திங்கள், 23 மார்ச், 2009

மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட


தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ்
தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன்
சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை
நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சுவாசிப்போம்.

தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம்
வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம்
வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள்
தேச விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம்.

வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம்
வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ்
மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால்
முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம்

கந்தக காற்றினி தேசத்தில் வீசாது,
பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது.
மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி
பூந்தளிர் பாலகர் பூம்புனல் பாடிட,
பூத்திடும் ஈழமலர் புன்னகை வீசிடும்.


தூற்றிடும் பகை எமை வாழ்த்திட வாழ்வோம்,
போற்றிடும் வகை புதுச் சாரலாய் சொரிந்திட,
மாற்றிடப் புகல் வாழ்வினை மாற்றுவோம்.
தோற்றிய தமிழீழ மண்ணிலே புலர்வோம்.

முப்படையும் அணி வகுத்து நடந்திட
முத்தமிழும் இசை இயங்கி வாழ்த்திட
மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
மாவீரத் தானை தலைவன் கொடி ஏற்றிட
பாரிலே பூத்த தமிழன்னை சலங்கையிட,அந்த
பூரிப்பிலே எங்கள் தாகம் தணியுமே.
மாவீரக் கனவே கயலாய் ஒளிருமே.
22.03.2009
தும்பையூரான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்