திங்கள், 9 மார்ச், 2009

தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.


தீயன தீய தீயும் தீயும்
தூயன தூய தூய்மை தூயும்
வேயன வேய வேயும் வேங்களம்
பாயென புலி பாயும் பாரில்
ஓயாத அலையாகி ஓங்காரமாய் ஒலிக்கும்.

திளைந்திருக்க தினவெடுக்கும்
விளைந்திருக்க வினையெடுக்கும்
முளைத்திருக்க மனமிருக்கும்
உழைத்திருக்க உரமெடுக்கும்.

களைத்திருக்கும் பகையிருக்கும்.புலி
நிலைத்திருக்க களம் விழைத்திருக்கும்
வகை புலி இருக்க வாகை கிழக்கிருக்கும்
நகை முகிழ்த்திருக்க நாமாய் நெகிழ்ந்திருப்போம்.

பிரபஞ்சம் பிரமித்து ஏற்ற பிரபாகரம் கொண்ட சாரம்,
பஞ்ச பூதம் வாழும் வரையும் தஞ்சமாக தரணியில் வாழும்.
ஏந்திய கொடி சிலிர்க்கும்,எல்லாள மண் துளிர்க்கும்
சீந்திய குருதியெல்லாம் குவளயமாய் குதூகலிக்கும்.

தீயினை தீய்த்த தீரம்,தூய்வினை ஏற்றி ஏந்த
மாயினை மாய்த்ததாலே மாவீரம் மகுடம் ஏந்தும்
போயினை சோகமெல்லாம் பகை சூழலிலே மேய்ந்திருக்கும்
தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்