ஞாயிறு, 8 மார்ச், 2009

தினம் எரியும் நெருப்பு இவர்கள்



தினம் எரியும் நெருப்பு இவர்கள்,
ஏன் என்ற வேள்வியின் சோதிகள்
கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த
ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள்,

ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த
இழி நிலை கண்டால் தேங்கிலர்
பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த
சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர்

பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர்
பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர்
போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர்
ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர்.


பகை வீழும் வரை இமை மூடா
தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து
இகம் மீதிலொரு நடை பயின்ற
ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும்

புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும்
இவர் தோள் கொடுத்த வீரம் கல்வியாகும்
இங்கு நடந்ந பாதை கதை கூறும் அதன் பாதம்
பதித்த நிலம் தேச வழிகாட்டியாகும்.

குருதியால் தேசவரைபடம் வரைந்தார்,இந்த
குருதியாலே வீரம் விதை விதைத்தார்.அந்த
குருதியாலே வேங்கை பலர் களம் விரைந்தார் அவர்
குருதியாலே தாய்மண்ணாய் அவர் விதைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்