சனி, 7 மார்ச், 2009

ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா



வியூகம் யாவும் விடை காண்பார். 07.03.2009


நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய
பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு
சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை
ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ?

வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை,
புனையும் பொய்யர்களின் பீற்றல்களை,
புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி!
தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின்
திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி
தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி
மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி,
விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக
சுகமான, சுமைஏந்தி சுற்றம், சூழ, மகிழ வலம் வருவாயா?

ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர்
ஆகுதியாகி நிசம் காணும் சவ வாழ்வு,
இனி போதினில் ஆங்கு,
எதிரி நிலையாய் ஆனதான ஆத்ம சேதியாகி,
ஆய்ந்து எமதான செவிகொள் சேதியாக,
ஓயந்து போனதாம் எம் சொந்தங்களின்,
சோக வாழ்வென ஓங்காரிக்கும் யாக சோதியாகி,

எத்துணை துன்பம் அவர் ஏந்தினார்,எத்தகை
அவலம் அவர் ஏய்ந்தார்,எத்தனை இழப்பை
அவர் தாங்குவார்,எத்தகு காயம் அவர்பட்டார்,
எந்தனது தங்கை,எந்தனது அக்காள்,எந்தனது
தம்பி,எந்தனது அம்மா,ஐயா,பாட்டன் பூட்டி
எந்தனது சுற்றம்,எந்தனது சூழல்,எந்தனது
மண்,எந்தனது இன சனம்,

எனதுயர் வான பு(ப)லம்பெயர் உறவுகளே!
இந்த
இவ்வளவும் உந்தனதும் ஆகும்,.உயிர்
உள்ளவரை மறவாதே,உணர்வதை துறவாதே,
நீறு பூத்த நெருப்பாய் நிந்தன் நெஞ்சகத்திற்குள்
வாஞ்சையாக என்றும் காங்குலாய் அனலாகட்டும்.

விடியும் தேதி விரைவாகும்,விழல்களாகும் ஆங்கு
வடியும் எதிரி படையின் வலமங்கு,
வியூகம் யாவும் படை காணும் விரையும் புலிகள்
விடை காண்பார்,உடையும் கனவாய் அவனோய
உதயம் காணும் ,
இழையும் ஈழமலர்வாய்.

ஈகங்கள் யாத்த விடுதலை கீதம்
தாகங்கள தீத்த மறவனவன் பாதம்
யாகங்களாக்கி உபாதைகளற்றி தீந்திய
சோகங்களகற்றி உயருது ஈழம்.

வேங்கைகள் இன்றி விடுதலை வருமா?
வேலுப் பிள்ளையில்லா ஈழமலர்வா?
பிரபாகரம் நீ பற்றிக் கொள்
புலரும் தமிழீழம் பூமிப் பந்தில்.

புலம் பெயர் வாழ்வே இதை நீ அகம் கொள்,
பலமது ஊக்கி புலிதனை வளர்க்கும்,
காலக் கடன் இது கண்ணியம் கொள், நிறைவு கொள்
சாலக் சிறக்கும் சாசுவதம் திறன் கொள்.
ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா.

தும்பையூரான்.

2 கருத்துகள்:

  1. நிந்தன் வாழ்வும் நிலை பெற ஒப்பேற்று உனதான நிதியான,நிலையான பங்களிப்பின் மூலம்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாசனி, 07 மார்ச், 2009

    அழகான எண்ணம் ஆவது திண்ணம்.

    பதிலளிநீக்கு

வலைப்பதிவு காப்பகம்