங்களாயினும் அதை புறந்தள்ளி எம் மக்களையும்,சூரியத்தலைவனையும் எமதான இருப்பு பாலங்களால் கைலாகு கொடுத்து, மேலாதிக்கமான நிமிர்வுகளிற்கு கரங்கொடுத்து முன் நிறுத்துவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்,
எங்கள் தலைவன் மேதகு பிரபாகரன்,
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழினத்தின் பாதுகாப்பு அரண்,
அதாவது தமிழினத்தின் ஒரே ஒரு ஏகப் பிரதிநிதிகள்,இந்த உண்மைகளை சர்வதேசத்திற்கு முகத்தில் அறைந்தாற்போல் உரத்து ஒலிக்கும் அதேவேளை எமதான மாபெரும் நிதிப் பங்களிப்பை மேலும் பரி களமாக்கி, அதை அதி விரைவாக்கி காலப்பணியை தாயகம் நோக்கி பரி பூரணமாக்கி விதிர்ந்து செயல்படுவோம்.

உறுதியை வெறும் உதட்டளவில் வைக்காமல் செயல்படுத்துவோம்.புலமும்,களமும் ஒரே நேரத்தில் அகிலம் தாங்கிய செயற்பாடுகளை இன்னமும் அதி வீச்சாக்க வேண்டிய நேரம்.தவிர்க்க முடியாதகாலக் கடமை இங்கு எல்லோரும் தமிழர்கள் எனபதான தேசிய எழுச்சியுடன் வீறு கொண்டு அவரவர் நாடுகளில் இந்த மாபெரும் தேசிய கடமையை செய்ய உரித்துடையோம்.

ஆக மொத்தத்தில்; இந்த அரிய,பெரிய சந்தர்ப்பம் கைநழுவ,ஆறவிடமுடியாத,கூடாத நேரிய காலக்கடமை ஆற்றுவோமாக.இறுதி வெற்றியல்ல எப்போதுமே வெற்றிகள் எமதாக களத்தில் தலைவன் எமதான வீரச் சேனைகளுடன், ஆயின் புலத்தில் நாம் ஒற்றுமையாக ஓரணியில் செயல்படவேண்டிய கடைசி சந்தர்ப்பம்.நாம் எந்த நாட்டையும் இனியும் எக் காரணம் கொண்டும் நம்பக்கூடாதென்ற யதார்த்தத்தை அண்மையில் பல இணைத்தலைமை நாடுகளும்,மற்றும் இதர நாடுகளும் தமதான வேடத்தை கலைத்து தனதான சுய ரூபத்தை வெளிக்காட்டி எமை நசுக்க தமதான தொலை நோக்கின் சாராம்சத்தை புலப்படுத்தியுள்ள யதார்த்தம் தரிசனமாக்கி, எமை புறந்தள்ளி எமை அரசியல்,நாட்டற்ற அனாதையாக்க முற்பட்டுள்ளனர்.

இதை ஏற்கெனவே தேசியத் தலைவன் தனதான மாவீரர் உரையில் கோடிட்டு காட்டியுள்ளதை இங்கே நினைவு கூருங்கள்.எனவே எமதான உரிமையை நாமே நிர்ணயம் செய்ய,எமதான விடுதலையை விரைவாக்க எமதான தேசியத்தலைமையின் ஊடே அலை அலையாய் அணி திரண்டு தேசியக்கடமையை சேதாரமின்றி செவ்வனே செயல்படுத்துவோம்.

தும்பையூரான்
Wednesday, 25 February 2009அன்று
(இந்த ஆக்கம் tamilskynews,yarl ஆகிய இணையங்களில் பிரசுரமானது நன்றி)

வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை


வணக்கம்!
எமதான உறவுகளே உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது கையறு நிலை என்பது இதுதானோ?உலகம் பூராவும் எழுச்சி ஊர்வலங்கள்,உணர்ச்சி கொந்தளிப்பின் அதி உச்ச வெளிப்பாடாக உயிர்த்தியாகம் வார்த்தைக்களிற்கு அப்பாற்பட்ட தாயகத்தில் எம் இனம் படும் இனப்படுகொலையின் அதி உச்ச அவலம்,இவ்வளவையும் நிச்சயமாக எமதான உறவுகளால் சர்வதேசத்திற்கு முகத்தில் அறைந்தாற் போல் எடுத்துரைதுள்ளோம்,ஆயினும் சர்வதேசம் எந்த ஓரு ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க(முடிய)வில்லை.


மேலும் ஸ்ரீலங்கா,அதாவது ஆக்கிரமிப்பு இராணுவம் எந்த சர்வதேசத்தின் அழுத்தத்தையும் லட்சியப்படுத்துவதாக இல்லை,எல்லாமே இந்தியா,இந்தியாவாகிவிட்ட தாற்பாரியமேதவிர வேறென்ன?இலண்டனில் இருந்தும்,ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்ற இணையத்தலைமை நாடுகள் கூட கையை விரித்து விட்ட அவலம்தான் இங்கு யதார்த்தமானது.

முதலில் இலங்கையில் தற்போது நடப்பது நிச்சயமாக யுத்தம் இல்லை,,மாறாக இன அழிப்பு நன்றாக திட்டமிடப்பட்ட தமிழின ஓழிப்பு இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை,,இவ்வாறான யதார்த்தத்தை, இணைத்தலைமை நாடுகள் கூடகருத்தில்எடுக்கவில்லை என்பது இவர்களின் உண்மைத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது..

இந்த யதார்த்தத்தை நம்மில்பலர் ஏலவே உணரத்தவறியதன் விளைவாகவே இன்றைய நிலையை எனதானபார்வை ஏற்படுத்துகின்றது. பலமுள்ளவனே வாழ்வான் இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் சந்தேகம் இல்லை,ஆயின் எமதான விடுதலை இயக்கமான விடுதலைபுலிகளை நாம் சரியான ரீதியில் தலைவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் விட்டது,, புலம் பெயர் தமிழர் செய்த மன்னிக்கமுடியாத, ஏற்றுக்கொள்ளமுடியாத பாரியதவறு.

நம்மில் அநேகர் ஏ9பாதையை திறந்ததுடன் ஒத்தி வைத்துவிட்டனர் தமதான தாயகப்பணியின் தொலைதூர காலப்பணியை. கைகழுவி,நழுவவிட்டு,விட்டு தற்போது ஏகமாகப் புலம்பிக்கொள்கின்றோம்.எமதான உறவுகளே யதார்த்மான களநிலையை புரிந்து கொண்டு சித்திக்கும் காலப்பணியாற்ற வாருங்கள்.

எந்த ஓரு நாடும் எமக்கு எதையும் தூக்க தரப்போவதில்லை என்பதை நிறைவாகப்புரிந்து கொண்டு தங்கதலைவன் பிரபாவை,எமதான தேசியத் தலைவனை பூரணமாக நம்பி எமதான நிதிப்பங்களிப்பை பரிபூரணமாக இன்னமும்,இன்னமும் மேலாக்கி எமதான விடுதலை இயக்கத்தை பலப்படுத்துங்கள்,முடிப்பதற்குமுன் மீண்டும் ஞாபகப்பபடுத்துகின்றேன் தாயகத்தில் தற்போது இன அழிப்பே நடைபெறுகின்றது.

ஈழப்போர் 4 இனித்தான் காலக்கனிவோடுஆயினும் விரைவில் களம் காணும் அதற்கு ஏற்றாற் போல் எமதான விரைவுப்ணியை முன்னெடுப்போம்,நம்பிக்கை கொள்ளுங்கள்,தளராதீர்கள்,பட்ட கடனை ஸ்ரீலங்காவிற்கு இரட்டை மடங்காக இன்னமும் சொல்லப்போனால் வட்டியுடன் மீளளிப்பு செய்யப்படவேண்டிய ஒத்தி வைக்க முடியாத காலப்பணிஎம் கண்முன்னே விரிகின்றது.

இவ் ஆக்கம்(தும்பையூரான்) இடுகையிடப்பட்டது
14.02.22009
தமிழ் வானலை செய்தி,நெருடல்,யாழ் ஆகிய இணையத்தில்
வெளியிடப்பட்டது.நன்றி (இவ் இணையங்களிற்கு)

சனி, 14 மார்ச், 2009

களையெடுத்து நிலைத்திருப்போம்



களையெடுத்து நிலைத்திருப்போம்

புலம் பெயர் உறவுகளே!
எதிரி உன் உளவுரணில்தான் மையம் கொள்கின்றான்.எங்களின் நிதானமான,அதேசமயம் வீச்சான செயற்பாடுகள் எதிரிக்கு கலக்கத்தை கொடுக்கும் இதே வேளை சஞ்சலம் கொள்ளவைக்க சில,பலமாதிரியான முயற்சிகளை சில எட்டப்பர்களினூடாக பரப்புரைகளை மேற் கொள்வதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் மன உறுதியை குறி வைத்து தனது பொய்ப்பிசாரத்தை இணையத்தளமூடாகவும்,தனது ஊது குழலான வானலை ஊடாகவும்,மேலும் எமது தொலைக்காட்சிகளில் மறைமுகமாக ஊடுருவி ஊனக்கதைகள் பரப்ப முயல்வதை நாம் இப்போது நேரடியாகவே கண்முன்னே தெரிந்து கொள்கின்றோம்.இந்த அளவிற்கு இத்தனையையும் உணர்ந்த நாம் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

முதற்கண் இத்தகை நிலைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எமதான ஊடகங்கள் மூலம் மிக்கியத்துவம் கொடுத்து புலம்புவதை நிறுத்துங்கள்.நாய்கள் குரைக்கத்தான் செய்யும் அதற்கு கல்லெறிந்து நேரத்தை கழிக்காமல்,எங்கள் செயற்பாட்டை மேலும் தீவிரமாக முன்னெடுப்போம்.

நீங்கள்தான் இதை பெரிது படுத்தி எதிரிக்கு விளம்பரம் கொடுத்து மற்றவர்களையும் குழப்பி உங்களின் உளவுரணில் தளம்பல்களை ஏற்படுத்தி,வீச்சான எமதான நிலைகளில் கலத்தல்களைஏற்படுத்துகின்றீர்கள்இதைவிடுத்துதொடர்ந்துஉங்களின்நியாயமான,நிமிர்வான,இயல்பான,உணவுப்பூர்வமான காலக்கடமைகளை ஆழமாக ஆற்றுங்கள்.

என்று குழப்பம்,கலக்கம் மனதை ஆக்கிரமிக்கின்றதோ,அன்றே சிந்தனைகள் கலைந்து செயற்பாட்டில் உறங்கு நிலை தோன்றிவிடும் இதுதான் எதிரியின் எதிர்பார்ப்பாகும்,தெளிவாக இருங்கள்,நம்பிக்கையும்,சிந்தனையும் தேசியத்தையும்,தேசத்தையும் நோக்கி இயங்கட்டும்.உங்களாலான சகலதும்.

நயவஞ்சகர்களைப்பற்றி,எட்டப்பர்களைப்பற்றி,ஊதுகுழல்களைப்பற்றி சிந்திப்பதோ,அன்றி
அது பற்றி வேறு விமர்சனம் முன் வைப்பதோ எமதான கடமையில்லை.மீண்டும் இதை வற்புறுத்தி எழுதி, எனதான,உமதான பொன்னான நேரத்தை கழிக்காமல் நமது மற்ற எல்லா இயங்கு நிலையிலும், இயக்கத்திலும் தொடர்ந்து இயங்குவோம்.

எமதான உறவுகளே!எதிரியின் எந்த புலம்பலையும்,ஊடகசார் செயற்பாட்டையும்,கேட்பது,பார்ப்பது தவிருங்களே,ஏன் முடியாது?,நீங்கள் கேட்பதும்,பார்ப்பதும் எதிரியின் முதல் வெற்றி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் பொல்லைக்கொடுத்து, இதே பொல்லால் நீங்களே உங்களை தாக்கும் இந்த முட்டாள்தனத்தை கைவிடுத்து நிமிர்வெடுங்கள்,நிலைத்திருப்போம்,ஜெயித்திருப்போம்

அவன் அப்படிக்கூறினான்,இவன் இப்படிக்கூறினான்,சிங்களவன் கொக்கரித்தான் என்பதான உங்கள்அணுகுமுறைகள்எங்கள்வானொலியிலோஅல்லதுதொலைக்காட்சியாலோ,இணையத்திலோ,மற்றும் வேறு ஊடகங்களிலோ, பகிர்ந்து கொள்வதைவிட்டுஅல்லது உங்களின் உறவினன்,நண்பர்கள் யாராயிருந்தாலும் இப்படியான மிகைப்படுத்தலான பொய்களை புறந்தள்ளி,யதார்த்தத்தை சுயமாக சிந்தித்து,நேரியலான உங்களின் திறனால் நெறிப்படுத்தி முன்னேறுங்கள்

எங்களின் தலைவனின் பின்னால் அணிவகுத்திருக்கும் பலங்களை இன்னமும் மேம்படுத்துவோம்,எங்கள் தலைவனை முழுதாக நம்புங்கள்,முகிழும் தமிழீழம் அவன் சமைப்பான்.விடுதலை புலிகள் பற்றி ஆக்கிரப்பு இராணுவம் மட்டுமில்லை சர்வதேசமும் மீண்டும் பாடம் படிக்கத்தான் போகின்றார்கள்,வன்னி கொள் ராணுவம் இனி சிங்க தேசம் திரும்பாது,சிங்களதேசம் இனி போர்பற்றி சிந்தியாது,இந்த நிலை எம் வலை கொள்ளும்,அந்த நிலை விரைவாக்க எம் கரங்களை ஈழம் நோக்கி இன்னமும் நீட்சியாக்குவோம்.நன்றி

தும்பையூரான்

பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்



குருதியில் குறித்த முகூர்த்தம்
உறுதியில் வகுத்த நிமி(ர்)த்தம்
பொறுதியில் வீழும் நிச்சயம்,இது
பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்

நிறுதி,நிலை வகுத்து பொருதி
உறு, உசாத்தி! பகுத்த வெங்களம்,இனி
நீறு பூத்த நிலை பொருதி,
கறுத்தெடுத்து நிலை விழுத்தி,பகை
பொருதி கொள். வேங்களம் இனி---
சுருதி இழந்து சுமை கூடி,அதன்
பருதி கூம்பி கூனி குனுகிப்போமே.

சிதை
நிறுவி நிலை காண்பான்,
புலிப் புரவி காட்டும் புயல்,
வீரம் உறுத்த பகை சாய்வான்,போரின்
சாரம் தலை தெறிக்க சரத்பொன்சேகா!

ஈரப் புனல் தெறிக்க, ஒளி தங்கு களமாக
ஓரப் புன்னகை விழி வீச, தெளி சோதி அங்கு மேய
ஈழப்பெரு மொழியாய் ஈதல் அதனகமாய்
ஊழிப்பெரு நெருப்பாய் ஊதல்காற்று
அகம் சுரக்க ஆட்கொள்ள ஆகும்,அதன் குறியீடு
தமிழீழம்,
எங்கள் கனவின் பெறுமானம்.

வசந்தம் வரு முன்னே பிரளயம்,
புயலின் பின்னல் தான் அமைதி இது
பூமிப் பந்தின் பரிதளம்.ஆக இது
வரலாறு சுரந்த பரிந்துரை

இறுதிப்போர் எங்கும் இழப்புக்களால் சூழும்,அது
இங்குதான் மையம் கொள்ளும்,அந்த
குவி மையம்தான் பொறி இயக்கும்
புவி மேல் இந்த பிரளயம்,
பிரபாகரம்,
இயக்கும் பூமித்தளம்.அதுஊழிக்கூத்தாடி
பிரசவிக்கும்,தமிழீழப் பிரசன்னம்.
தும்பையூரான்
13.03.2009

பூமிப் பந்தில் புதியதோர் உலகம்

நெருடல் தந்த அகச் சிக்கல்
வாரிச் சுருட்டிய மன அழுத்தம்
நெம்பி மனமது விகல்பி
நைந்து போயினவாம் நமதான வாழ்வாக!
விரும்பிக் கேட்ட நிலையா இடர் நீயாகத் தந்த வாழ்வாச்சு!

உந்தன் பிறப்பு சாசுவதமாயின
எந்தன் வாழ்வு அசுவதமாவோ?
எமதான இறப்பில், அதுவான இழப்பில்,
உமதான வாழ்வு சிறப்பாகும் என்ற நினைவுன்னை,
சிதைவாக்கும் உண்மை சிந்தை கொள மறவாதே!

உனதான வாழ்வுரிமை எமக்கானதுமாகும்
இதை நீ மறுக்க கறுப்பாகும் உன் வாழ்வும்
எமதான நிலத்தில் ஏகமாக நீயா?
நமதான உரிமை நாதியற்று போமா?
ஆனதான வாழ்வே ஆதியற்று போமா?

வருடல் என்பது உனதான ஆத்மா!
மருகல் ஒன்றே தமிழனவன் வாழ்வா!
விரிதல் ஒன்றே எமதான ஆற்றல்,
பிரிதல் ஒன்றே எமக்கான போற்றல,
துரிதமானால் துயரின்றி வாழ்வோம், இல்லையாகிப் போனால்??
உனதான இனமழித்தே சாவோம் இது உறுதி.

வெங்களம் காண தூண்டியவன் நீயே!
வெஞ்சமராட விதைத்தவனும் நீயே!
வேங்கைகளாக்கி படைத்தவனும் நீயே!
வெடிப் பொருளை நாம் நாட வைத்தவனும் நீயே - அந்தோ!
வெறும் பொருளாக்க எமை நீ நினைத்தல் வையத்திலாமோ?

சங்காரமாக்கி உனை சகாயமாய் நாம் சலிப்போம்
சலிப்பான வார்த்தை இல்லை சாதித்தே நிலையெடுப்போம்.
நிலை தவறி சாற்றவில்லை நீதியறிந்தே நிரலானோம்.
நிரல்களின் தரிசனமாய் தலைவனவன் வியாபமானோம்.
வியாபகங்கள் ஓதாத வீரத்தின் விடியலாவோம்.
விடியல்கள் மீட்டி நாங்கள் விசாலமாய் விதைந்திருப்போம்,

ஓங்காரமயினி முழங்கட்டும் போரொலி!
காங் கூலங்களினி கருக்கட்டும் போதிலினி!
தேமாங்கு பாடட்டும் இனி தேசத்தின் விடியலினி!
தூமாங்காய் போகும் இனி துரத்தி வந்த பகையினி!
ஆமாந்துறுவாகியினி அழிந்தே பொசுங்கட்டும் பகைவரணி!.
ஆழமாய் நாம் நேசித்த அன்னை மண் துலங்கட்டுமினி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தகமையாய் ஒலிக்கட்டும் தரணியெலாம் திகழட்டும்
வீரியத்தின் விசை கேட்டு விநயமாய் விழையட்டும்
வீசுகின்ற திசையெல்லாம் வீரம் நிலை விரவட்டும்,
வீரன் பிரபாவின் சீரனான வினைசார் திறனாராயட்டும்.

தும்பையூரான்

நிர்ப்பயமின்றி போயின நீதி


நிர்ப்பயமின்றி போயின நீதி
நீர்த்துத்தான் போகுமோ வேள்வியின் சோதி
பார்த்து உடல் வருத்தி ஊன் உருக்கி வளர் சோதி
வேர்த்து உயிர் ஈந்து காத்த தமிழ் சாதி!

நினைவில் உயர் கனவில் இசையும் அங்குல அசைவில்;
நிலை பிறழா உயிர் உறவில் இழைந்தேயான இசைவில்
கலையில் இணை கருவில் ஊடேயான உசாவில்
நிலைத்தே இழைத்த வீர வைரம் திசையிழந்த தீரமாய்
சிதைந்தே போகுமா? சீரிழந்து ஊரிழந்து உறவிழந்து வீழுமா?

இல்லையென்போர் இணைந்தே எழுக
இறுதிப் போரில் வெல்வோம் இழைக
அறுதி இதுதான் ஆர்ப்பாரித்து நுளைக
ஆக்குவோம் தமிழீழம் ஆக்கிரமிப்பை களைக
நூற்போம். நூற்போம் தலைவன் வளர்க.

ஓப்பாரி வைப்பதை இனியும் நிறுவோம்
ஓங்கி பகை வீழ ஓங்காரமாய் திரள்வோம்
வீங்கிய பகையின் பாங்கை களைவோம்
தாங்கிய தலைமையின் சுமையை பகிர்வோம்
வாங்கியே தமிழீழ கடமையாய் சுடர்வோம்.

கனவுகள் சுமந்த மாவீரம் மறவோம்
காடு சுடுநாடென அலை சுற்றம் மறவோம்
வீடு பேறில்லா விதியதை களைவோம்
விட்டில் பூச்சியாய் விதிவதை கலைப்போம்
வீரகாவிய சரிதமாய் சரிவதால் விரிவோம்.

இறுதி போரிது உறுதியாய் பேணுவோம்
பொருதி களம் வீரியமாய் விதிர்ப்போம்
கருதி மனம் கொள் கங்குலம் எரிப்போம்
பருதிப் பகைதனை பாரிலே உதிர்ப்போம்
சுருதி கொள் சுதந்திர தமிழீழம் சமைப்போம்.
தும்பையூரான்.

நிசம் தரிசித்த நீலப் புலி




வந்தழித்தான் பகைவன் நம் வாசல் வரை
சொந்தம் முதல் எமதான உற்றம், சுற்றம்,மற்றும்
அந்தம் முதல் ஆதிவரை அழிப்பதாய் ஆக்கிரமிப்பின்
ஆக்கிரோசமாய் தொண்டைக் குழிவரை குண்டாய் பொழிந்தான்.
அக் கணத்திலும் ஆயிரமாய் அழிந்தே போயின தமிழான உறவுகள்
ஆனதுதான் இழப்பிலான மெய்வருத்தம்,
என்றாயினும் இழக்கவில்லை வலியின் வலிமை கொள்
தோன்றாத வீரமதை தோற்றுவித்த வல்லாளன் - உலக
மன்றம் முன் மாவீரத்தை நீலப் புலியால் நிமிர்த்தியே வைத்தான்.

வலிமையே வாழ்வு வையகத்து வாழ்வோரின்
வகையறுப்படுத்த முடியாத வாழ்வதன் வாழ்வியல்
ஏதிலியாய் வாழ்வதனால் உள்ள சுகம் யாதும் உண்டா?
போதிலினிலே உந்தன் அகம் ஏற்ற சுகம் சாற்றுவாயா?
மாற்று வழி ஒன்றே உண்டு மாவீரம் உரை பாதை ஒன்றே
ஏற்று நீ ஆற்ற வேண்டும் ஏற்ற மிகு பங்களிப்பை
மாற்று வழி நிச்சயமாய் வேறில்லை மார்க்கமிதை புரிந்து கொள்
போரிட்டே மடிவோம் போர்களமீது, ஒன்றே தெரி பாதை, சத்தியமாய்
ஏறிட்டே நேற்று பகை வீழ்த்தி வான் கரும் புலி யாசித்த யதார்த்தம்
நிசம் தரிசித்த நீலப் புலி நிமிர்த்தி வைத்த கள நிலை
பூண்டு கொள்வோம் சேய் அதாய் யாண்டு கொள்
நிலை நிறுவி ஏற்றி வைக்க நிரவி சிறப்போம்
நீலப் புலியின் நிமிர்வான அகம் நிரப்பி ஆனதான
இந்த நிலையே ஆக்கும் வழி சமைக்கும், ஆயின்
பூக்க தமிழீழம் யாக்க தெரிவான பாதை
ஊக்க உறுதி கொள் எதிரிப் பாறை எரித்து வெல்வோம.

நெகிழ்வான வாஞ்சை


எங்கள் அழுகை எங்களிற்கானது,
அதனால்தான் நாம் நிமிர்கின்றேம்,
எமை ஆற்ற நாம் யாரையும் நோகவில்லை
எங்கள் ரணங்களையும் எமதான வலியையும் நாமே போக்குவோம்.

கண்களில் நீர் வற்ற அழுவதில் என்ன உண்டு.
ஆயினும் அழுதோம், ஆதலால் வீரியமுற்றோம்,
எண்ணங்களிலும், ஏந்திய நேரியலிலும் நீர்க்கமாட்டோம்
திண்ணிய நெஞ்சமுற்றோம் தினவெடுத்த தீர்க்கமுற்றோம்.

இழப்பற்ற வாழ்வு இகத்தில் என்றுமில்லை
உழைப்புடன் உயர்ந்த வீரம், ஈகத்துடன் விழைந்த தீரம்
விழலிற்கிறைத்த நீராமோ வீச்சுக்கள் அற்று விறைந்திடுமா,
இழவு வீழ்ந்து சூழ்ந்திடாமல் இறுதிவரை காத்துநிற்போம்.

எல்லாளன் அன்று சூழ்ச்சியினால் வீழ்ந்ததாக
கற்றதுண்டு நாம் சரித்திரமாய், எங்கள்
வல்லாளன் என்றும் எந்த வீழ்ச்சியையும்
வென்றிடுவான் தனதான எழுச்சியினால்.

புதன், 11 மார்ச், 2009


உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்

கருமைகள் சூழ மேகம் இடுகையிட்டு இடிமுழங்கும்

மின்னல்கள் ஊற்றி தன் வலியால் சன்னதம் கொள்ளும்

உன்னதம் கொள்ளும் அந்த உரிமைகள் மீள் அகமாகும்

திங்கள், 9 மார்ச், 2009

தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.


தீயன தீய தீயும் தீயும்
தூயன தூய தூய்மை தூயும்
வேயன வேய வேயும் வேங்களம்
பாயென புலி பாயும் பாரில்
ஓயாத அலையாகி ஓங்காரமாய் ஒலிக்கும்.

திளைந்திருக்க தினவெடுக்கும்
விளைந்திருக்க வினையெடுக்கும்
முளைத்திருக்க மனமிருக்கும்
உழைத்திருக்க உரமெடுக்கும்.

களைத்திருக்கும் பகையிருக்கும்.புலி
நிலைத்திருக்க களம் விழைத்திருக்கும்
வகை புலி இருக்க வாகை கிழக்கிருக்கும்
நகை முகிழ்த்திருக்க நாமாய் நெகிழ்ந்திருப்போம்.

பிரபஞ்சம் பிரமித்து ஏற்ற பிரபாகரம் கொண்ட சாரம்,
பஞ்ச பூதம் வாழும் வரையும் தஞ்சமாக தரணியில் வாழும்.
ஏந்திய கொடி சிலிர்க்கும்,எல்லாள மண் துளிர்க்கும்
சீந்திய குருதியெல்லாம் குவளயமாய் குதூகலிக்கும்.

தீயினை தீய்த்த தீரம்,தூய்வினை ஏற்றி ஏந்த
மாயினை மாய்த்ததாலே மாவீரம் மகுடம் ஏந்தும்
போயினை சோகமெல்லாம் பகை சூழலிலே மேய்ந்திருக்கும்
தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.

ஞாயிறு, 8 மார்ச், 2009

நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பாடாகாது.


நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பாடாகாது.

அச்சமில்லாமல் எதையும் ஒப்பேற்ற முடியாதவர்கள் முகத்திற்கு அஞ்சி வேசையாடுவதற்கு சமம்.போராட்டம் என்றால் என்னவென்பதை முழுமையாக அறியாதவர்களின்இந்தக்கூச்சல்,போலித்தனமானதாகவேஎனக்குப்படுகின்றது.வலியில்லாத பிறப்பு ஏதும் பூமிப் பந்தில் உண்டா?எதையும் இழக்காமல் அத்தனையையும் அடையும் ஆசை.நடைமுறையில் எத்துணை சாத்தியம்,ஒன்றை இழந்தால்தான் மற்றென்று உயிர் வாழும் என்ற மிகவும் சாதாரண வாழ்வு நிலையை புரிந்து கொள்ளவாமுடியவில்லை?.இந்த மன வலியில்லாத உண்மையை சாதாரண இந்த மனிதனாலே ஏற்கமுடியவில்லை என்பது எத்தனை அபத்தமானதோ அத்தனை அபத்தமானது இத்தனையும் தேவை என்பது,இலங்கையின் சுதந்திரம் எந்த இழப்புக்களும் இல்லாமல் கிடைத்தமாதிரி தமிழனின் சுதந்திரம் அப்படிக் கிடைக்குமா?நமது காலத்தில் நடந்த விடுதலை போராட்டத்தில் எரித்திரியாவை எடுத்துக்கொண்டால்,ஏதும் வேண்டாம் அண்மையில் கொசவோவிற்கு கிடைத்த சுதந்திரம் சும்மா ஒற்றைக்காலில் தவம் கிடந்து கிடைத்ததா?இந்த நாடுகளில் எல்லாம் பொதுமக்கள் இறக்கவில்லையா?அல்லது போராளிகள் கொன்று குவித்தார்களா?சுதந்திரப்போர் ஒன்றும் கத்தரிக்காய் இல்லை என்பது படிக்காதவர்களிற்கு புரியாதது ஒன்றும் புதினமில்லை என்று சப்பைக்கட்டு காரணங்கள் தேடி ரணப்படுவதைவிட்டு யதார்த்தத்தை சீரணிக்கதெரியவேண்டும்.

எந்த நாட்டில் விடுதலை போராட்டத்தை நசுக்கவதற்கும் அந்தந்த நாட்டின் அரசாங்கம் கண்மூடித்தனமாக தாக்குவதும்,போராட்ட ஆதரவாளர்கள் என்ற கோதாவில் பொது மக்களை அழிப்பதும், அதன் மூலம் போராட்ட ஆதரவை அழிக்க நினைப்பதும் ஒன்றும் பரம ரகசியம் இல்லை,இதோ இன்றும் பலஸ்தீன போராளிகளைப் பிரித்தா இஸ்ரவேல் வான்,மற்றும் இதர தாக்குதலை பொதுமக்கள் மேல் நடத்திக்கொண்டிருக்கின்றது. இதை எழுதிக்கொண்டிருக்கும் போதும் இதுதான் நிலை ஆக அந்த நாட்டில் இருந்து ஆயுத,மற்றும் ஏராளமான அழிவுக்காவியை வாங்கிய இலங்கை அரசு வேறென்ன செய்யும்,நான் ஒன்றும் இதை ஆதரிக்கவில்லை,ஆயினும் உண்மைகளை கள யதார்த்தத்தை ஏற்கவேண்டிய நிலையை உள் வாங்கி தந்த அவலத்தை அவனிற்கே கொடுக்கவேண்டிய காலக் கடமையை நிறைவாக செய்வதற்கு எம்மை தயார்படுத்தி நாம்தான் எங்களிற்கு எல்லாமே,எந்த நாடாவது எங்களிற்கு ஏதும் செய்யவேண்டும் என்ற நடைமுறையற்ற நிலையை கடந்து நாமே எம் நிமிர்வுகளை அடையாளப்படுத்தியே ஆகவேண்டும்.இனியாவது என்ற சொல்லை அகராதியில் இருந்து அழித்து விட்டு எமக்கான காலப்பணியை இன்னமும்மேம்பாக நெறிப்படுத்தி விடுதலைக்கான பணியை வீச்சாக்க உறுதி பூணுங்கள்,பேச்சில் அல்ல மூச்சில்,செயலில்,அழுதழுது பிள்ளை அவளே பெற வேண்டும்.எங்களிற்கான சுய நிர்ணயத்தையோ, அன்றி தேசியவிடுதலையையோ எந்த பலவானும் எங்களிற்கு தூக்கி தரமாட்டான் என்பதான யதார்த்த்திற்குள் ஆன்மபலத்தோடுநுழைவோம்.களப் போராளிகளிற்கு,எமதான தேசியத் தலைவனிற்கான தேசிய பங்களிப்பை நுண்மையாக, நேர்மையாக,எமதான நன் நம்பிக்கையை எந்த நிலையிலும் தளரவிடாமல்,அகத்தூய்மையோடு அரங்கேற்றுவோம்.களப்பலியான எம் விடுதலை வீர்ர்களிற்கும்,அராஜகமாக இலங்கை பேரினவாதிகளால் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்ட எங்கள் பொதுமக்களிற்கு நமதான மானசீகமான அஞ்சலிகள், பிறக்கும் ,மலரும் தமிழீழம்தான் என்பதை ஒவ்வொரு கணமும் நீறு பூத்த,கங்குலாக எப்போதும் எமதான நினைவில்,செயலில்,உறுதியில் .இழையோடவிட்டபடியே காலப் பணியை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.சில நாய்கள் குலைப்பதற்காககல்லெறிந்து காலத்தை கடத்தாமல்,முல்லையில் இருந்துஆரம்பிக்கப்போகும்ஆழமானவிடுதலையின் வீச்சு உதிர்விற்கானதல்ல என்பதை இனி வரும் காலம் ஊன்றி அறைந்து இகத்திற்கு இயம்பப்போகும் ஆரோக்கியகாலம்தலைவனால்இத்தரணியில்உருவாகும்.அதுவெறும்ஊகத்தினால்,ஏற்படும்மாற்றம்இல்லை .உறுதியின்இருப்பிடங்களினால்,விழ,விழ எழுவதும்,ஒன்று விழ ஓராயிரமாய் எழுந்துதலும், அனேகமாக களத்தில் விரைவில் ஆதார்சமாகப் போவதை காலம் திடமாக முன்வைக்கும்,வீராப்பு வார்த்தைகளை தலைவன் என்றுமே உதிர்த்தில்லை,சொல்லிற்கு முன் செயல்.புலிகளின் தாரகசெயற்பாடு இங்குதான் எப்போதும் மையங்கொள்வதை கடந்த காலம் கற்க வைத்த பாடமாகும். ஒரு ஸ்டாலின் கிராட்,வியட்நாம் ஆகிய போர்க்களங்கள் தற்போதைய எமதான நிலைகளைகடந்தே விரபூமியை தம் வசமாக்கியது.எதிரிகள் எப்போதும் எங்களை சுற்றி நிற்கத்தான் போகின்றார்கள்,இந்த எதிரிகள் என நான் இங்கே குற்றிக்காட்ட விழைவதுஎமதானசமூகத்துரோகிகளைத்தான்,வெறும்பேச்சிற்குகூறவில்லை ,இவைகள்எலாம்எமதானவெற்றியின்பின்னால்காலவெள்ளத்தில்அடியுண்டுபோகத்தான்பகின்றார்கள்.எங்களது துர்அதிஸ்டம் எங்களில் வசிட்டர்களைவிட நக்கீரர்களே அதிகம். நான் இங்கே குறிப்பிட்ட நக்கீரன்கள் பாடு பொருளையே பிழையென்று வாதிடும் போக்கற்றவர்கள். அக்கால நக்கீரன் சொற்பிழையை ஏற்றுக்கொண்டு பாடுபொருள் பிழையென்று வாதிட்டு சிவனையே எதிர்த்தவன்.ஆதலால் எரியுண்டவன்,ஆயின் இதோ எம் இக்கால அவலங்களிற்குள்ளும்,எம்மை, எமதான தாய் நிலத்தை,நிலமீட்பிற்கான ஆழமான போராட்டத்தை,ஆளுமைமிக்க தலைவனை,எந்த ஒப்பீட்டிற்கும் உவமையில்லா எமதான பெருந்தகையான மாவீர்ர்களுடைய தியாகத்தை,இகழும் இந்த இவர்களை காலம் மறப்பதற்குள் எமதான காலச் சூரியர்கள் மன்னிப்பார்களா?இது ஒன்றும் வசைபாடும் நேரமில்லைதான் என்று ஒவ்வொருவரும் ஒதுங்கி,ஒதுங்கியே இதுகளை வளரவிட்டபொறுப்பு எங்களையும் சாரும். இது ஒன்றும் தட்டி கழிக்கக்கூடிய விடயமில்லை,ஆதலால் இதனால் விழைந்த பாரியபக்க விழைவுகளை நிலம்+புலம் வாழ்,ஈழத்தை நேசிக்கக்கூடிய நாங்களும் அனுபவிக்கின்றோம்,மேலும் விளக்கவேண்டிய வினை இல்லையென்றே ஆழமாக நம்புகின்றேன்.ஆர்ப்பாரிக்கும் நிலை கூறி புலிகள் களம் காணுவதில்லை மாறாக வினையாற்றும் உறுதியுடன் விதையெறிந்து ஒவ்வொருகணமும் ஈழ விடுதலையாய் மிளிர்வதுதான், யதார்த்தமாகின்ற கள நிலையை, கவனத்தில் ஊன்றி எமதான காலப் பணியை,எம் முன்னே விரிகின்ற தேசியப்பணியை செவ்வனே தரமாக்க தாயகம் இன்னமும் வீரியம் பெறும்,வாரத்திற்கு ஒன்றாக வெளி வரும் வெற்றிச் சங்கொலிகள் இனி தினந்தோறும் எம் அகம் கொள்ளும் எனில் ஊகங்களையும் பேரினவாதிகளின் புரட்டலான,வதந்திகளை புறந்தள்ளி,யதார்த்த தரிசனத்தை ஆதார்சமாக்க,எம் கண்முன் விரியும் காலப்பணியின் ஆதங்கத்தை நுண்ணிய பார்வை மூலம் கண்ணிய கருமமாற்றும்,எம் கள வீர்ர்களின் கரங்களை கனிவுடன் இறுகப்பற்றிக்கொள்வோம்.

எதிரியின் வசமான எமதான தாய் நிலம் சீரிய,நேரிய,கூரிய தொலைநோக்கான சூரியத்தலைவனால், அவன் வசமாகி களம் கொள் நமதான தேசிய அக்கினிக் கரங்களால் மீண்டும் நம் வசமாகும்.எதிரியோ படைபலத்தை நம்புகின்றான்,தேசியமோ ஆன்ம பலத்தால் அக்னி பிரவேசம் கொள்கின்றான்.நேசம் கொள் தாயக தாகம் எந்த படைபலத்தால் அழிந்ததாக வரலாறு இவ் வையகத்தில் பதிவாக்கப்பட்டதாக சேதியில்லை.

எதிரி புலம் வாழ் தமிழீழத் தமிழர்களின் உளவுரணை குறி வைத்து இயங்குகின்றான்,ஆதலால் தன்னாலியன்ற போலியான புரட்டுக்களை கட்டவிழ்த்து தினம்,தினம் மாறுபட்ட செய்திகளை தன்னையறியாமல் வெளியிட்டு,இல்லாததைகளையும்,இட்டுக்கட்டிய வதந்திகளையும் இணையத்தினூடாக,நம்மில் தன்னையும் தமிழன் என்று அரற்றிக்கொள்ளும் ஒன்றுக்கும் உதவாத ஒட்டுண்ணிகள் மூலம் வலம் வரவிடுகின்றான்,இதில் ஓரளவு வெற்றியும் கொண்டுள்ளான் என்பதான யதார்த்தத்தையும் அக வெறுப்படன் ஏற்றுக்கொள்ளவேண்டியதும் நியமாகின்றது,காரணம் எம்மில் சிலரிற்கு தன் நம்பிக்கையில்லாததும்,தலைவன் பற்றிய ஆழுமையான விளக்கம் இல்லாததும்,அல்லது போராட்டம்பற்றிய சீரான விளக்கம் அற்ற தன்மையென்றால் மிகையாகாது.



தன் பலம் அறியாமல் பல பேர் இங்கு உலவுவதும்,எதிரிக்கு சாதகமான நிலையையே ஏற்படுத்தியுள்ளது.எனவே எமதான தேசத்தை நேசிக்கும் யாசக உறவுகளே உங்களான உள உறுதியை தக்க வைத்துக்கொள்ளுங்கள்,உள உரண் என்பது உங்கள் வாழ்வின் ஊக்க சக்தி என்பதை உறுதியாக நம்புங்கள்.தன் நம்பிக்கையும்,தன் நிலை தாளாமையும்,எமதான வெற்றியின் உறைவிடமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் தேயசியத் தலைமையை,அவன் பின் அணிவகுத்துள்ள விடுதலைப்போராளிகளை உளமார நம்பி உங்களது தேசியப்பணியான,நிதிப்பங்களிப்பை காலம் தாழ்த்தாமல்,எந்தவித,அகப்,புற சாட்டுக்களை முன் வைக்காமல் திடமுடன் உறுதியாக நேர்மையுடன் செலுத்துங்கள்,புலப்பங்களிப்பு தார்மீக நிறைவடைய,களம் தானாக தலைமையால் விரிவடையும்.

இதற்கு மேலும் நிதியின்,நீதித்தனமையை நெறிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றே எண்ணுகின்றேன்,ஆயுதம் எங்களின் அரண்,வலிமைமிக்க மேலதிக தேவைகள் களத்திற்கு அவசியம்.புரிந்துணர்வு யதார்த்தமானால் மேலதிக பரிந்துரைப்பு அவசியமற்றதாகின்றது.

இனி வலம் வரும் செய்திகளெல்லாம் வெற்றிச் சங்கொலிகள்தான். நன்றி.

தினம் எரியும் நெருப்பு இவர்கள்



தினம் எரியும் நெருப்பு இவர்கள்,
ஏன் என்ற வேள்வியின் சோதிகள்
கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த
ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள்,

ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த
இழி நிலை கண்டால் தேங்கிலர்
பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த
சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர்

பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர்
பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர்
போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர்
ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர்.


பகை வீழும் வரை இமை மூடா
தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து
இகம் மீதிலொரு நடை பயின்ற
ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும்

புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும்
இவர் தோள் கொடுத்த வீரம் கல்வியாகும்
இங்கு நடந்ந பாதை கதை கூறும் அதன் பாதம்
பதித்த நிலம் தேச வழிகாட்டியாகும்.

குருதியால் தேசவரைபடம் வரைந்தார்,இந்த
குருதியாலே வீரம் விதை விதைத்தார்.அந்த
குருதியாலே வேங்கை பலர் களம் விரைந்தார் அவர்
குருதியாலே தாய்மண்ணாய் அவர் விதைந்தார்.

சனி, 7 மார்ச், 2009

அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு

அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு

vasantham: வளம் சேர்க்க விழைந்திரு


vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
திளைத்திருக்கும் தினவெடு
முழைத்திருக்கும் மனமிடு
விழைத்திருக்க வினையெடு
உழைத்திருக்க உரமிடு.

ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா



வியூகம் யாவும் விடை காண்பார். 07.03.2009


நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய
பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு
சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை
ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ?

வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை,
புனையும் பொய்யர்களின் பீற்றல்களை,
புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி!
தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின்
திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி
தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி
மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி,
விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக
சுகமான, சுமைஏந்தி சுற்றம், சூழ, மகிழ வலம் வருவாயா?

ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர்
ஆகுதியாகி நிசம் காணும் சவ வாழ்வு,
இனி போதினில் ஆங்கு,
எதிரி நிலையாய் ஆனதான ஆத்ம சேதியாகி,
ஆய்ந்து எமதான செவிகொள் சேதியாக,
ஓயந்து போனதாம் எம் சொந்தங்களின்,
சோக வாழ்வென ஓங்காரிக்கும் யாக சோதியாகி,

எத்துணை துன்பம் அவர் ஏந்தினார்,எத்தகை
அவலம் அவர் ஏய்ந்தார்,எத்தனை இழப்பை
அவர் தாங்குவார்,எத்தகு காயம் அவர்பட்டார்,
எந்தனது தங்கை,எந்தனது அக்காள்,எந்தனது
தம்பி,எந்தனது அம்மா,ஐயா,பாட்டன் பூட்டி
எந்தனது சுற்றம்,எந்தனது சூழல்,எந்தனது
மண்,எந்தனது இன சனம்,

எனதுயர் வான பு(ப)லம்பெயர் உறவுகளே!
இந்த
இவ்வளவும் உந்தனதும் ஆகும்,.உயிர்
உள்ளவரை மறவாதே,உணர்வதை துறவாதே,
நீறு பூத்த நெருப்பாய் நிந்தன் நெஞ்சகத்திற்குள்
வாஞ்சையாக என்றும் காங்குலாய் அனலாகட்டும்.

விடியும் தேதி விரைவாகும்,விழல்களாகும் ஆங்கு
வடியும் எதிரி படையின் வலமங்கு,
வியூகம் யாவும் படை காணும் விரையும் புலிகள்
விடை காண்பார்,உடையும் கனவாய் அவனோய
உதயம் காணும் ,
இழையும் ஈழமலர்வாய்.

ஈகங்கள் யாத்த விடுதலை கீதம்
தாகங்கள தீத்த மறவனவன் பாதம்
யாகங்களாக்கி உபாதைகளற்றி தீந்திய
சோகங்களகற்றி உயருது ஈழம்.

வேங்கைகள் இன்றி விடுதலை வருமா?
வேலுப் பிள்ளையில்லா ஈழமலர்வா?
பிரபாகரம் நீ பற்றிக் கொள்
புலரும் தமிழீழம் பூமிப் பந்தில்.

புலம் பெயர் வாழ்வே இதை நீ அகம் கொள்,
பலமது ஊக்கி புலிதனை வளர்க்கும்,
காலக் கடன் இது கண்ணியம் கொள், நிறைவு கொள்
சாலக் சிறக்கும் சாசுவதம் திறன் கொள்.
ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா.

தும்பையூரான்.

வலைப்பதிவு காப்பகம்