சனி, 14 மார்ச், 2009

பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்



குருதியில் குறித்த முகூர்த்தம்
உறுதியில் வகுத்த நிமி(ர்)த்தம்
பொறுதியில் வீழும் நிச்சயம்,இது
பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்

நிறுதி,நிலை வகுத்து பொருதி
உறு, உசாத்தி! பகுத்த வெங்களம்,இனி
நீறு பூத்த நிலை பொருதி,
கறுத்தெடுத்து நிலை விழுத்தி,பகை
பொருதி கொள். வேங்களம் இனி---
சுருதி இழந்து சுமை கூடி,அதன்
பருதி கூம்பி கூனி குனுகிப்போமே.

சிதை
நிறுவி நிலை காண்பான்,
புலிப் புரவி காட்டும் புயல்,
வீரம் உறுத்த பகை சாய்வான்,போரின்
சாரம் தலை தெறிக்க சரத்பொன்சேகா!

ஈரப் புனல் தெறிக்க, ஒளி தங்கு களமாக
ஓரப் புன்னகை விழி வீச, தெளி சோதி அங்கு மேய
ஈழப்பெரு மொழியாய் ஈதல் அதனகமாய்
ஊழிப்பெரு நெருப்பாய் ஊதல்காற்று
அகம் சுரக்க ஆட்கொள்ள ஆகும்,அதன் குறியீடு
தமிழீழம்,
எங்கள் கனவின் பெறுமானம்.

வசந்தம் வரு முன்னே பிரளயம்,
புயலின் பின்னல் தான் அமைதி இது
பூமிப் பந்தின் பரிதளம்.ஆக இது
வரலாறு சுரந்த பரிந்துரை

இறுதிப்போர் எங்கும் இழப்புக்களால் சூழும்,அது
இங்குதான் மையம் கொள்ளும்,அந்த
குவி மையம்தான் பொறி இயக்கும்
புவி மேல் இந்த பிரளயம்,
பிரபாகரம்,
இயக்கும் பூமித்தளம்.அதுஊழிக்கூத்தாடி
பிரசவிக்கும்,தமிழீழப் பிரசன்னம்.
தும்பையூரான்
13.03.2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்