ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உன் அகத்தில் என் அகத்தை!

ஆனந்தப் பூங்காற்று வீசும் ..அதில்
ஆயிரம் கானங்கள் சேரும்.ஆலிழை பூவொன்று
ஆரத்தி சீர்கொண்டு ஆடிட சேதி சொல்லு.நீ
அன்பெனும் பாதை வெல்லு.

நித்திலம் நிலைக்கும் என்றாய்.நீ
நிம்மதி வாழ்விலென்றாய்.சத்தியம்
என்பதும் தர்மங்கள் என்பதும்
சாய்ந்திட பாதை இல்லை.இவை
சந்தமின்றி வாழ்வதில்லை.

ஆனந்தப் பூங்காற்று வீச
அதில் ஆயிழை நூதனம் கொள்ள
சீர்தளம் பொங்கிடும் காற்று
என சில்லிட்டு தளிர்த்திடும் நாற்று.

தேனாற்றங் கரைதானே தேயாத நிலாதானே
இயற்கையை ரசித்தெழுது
இன்பச் சேதியை காதில் சொல்லு
அதில் கானங்கள் நீவட்டுமே
எம் காதலும் வாழட்டுமே.

காலங்கள் எமக்காக கனிந்திருக்க.அங்கு
கார்த்திகை பூக்களாய் மலர்ந்திருக்க
கோலங்கள் யாவும் மனம் சொருக
மகிழ் ஞாலங்கள் எம் கனவிறுக்க
நித்திய பூமிக்குள் நிறைவிருக்கும்.என்றும்
ஆனந்தக் காற்று வீசும்.
அதில் ஆயிழை நீ தனம் கொள்ளும்,

வியாழன், 28 ஜனவரி, 2016

பாவம் இவன் பாக்களெல்லாம் வெறும் போதை


பாட்டெழுதி பாட்டெழுதி
பாவை உந்தன் சீரெழுதி
பார்த்திருந்தான் நிந்தன் பாதை
பார்க்கவில்லை அந்த கோதை


நெஞ்சகத்தில் தந்த வலி
கேட்டிடுமா இந்த ஒலி
வஞ்சகமோ உந்தன் வழி
வாழ்ந்திடுமா எந்தன் மொழி
Bildergebnis für traurig auge

கண்ணகத்தில் என் அகத்தில்
காட்டுகின்றாய் தீப சுகம்
எந்தகத்தில் இந்த பாரம்
இறக்கி வைப்பேன் இதன் ஈரம்

 Bildergebnis für traurig auge
வாழ்வெழுதிப் போவதற்கும்
வாழ்க்கை துணை தேவையென்று
பாவை உனை பார்த்திருந்தேன்
தினந்தோறும்
பாவின் வழி நாடி நின்றேன்
பதம் தேடி
பார்க்கவில்லை என்னை பேதை
கோர்க்கவில்லை எந்தன் பாதை.

ஊரெழுதி கொண்ட சுகம்
உள்ளதெல்லாம் உந்தன் வசம்
பேரெழுதி போகுமா எந்தன் யாகம்
பேதை இவள் பார்க்கவில்லை பெரும் வாதை.
பாட்டெழுதி. பாட்டெழுதி
பாவை நிந்தன் பேரெழிலில்
பார்த்திருப்பேன் வெகு காலம்
பாட்டுடைத்துப் போவேன் ஒரு லோகம்.
பாட்டெழுது.ஒரு பாட்டெழுது.
பாவையே எனை சேர்த்தெழுது

திங்கள், 25 ஜனவரி, 2016

மல்லிகை பூச்சரம் சுமந்தபடி..நான்

நீ ஒரு சேதி சொல்லு
என் நெஞ்சிற்குள் மீதி சொல்லு.
விழி பூத்திருக்கும்
மனம் காத்திருக்கும்
இளங் காற்றே~தென்னங்கீற்றே
எனைத் தழுவும் இளம் பூவே பூவே பூவே.



காலங்கள் நாளை கனிந்து விடும்
காவியமாகி விடும்
சோலைகள் ஆயிரம் பூத்திருக்கும்.இன்பம்
இழைந்திங்கு தினம் தளைக்கும்.
இளங்காற்றே தென்னங்கீற்றே
இன்பத்தேனே.உன்னைத்தானே தானே
நீ ஒரு சேதி சொல்லு

மல்லிகை பூச்சரம் சுமந்தபடி..நான்
மனதெழ நாணம் கொள்ள
மங்கை இவள் கங்கை வழி
மனம் நிறை சாரல் அள்ள
என் நாயகன் தான் வரும் வேளை.எந்தன்
நம்பிக்கை நியமாகும் நாளை
என்ற சேதிகள் சுமந்தபடி
எந்தன் சேடிகள் தூது சொல்ல
நான் காத்திருக்கும்
வழி பாத்திருக்கும் காலங்கள் கனியாக.
நீ ஒரு சேதி சொல்ல.

சனி, 16 ஜனவரி, 2016

இனி பூ!

பூவிற்குள் ஆயிரம் பூமாலை.....எந்தன்
தேர்வுக்குள் ஆயிரம் பாமாலை .....இந்த
பூமகள் ஊர்வலம்தான்..கவி பூணுது
உன் முகம்தான்..நான் பாயிரம் பாடிட
பாவை இவள்தானே.

கண்ணிற்குள் மின்னிடும் தோரணமாய்
கவி பின்னிட நாயனமாய்.இவள் கைத்தாங்கல்
நான் கொண்டேன். காதல் மணமும் கொண்டேன்.
பூமகள் ஊர்வலம்தான்
கவி பூணுது உன் முகம்தான்.

இவள் பார்வைகள் தண்மை ஒளி .அதில்
படர்ந்திடும் சலங்கை ஓலி
மனம் கானம் இசைத்திட காரணம் யாரிவள்
பூமகள் ஊர்வலம்தான்.
கவி பூணுது உன் முகம்தான்

இசை புல்லாங்குழல் இவள் தேகமாய்

ஒளிர்கின்றாள் ஓவியமாய்.என்னில்
இசை(க்)கின்றாள் காவியமாய்.
நான் பாயிரம் பாடிட பல்லவி நீதானே.
பூமகள் ஊர்வலம்தான்
கவி பூணுது உன் முகம்தான்.
இழை பூவின் மணம் மன வாசமாய்

வலைப்பதிவு காப்பகம்