சனி, 21 மார்ச், 2009

பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?


விதை, விதைத்த மாவீர்ர் விருட்சங்களாய், இன்று
வன்னியிலே திரண்டிருந்தார் வெளிச்சங்களாய்
பதை பதைத்து ஆக்கிரமிப்பு படை மிரண்டது,அங்கு
விதையிழந்த நிலங்களெல்லாம் வசமாகுது எங்கள்
சுவாசமானது.

அலையடித்த நிலையினிற்கே அழிந்து போனவன்,ஒரு
புயலடித்து களம் சுரைக்க என்ன ஆகுவான்?
நெருப்பெரிந்த தேசமடா எங்கள் தேசம்,பெரும்
நெருப்பினிலே வளர்ந்தவனே எங்கள் தலைவன்,
தமிழீழத்தலைவன்

பெருமையிலே ஒருக்களித்து போகாதவன்,எந்த
கருமையிலும் நிலைகுலைந்து ஓயாதவன்
ஒளிக்கதிராய் எங்களின வழியானவன்,என்றும்
ஒரு கருத்தே உலகெறிந்து உயிரானவன்,எங்கள்
உதிரானவன்.

நெக்குருகி,நிலைதவறி போனவனில்லை,என்றும்
நொருங்கிப் போகா மக்களவன் காவலின் எல்லை
ஊனுருக்கி,உயிரெறிந்து எல்லை மீட்டவர்,அவர்
தானுருகி தமிழீழத்திற்காய் தனையெரித்தவர்,எங்கள்
நிலை யாத்தவர்.

வேளை வரும் போதினிலே வேதனையில்லை,அந்த
ஒலை எமதாகும் வரை ஓய்வேயில்லை,சித்த
வேதனையும் எங்கள் வசம் வாசம் பேசுமே,சுரந்த
சுகந்தமான சேதி வர சோகம் ஓயுமே,எங்கள்
தாகம் தீருமே,தமிழீழ தாகம் தீருமே.

மீட்டெடுத்த மானம் என்றும் விலை போகுமா?மண்ணில்
பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
ஊட்டி வைத்த தலைவன் அவன் வீரம் ஏந்துவோம்,இசை
பாட்டெடுத்து வானுயர புகழ் நாட்டுவோம்,
தமிழீழ கொடி ஏற்றுவோம்.

.தும்பையூரான் 21.03.2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்