செவ்வாய், 31 மார்ச், 2009

எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.


உபத்திரவம் ஈய்ந்தவர்கள்,உவாதையால் உழன்றிருக்க
உத்திரவாதம் உய்த்தவர்கள் உவகையால் நிறைத்திருக்க
பத்திரமாய் எங்கள் தாயுமானவர்கள்,மனம் பாகாய் பசிந்திருக்க
சித்திரமாய் சிந்தை கொள் சித்தம் சிறந்திருக்கும்.எங்கள்
ஈழம் தகைந்திருக்கும்.

இரவு,பகலென்றில்லாமல் இழவு தரிக்க வைத்த ஈனர்
இதய நோயால் இடர்கள் இரைக்க வைத்த பேயர்.
தரவு,மரபு தெரியாத் தண்டனையாய் தகைத்த ஊனர்
உறவழித்து,இனமழித்து,உற்ற சுகம் துய்ப்பாரா?,உறுக்கும்
ஈழ நகை தவிர்ப்பாரா?

ஓராயிரம் எறிகணைகள் ஓய்வின்றி ஓட்டிய இருளர்,
ஓராயிரம் இன,சனங்களை தயவின்றி சாய்த்த மிருகர்,
பாயிரம் பாடிடவா பார்த்திருப்பார் எங்கள் வீர்ர்?ஆரியர்
பாடை ஏற்றி எங்கள் வன்னியிலே புதைத்திருப்போம்.உதய
ஈழம் அங்கே தகைத்திருப்போம்

துவண்டிருக்கும் சொந்தம் சுவாசம் மீட்டிருக்க,
வண்டிருக்கும் மலர் வசந்தம் பூண்டிருக்க,
செண்டிருக்கும் மன சந்தம் அகண்டிருக்கும்.
கண்டிருக்கும் மான உயர் மகிழ்விருக்க,
கொண்டிருக்க கோலம் தளிர்ந்திருக்கும்.


ஈட்டிருக்கும் இகம் பார்த்திருக்கும்,சுக
ஏட்டிருக்கும் பாட்டிருக்கும் லயம் சேர்ந்திருக்க,
மாய்ந்திருக்க பகை ஆக்கிரமிப்பின் சுருதி துவண்டிருக்கும்.
சாய்ந்திருக்க சுழல் ஓய்ந்திருக்கும்,எந்த வையகமும்,
சார்ந்திருக்க எங்கள் தேசம் கொடி யாத்திருக்கும்.

தேர்ந்திருப்பான் சூரிய ஒளி சூட்சுமம் தூய்த்த,
எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
வீசி வரும் சுகந்த காற்றெடுத்து உகந்த ஊர்தெளித்த,
தாகத்திற்கும்,ஈற்றெடுத்த ஈழத்திற்கும் உயிர் தந்த மொழியானவன்.
தமிழீழ விழியானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்