வியாழன், 26 மார்ச், 2009

நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து

விடுதலையின் வேள்வி கீதம் முழங்கும் போது,
வித்தகர்கள் நித்தமும் பேரிகையாய் முழக்கும் போது,
வீர மறவர் ஈகம் உனை சூழவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

பெருந் தலைமை புலம் நோக்கி திரும்பும் போதும்,
பெருந்துயரம் எமை இழந்து தனிக்கும் போதும்,
விடுதலையின் வேட்கை உனக்குள் விரியவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

மறவர் எங்கள் வீரர் வினையாற்றலை,
பகையும் விலகி விழிக்கும் போது,
விடுதலையின் தாகம் உனை சூழவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

அண்ணன் பார்வை அனலாய் பொழியும் போது,
கரும்புலிகள் ஈகம் தணலாய் எரிக்கும் போது,
விடுதலையின் வேகம் உன்னை செதுக்கவில்லையா?
வித்தாகி எறிந்த விதை உன்னில் விளையவில்லையா?
வெற்றி நிச்சயம்,எங்கள் வெற்றி நிச்சயம்.

அலைகளாய் அணிகள் ஆர்ப் பாரிக்கும்போது,
ஆக்கிரமிப்பு வெறியர் கூட்டம் கரியும் போது,
மீளும் நிலங்கள் எங்கள் வசமாகும்போது,
மீட்டு விடுதலை வேங்கை வீரம் மிளிரும் போதும்,
விடுதலையின் ஊட்டம் உன்னில் ஊறவில்லையா?
விதி மாற்றி புது பறநானூறு படைத்த வீரம்,புதிய
விதிகள் விரித்த போதும்,
சுதந்திரத்தின் சுகானுபவம் உனை சுமக்கவில்லையா?
வெற்றி எம் வசம்,தமிழீழ தேசம் எம் வசம்.

வான் படையின் வலிமை தன்னை வனைக்கும் போதும்,
தான் படையை தர்மப்பதல்வர் தறித்த போதும்,
வனமுக எதிரியை வதைத்துலர்த்தும் போதும்,
வளமான வீரியம் உன்னகத்தில்,
விரியவில்லையா ?விடுதலையின்
விம்பம் உனக்குள் விதையவில்லையா?


ஆயின்,நீ

எமது தமிழினத்தின் அசல் வித்தல்ல,நீயோ
விச விந்து,ஈழத்தில் உதிர்ந்த உசாத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்