சனி, 14 மார்ச், 2009


பூமிப் பந்தில் புதியதோர் உலகம்

நெருடல் தந்த அகச் சிக்கல்
வாரிச் சுருட்டிய மன அழுத்தம்
நெம்பி மனமது விகல்பி
நைந்து போயினவாம் நமதான வாழ்வாக!
விரும்பிக் கேட்ட நிலையா இடர் நீயாகத் தந்த வாழ்வாச்சு!

உந்தன் பிறப்பு சாசுவதமாயின
எந்தன் வாழ்வு அசுவதமாவோ?
எமதான இறப்பில், அதுவான இழப்பில்,
உமதான வாழ்வு சிறப்பாகும் என்ற நினைவுன்னை,
சிதைவாக்கும் உண்மை சிந்தை கொள மறவாதே!

உனதான வாழ்வுரிமை எமக்கானதுமாகும்
இதை நீ மறுக்க கறுப்பாகும் உன் வாழ்வும்
எமதான நிலத்தில் ஏகமாக நீயா?
நமதான உரிமை நாதியற்று போமா?
ஆனதான வாழ்வே ஆதியற்று போமா?

வருடல் என்பது உனதான ஆத்மா!
மருகல் ஒன்றே தமிழனவன் வாழ்வா!
விரிதல் ஒன்றே எமதான ஆற்றல்,
பிரிதல் ஒன்றே எமக்கான போற்றல,
துரிதமானால் துயரின்றி வாழ்வோம், இல்லையாகிப் போனால்??
உனதான இனமழித்தே சாவோம் இது உறுதி.

வெங்களம் காண தூண்டியவன் நீயே!
வெஞ்சமராட விதைத்தவனும் நீயே!
வேங்கைகளாக்கி படைத்தவனும் நீயே!
வெடிப் பொருளை நாம் நாட வைத்தவனும் நீயே - அந்தோ!
வெறும் பொருளாக்க எமை நீ நினைத்தல் வையத்திலாமோ?

சங்காரமாக்கி உனை சகாயமாய் நாம் சலிப்போம்
சலிப்பான வார்த்தை இல்லை சாதித்தே நிலையெடுப்போம்.
நிலை தவறி சாற்றவில்லை நீதியறிந்தே நிரலானோம்.
நிரல்களின் தரிசனமாய் தலைவனவன் வியாபமானோம்.
வியாபகங்கள் ஓதாத வீரத்தின் விடியலாவோம்.
விடியல்கள் மீட்டி நாங்கள் விசாலமாய் விதைந்திருப்போம்,

ஓங்காரமயினி முழங்கட்டும் போரொலி!
காங் கூலங்களினி கருக்கட்டும் போதிலினி!
தேமாங்கு பாடட்டும் இனி தேசத்தின் விடியலினி!
தூமாங்காய் போகும் இனி துரத்தி வந்த பகையினி!
ஆமாந்துறுவாகியினி அழிந்தே பொசுங்கட்டும் பகைவரணி!.
ஆழமாய் நாம் நேசித்த அன்னை மண் துலங்கட்டுமினி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தகமையாய் ஒலிக்கட்டும் தரணியெலாம் திகழட்டும்
வீரியத்தின் விசை கேட்டு விநயமாய் விழையட்டும்
வீசுகின்ற திசையெல்லாம் வீரம் நிலை விரவட்டும்,
வீரன் பிரபாவின் சீரனான வினைசார் திறனாராயட்டும்.

தும்பையூரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்