சனி, 14 மார்ச், 2009

நிர்ப்பயமின்றி போயின நீதி


நிர்ப்பயமின்றி போயின நீதி
நீர்த்துத்தான் போகுமோ வேள்வியின் சோதி
பார்த்து உடல் வருத்தி ஊன் உருக்கி வளர் சோதி
வேர்த்து உயிர் ஈந்து காத்த தமிழ் சாதி!

நினைவில் உயர் கனவில் இசையும் அங்குல அசைவில்;
நிலை பிறழா உயிர் உறவில் இழைந்தேயான இசைவில்
கலையில் இணை கருவில் ஊடேயான உசாவில்
நிலைத்தே இழைத்த வீர வைரம் திசையிழந்த தீரமாய்
சிதைந்தே போகுமா? சீரிழந்து ஊரிழந்து உறவிழந்து வீழுமா?

இல்லையென்போர் இணைந்தே எழுக
இறுதிப் போரில் வெல்வோம் இழைக
அறுதி இதுதான் ஆர்ப்பாரித்து நுளைக
ஆக்குவோம் தமிழீழம் ஆக்கிரமிப்பை களைக
நூற்போம். நூற்போம் தலைவன் வளர்க.

ஓப்பாரி வைப்பதை இனியும் நிறுவோம்
ஓங்கி பகை வீழ ஓங்காரமாய் திரள்வோம்
வீங்கிய பகையின் பாங்கை களைவோம்
தாங்கிய தலைமையின் சுமையை பகிர்வோம்
வாங்கியே தமிழீழ கடமையாய் சுடர்வோம்.

கனவுகள் சுமந்த மாவீரம் மறவோம்
காடு சுடுநாடென அலை சுற்றம் மறவோம்
வீடு பேறில்லா விதியதை களைவோம்
விட்டில் பூச்சியாய் விதிவதை கலைப்போம்
வீரகாவிய சரிதமாய் சரிவதால் விரிவோம்.

இறுதி போரிது உறுதியாய் பேணுவோம்
பொருதி களம் வீரியமாய் விதிர்ப்போம்
கருதி மனம் கொள் கங்குலம் எரிப்போம்
பருதிப் பகைதனை பாரிலே உதிர்ப்போம்
சுருதி கொள் சுதந்திர தமிழீழம் சமைப்போம்.
தும்பையூரான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்