வியாழன், 30 ஜூலை, 2009

சீலம் இனி தமிழன் வாழ்வின் சீண்டா எதிரி.


ஏந்துகின்ற ஏணத்தில் ஏதும் இல்லை-இவன்
சிந்துகின்ற சிந்தனையில் சிறப்பும் இல்லை
விந்துகின்ற வினையதில் விகைப்பும் இல்லை,
பந்தம் எல்லாம் பரப்புலகில் வசந்தம் என்று இவன்
கெஞ்சுகின்றான் கேனையன் அவன் கேவலம் சுரந்து.

சொந்த இனம் சோதனையில் சோகம் பாடும்-அந்த
குருதியிலே கூர்க்கர்களின் சுகம் தேடும்,இங்கிவர்கள்
மனிதம் மார்க்கும் பாக்கள் விரிப்பார்-அவலம்
ஆர்த்தெரிக்கும் மக்களை எவர் மனதில் கொள்வார்?

எடுத்த ஒவ்வோர் காரியமும் புலியின் முகம் என்பார்-இவர்
கெடுத்து எங்கள் களங்கள் எல்லாம் கலியென காய்வார்-
சிங்களனின் கால் கழுவும் காரியம் ஆய்வார்,பின்
திங்களாய் தான் திகழ்வதாய் தினமும் தின்பார்.
செங்களமது தேய்ந்த்ததால் செங்கம்பளம் விரித்தார்-தீயன்
சம்பளத்தின் மேலேதான் சன்னம் சாய்வார்.

யார் எக்கேடு கெட்டாலும் சுயநலம் சுரப்பார்-இவன்
ஈழ மக்கள் காவலனென்றே காய்கள் நகர்த்துவார்,
வேற்று வழி இல்லை இனி வேதம் உரைப்பார்-தமிழ்
சாற்றுகின்ற சாவினிலே சாயம் தோய்ப்பார்,

காலம் கரி காலம் என்றே கனைத்து காய்வார்-மக்கள்
கோலம் வேறு கொள்ள வழி இன்றி இரைப்பார்-எந்த
மேய்ப்பனும் இன்றி எங்கள் மேதினி நோகும்-யார்
காப்பார் எங்கள் காயமென்றே காலம் கருகும்.

சீலம் இனி தமிழன் வாழ்வின் சீண்டா எதிரி-இனம்
ஞாலம் என்றும் ஞாய்க்காது எங்கள் ஞாய நியதி
கீலம் கீர்த்து கீழ்த்தரமாய் கிழக்கு காண்போமா?-அந்த
கீர்த்தகர்கள் இல்லா உலகம் கிழக்கில் விடியுமா?

சாளரத்தில் வீசும் தென்றல் விடியல் விதைக்குமா,எங்கள்
பாழ் ரதத்தில் பதிந்த பரிவு விரிவு வீட்டுமா?

ஞாயிறு, 26 ஜூலை, 2009

ஒளி வீசும் வழி திறக்க.


விருப்பெறிந்து,
சிரிப்பிழந்து
கருப்புத் தரிக்கும் காலங்கள்---
நெருப்பெறியுமா?இல்லை
நெகிழ்வில் நெளியுமா?

விதையிழக்கும் வீரியங்கள்
சதை பிளக்கும் சதிர்க் களங்கள்
கதை அளக்கும் கார் முகர்கள்
மன உள இழக்கும் ---எங்கள்
உரிமங்கள் ,உதிரர்கள் எல்லாமே!

விழலிற்கு இறைத்த நீர்போல்,
வினையிழந்து விறைப்பாரே,இந்த
நிலை இழக்க நிமிர் வெய்துவோமா?நிலத்தில்
நிலையெடுக்க நிதம் என்ன செய்வோம்?களம்
களையெடுக்க கலம் என்ன கொள்வோம்?

அனு தினமும் மனம் கொள்ளும் மாட்சி,--எந்த
மனு கொண்டு மக்கள் துயர் தீர்ப்போம்?
திறந்த வெளிச் சிறையில் அவர் தினம் மொள்ளும்
சோகம் எந்த சீரர்கள் சீவியம் பரிப்பார்?

குனிய, குனியக் குட்டுப்படும்
குதங்கள் தினமும் குதையும்.
மேனி அவிழ்க்கும் ஆடைகள் மேதாவித்தனமாய்
மேம்போக்காய் மேவும்,தனிய,தணிய
என் செயலாற்றும் எங்கள் ஏணம்?

அவிய, கரிய எரியும்
ஆவிகளெல்லாம் அதிர்க்கும்,
புவியில்,
பிறவிக் கடனாற்றா புத்திரர் பொலிவின்றி
அறமிழந்து ஆவி களையும் அறன்கள்

ஆற்றாமைகளே ஐதின்றி கலக்கும்.
செறிவு களையும்போது செருக்கு அழியும்.
அறிவு ஆற்றும்போது அருகல் ஆங்கு அழியும்,
முறிவு முற்றிப்போனால் முளையும்கூட முனகும்,பெருக
பொறிகள் பொதியலானால் முளையும் மூர்க்கம் முதிர்க்கும்.
எதுவோ?
எங்கள் ஆற்றாமையின் நோயகற்ற,
ஒற்றுமையற்ற இந்த இழிநிலை தமிழினத்தால்
எந்த வித்தகமும் வினைய ஆற்றாது,---தங்க
தலைவன் தகமை ஆற்ற,
தலை தூக்கும் தார்மீகம்,

என்றோ?
எங்கோ?
ஆயினும் அது
வன்னியின் எந்த மூலையிலோ!
பூமி கீறும் புத்த புத்திரர்களால் முளை,
மூச்செடுத்து முகம் மூர்க்கும் கால வெள்ளம்,
அது கால கட்டளை
களம் திறக்கும் காத்திரர்கள்
ஆளுமை வயல் வார்க்கும்.

கனதி சொரிய,
கரிகாலம் கனலெடுக்கும்—அதுவரை
வற்றலற்ற வகைகளை வார்த்தெடுத்து தமிழ
ஒற்றுமையின் ஓர்மம் ஒற்றுவோமா?
இல்லை குட்ட குட்ட குனிவோமா?

சுயநலங்களை சுட்டெரிக்கும்,
சூட்சுமம் எப்போ நமைக்கும்?
சுட்டு விரலால் சுட்டும்,
சுமை குறைக்க முதுகு சொறியும்,
கோதுமைகளை எந்த கோகுலத்தில்
கொலு வைத்து,எங்கள்
பொது நல போகங்களிற்கு,
நொதுமம்
நோக்கப் போகின்றோம்?
ஆக்கிய ராச்சியம் அகம் அமைக்கும்
ஆக்கம் எப்போ அரண் அமைக்கும்?


நோக்கம் ஒன்று நோ தவிர்த்தல் நன்று,
தாக்கம் தவிர்த்து தா தைரியம் தாக்கு,
ஊக்கம் என்றும் உளதானால் உனக்கும்
உண்டு ஆக்கம்,
யாக்கும் யாக்கம் நாம் நமக்காய் நார்த்தெடுத்து,
ஆர்த்தெடுத்து நறித்தலே நன்று,
ஒளி வீசும் வழி திறக்க.

ஒப்பற்ற தியாகம் தீ தீற்றும்
வெப்பகம் அங்கு வேதினில் வியர்த்தும்,
வைப்பகம் வகுக்கும்,
வார்ந்தெடுத்து
வயந்து நிற்கும் வயல் பரப்பு---நிச்சயமாய்
நிழல் நீட்டும் தாயக தரிப்பெடுத்து.
இது தர்மத்தின்
தார்மீகப் போர்,
விழலாகிப் போகாது,விதி கீறி வினையாற்றும்,
வித்தகம் எப்படியும் எங்கள் எழில் ஏற்றும்.

புசிக்க புலம் புவித்தல் பூர்வாங்க புலனாகும்.


நீதி தலை கவுழும்
தர்மம் தரம் தறையும்
கர்மங்கள் கனல் கக்கும்
வர்மங்கள் வயல் தேடும்,

பாதி வழி பதைந்திருக்கும்
பார்வையெல்லாம் பதை பதைக்கும்
ஓதியவை ஒலி இழக்கும்
மீதியவை மடி மடிக்கும்
சாதியவை சனம் சாய்க்கும்
போதி மர போகம் அது.போலியையே
இனி சுமக்கும்.

உலகப் பிச்சை ஏந்த
தமிழினத்தை கை காட்டும்,
உசாத்து துணையிருக்க
உற்ற உறவு விரிக்கும்.
பிசாத்து பிறவிகளய்யா,பிரம்மம் பீத்தும்.
பரமேத்திகளின் பிரச்சாரம் பார் ஏந்தும்-அதன்
வியாபாரத்திற்கான வித்தக இடமல்லவா.-ஆயினும்
விமோசனம் விக்கிக்க விதங்களெல்லாம் வினைமாற்றும்.

ஏமாற்றத்தை ஏற்றுவதற்கு ஏகமெல்லாம் மௌனம்,
தான் மாற்றும் தரமறைக்க தான் தோன்றும் தர்மம்,
ஊன் மாற்றம் உடனிருக்கா உவகை என்றும் இங்கிருக்கா
பேன் பார்க்கும் குறவர்களாய் குவலம் கூட குற்றமேந்தும்,
யாமங்கு யாபேர்க்கும் யம கிங்கிதர்களாய் உருத்தெரிந்த
பாமாங்கு பரிவெடுக்கும் பறித்தெடுக்க பாதம் பரவும்.

உலக ஒழுக்கென்பார் உற்றதென்ன உறுப்பமைத்தார்,
பலவ எதை அளித்தார் பக்குவம் தான் தரித்தார்,
மலங்க மருவழித்த மடம் மனைய மகிழ்வழித்தார்
உலங்கும் எங்களது ஊனழிக்க உடனிருந்தார்.

பசிக்க உணவழித்தல் பவ்வியம் ஆகாது,
புசிக்க புலம் புவித்தல் பூர்வாங்க புலனாகும்,
அவிக்க ஆர்த்தெடுத்தால் ஆரம் செழியாது,
செழிக்க செருக்கெடுக்க சேந்தனே செரிவாவான்,
பழிக்கும் பதம் அழிக்க பக்குவம் பதமேந்தும்.

சனி, 25 ஜூலை, 2009

அனலெடுக்கும் ஆய்வு உளவு செரிக்கும்..


நெருப்பில் பூத்த விடுதலை பூ
விருப்பில் விழைத்த வைராக்கியம்
உருப்பில் உறைந்த உயர்வு
கருகிப் போகுமா?காலம் இதை ஏற்குமா?
கரிகால காலம் அது களையிழந்து காயுமா?
காத்திரம் கால விழைச்சலை நுகருமா?

பொறுப்பில் பொதிந்த போர் கலயம்
உறுப்பில் உறைந்த உத்வேகம்
கனதியாய் கனத்த கட்டுமானம்
வினைத் திறனின் விவேகம்,வியப்பை
விரித்த வீரியம்,உருகிப் போகுமா?
கரிய கனதியிழக்குமா?---காலம்
கதைகள் கட்டுமா?காத்திரம் களைவை நீர்க்குமா?

பார்ப்பனரின் பங்குகள்,எங்கள்
ஊர்ப்பனவை உயிர்க்குமா?
வேரடி மண்ணை வெயிலாய் வெதுக்குமா?
மாரடிக்காமல் மடிந்த மனங்கள் மலர்க்குமா?
போர் போதிமரம் பொலியுமா?ஆரடித்தாலும்
அங்கமே பிழந்தாலும் ஆயுதம் ஏந்தாமல்
எங்கள் ஆயிலியம் அணையாது.

சுகானுபவம்,
சுழைக்கும் சூத்திரர் எத்தனை
அவலத்தை இழைத்தாலும் அங்கமது,
ஆரூடம் யாப்பது என்னவோ ஈழ மண்ணின்
உயிர்ப்பே தவிர வேறெது?
எங்கள் வேதம் வினைக்கும்.
இடர்பாடுகள்,இன்னல்கள்,இகமேற்காத இழப்புக்கள்,
அத்தனையையும் ஆத்மார்த்தமாய் அரவணைப்பது
ஆதங்கத்தின் ஆணை.
இதுவரை ஈழத்திற்காய் இன்னுயிர் ஈந்த
இளவல்களின் இலட்சியம்,

விழ,விழ முளைப்பதுதான் எங்கள் முற்றத்து மல்லிகையின்
மானாம்சம்,
தொழ,தொழ அழிப்பது சிங்களனின் சீலாக்கியம்,
அழ,அழ ஆக்குவதுதான் ஆற்றல்-இல்லையேல்
அனலெடுத்து அழிவதில்தான் ஆக்கத்தின் தேற்றும்

வினைத் திறனற்றுப் போனால்-பிறவிப் பயன்
இற்றுப் போகும்,உனைத் திறன் ஊட்டுவதே
உயிர்ப்பின் உரம்,
மறுக்கின்!
மயிர்கூட உன் மையல் அகற்றும்,தெரிவு,
தோற்றத்தின் தோகையை தோழமையாய்,
தொடட்டும்,
விழுப்புண் அற்ற எதுவும்
விதையல் விதைக்காது,
விதைக்காத ,வித்தகமல்ல இது
விற்பனம் வியாசிக்கும் விபரம்.
வியாபாரம் அல்ல,விடுதலையின் சூத்திரம்.

அற்றதை ஆக்குவதில் ஆக்கிரமிப்பு அகலும்.
கொற்றவனின் கோகுலத்தில் கொண்டதெல்லாம் முளைக்கும்.
பற்றெறிந்த பாதை மொள்ள கற்றறிவு கலக்கும்.
பற்றி எரிந்த பாதைகள் பாகையாய் பகரும்.
முற்றிய பகை எரியும்,முகாந்திரம் முளை கொள்ளும்.

அனலெடுக்கும் ஆய்வு உளவு செரிக்கும்.
கனலெடுக்க காலம் கச்சிதம் காக்கும்-மூசும்
முரசொலிக்க எத்தாசையும் ஒத்திசைவை ஓர்க்கும்-நீச
குரலழிக்கும் கூத்திரனின் குரலை ஓழித்து-எங்கள்
குவியத்தை வியப்ப வீத உலாவர விதியதை வினைக்க.

வியாழன், 23 ஜூலை, 2009

அகிலெரிந்த தமிழர் அனலெடுக்க ஆத்மம் அறைகூவ!


இகத்தில் ஈழத்தமிழரின் இன்னல்கள்-அவர்
உயிர்.உடலழிப்புக்கள் சொத்து ஈறாக,சொந்தம்வரை
சொல்லில் செதுக்க முடியாத சோகங்களின் துயரம்
இன்னமும் எத்தனை காலம் எங்கள் இனம் சாயும்?

புத்தனின் புனிதம் என்பான்-இவன்
சத்தென எமைக் கொல்வான்-எதிர்த்தால்
ஏன் என்ற கேட்காமல் எவ்வழியோ? அவ்வழியில்
எங்கள் ஆத்மம் அழிப்பான்,

இன்று!
ஸ்ரீலங்காவின்
கோர தமிழின இனவழிப்பின் கோத்திரம் கோர்த்த
அகோர நாள்.
நினைவெழுதும் 26வது ஆண்டு,
வெந்து உடல் கருக்கி,வாளால்
வரைமுறையின்றி வெட்டி
எங்கள் இன வேரழித்த நாள்,

கொதிக்கும் தார் ஊற்றி சிங்களன் தர்மம் கொதிக்க
விதித்த வேட்கைகளின்,
வேட்கைகளின்,
வேதனை சுமந்த கரிநாள்,இனவழிப்பில் தன்
ஈடில்லாத நாட்டம் நட்ட புத்த தர்மத்தின் புனித நாள்,

தமிழர்க்கோ!
தம் தாயக வேட்கையின் தார்மீகத்தை-அவர்
தரப்பில் தாக்கமாய் தகித்த தர்ம நாள்-எதையும்
இழந்த பின் அதன் தரம் தாரிக்கும் தமிழனின்
தாழாமையை அவன் சந்ததி அழித்து,
அவன் சகமான அத்தனை உற்றம்,
உறவு,சொத்து சத்தான அத்தனை
முத்துக்ளையும் முளை கிள்ளி,நெரித்து,எரித்து
அகதியாக அவன் தாயகம் அனுப்பிய,
உருவழித்த உளவுரன் உறுத்த ஊன நாள்.

இதுதான் உன் தாயகமென காடையன் சிங்களன்-எம்
செவியறைந்து தேசமெல்லாம் சங்கூதி
சா தரிக்க எம் ஆவியெல்லாம் ஆதாரமற்று,
ஆடி அவலம் ஆகார்சிக்க எம் அங்கம் பிளந்து-உன்
சொந்த தேகம் சமைக்க கட்டளை இட்ட காவிய நாள்.

ஆம்,
ஆயுத ஏந்தலை எம் ஆற்றலிற்கு முரசறைந்த முகூர்த்தநாள்,
எத்தனை சொந்தங்களை தோட்டத்துடன் இழந்தோம்,
அது 1983.
இன்று
அதன் வெள்ளி விழாவை வெகு விமரிசையாக
ஆரியன் அதமத்துடன்,
அக்கம் பக்க பார்ப்பனனின் பங்குடன்
எத்துணை வீச்சுடன்,

இன்னமும் இந்த நீண்ட இடை வெளியை நீட்சித்த
எங்கள் மறவர்களின் மறமே,
ஆண்டு 1983-ன் பின்
எந்த இனவழிப்பையும் ஸ்ரீலங்க பயங்கரவாதியிடமிருந்து
பாங்காக காத்தது.
அந்த இடைவெளியின் ஈடாட்டத்தை
ஈழமமைத்த அந்த ஈகர்களை-வேரோடொழிக்க
வேட்டையாடினான்,வேட்கை தீர வேட்டையாடினான்,

இனவழிப்பு அவன் இதயம் ஏந்தியதால்,
யார்?
எவர்?
வயது,பால் வேறுபாடின்றி வேகமாகவே
இனவழிப்பு வேட்டை-அதன் எல்லை வரையில்
அது
ஆசுவாசமான வேட்கை கலைந்த வேட்டொலிதான்,
வெற்றிகரமான களம்தான் வேய்ந்து முடித்தான்-அத்துடன்
ஓய்ந்தானா?
அங்குதான் எங்கள் தானத்தின் மானம் ஏய்ந்தான்.
இங்குதான் எங்கள் வைரம் வரைந்தான்.

எங்கு?
எவர்?
எப்படி?
நுழைந்தாலும் எங்கள் காயத்தின் காரம்
காலம் மொள்ளும் வரை காயாது,
ஓயாது,
ஓங்கும் ஓர்மம் ஒரு விடியலிலே விதையும்,
இழந்தது
முடிந்தது,
எரிந்தது,
படிமம் படித்து ஆங்காரமாய் எதிரொலிக்கும்
ஏங்கும் ஏதிலங்கள் அங்ஙனமே
ஆக்கம் தரிக்கும்,
வீழ்ந்தது
எழத்தான்,
ஆயின் எரிந்தது.
விரியத்தான் என்ற விசைகள் திசைகள் தாங்கும்.
வியப்பான விதையல்
நிச்சயம்
எம்
தேசர் தகிப்பார்.அந்த
தேனான தேசிய கீதம் தேகம் சிலிர்க்க-தமிழ்
தேசியர் எம் தேசமெழுதுவார்.
ஆடி மாத அவிப்புக்ளை அகம் ஆய்த்து.

எங்கள் தேசத்திலும்
ஒரு நாள் அந்த விடியலின்
வெள்ளி வீசத்தான் விதிக்கும்.
விரியும் வீரம் சொரியும், கரிக்கும்
சோகமெரித்து,ஆடி இனவழிப்பு
ஆரியனின் தேசமெரிக்கும் தேதி
தினமெடுத்து,எங்கள் தினவெடுத்து.
அகிலெரிந்த தமிழர் அனலெடுக்க ஆத்மம் அறைகூவ!

ஞாயிறு, 19 ஜூலை, 2009

வெள்ள முள்ளி வாய்க்கால் வாய் பாடை அகற்றாது.


விசனத்தின் விம்பங்கள்
சனத்தின் சன்னங்கள்
சத்தமது சாரம் சாருமா?சித்தமதின்
சிரமங்கள் சிராய்ப்பு சிதையுமா?இந்த
கர்மங்கள் காயம் ஆற்றுமா?

வினயமற்ற விகல்பம்
வியாக்கியன மாற்றும் விதங்கள்
விதண்டாவாதம் விசிக்கும்
விதியென்றே விகற்றும்
விற்பனங்கள் விதியாற்றுமா?விதிக்க
வித்திடும் விதமறிமாயா?

அரசியலாற்றும் அரங்கிதுதானா?
அசிங்கமேற்றம் அங்கமிதுவன்றி
அகம் அரத்தும் அறிவோனே,எந்த
யுகம் யுகத்த யூகம் யுதித்தாய்?எங்கள்
தக்கவரின் தரம் தரைக்க,மனிதமற்ற
அரக்கனே,நீ மாய மாட்டாயா?எங்கள்
மரபுகள் மனம் ஒலிக்க.

இன்றல்ல,என்றோ ஒருநாளும் அல்ல
காலர் காப்பெடுக்கும் காலம் காத்திரமாய்-உன்
காப்பரிக்கும்,
எங்கள் இனத்தின் இடர்கலந்த மூச்சது,
முறம் நிச்சயமாய் உன் முரசரிக்கும்-மூப்ப
சுட்டெரிக்கும் சூரியத்தின் சுயம்பு உன் சுயம் எரிக்கும்.

வேதனைகளின் உச்சத்தில் எங்கள் இனம்-வெறும்
வேதனையல்ல-
வேர்கொண்ட இனத்தின் இருப்பெறிந்ததானம்-
இன்று!
தார்ப்பாரியமின்றி தகவெல்லாம் சடங்கிழந்த
சாமான்னியம்,
எந்த மானியத்தாலும் மையம் திருப்பா திருப்பாதங்களது,

அணு,
அதற்குள் அடக்கி வைத்திருக்கும் வைராக்கியம்-வற்றாத
விறுமானங்களின் விதைகள் –என்றும் நீ
அணைத்தாலும் ஆரவாரமற்று அகந்தை அகற்றி
பேறு பெறும் பெரும் வேதமது-நீறு பூத்து
நெருப்பெறிந்து உன் மேதினியில் மேவும்-
உதிர்ந்தெல்லாம்
உருக்கொள்ளவே அழிந்தென்ற நியம் நீ நுதிக்க
பாய் விரிக்கும் பருவம் பரவ பகுக்கும் பாதை-இன்றல்ல
என்றோ ஒரு நாளுமல்ல-
நொதிக்கும் திராவகமாய்-
வீதி கீறி வரும் கலயம் நூதனம் தகைக்கும்.

விநாடிகள் நிமிடங்கள் ஆவது போல் ஒரு
விடிவெள்ளி அதோ-அந்த வெள்ள
முள்ளி வாய்க்காலிலே முளைக்கும்.
முத்திரை நீ முறிக்க-
எங்கள் பத்தரை மாறா
பவளங்கள் சொலிக்கும் சோகம் சொதையும்.

சனி, 18 ஜூலை, 2009

நித்தம் நீதி நீர்க்கும் நிணையான நிணையம்.


செங்குருதி செம்மண்ணில் செங்கதிர் செழிக்க
தமிழர் குருதிதான் தாயத்து தகைந்தது.
பைந்தமிழ் ஈழ நிலத்து பாகம்
பாவம் என்ன செய்தது?

ஒரு பிடி மண்ணெடுத்து முகர அதில் பிண நாத்தம்
பிளிறவில்லை மாறாக,
பிரதியுபகாரம் இரந்தது,
ஏ!
இழி நிலை ஏற்கும் தமிழ
உன் பிறப்பின் பிரம்மம் பிறழ்ந்தது ஏன்?
பிடி மண்ணில் பிறவிக்கடன் ஆற்றா உன் பிறவியின்
பிரக்ஞையை பித்து பிரவாகிக்க
பீடை களம் கவ்வ நீ கவ்விய காதகம் யாது?

பிறப்பில் ஓர் அர்த்தம் அரவணைக்க,உன்
உறப்பில் நீ ஆய்ந்ததை விட ஆக்கிய யாக்கம் யாது?
விறப்பேற்றும் உன் விந்தகற்றல்களை தவிர,உன்
குறள்,குரல் கூற்றிய கூற்றம் கூறுவாயா?

நேற்று நெற்றிட்ட உன் நெற்றல்கள் யாவும்
தேற்றல் துலைந்தது எதனால்?தோற்று இன்று
தோரணம் தீற்றும் வாரணம் வகுத்தாயா?
ஆரணம் அகற்றிய ஆக்கம் அகித்தாயா?
வீரணம்,
வீரங்கள், தூரங்கள்-
துக்கிய தொலைவு தோன்ற!

ஆற்று என்று உன் ஆற்றல்கள் நோற்றது என்ன?
காற்று அன்று கலந்து இன்று கரமகற்றிய காரணங்கள்,
வீற்றிருக்கும் விதங்கள் விரைத்தாயா?பூற்று புறம் பூக்கும்
மாற்றல்கள் மரபு அறிவாயா?நேற்றுவரை களம் தவிர்த்த
பகை இன்று பாகம் பதித்ததன் பாதம் பார்த்தாயா?

எதிரியின் தோட்டமென்றாலும் வாசம் இருந்தால் எந்த
வையகமும் வரவேற்கும்-ஆனால்
எங்கள் எதிரியின் தோட்டத்தில்-
எந்த வாசம் வரைவாகின்றது?
எந்த வையகம் வரவு ஏற்றும்?
சிந்த இகத்தில் இடுகாடு தினம்
இயற்றும் இந்த இரவர்களை
குந்த ஒரு குடில்கூட குவிய கரம் காட்டாமல்-அனுதினமும்-

வெள்ளி, 17 ஜூலை, 2009

எவ்வொளியை உருக்க? எவ்வொளியை பெருக்க?


நித்தம் குதூகலிக்கும்
முத்தம் முதுமை ஒழிக்கும்
சித்தம் சிறுமை தறிக்கும்,
வித்தகம் வீற்றும் மழலைகளின் மழை.

யுத்தம் யுகித்திருந்தாலும்,
எத்தனே வதியிருந்தாலும்,
பத்தனே பதித்திருந்தாலும்,
முக்தனே முகிழ்ந்திருந்தாலும்,

ஒரு
மழலையின் மொழியில்
அத்தனையும் மறந்திருப்பான்,
அத்தனை ஆசுவாசமான சுவாசமது,
சித்தம் அனைத்தையும்
சத்தென சுகிக்கும் சூரியம் அது.

யார்,எவர்,எங்கே
எவருடைய குழந்தையானாலும்,
எந்த கோத்திரமும் கொலுவமைக்காமல்,
சாதி,மதம்,இனம் எதுவும் ஏகம் ஏற்காமல்
கொலு ஏந்தும்
வலு
இந்த
மழலைகளின் மையல்கள்,

சிரிப்போ,
அழுகையோ,
எதுவானாலும் வலுவான இந்த வசந்தங்களையும்,
கொலையன்,
புலையன்,பூமி சுவாசித்தலின் சுவாசமகற்றி
புலைத்த அந்த கோரியனை,
வையகத்தின் எந்த வைப்பகத்தில் வதையிடலாம்?

ஒன்றா?இரண்டா?இந்த இரண்டகனின்
வஞ்சனையில் இருளேந்திய எம் பிஞ்சுகள்.
பிசாசுகளிடம் கூட இரந்தல் அகமாற்றும்.

ஆயின்
இந்த
பிரமேத்திகளிடம் பிசாசுகளே பிச்சை கேட்கும்
பிரம்மங்கள்
இப்போ
மகிந்தாவின்
மையப் பூமியான மயானத்தில்

யார் தாண்டப் போகின்றார்கள்?
யம காண்டம்?
எவர் இனி இங்கு ஏற்றல்களை ஏற்றமுடியும்?
பார்
எந்த பாத்திரத்தை பகித்தாலும்
வகி பாகம் பாலம் பகிர,
யாத்திரம் எந்த யந்து யதிக்கும்.

ஏக்கத்தின் வீச்சில்
வினையாற்றா எங்கள் விதைகள்.
ஆம்,
தேசக் குழந்தைகள்,
ஈழ பரிபாலனர்கள்
இவர்களின் பாதை
வீச்சற்றுப் போகுமா?
வீரியம் தளை விடுமா?
ஆரியம் அழித்தொழிக்க
அடிச்சுவடே அரணற்றுப்போகுமா?

வாழ்வென்ற வதை குழத்தில்
குழலற்றுப் போகும் எங்கள்
இளைய,இனிய
தலைமுறைகளிற்கு நாம்
காற்றும் கடமை தான் என்ன?
காலத்தை கைகாட்டி கைகழுவும்
யாலமே இனியும் யதியென்றால்,
எம்
முற்றத்து
மல்லிகை முதல்
மையம் மகித்த
அத்தனை
அவையங்களையும்
வசதி கருதி மறந்துவிடுவோமாக.

அஃதின்றேல்
அர்த்தமான
புனருத்தானருங்களிற்கு
புவியில் ஓர்
புதுத் தரமாற்றுவோம்,
யுகம்,யுகமாய்
யுத்தம் யுதிக்கும்
எங்கள் யுத்தர்களை
உதயமாக்க உற்ற வழி உகுப்போம்,
மற்ற மையல்களை மருளாக்கி.

உங்கள் ஊகங்களையும்,
புலம்பல்களையும்,வக்கணைகளையும்
கணையகற்றி காலக் கடமைக்கு
கட்டியம் கட்டுவோம்,
காலத்தேவனின் காத்திரமான கட்டறைகளை
காத்திரமாய் கனதியேற்ற.

புதன், 15 ஜூலை, 2009

செங்கதிர் ஏந்தி நிற்கும் எங்கள் சேந்தல்கள்.


நினைவே சுமையாகும்-
இந்த நீட்சி உளவாகும்-
கனவாய் அது போகும் காட்சி
தினம் நோக்கும்.
கானல் கதைந்திருக்கும்
காலம் அதை சுகிக்கும்
கோலம் மாறுமா?
எங்கள் கோலம் மாறுமா?

வானம் வெறித்திருக்க எங்கள்
வாசல் கருத்திருக்க,முள்ளி வாய்க்கால்
முகை விடுமா?அந்த வெள்ளி முளைக்குமா?
உள்ளம் சொல்லி செதுக்குமா?
உள வன்மம் உறக்குமா?

கானம் கலம் காய்க்கும்-எங்கள்
தானம் அதை காக்கும்,ஊனம் உலைத்திருக்க
ஈனம் இழையுமா?
தமிழ் ஈழம் மலருமா?-தாள
கனவாய் உதிருமா?
நனவாய் நகலுமா?

வேணம் எமை வேர்த்தும்-அந்த
வேதம் தினம் சீற்றும்-தமிழ்க்
காலம் மலருமா?நம் காதில் ஒலிக்குமா?
கரை கண்டே கலக்குமா?

ஏதோ விழைந்தாலும் எங்கள் ஏகம் எரிந்தாலும்
ஊரே அழிந்தாலும்,எம் உறவே உலர்ந்தாலும்,
பாரே பழித்தாலும் எம் பாக்கள் ஓயாது,அந்த
பருவம் பதியாமல்,
எம் உரிமம் உகராமல்,
எங்கள் உரிமம் விதியாமல்.

கல்லறை கனம் கனத்தும்-அது
கர்வமாய் கரம் இறுக்கும்,சொல்லொளி செதுக்காத
செங்கதிர் ஏந்தி நிற்கும்,
எங்கள் சேந்தல்கள்
சங்கெடுக்கும்,அதில் சாசனம் நிறைவேறும்.எங்கள்
சாகசம் தனை ஈர்க்கும்.
எங்கள் சாசனம் சகமாகும்.

திங்கள், 13 ஜூலை, 2009

காதகத்தை கலைக்க கல்வியை தொழு.


விக்கிரகம் தான் விதைப்பார்-பார்
சந்தியெல்லாம் சாகசமாய் தான் துதிப்பார்,
விகல்பங்கள் மனமதை கவ்வ-சிந்தனைகள்
வஞ்சனையை மொய்ய,வேடிக்கை மனிதர் இவர்

விதியென்பார் விலக்க துதியென்பார்-தன்
கதியாக்க காத்திரமாய் கலம் விரிப்பார்-சாமி
பொறுக்காது என கூற்றி கண்டதெல்லாம் படைப்பார்,ஏழை
பசியென்று ஏகும் போது எறிந்து அவரை அலைப்பார்-
வித்தக மனிதர் அவர்.

செத்திடும் போதினிலே பத்திடும் பதம் பதிப்பார்,
வித்திடும் வினையாற்ற விறையாத சிந்தனை சித்தர்
இவர்,
கத்திடும் காதகங்கள் காலமொள்ளலில் களவாடப்படும்,
சித்தகம் சிரித்திட சிங்கார சிலம்பிசைப்பார்.
ஐயனே,அப்பன் என்பார்
ஆசையெல்லாம் அழித்ததாய் அளப்பார்-அத்தனையும்
வேசமென
வேயார் கல்வி கலவாத,வஞ்சனையற்ற உளம்.
இவர் வாசனையை வேதம் என்பார்-சொன்னாலும் செய்யும்
சேவக சேந்தல் இவர்

வீட்டில் குழந்தை செல்வங்களிற்கு
சுகயீனமென்றாலோ?
பள்ளிக் கட்டணம் என்றாலோ
சதமேதும் சலிக்கார்,இறை பக்தியின் ஈற்றிவர்
யாரை தோழனென்று தொழுகின்றார்?

பாவம் கல்வியை கலவ விடாத கந்தகன் இவன்
சேமம் சேர்த்திட இவன் உழைப்பெல்லாம் உறிஞ்சும்
மார்க்கம் அறியா மார்க்கண்டு.
இந்த விக்கிரகத்தையும் இயல்பாக தொழுகின்றான்.
விக்கிரகத்தை விலை பேசும் விதி என்று மாறும்.
சொல்கிரகத்து சோழரவர்க்கு,
காதகத்தை கலைக்க கல்வியை தொழு.

உருக்குலைந்த இனத்தின் உற்சவம் அது


வெப்பகங்களை உறிஞ்சும்
பூமித்தாய் இங்கு தன் வேதம் தவிர்க்கின்றாள்,
காற்று கூட கதிகலங்கி காயமாக்குகின்றது.
வீசம் தவிர்க்கும் மரம்,செடி,கொடியென
இயற்கையின் அத்தனையையும்
செயலிழக்க சேடம் இழக்கின்றது.

கொடியன கூடிக் குதூகலிக்க,
கலிகாலமென காலம் காட்டூவோரே,இதன்
சாரம் இதுதானென வேற்றுமுகம்
காட்டும் கயம் அறிவோம்,
பரம சிவன் பாம்பென உன் பாதம்
யாவும் அறிவோம்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை போல எம்
ஆசை கரைய எந்தப் பூ சர்க்கரை,
இழப்பூ வா,
இனப்பூ வா
இல்லை தமிழர் தாமென தரம் பாறி
ஈனர் கால் நக்கும் ஒட்டுப் பூ வா.

இருப்பதை இழந்து இல்லாததிற்கு ஏங்கும்
கானல்களின் கதைப்பூ வா?
கிழக்கில் உதயமென உறுப்பேற்றி,உறப்பறித்து,
அன்று,
உலக வலத்தில் கடன் வாங்கி காதகர்கள்
இன்று
வடக்கில் ஏதோ வசந்தமென சந்தம்
முடக்கி மீட்க தேர்தலாம்.
தமிழர் தினம் சொத்திழந்து,
சுகமிழந்து,உற்ற இனசனம் எல்லாம் இழந்து
ஒரு வாய் கஞ்சிக்கு காயும் இந்த களத்தில்
தேர்தல் ஒரு கேடா?
யார் வாழ இங்கு தேர்தல்
நீர் வற்றிய செடிக்கு வசந்த விழா வா?
பேர் தேடும் இனத்திற்கு பொன் விழா வா?
பார் இதை பாராது.
எனும் பனித்திரைக்கு பவள விழா வா?
வைரங்கள் இங்கு வதைத்ததால் வைர விழா,
ஆம்,
பேரினவாதியின் பொற் கோர இனவழிப்பிற்கு
இங்கு வைர விழா.
வா,
வையகமே வன்னியின் முள்ளியவளையில்
முகைகளுடன் எங்கள் மூர்க்கம் முடித்ததிற்கான
உன் கொள்ளுப் பேரனுடன்
கொட்டும் முரசொலிக்க கொள்ளு நீ பவள விழா.

ஆயினும்!
இந்த அகத் தாரையில் நீவிர் ஆற்றிய
அத்தனை வடுக்களையும் களையாமல் நாம்
சொத்தாக சேர்த்திருப்போம்,அதுதான் எங்கள்
வாகைக்கான இடுகற்கள்,
இந்த கற்களின் மேலொரு காத்திரம் கருத்துவோம்.
செத்தாலும் செருக்காற்றா சேடம் இது.
உருக்குலைந்த இனத்தின் உற்சவம் அது
ஆதலால் அடுத்த தலைமுறைக்கும் அகலாத
ஆர்ப்பது.

அகலெடுக்கும் ஆற்றல் நிச்சயம் சயனம் சரிக்கும்,
நகலெடுத்த நச்செல்லாம் நியம் நீர்க்கும்,
புகலிடத்து புவனமெல்லாம் பூடகம் பூரிக்கும்.பூவகற்றிய
புலமெல்லாம் புரட்சியின் புலம் புகும்.
தாக்க
தக்கதெல்லாம் தரமமைக்கும்,வேர்க்கா எங்கள் வேதம்
ஓங்க ஒலிக்கும் ஒத்தகைத்த ஓர்மம் ஓரிக்கும்.

ஆய்க்கினையின் அகலங்கள் இன்று ஆங்காரிக்கும்.
நிதம் நீர்ப்பெழுதி அவர்கள் தம் ஆத்மம் எரிக்கும்.அனுதினமும்
முட்கம்பியின் வேலிக்குள் முகம் அழுகும் இனம்
முதுசம் இழக்கும்,ஆட் கொள்ளா அரங்கதனில் அவர்கள்
அத்தனையும் அவலம் ஆட்கொள்ளும்.

கேட்க நாதியற்ற ஈன இனமென ஆரியர் அரண் அமைக்கும்,
விதம்,விதமாய் அவர் விற்பனங்கள் விதமேறும்,மீற
உதமம் உருப்பி உள்ளதெல்லாம் உறுத்தெறிந்து சாக்காட்டும்
சாகசமாய் புலியென முத்திரையை முதுசமாய் மூட்டும்.

வையகம்.
என்றுமே எங்கள் வளம் காக்கா,
கையகம் காக்க கார்ப்புலத்தை கரைத்தெறிக்க,
தையகம் நாங்களே தைக்கவேண்டும்,எனவே
பொய்யகம் பூளும் பொக்ககங்களை பொசுக்கி,போர்
பொய்யா போர்க்களத்தை பொருத போர்முகம்,
பொருத்துவோம்.
இனமே,
என் சனமே
யதார்த்தத்தை நீ யாசிக்க மறந்தால்,எஞ்ச
ஏதும் மிஞ்சா இழி நிலைதான் இந்த இகம் தாங்கும்.
வாரா,வாரம் ஆரியன் இனமழிக்கும் தொகை????
ஆம்,
இன்னல் இகைக்கும் முட்கம்பி சிறையினில் இருந்து
சிரம் தறியும் எங்கள் சிற்பங்கள்,
நாள் தோறும் காணாமல் போகும் மர்மத்தொடர் அது.
மனமறிந்து சொல் உன் மனதிற்குள் எரியும்
அந்த அக்னியின் ஆயிலியத்தை ஆற்ற என்ன
செய்வதாய் ஏகந்தரிக்கின்றாய்?

ஆண்டவனை மண்டியிடும் அற்பத்தனத்தை அறுத்தெறி,
ஆற்றலாக்க ஆதங்கமாய் அணையிடு,ஆகுதியான சித்தர்களை
அகம் கொள்ளு அணையாத அந்த சுரம் சுகிக்க சித்தம் கீறு,
ஆரிய வதம் வதைக்க வற்றாமல் எங்கள் வரம் சேர்ப்போம்.

கீற்றாக கீதம் கிழையும் கொற்றம் கோர்ப்போம்.
முள்ளி வாய்க்கால் வாயில் வெள்ளி முளைக்கும்,
முதுசம் முகைத்து அது பள்ளி பகற்கும்-பார்
கிலேச மாற்றா கிருத்தகம் விருத்தகம் விஞ்ச.
ஆற்று உன் ஆவேசத்தை ஆயிலியமாய்,அரணமைக்கும்
அவோரகணத்தை ஆரோகணமாக்கு வெற்றிச் சங்கது ஊதி.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

தூய களம் காக்கா காலத்துரோகிகள் நாம்.


இல்லத்தில் இருள் பொங்க
உள்ளத்தில் மருள் தங்க
கல்லறைகள் கனவேந்தும்-
ஈகங்கள் இழைந்தேறுமா?

அனுதினமும் அங்கு அரங்கேறும்
அவலங்கள் அவர் அகம் அரைக்க-எந்தன்
ஆற்றலற்ற ஆளுமைகள் அழுகாற்றும்-சொல்ல
முடியாத சோகங்கள் சோகையாற்றும்

விடிவேதும் விதையாதா என்ற
முடிவேந்த முகைகொள்ளும் முற்றங்களே
முனைப்பாய் முகம் அறையும்-எந்த
கனைப்புக்களும் கனவகற்றும்.

வதைகள் அங்கே வரமேறும்-எங்கள் இனம்
பதை,பதைத்து பரமேறும்-இழக்க
ஏதுமற்ற ஏனங்களாய் யாவும் ஆங்கே
யதி யகற்றும்,நிலை மாறா நீட்சிதான் நிலைத்திருக்கும்.

முடிசூடி ஆண்ட எங்கள் மூதாதைகள் முகம் அரிப்பார்,
வடிகட்டி பாவி அவன் பக்கம் அகற்றும் பாதையினை பார்த்திருப்பார்,
முடிவேது,உன் முகமேதென என்னை முகர்ந்திருக்கும் மூச்சுக்காற்று-ஆரிய
கடிவேதனையை களமகற்ற காத்திரமான என் களம் கேட்கும்.

நடக்க,இருக்க,படுக்க,
உண்ண,உறவுகளின், உருவமற்ற
திண்மங்களே திராவகமாக என் எண்ணம் திரிக்கும்,
எண்ண ஓட்டங்களை எந்த முகாந்திரத்தில் காந்திருப்பேன்.
இணையத்தில் இலகுவாக இழைந்திருக்கும் செய்திகள்.

இவையெல்லாம் ஒரு கொடும் கனவாக
இருக்காதா என்ற எண்ணங்களை என்ன செய்ய?
முகம் அறையும் யதார்த்தங்கள் என்னை ஏளனம் செய்ய,
ஏதும் துணையாற்ற தூமங்கள் என் மனத்தை மத்தாக்கும்.
துரோகி என்று என்னை நானே எள்ளுவதைத் தவிர
ஏது கூறி என் உள்ளம் ஆற்றுவேன்?

மதிமயங்கா மாவீரம் எந்தன் மனம் எரித்து
துதிபாடா தூபங்கள் என்னை சுட்டெரிக்கும்,
விதிமாற்ற அவர் விதைந்த வீரியங்கள் எல்லாம்
சதியாற்றும் என் சந்தங்களை சபிக்கும்.ஆம்
புல வாழ்வு சுகிக்கும் நாமெல்லாம்
உறவாடிக்கெடுத்த உத்தம துரோகிகளே என்று எங்கள்
பெயர் கூட பேதமை சாற்றும்.

ஆம்,
யாரென்ன யாற்றினாலும் இங்கு
புவி வாழ்வில் புல வாழ்வில் நாம்
பொறித்த இந்த போற்றல்களின் பொதுவான நாமம்.
கையாலாக காலத் துரோகிகள் நாம்-நீவிர்
ஏற்றாலென்ன,எறிந்தாலென்ன தூய களம் காக்கா
காலத்துரோகிகள் நாம்.என்ன
கைமாறு காற்றப்போகின்றோம்,
காலக் கதிரவன் நாளை ஞாயம் ஞாற்ற.

யார் யதிப்பார் யதியாசனம்?


சீரெடுக்கும் தேர் இழந்தோம்,
சீற்றமெல்லாம் உடன் இழந்தோம்,
மாற்று வழி மாய்ப்பிழந்து
வேற்று வழி தேற்றுகின்றோம்.

பாரெடுத்த ஆர்ப்புலத்தால்
அத்தனையும் நாம் இழந்தோம்
ஆரெடுத்து ஆற்றுவார்கள் அற்ற துணை
போற்றுவார்கள்.
ஊரெடுத்த ஊழ்வினையை
உற்று முதல் ஊற்றெடுத்து,தளையிட
தக்க துணை தேடுகின்றோம்.

நாளெடுத்த நாட்களெல்லாம்
நாமடைந்த துயரமாகும்,பெரும் அவலமாகும்,
வாளெடுத்த வன்னி மண்ணில்
பாளெடுத்து போயினதோ?
சீளகற்ற சிறப்பமைக்க சிந்திய எங்கள்
குருதி குவிய
தாளடைத்து ஆவதென்ன?
தக்க போர் இழைத்திடாமல்.

யாளெடுத்த யாக்கம் யாவும்
யாசகங்கள் யதிந்த்ததாலே
மாளகற்றி மகோன்னதங்கள் மைக்க நாங்கள்
மகிழ்ந்திருந்தோம்.
ஊளடைத்து உடனிருந்து,
உற்ற வழி விதித்து நின்று
ஊடி நின்ற வேதம் இங்கு
வாடி வதை யாக்கின்றதே.
வையகத்தின் வஞ்சனையால்,

தோள் கொடுப்பான் தோளனென்று,
தோழமையால் தோதி நின்றோம்,
பாழடைத்த துரோகியவன் பார்த்திபனின்
பாத்திரத்தை மோதியவன் உடைக்கவில்லை,
காட்டி கனல்களை காத்திரமாய் கலைத்தினால்
மீட்டி நின்ற வீரங்களை விகலமாய் விலக்க விதிந்தோம்.
யார் யதிப்பார் யதியாசனம்?

சனி, 11 ஜூலை, 2009

துயர தூமங்களை துகில் உரிப்போம்.


நெருப்பாற்றில் நீந்தத்தான் பெருவிருப்பேற்றும்.
தெருப்பாற்றில் தேற தேற்றம் ஏதும் தேறா?
உறுப்பாற்றல் உருவேற்ற உவப்பு உருக்கொள்ளும்
மறுப்பாற்றல் மதிப்பளித்தால் மருக்கொள்ளும் மதியீனம்.

கறுப்பாற்றில் கதம் கலந்தோம் காலம் இது பொய்யோ?
அறுப்பாற்றில் அவன் அதைத்தான் ஆறுமினி நெஞ்சோ?
சேற்றாற்றில் சேர்ந்தாலும் சேதமதை செமிக்கும் சேந்தங்களே தேவை,
வற்றாறு இதுவென்று வதை கலத்தல் தகுமோ?

புள்ளி ஒன்றில் குவியம் கூடும்,
அள்ளி அதுவே ஆரை ஆற்றும்.
பள்ளி அதனில் கற்றதுண்டு இது
பாரதனில் பரந்ததுண்டு என்ற பாதை பற்றென பற்று.

அகத்தாலும்,இகத்தாலும் ஆற்ற ஏற்றும்
விகத்தை இனி வீதியேற,
உகந்ததான உறுப்பெழுதும் உற்ற ஊக்கம் அகமெழுதும்,
கசந்ததான காலம் கருக காத்திரமாய் கனதியேற்றும்
விற்பனத்தை வித்தியாசமாக விதந்துரைக்கும்.
சற்புலமே இனி சாவகாசமாய் சன்னல் திறக்கும்.

இழப்புக்கள், இனி வசந்தம் வரிக்கா,
தளம்பல்கள் என்றும் தளத்தை தரிக்கா,
விளம்பல்கள் வியக்கும் வீரியம் சுரக்கா,
குளம்பல்கள் குதிய கூர்க்கம் கூர்க்கா.

இலைகள் அங்கு உதிரும் போது,
இசைவடையும் வேர் இளவேனில் விரிக்கும்,
இயல்பிது.
வெட்ட,வெட்ட வேகம் உதிக்கும் களம் இது.
மீட்க,மிதக்க மீண்டு உதயம் ஊற்றும் உதயம் அது.
தலைகள் சாய்க்க தாகம் அது தாக்கமான
தகங்கள் தகைக்க தான்தோன்றும் தர்மம் அது.

துயர தூமங்களை துகில் உரிப்போம்,
உயர விரிய ஊக்கங்களை உரம் ஊற்றுவோம்,
கயரும் கர்மங்களை கானலாக்க கரம் காப்போம்,
கரித்ததை காலம் கரம் பற்றும்,
விரிந்த விரயமெல்லாம்.

ஞாலமே! நாளை நாயம் கேட்கும் எம் நாயகனை ஞாயித்திரு.


நிந்தனையின் முகவரிகள்.
நிந்தலையில் நினைவுரைகள்.
வந்தலைக்கும் வரபுரைகள்.
எந்தனைக்கும் எழுவுரைகள்?

பந்தனைத்தும் பதைபதைக்கும்.
உந்தலைகள் உவகை கரைக்கும்.
சிந்தனைத்தும் சிதவுரைக்கும்.
கந்தனைத்தும் கரவுரைக்கும்.

சொந்தமனைத்தும் சோகமுகைக்கும்.
சொறிக்கூட்டம் சொத்து சேர்க்கும்.
வற்றியதெங்கள் வரமென்றே.
முற்றிய முகங்கள் முழம் அளக்கும்.
தொற்றியே சிங்களன் சிரம் சிந்தும்.

கிழக்கதில் உதயம் கிறுக்கணைத்து கீர்க்க,
வடக்கதில் வசந்தமென்று வஞ்சனைகள் வார்க்க,
முடக்கமது கொண்டதுவா எங்கள் முற்றத்து முகைகள்?
கிடக்கும் கீலங்களிற்கு கிழக்கென்ன?வடக்கென்ன?
கீழ்த்தனம் கிரகிக்கும் கீழ்த்தனமாய் கிரகம் கிறக்கும்

உற்ற எங்கள் சுற்றங்கள் சேரார்,
உறுப்பறுந்த அவர் உள்ளங்கள் உசாவார்
மறுப்பேதும் பேசாமல் மகிந்தவின் காலில்
கறுத்தாலும் தங்கள் காந்தங்களை காப்பார்.
பொறுப்பற்ற இந்த போக்கிரிகள் எங்கள் முற்றத்தில் இனியும்
முறையற்று முகவிடல் முறையோ?

பெற்றதாயும்,.இறந்த எங்கள் பொன்நாடும்
நலிந்ததாயினும் நனிசிறந்தனவே.
கற்ற காதங்களை கைக்கொள்வோம்,
விறைப்பான எங்கள் முகம் கரைப்போம்.
காலக் கரைசலில் எங்கள் கலம் கோப்போம்.
ஞாலச் சிறக்கவே மீண்டும் ஞாயம் ஞாற்போம்.

இறந்த காலங்களே எதிர்கால எதிர்வுகளை
சிறந்ததாக்க சிறப்பான சிற்பமாகும்,
உறந்ததாயினும் உறுதியின் வேர் சேர்ப்போம்
கறந்தாக காலர் கருக்கும் கலம் காப்போம்,
வறண்டிடாத ஈழ வளம் நீட்டி,உறங்கிடாத
எங்கள் உரம் உற்சவிப்போம்.

இதயத்தின் அக,புற சூழலை,
இருப்பொத்த இயக்கத்தின் ஊற்றலை,
இலங்கும் இயங்கு தளம் நோக்கி,
துலங்கும் துயரம் துகில் கலைத்து,
விலங்கினும் கொடிய விறுமர்களை,
கலங்கிடும் காதக காலத்தினால்,
உலங்கிடாத உதய ஊற்றதினால்,
பெற்றெடுப்போம் பேறு அதனையே பேறாக.
பெறுதி பேற்றும் ஈழப் பேரதனை.

போரில்லா வாழ்க்கை போர்,
ஊரில்லா உறவு போர்
காரில்லா காலம் போர்
கரிகாலன் கவிக்கா காவியம் போர்.

வேரில்லா விழுது போர்
பாரில்லா பகையே போர்,
வாரில்லா வதையே போர்
வஞ்சியில்லா வாழ்வே போர்

முகவுரையில்லா முழக்கம் போர்,
அகவுரமாற்றா ஆளுமை போர்,
தகவுமை தகையா தாக்கம் போர்,
உவமை உறக்காத உரையதுவும் போரே.

பஞ்சங்கள் பரத்தும் பகையே போர்,
மஞ்சங்கள் மரத்தும் மரபும் போர்.
துஞ்சங்கள் துவக்கில் துவக்கமே போர்,
விஞ்சாமல் விதைக்காமல் வினையாற்றலும் போரே.
அஞ்சாமல் ஈழ போராட்டத்தை ஆற்றுதலே போர்
ஆகமம் ஆக்காமல் அகவெடுக்கும் அரும் பணியும் போரே.

ஆயுதமா?
அன்றி ஜனநாயகமா?
ஐயமின்றி ஆயுதமே,அஃதின்றி அரண் அகக்காது,
ஆய்ந்த்து அறிவுசால் திறனாற்றும் திரவியம்.
அனுபவத்தின் அகவைகள் தீற்றிய சுவடது.
ஆயுளிற்கென்ன
ஆகின் அடுத்த சென்மத்திற்கும் மறவா வடுவது.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
உண்மைதான் மகிந்தா மையிற்கும் இலங்கை வேந்தனே.
விதி இன்று விதந்து விகற்றும் விபீடனம் இதுதான்.
இலங்கும் இந்த அறவிடமுடியா கடனதனை கழிப்போமா,
களம் களிப்போமா?
திண்மத்துடன்,திடத்துடன் தீ தெறிப்பெடுத்து,
தீய்த்தல் தீரமாகும் திறவுகோல்.

நெருப்பாற்றில் நீந்திய நெஞ்சங்களை நெகிடெடு.
விருப்பாற்றில் விதைத்து விதைப்பிடு,
உருப்பாற்றும் உதமத்தில் உலவிடு.
வரப்பாற்றும் வாகையாய் வரவிடு.

சோகம் சொல்லி பாகம் மீட்க முடியாது,
பாகம் மீட்பின் பாவம் பரித்தல் பாகாது
ஆவியானவர் மீதொரு அகந்தையாய் அதமிடு
பாவியான எங்கள் பந்தங்களை அகமிடு,
மேவி,உரண் ஊடி,சீவி அரக்கர் சிரம் சீங்க
தாவி ஒரு புலியின் தாளடியில் தரணமைத்திடு.அவர்
சாவி கொண்டு தரணியில் தமிழ் பாடு.
காவியானதெல்லாம் காவியம் பாடும் களம் காத்திடும்.

மாற்றம் தரிக்கா மாற்றத்தின் மாண்பிது.
அற்றதாகினும் அரவணைக்க அகம் திறக்கும்.
ஆற்றல் அங்கு ஆய்வூட்டும்,அனுதினமும் ஆர்ப்பான
வீற்றல் விதைக்கும் வீரியம் சுருங்கியதே தவிர
முற்றாக ஒன்றும் அற்றுப் போகவில்லை அகம் கொள்.

வேளை ஒன்றை வேதம் அது வேயும்,
நாளை கூட அது நதியாய் நகரும்,
பாளை பூத்த பாரம்பரியமது பாரில்
ஊளை உற்று உறுப்பற்றுப் போகா உறுதியின் உறைவிடங்கள்.
நாதங்கள் நாற்றிசையும் நற்சேதியாய் நரம்பேற்றும்.
நூதலங்கள் நூற்றிய நுதமது,சோதி எங்காவது தன்னை
சோகம் சூட்டி சொரிந்ததுண்டா?
ஞாலமே!
நாளை நாயம் கேட்கும் எம் நாயகனை ஞாயித்திரு.

வெள்ளி, 10 ஜூலை, 2009

அரும்பும் அகமெய்ய ஆற்றலே அருமருந்து.


திரும்பும் திசையெல்லாம்,
திருவினையாற்றா எங்கள் திண்மர்களே தினைப்பு,
விரும்பும் வினையாற்றா விதியதுவா விதிர்ப்பு?
துரும்பும் துன்பின்றி தூய துய்க்காது துணையிருப்பு.
அங்கது போல் வாழ்வதில் ஆனதென்ன அகப்பு,
தங்காத சுதந்திரமின்றி தாங்குவது என்ன இருப்பு.
அரும்பும் அகமெய்ய ஆற்றலே அருமருந்து.

கரும்பது விழையவென்றாலும்,கல,கலப்பாய்
நெல்லங்கே விழைப்பதென்றாலும்,ஏன்
பூந்தோட்டமே அங்கு புலரவென்றாலும்,
கால் பந்தாட்டம் அங்கு கலவ என்றாலும்,
துடுப்பாட்டமே அங்கு துலங்க வென்றாலும்,
வயல் வேண்டும் மைக்க தானம் வேண்டும்.
ஆக
ஏதோ ஒரு என்றில்லாமல்
எளிமையான,வலிமையான வலம் வேண்டும்,
நிலம் வேண்டும்,
ஆயின்,
களை அங்கு களையப்படல் வேண்டும்,
காத்திரமான கலம் வேண்டும்,

விடை,தலை வேண்டுமெனில்,
விடுதலையே வேண்டுமெனில்,
சுதந்திர தாகம் சுவையூட்ட வேண்டுமெனில்,
சூத்திரம் தரிக்கும் சூசகம் வேண்டும்,

தரிசான நிலமதில் தாக்கமான தகம் தரிக்க
பரிசாக பலமதில் பாங்கான பாகம் பரவ,
விரிவான விளைச்சலிற்கு விவேகமான வேகம் வேண்டும்,
உரிதான உளைச்சல்களை உள்ளக்கிடக்கை உரவகற்றி,
கரிதான களைகளை கலக்கமின்றி கடைக்கவேண்டும்,
இல்லையேல் ஆணிவேரோடு அகற்றவும் வேண்டும்,

இத்தனை வேண்டுங்களும் இந்த
இடையனிற்கு இருக்கும் போது,
ஈழமதை இருப்பமைக்க இன்னமும் எத்தனை
வேண்டல்கள் வேண்டும்.
இன்னமும் புரியாத பூனர்களை புரைத்தல்,
இருப்புக்ளின் இடைத்தங்கல்களை மரித்தல்,
தன்மையான தகமைகளை தழுவுதல்,
வன்மையான இடங்களில் மென்மை களைத்தல்,
பன்மையான படலைகளை பசுமையாய் பரத்தல்.

திண்ணமான திடங்களை திசையிழுத்தல்,பகையின்
உண்மையான ஊகங்களை உடைத்தல்,
பெண்மைகளின் பேராற்றல்களை பெருக்கல்,
கண்ணிமையாய் எங்கள் கர்த்தர்களை காத்தல்,
தூய்மையாய் திடமாக மாவீர்ர்களை மதித்தல்,

இத்தனைகளையும் இரும்புத்திரையாக்கல்,
எத்தனை இடர் வரினும் இதர பலத்தால் அழித்தல்,
அத்துணை ஆற்றல்களையும் அரங்கேற்றல்,
உற்றதுணை என்றபோதும் உசாத்துணைகளின்,,
உயரம் காட்டலை தவிர்த்தல்

துரோகிகள் எவராகினும் இரக்கம் தவிர்,
இரக்கமே ஒரு விடுதலை நெருப்பின்
உயர்ந்த பலவீனம்,
ஆக அதை தவிர்த்தல் எத்துணை தரமாகிலும்,
ஈக,ஈர மனங்களை மதித்தல்,மறு முகம் காட்டின் மாற்று
நிலை தவிர்த்து மரணமிடல்.

இனியும் ஒரு துரோகி துளையிட விடேல்,
விட்டால் இனி வீரியமற்ற விழுமியங்களே விதையாகும்,
எல்லாம் நரையாகும்,புரையாகும் புலமாகும்,புவி மீது
தமிழினி தரம் தறையும்,தகமற்ற தமிழாகும்,
உமிழ் நீராய் இகம் உமிழும்,உயர்வெல்லாம்
அமிழ்தாகி, அமுசடக்கி, அலைக்கழிந்து,
அகிலத்தில் அரவணைக்க ஆருமற்று
நாளடைவில் நலிவடைந்து, நாதியிழந்து
நாத்தமாற்றும் நகையே! நாளைய சந்ததி,
நகையாகும்,இதை மாற்ற
இதயம் இழைத்து ஈழ நகையணிய
நாணேற்ற நாள் குறிப்போம்,
நாயகனின் நாம மிழைப்போம்.
விசையாவும் திசையாகு.
திசையாவும் விசையாகு,
திரும்பும் திசையெல்லாம்.


வியாழன், 9 ஜூலை, 2009

மாற்று உலகில் மா ஈழ மரபமைத்து.


நாங்களும் நாட்டாமையாற்றும்
நயமான துரோகிகளே,
தீ அதனை தீய்க்க தீரர்கள் அங்கே தீவிரமாக,
நாங்கள் இங்கே நமைச்சல் நொடுக்கி,சொடுக்கி,
தாட்டதெல்லாம் எங்கள் தார்மீகங்களை.

நாட்டுக்கு நாம் ஆற்றிய அருஞ்செயல் யாது?
சுயபரிசோதனையில் சுயமாய் சிந்தி!
பாட்டுக்கு சில பாட்டுக்களையும்,மாதாந்த கொடுப்பனவுகள்
என்ற பெயரில் பல வயிற்றெரிச்சல்களையும்,
புறம் பாட புதுவகையான பறங்களையும்,
எங்கள் பாரர்களிற்கு நாம் போர்த்திய போரஞ்சலிகளையும்
தவிர,
தீவரமாய் என்ன திறனாற்றினோம்?

உள்ளது உவப்பில்லைதான்
ஒப்புக்கொள்! புல உறவே,
பூகம்பாமாய் அங்கு போரரங்கு பூப்பதை
ஏகம்பமாய் எம்மவர்கள் ஏற்ற
வீட்டுக்கு ஒரு வீரரை வியாபிக்க விரைந்தபோது,
ஆரவர்கள் ஆதங்கமாய் ஆதங்கித்தார்?

வன்னியில் வில்லங்கமாக ஆட்களை
அணுகுகின்றார்கள் என்று இங்கு வேதனை கூட்டம்
கூட்டிய கூதர்கள் இங்குதான் இகமெய்தார்கள்.
வெஞ்சின வார்த்தைகளால் எங்கள் வேங்கைகளை வெய்தார்கள்,
அஞ்சன முகமெரித்து ஏதோ மாதாமாதம் மடிப்பிச்சையாக
சில சில்லறைகள் சிந்தியவர்கள்,
தாம் ஏதோ தாங்கி ஈழத்தை தரணியில் தேக்கியதாக கூற்றிய
பொய்யா மொழிகள் எத்தனை,

விடுதலையின் வேதினியில் வேர்ந்தவர்களை
யார் காலில் வீழ்ந்தும் வெளியில் எடுக்கவேண்டும் என்று
இரவு,பகலென்றில்லாமல் எத்தனை பேர் இங்கு ஏகாந்தார்கள்,
போர் மையம் ஒன்று பெரும் பாதை பதிப்பதை,
வேர் கொண்டதை வேதித்த வேங்கைகள். வெப்பியாரம்
அகற்றவேண்டி, ஆற்றவேண்டி ஆட்களை ஆதங்கமாய் அணைத்து கேட்ட
போதெல்லாம் வேற்று முகம் காட்டியதன் வேதனையில்
இதுவும் ஒன்று.
புலவாழ்வின் போதை வாழ்வேற்றும் போதியர்கள் பலர்
ஈழ வாழ்வதை இதமாக்கும் எந்த நற் சொயலாற்றினார்கள்?
போர் ஓய்வு காலத்தில் போய் அங்கு தங்களின் அகதி வாழ்வின்
இன்னல்களை மறைத்து போலிவாழ்வு அங்கு போற்றியவர்கள் பலர்.

தன் தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,தங்கை,
மைத்துனன்,மாமா,அத்தை இப்படியான சொந்தங்களிற்கு கூட
சோக முகம் காட்டி சொத்தழித்துசொந்தம் அழித்து
சொரூபம் காட்டிய பரதேச சோதியர்களை சோதியாய்
உந்தன் மனமும் மனப்பூர்வமாய் அறியும்.
இவர்கள் இங்கு ஏதும் ஆதங்கம் ஆய எதுவுமே ஆர்க்கவில்லை.

இன்றோ!
தன் வீடு பற்றும் போது பற்றி அவர்களின் பரம,பலமதை
தன் எண்ணத்திற்கே ஏலம் ஏய்த்தனர்.
போராற்றல்களை போற்றுவதற்கான கடைசி
அக,புற செலவுகளிற்கு கூட சல்லிக்காசு ஈனாத ஈனர்கள்,
எடுத்திற்கெல்லாம் எல்லாளன் படை பார்க்கும்,எல்லாம்
காக்கும் என்று ஏனோ,தானோ என்று மென்றிருந்த துரோகிகள்,

வன்னியில் வகையாக பகை பார்த்தெடுத்து
அன்னியனின் ஆற்றல்களை படைபரப்பி
உன்னி,உன்னியவன் உய்த்துணர நாம் செய்த பிழைகள் கணக்கில் அடங்காது.
நவீன உலக ஒழுங்கிற்கு ஏற்ற எந்த கருவிகளையும்
எங்கள் காத்திரர்களின் பாத்திரத்தில் பாகை கொள்ளவிடவில்லை,
அதற்கேற்ற பங்களிப்பு பாகையாகக் கூட பரவவில்லை.
பரத்தி,பார்த்து,பேணி,வேணி வளர்த்த
எங்கள் கரிகாலனின் காலத்தேவைகளை கணக்கில் எடுக்கவில்லை.
ஏற்றி வந்த ஏதனங்களை ஆரியன்
பார்ப்பனர்களின் பலத்தால் பதினான்கிற்கு மேற்பட்ட
கப்பல் அழித்து எங்கள் பாதுகாப்பான ஆயுதங்களை மட்டுமல்ல,
பாரிய போராளிகளையும் அழித்தானே,

அப்போதென்றாலும் புரிந்திருக்க வேண்டும்,இங்கு
வேணுதல் பட்டும் பாத்திரம் நிறைக்காது,
விழ,விழவீரர்கள் விழைந்தமாதிரி,
அழிக்க,அழிக்க ஆயுதம் நிறையவில்லை,
ஆக.
ஆயதமும் ஆராது,போராளிகளும் போதாது,
நவீன ஆயுதமும் இல்லை,நாடமைக்க கருவிகளின் வீச்சும் வினையவில்லை,
ஆனால்
ஊகங்களும்,
ஊடகங்களும் ஊதாரித்தனமாக,
மிதமிஞ்சிய கற்பனாவாதங்களினால்
நம்பற்கரிய நம்பிக்கையை நஞ்சாக எங்கள் நாமம் தேய்த்தார்கள்.

தொலைக்காட்சிகள் தோற்றிய தோதில்லாத தோற்றங்கள்,
பார்ப்பன பாரதத்தின்,சீனனின்,பாகித்தானின்,
பார் புல மேற்கத்திய நாடுகளின்
வீச்சுப் புலங்களின் விதத்திற்கேற்ப வித்தியாசமான
வினையாற்றும் கருவிகளை நாம் கொள்வனவாக்க
கொடையாற்றவில்லை,
கொண்ட நிதியின் விண்டங்களால் விதியாற்றவில்லை,

என்ன செய்தோம்?
எல்லாவற்றிற்கும் அண்ணன் ஆர்ப்பான்,புலிகள் புலிக்கும்,
எப்படி?
இப்படி?,அப்படி!
ஒரு ஆற்றலற்ற வேற்று முகம் காட்ட முடிந்தது?
கள யதார்த்தம் யார் கண்ணிலெடுத்தார்?
நிதி மூலம் என்ன வெறும் பணியாற்றினார்?
விஞ்ஞானத்தின் வேகம் எங்கள் வசமாக்கியிருந்தால்,
எங்கள் விண்ணூர்திகளிற்கான
கருவிகளை களமாக்கியிருந்தால்?

எத்தனை வீதமானவர்கள் இந்த அரும்பணியை ஆற்றினார்கள்?
நூற்றில் நூற்றது வெறும் முப்பது வீத மக்களைத்தவிர.
மற்றாரெல்லாம் மாற்று முகம் தோற்றிய வேசர்கள்,வேடர்கள்,
எழுந்தமானமாக எழுதிய நிதியின் திகதிக்கு திதி தீற்றியோர்
எத்தனை பேர்?
ஆழத்தனமாக ஆற்றலற்ற ஆளுமைகள் ஆற்றியோர் எத்தனை?
பற்றவர்களை பதராக்க மற்றவர்கள் மாய்த்த மாயங்கள் எத்தனை?
உற்றவர்களின் உயர்வான ஒப்பற்ற சேவைகளை சேதாரப்படுத்தியோர்கள்
எத்தனை?
குற்றம் கூற்றியே குரல் கழித்தோர் எத்தனை?
மற்றவர்களின் மனம் மாற்றியோர் எத்தனை?
இத்தனை அத்தனை பேருமே அன்று ஏன்
இன்றும் தங்கள் வாசல் பற்றி எரியுதாம்,எங்கள்
தானவர்கள் தாக்கம் என்னவென்று!
வேதம் கரைக்கும் குரவர்களே!
வந்தபின் காக்கும் மீனின் தளமில்லை இது,இதை
ஏற்கெனவே ஏற்றியிருக்கவேணும் உங்கள் தரத்தை.

ஆக,
போராட்டத்திற்கு ஆட்களையும் விடார்,
போராட்ட கருவி கொள்ள காசும் கொடார்,
தேரோட்டமாக்க ஊர்வலமும் வரார்,தேசமெங்கும்
பாரோட்ட பவ்வியமாய் பலமும் தரார்.
ஏரோட்டத்திற்கு ஏதனமாய் என்னத்தை ஏற்றிவைத்தார்?
இன்று வைகின்றார்.

இவர்கள் தமிழரா?
மனிதரா?சகமான உறவினரா?
இன்றும் வேறு முகம் மூட்டி முதுகு சொறியும் இவர்களிற்கு
கொன்று குவிக்கும் மகிந்தாவிற்கு,அந்த கோத்தபாயாவிற்கு,
கொற்றத்து குடை பிடிக்கும் கோதாரி கோடரிக் காம்பாகவும் இன்றி,
மதில் மேற் பூனையான பூசாரி இவர்கள்.

என்றுமே காத்திரமான மனமற்ற
இந்த மாந்தர்களிற்கு ஏன் தமிழும்,தமிழீமும்,
இன்றொருத்தன் கேட்டான் தமிழீழம் நான் என்ன கேட்டேனா?
என்னவோ,
இவனிற்கும் இவன் சந்ததிக்குமாகவா தமிழீழம்.
பொதுவுடமை பொதியான்,இவன் போல் எத்தனை
போக்கிரகள் போதிக்க நான் புத்தனும் இல்லை,
யேசுவும் இல்லை,அல்லாவும் இல்லை

மனிதம் மாதிக்கும் மானிடன்.
புனிதம் ஆதங்கிக்கும் ஆத்மன்,
வினையோகங்கள் விகற்கும் வீரியன்,
மனித யோகங்களிற்காய் மரிக்கும் மாதவர்களின்
மையத்தை மைப்பவன்,ஆதலால்
ஈழத்தை ஈர்க்கும் ஈகத்தவனின் இயல்பில் இயைந்தவன்.
அதனால் இழைந்தவன்.

என்னத்தை கிழித்தோம் ஈழ விடுதலைக்காய்.
ஊனக் கண்ணீர் உதிர்த்ததைத்தவிர,நாம் வீணர்களே
விதி யுரைத்து வீதியிறங்கா கயவர்களே,கால மொள்ளலில் துரோகிகளே!

காலக் கதிரோனிற்கு காதகமாய் நாம்
மீளாத் துரோகம் துய்த்தோம்,
துய்ப்போமா?அன்றி விற்போமா?
என்றுதான் ஏகம் அகற்றி வீசமான வினையாற்றுவோம்?

ஈழம் என்பது கடைச் சரக்கல்ல,
கடைந்தெடுக்க வேண்டிய காலச் சுரங்கம்,
இங்கு வெறும் பார்வையாளர்கள் வேணவே வேண்டாம்,
பாறாங் கல்லுடைக்கும் பக்குவம் உள்ளோர்,பாகமாய் பற்றவேண்டும்.
ஊற்று அருவி போல் உதவ நிதி வேண்டும்,வேற்று முகம் காட்டா
வெறும் வேணவாவை வைது,
ஈற்றும் இலட்சியம் இலங்கும் வரை இயங்கும் பிடிமானம் வேண்டும்.
வற்றாத வகை வாக ஊற்றாக உறுதியுள்ளோர் வேண்டும்,
குற்றம் குறை கூறா குவியர்கள் வேண்டும்.

தலைமையின் தகத்தை தாங்கும் வற்றா மன உறுதியுடையோரே வேண்டும்,இதை அனைத்தும் ஊடேற்ற உற்ற உறவுகளின் தக்க
தரவுள்ளோர் தரமாக வேண்டும்.
ஒற்றுமையின் ஓர்மம் ஒப்பேற்றும் ஓர்மமுடையோர் வேண்டும்,
இத்தனை தகமைகளும் ஏலவே இருந்ததுதான்,
அயினும்! உற்ற வேளையில் அற்றுப் போகும் அக்கப்போர் ஆற்றும்
முட்டாள் தனம் முற்றுப் பெறுதலும் வேண்டும்.

இதற்கான வேளையில் இன்று
பத்மநாதன் பகுக்கும் பத்மாசனத்தை,
வியாசத்தை விசாலமாக வியற்போம்,
அப்பியாசமாக இது அரங்கேறும் ஆற்றல்களை அது
ஆத்மீகமாய் ஆதங்கிக்க,
அனுசரணைகள் சுரணைகள் தவிர்த்து சுனையாக சுரக்க வேண்டும்.

பற்றுடையோரின் பகுப்புக்களை பாங்காக பரிசீலித்து
உற்ற உவப்பான,உயர்வான உள்வாங்கலை உளம் உய்த்து
மற்றெல்லோரையும் மாதவமாய் மனிதாபித்து,
மகுடம் மேற்றும் மா வித்யாசனம்
உத்விக்க உகமாக உரமிடுவோம்,
அஃதின்றேல் நாம் இன்னமும் திருந்தா துரோகிகளே.
பஃறு ஆற்று படுக்கைகளை வெறும் பாத்திரத்தில்
பங்கெடுக்கும் பாவியரே,
திரும்பும் திசை மாறலாம் விரும்பும் விசைமாறாது,
பகலவன் பகன்றது இன்று பாத்திரமாகுது,
கரு அவ்வளவுதான்,காத்திர,நேத்தரம்தான் நெடியது.
உரு அது கொள்ள உற்ற வழியிது.

போராட்ட வடிவம் உலக ஒழுங்கமைப்பில்
மாற்றம் தேற்றவேண்டிய மாற்றுக் களமிது,
இலட்சியம் இகம் மாறினாலும் தடம் தடையாதது.
மலர்ச்சி வேண்டின் மாற்றுப் புரட்சியும் வேண்டும்.

இனி இடர் களைய வேண்டுவனவையெல்லாம்,
தனி தனம் தழைய தாண்டுவனவெல்லாம்,
புனிதம் பூரிக்க புலர்வின்றி மலர வைப்போம்.
மனம் தோறும் தினம் இதையே தீற்றுவோம்,
மாற்று உலகில் மா ஈழ மரபமைத்து.

செவ்வாய், 7 ஜூலை, 2009

கருவாகும் கலங்கள் கயல் மூடா.


பயங்கரவாதத்தை பற்றென பற்றும் பயங்கரவாதத்தை,
பாடாய் படையேற்றவே நாம் பற்றுக் கொண்டோம்,
ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தை முதல் முன்றாக்கி
பிரபா பிரித்தெடுத்தது பிரம்ம அவதாரம்,

அன்பாக,ஆச்சாரியமாக,அகவை ஓங்க ஒற்றி
தென்பாக தேற்ற போராட்டத்தை,
வன்பாக,வலிமையாக வற்றவைக்க வகுத்த
உன்னான உயிர் பறிப்பில் உகன்றதே உதிர அதிரம்.,

அன்று1956ல் அகிம்சையில் ஆரம்பித்த
ஆர்ப்பாட்டமற்ற அரணை,
பட்டவர்த்தனமாக பலப்பி
எங்கள் உதிரத்தை உறிஞ்ச ஆகுதியான முதல் தமிழ்
குருதியின் முதல் துளி,அதன் கூர்ப்புக் குழி,
அரச பயங்கரவாதம்.

யாரால்?
ஏன்?
எதற்காக அத்துணை அரக்கத்தனம்,
ஆடைவிரிக்க அகம் ஆர்த்தது?.
காலி முகத்திடலில் மூண்டு மூர்க்கம் மூட்டியது,

தமிழனா?
ஆரியன் அவன் சிங்களவன்,
பயங்கரவாதம் என வாதம் எய்தும் சிங்கள இனமே!
நிந்தனையை,
உந்தன் வஞ்சனையை சிரசாற்ற
விந்ததனை கொஞ்சம் விலக்கி விதர்த்து,
வரலாற்றை கொஞ்சம் வாஞ்சையாய் வருடிப்பார்,

ஆழ விதை எறிந்த அந்த அடையாளம் அருவமாக
அல்ல,
ஆதாரமாக உன் முற்றத்தில் முகம் நோற்கும்,
வரலாற்றை வசதி கருதி வைப்பகம் மாற்றிய உன் முதுகு தெரியும்,
ஏமாற்ற நீ மாற்றாய,
நாட்டிய நஞ்சுகள் உன் நாதம் நாற்கும்.

மாள,
தமிழன் மாள,
ஆள நீ ஆள
நூதித்த உந்தன் நூற்றல்கள் எல்லாம் உன் நுதத்தில்
எச்சில் உமிழும். உன் ஓரங்கம் ஓற்கும் ஒத்தடம் உன்
வீச்சில் அதில் நீ தரித்த பாச்சலில் பரவும் பவ்வியம் பகற்கும்.

ஆண்டாண்டாய் ஆண்ட எங்கள் அடையாளம்,நாம்
மீண்டாள முடியாத உன் மிதவாதம்,வேண்டாத விச
சண்டாளனுடன் யதித்த அந்த யாத்தம் யதியும்,மூண்டாள
வீண்டாள அதற்கு நீ நீட்சித்த நீட்சிகள் நீர்க்கும் நியம் நெரிக்கும்.

1977-1983,
இனவழிப்பில் நீ நீட்சித்த நீர்க்காத நீட்சியின் அடையாளம்,
எங்கள் ஆர்ப்புலத்திற்கு நீ மூட்டிய நெருப்பு,
எங்கள் விடுதலை நெருப்பு,
இதற்கு நெய் முதற்கொண்டு ஆன ஆயிலியம் அத்தனையையும்
ஊதி,ஊதி நீதான் வளர்த்தாய் அதனால் நீயே எல்லாவற்றிற்கும் பொறுப்பு.

நாம் எந்த ஆயுதத்தை ஏந்தவேண்டும் என்று நீயே எங்களை
நிர்ப்பந்தித்தாய்,.
நீ உண்மையில் ஓர் புத்தமத புத்தி ஜீவி ஆயின்,
போர்ப் புலம் பூண்டிருக்கமாட்டாய்.
இன்று இலங்காபுரி,இலங்கும் ஓர்
ஓர் இலங்கும் ஓர் இயங்குபுரியாக யுகம் யூத்திருக்கும்,மாறாக
மண்டுப்புத்தியின் மையத்தால் மயான பூமியாக்கிய பெரும் பொறுப்பு,
பேரினவாத சிங்களத்தின் ஓங்காளமாக ஒப்பேறியுள்ளது.

ஒவ்வோர் தாக்கத்திற்கும் மறுதாக்கம் உண்டு.
பௌதீகம் பகரும் பண்பது.
மௌவ்வும் போதெல்லாம் மௌனித்தாயே!
அதுதான் அது,
சமாதானம் என்றாய் சாதகமாய் எமைச் சரிக்க சதுரங்கம் சாய்ந்தாய்.
மா தனம் இன்று மரணகுழியானது உன் மாண்பற்ற பொறுப்பற்ற போக்கிரித்தனத்தால்,
தானங்கள்,எங்கள் அவதானங்கள் எல்லாம் எரித்தாய்,
ஒன்றும் உன் வைராக்கியத்தால் அல்ல பிச்சை பெற்ற போர்த்தளபாடங்களும்,இராணுவ பொறிமுறை முதல் ஆசிகளும்,அனுசரணைகளும்,
அப்போதும் கூட உன்னால் வெல்லமுடியவில்லை,
வேறு வழியது,மாற்றுவழியென்று,
5.2009ல்
கொட்டினாயே வெள்ளை பொஸ்பரசு குண்டு அங்குதான் உன்
ஆக்கிரமிப்பின் வன்மம் வாகையானது,அஃதின்றேல் இன்று உன்கதி?
அதோகதிதான்,

அத்துடன் அகன்றாயா?
இல்லையே எல்லயற்று எங்கள் இனத்தை ஆகுதியாக்கி,
அல்ல,
படுகாயப்படுத்தி,
மருந்தகற்றி,
உணவகற்றி,
ஆதார நீராகரம் கூட அகற்றி,
நீ செய்த அட்டூழியம் இந்த அகிலமே அறிந்ததில்லை.
வைகாசி 2009
ஈழத்தமிழர் வாழ்வில் ஊனம் ஊற்றிய,ஊறிய
நெஞ்சகத்தை விட்டு இனி எக்காலமும் ஆறாத வடுக்கள்
விதைத்த விறுமம் வீட்டிய நாட்கள்.
1983 ஆடி இனவழிப்பை நையாண்ட்டித்த உனதான நன்நாள்,
ஆனால் எமக்கோ?????

ஆயினும் விழ,விழ எழும் விழுது வேரோடு எழும்,
கடந்த காலங்களை கண்ணொற்றி பார்,
அது பதித்த பாதங்கள் தெரியும்.
பலம் பதற பாதை பதறும்,
வலம் வாதிக்கும் பகை புரிவோம்,ஆயினும்
பார்த்திபனின் பலமும் பகற்போம்.

உன் வெற்றியின் ஆதாரம் ஒன்றும் உன் அப்பன் முதுசமாக உன் முதுகு ஏற்றவில்லை,
இந்தியாவோ,அன்றி சீனவோ,பாகிஸ்தானோ,மேலும்
மேற்கத்திய நாடோ,
உன் நாவறட்சிக்கு நீர் ஊற்றவில்லை,
சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்,
அதுதான்,
வெற்றிக்களிப்பில் உன் வேகம் தணி,
உனக்கு உதவியவன் உற்றுக் கேட்கும்
உதாரங்களை உறுப்பமைக்கும் போது நீ
உறுமக்கூட முடியாது உன் நாக்கும் போக்கும்,
தாக்கும் தாக்கம் தாங்கா,
வறளும்,வற்றும் கற்றதெல்லாம் கசக்கும்,

ஒப்புவமை இல்லா ஒர் தலைவன் ஒற்றும் வரை.
அப்போது தெறிக்கும் பார் இந்த
பாரில் எம் பார்தீபனின் தொலை நோக்கு.

சும்மா,சுகமா? யகம் யாக்கும் யாப்பல்ல அது
யாசகம்.
வெறும் கை முழம் போடாது,
புரிவாய்,இல்லை
நீ புதைவாய்.
அற்றதானதாக நீ ஆற்றும் முற்றுப்புள்ளி, பள்ளி பாட, உன் வீட்டு
முற்றத்தில் முளை தள்ளும் முணு முணுப்பு,
வேராற்றி வெகுகாலமாகி விடும்.
களத்தில் நீ களைந்ததாக கற்பிதம் கறக்கும் சுற்றறிக்கை,
சுட்டியதெல்லாம்,
உன் சமாந்திரபாதையில் சதுரங்கம் சாற்றும்.
சாதகமாக,

பொய்யில்லை போதை நெளிய உன் அருகாமையில்
பொய்யாமை பூச்சூட பொய்யாத பொற்பாதம்.
தமிழின் முச்சூடும் முகம் முகர முத்தான,
வித்தான விதை நிலத்து காலக் கதிர்கள்.

காலம் கை கலப்பை கலப்பதில்லை,
கலந்த கைகலப்பில் கறப்பதும் இல்லை,
காத்திரர்களே கதிரறுப்பர் கால நியதியிது,
சூத்திரங்களே சுழலமைக்கும் சூழலது,

வையப்பரப்பில் வைகுந்தம் வாய்க்காது,ஆனால் எங்கள்
வயல்பரப்பில் வைகுந்தனே வளமேற்றுவான்,இது
வகுக்கப்பட்ட வாசலகம்,பையைப் பைய பகுப்பேந்தும்
அந்த கையகத்தை எந்த காலனும் கருக்கொள்ளான்,
மருகறியாத மாதவன் அவன் அவன் பிரம்மங்கள் பீடை ஏற்றா,

இருளகற்றும் வேளையது,வெகுகாலம்
உருவகற்றி உவக்காது.
மெருகேற்றும் மேதினிக்கான
பருவக் காற்றது,கருவகற்றும் உன் கர்வங்களெல்லாம்
இருவேறு பந்தமென்று பாந்தம் பந்த
இருளகற்றும்.
இலங்கும் எங்கள் இயங்கல்கள் உன் இதயமகற்றும்
உதயம் உறுக்கும்.

கருவாகும் கலங்கள் கயல் மூடா.
அரச பயங்கரவாதத்தை வதை கொள்ளாமல்,
ஆம்.
நாம்,
அரச பயங்கரவாதத்தை அடியோடொழிக்கவே,
ஆயுதம் ஏந்தினோம் என்ற அரசவைகவி ஆற்றும் ஆரை வரை,
அவை ஓயா,
கடன் கழிக்காமல் எங்கள் காலக் கதிரன் காலம் காத்ததில்லை,
சுய பச்சாதாபம் சுகிக்க அவன் ஒன்றும்,
ஒட்டுப் புலத்தான் அல்ல,
ஒளிக் கதிரன் உன் சிம்ம சொப்பனத்து சொக்கன்,நீ
சொக்கி சோகம் சொரிக்க,
சேதாரம் எல்லாம் சேமம் சோதிக்க,
ஓயாமல் அலை ஓங்காரம் ஒற்றும்.
ஔவ்வியம் அகிலமாற்றும் அரண் அமைக்கும்,
மௌவ்வாத மரண பூமியில் மரகதத் தமிழீழம்.

ஞாயிறு, 5 ஜூலை, 2009

பிரம்மப் பிரகடனத்தின் பீடங்கள் காத்திர கரும்புலிகள்.


நரம்புகள் மட்டுமே நார்த்திருக்கும்,
வரம்புகளின் வகுப்பிருக்கும்,எதிரி
பரம்பல்களின் பரப்பினிலே பகுப்பிருக்கும்,
கரம்பல்களை எல்லாம் கருத்திருக்கும் கரும்புலிகளின்
கனவினில் எல்லாம் காத்திரமான கலமிருக்கும்.

பலவீனமான இனத்தின் பலம் என்றான் பகலனவன்,
அலகாக இவர்களை ஆர்த்து அகலவைத்தான்,
விலகாத பகையின் வீம்புகளை வித்தியாசமாக விதியவைக்க,
புலனுக்கும் புலவாத பூடகமாய்,கரும்புலிகளை புவியில் புனைந்தே.
விலங்கான வீரமதை விலவ வைத்தான்.

கரும்புலிகள்,
கர்மமே கண்ணாண காரியர்கள்,
காற்றினிலும் கால் பதிக்கும் காத்திரர்கள்,
வீற்றிருக்கும் விகை விதர்க்கா வீரியர்கள்,
போற்றி,
தலைவனின் போர்த்திறனை போதிக்கும் போகியவர்கள்,
மாற்றி மதி மாற்றி மனம் மாற்றா மதியரவர்கள்,
ஏற்றி விடுதலை வீச்சை விதைத்து வினையாற்றியர்கள்,

வார்த்தைகளின் வசப்படுதலிற்கு வார்ப்பமைக்கா வகையர்கள்,
போர்ப்புலத்தின் போக்கதை உயிர் போக்கியும் போற்றியர்கள்,
கீர்த்தனம் கிழக்கிருக்க கீழ் நெல்லியான கீர்த்தியர்கள்,
வேர்ப்புலத்தின் வேதங்களை வேர்க்க வைக்கா வேதினியர்கள்.
மார்ப்புலத்தின் மையமெல்லாம் மைத்திருக்கும் மௌனியர்கள்.

உறங்கா உத்தமர்கள் உவகையாய் உறுப்பமைத்து,
கிறங்கா கிரகிப்பை கிரமமாக கீறியவர்கள்,
வணங்கா வலிமையின் வைடூரியர்கள்,தடமாக்கும்
தடை நீக்கிகள்.
தமிழிற்க்காய்,
தமிழீழத்திற்காய்,தகவமைத்த
தலைவனின் தர்ம யுத்தத்தை யுகம் யூத்த யுத்தகர்கள்.

உந்தன் உதிரங்கள் உரமேற்ற,
நிந்தன் நிமிரங்கள் நிதமேற்ற,
வந்தன வடங்கள் வாகையேற்ற,
பந்தனம் பற்றிய பரமர்களே,உங்கள் ஆவியின் மோலொரு
ஆளுமை ஆற்றுவோம்,

உயிர் நீக்க நாங்கள் உயிர் வாழும் உதிர்வுகள் எங்கள் அகமாகும்,
பயிர் ஆக்க பாக்கள் பதமாகாது,ஆயினும்
பத்மாசன பரிந்தெடுப்பால் பகை பாரித்த உங்கள்
சிம்மாசனம் மோலொரு சீற்றம் சிறப்பி,

கங்குலாகும் இந்த கனல்களை காத்து,நீக்கம்
நோங்கும் நுதல்களை நூர்க்க நாம் கடை வரிக்கும்,
தாங்குதலே இந்த தாக்கங்கள்,வீங்காத விதர்களை
ஓங்கி ஓர்மம் ஒற்ற ஒரு ஔவியம்.
பாங்கு இதுவும் பாத்திரமான காத்திரம்,

பூக்க தமிழ் ஆக்க நீக்கமற நீவிர் நிலைத்திருக்கும்,
நிமிர்வுகளை நித்தம் எம் தாக்கம் ஒற்றி,
உயிர்த்தெழும் விற்பனங்களை வினையாற்றி
தரித்திருப்போம் தக்கோனின் தாகங்களை
தரணியாக்க.முத்தான எங்கள் முதிசங்களே,


அவனியில் எங்கள் தவனங்களின் தாக்கம்,
அற்பனிற்கு அதில் ஓர் அற்ப ஆயிலியம்,
பவனி நின்ற பாதங்களை பனித்ததாக பார்ப்பனிக்கும்,
தவனிக்கும் ஓர் தக்க ஆர்க்கம்,
இருக்கட்டும்,
இகம் இழக்க
உற்பவத்தின் ஊக்கம் உருத்தெடுக்கும்,
உவப்புக்கள் ஊனமில்லாத ஊற்றுக்கள்,

காலக் கணிப்புக்ளுடன் களம் காக்கும்,
ஞாலத் திருநாளிற்கு நாள் குறிக்கும் நர்த்தனங்களை
நாளை எம் ஞானிஞர்கள் ஞனித்திருக்கும்,
ஞாற்புக்கள்
வேளை வேற்கும் வேதியங்கள்
உங்களின் வேர் தழுவி.

வேங்கைகளே!
வேதினியில் வேதம் வேர்க்கா வெங்களங்களே,
பங்கையங்கள் பதித்து பாங்காக புலம் புரித்து,எங்கள்
செங்கை ஆழியர்கள் உங்கள் ஆகுதியை ஆரம் தரித்து,
சங்கை ஊதும் சாதகம் நாளை சத்தியமாய் சதுரங்கம் சார்க்கும்.

உங்கள் ஆத்ம தாகம் ஆதங்கிக்க,
சொல்வளமாற்ற சோதியர்களே,
செயல் வளத்தின் செவிலியர்களே,
அங்கையர்களே ஆர்த்த ஆத்மர்களே,
உங்களகங்கள் உவகையாக உருக்கொள்ளும்,
தங்களகங்கள் தானை தகமமைக்க.

வெள்ளி, 3 ஜூலை, 2009

மூலிகை முரசெல்லாம் முத்தாக முகம் முகைக்க.


காலத்தின் கோலத்தில் கற்றவைகளை கரம் காத்து,
ஞாலத்தின் ஞான்றுகளை ஞாயமாய் ஞானியெடு,
சீலத்தில் சிறகு சீண்ட சிந்தியவைகளை சிறையகற்று,ஈழ
பாலத்தின் ஔவ்வியாமாய் பாரெங்கும் பங்காற்று.

அண்டத்தின் அகத்தில் ஆயிரம் அதிர்விருக்கும்.
ஆனாலும் அங்கெல்லாம் அறிவின் தெளிவிருக்கும்,
கண்டத்தின் காத்திரமும் காரியத்தின் சூத்திரமும்,
திண்டாடும் திகதி திரைத்து வண்டாடும் வாழ்வு வகுக்கும்,
உண்டானதை உரமுரத்து உறுதியான உகப்பு உரைக்கும்.

மாற்றத்தின் தேற்றங்களே மங்களமான மகத்துவம்,இதில்
மாற்றமில்லா மரபுகளே மனுக்குலத்தின் மறைப்புலம்,
போற்றாத மாற்றம் பொறுப்பற்ற உறுப்பு உலைக்கும்,
ஊற்றாக உலகேற்றும் உவப்பே உளப்பு உழைக்கும்.

தீற்றாத திறனெதுவும் திக்கெங்கும் திகைக்காது,
சீற்றாக சிரமசைக்கில் சிறப்பங்கே சீவிக்காது,
ஈற்றாக இழைந்திருந்து இசைவாக இலங்கிடும்,
கூற்றாக குலமிழைத்து குவளமாய் குலவிடு..

விதைப்புக்கள் எதுவுமே விரைவாக விழையாது,
பதைப்புக்கள் என்றுமே பாங்காக பரவாது,
நுகைப்புக்கள் நுதம் நுளைக்க நுண்மையாய் நூலிடு,
நகைப்புக்கள் நலிவிழந்து நாளை உன் வாசல் வருடும்.

நுண்ணறிவின் நுதமெல்லாம் நூர்க்கு முன்னே நுதம் இழக்கும்,
பண்ணறிவின் பார்வையால் பாகமாய் பார் விளைக்கும்,
விண்ணேறி விதம் விதைக்க வீரியங்கள் விண்ட விகாரம்,
மண்ணேறி மனிதம் இங்கே மகத்தானதாய் மார் தட்டும்.

தட்டிக்கொடுக்கும் தர்மப் பண்பு தமிழனிலும் தான் இல்லை,
மட்டம் மாட்டி மனமரிக்கும் மாண்புகள்தான் மனித எல்லை,
விட்டுக்கொடுக்கா விதமாற்றும் வீரியமே வில்லை விதிர்க்கும்,
எட்டியபின் ஏணியேற ஏகமே ஏறிழைக்கும்,எட்டினால்,
முட்டினால் முகர்ந்து மூத்து முகமெல்லாம் மூப்பிழைக்கும்.

தப்பு இவர் பக்கமில்லை தாளம் போடும் தாக் கற்றவர்கள்
அப்பு என்றால் என்னவென்று ஆழம் ஆய்க்கா ஆல் அவர்கள்,
மப்பு என்றால் மாயாமல் மகத்தும் மார்க்கம் மாயப் புலங்கள்,
உப்பு உண்டாக்கும் உரிமம் உய்க்கா உறவின் உயர்வு உலங்கல்.
செப்புகின்ற வார்த்தைகள்தான் சேவிக்கின்ற சேய்ப் புலங்கள்,

குற்றம் கூறி சுற்றம் குலைக்கில் சூரத்தின் சுழற்சிகள்
மற்றவன் மார்பில் மருவி முதுகில் குத்தும் குளிர்ச்சிகள்,
அற்றவன் ஆக்குவதில் ஆர்ப்பெழுதும் ஆராய்ச்சிகள்,எம்
முற்றம் முகிழ முகிழ்வெழுத முகமன் முகையா முண்டர்கள்.

உய்த்து உணரா ஊனர்கள் மாற்றாது என்றுமே மாற்றங்கள்,
பொய்த்து போகம் போற்றும் போக்கர்கள், நீக்கர்கள்
ஆய்த்து அகம் அகற்றி மேயும் மேதினியர்கள்,மேனர்கள்,
மொய்த்து ஈழ மோகனத்தை அருவழிக்கும் ஆவியர்கள்.

ஆயின்,
நீ இதையெல்லாம் இருளேற்றி,
விடிவெள்ளி விண்ணேற வசீகரிக்கும் வாழ்வியக்க
சீய்த்து சிரைத்து சீட்டியதை சிறப்பிலக்க,
சீலம் சிரிக்க சிறம் சிந்து.
மூலம்,
முகைய முடிவில்லா முறம் மூர்க்க,
மாற்றத்தின் மாற்றத்தில் மணி மகுடம் மனையேந்தும்.

சீவியர்களின் சிலம்பெடுத்து சிரமமாக சிறப்பிடு
ஓவியமாய் ஒலியெடுத்து ஓங்கார ஒப்பேற்ற,
காவிய காரியர்களின் ஆவியதில் அரங்கேற்ற,அவர்
மூலிகை முரசெல்லாம் முத்தாக முகம் முகைக்க.

வியாழன், 2 ஜூலை, 2009

நீர்த்திடாமல் எம் நீத்தலை நிறுத்தி.


செந்தழிழ்ச் செல்வர்கள்,
செவ்வானம் செவித்தனர்,
சேவித்து,சேவித்து சேந்தனாய் கண்டனர்
சோழனின் சொத்தென சோபையில் சொக்கினர்.

பைந்தமிழ் பசுமையாய் பாகாய் பகிர்ந்தனர்.
வையத்தில் தமிழதன் வாழ்வினைக் வார்த்தனர்.
கையதன் காத்திரமாய் காலத்தில் கணித்தனர்.
மெய்யென மேதினியில் மேவிட மேவினர்.

உத்தம வீரர்கள் உறுதியாய் உரைத்தனர்
வித்தென வீழினும் விதமதை விதைத்தனர்.
மத்தென மடையும் மகரரை மதைத்தனர்,
மாவீரம் மகியவே மகிழ்வென மதித்தனர்.

புத்தனின் புத்தியை புவியினில் புதைத்தனர்,
செத்தவர் ஆக்கியே செவியினில் செரித்தனர்,
புத்தவர் பூட்டிய புலமதை புதைத்தனர்,
அத்தவர் ஆக்கிய அகிலத்தை அரங்கினர்.

பைந்தமிழ் பைந்தர்கள் பாவியவன் பாழ் சிறையில்,
முந்தியவர் முதிர்ந்த மூலம் மூக்கர்களின் முகவுரையில்,
ஏந்தியவர் எரித்து துவைத்த தீபங்களை தினம் திரைக்கும்,
வாந்தியவர் வரிந்து வைத்து வகை,வகையாய் வரம் அறுக்கும்,
பாந்தியத்தை பரமெங்கும் பாகமாய் பரவெடுத்து,
அந்தியர்கள் ஆக்கி வைத்த வெப்பகத்தை வேதினியில்,
வெகுண்டுரைப்போம்.

வேதனையுடன், சீழ் மணக்கும் ஊனமதை,
வாதனைகளின் வைரசுகளை, உபாசனையாக உரைக்காமல்,
ஆசனமாய் அதைக்காமல்,
பூசனங்களை புகையாமல்,புவிப்பரப்பில் புடமேற்றி
ஆதனங்களிற்கு ஓர் ஆக்கமான மறுதாக்கம்,
ஆற்றவேண்டி அகிலமதனில்,
ஆக்க பூர்வ வேள்வி வேற்போம்,

உயிர்த்தெழுந்து உரம் ஊற்றி,
பயிர் வதைந்த பாதம் நோக்கி,
பாரில் எங்கள் பாகம் தேற்போம்,
பார்த்திருந்த பாவம் பகற்போம்,

புலந்திருந்த புலர்வெடுப்போம்,
புவியில் பூக்க புலம் கேட்போம்,
மலர்ந்திருந்த மகம் மீட்க,
உலர்ந்திடாத எங்கள்
கரம் நீட்போம் காலக் கொள்வனவாய் எம்,
கலன் கலப்போம் காத்திரமாய் அதை கதிரெடுப்போம்.

வித்தகம் விதைந்ததாய் வீரியம் விரிக்கும்,
பொத்தாம் பொதுவான போக்கிரத்தை போக்கவே,
சித்தகம் சிறக்கவே சிரையாத சிரம் சிறப்போம்,
அத்தகம் அரங்கேற ஆவனவை அறமெடுப்போம்.

புதன், 1 ஜூலை, 2009

புரியாத போது புரியாத பூவை.


வஞ்சி என்னை
வஞ்சிப்பது,
கொஞ்சி என்னை கொல்கின்றது,
அஞ்சி,அஞ்சி
தினம் வெந்து
சாவது சாவல்லவா,
இதில் வாழ்வது வதமல்லவா?
தினம் ஆள்வது அவளல்லவா?

கெஞ்சி,கெஞ்சி
இதம் கெஞ்சி,கெஞ்சி
கேவுது என் நெஞ்சமே இசை கேட்பது உன்
நெஞ்சமே இதம் கேட்பது உன் நெஞ்சமே,
இதன் மார்க்கம்,,,,,,
இதழ் தேடும்,,,,,,
இவள் ஆக்கம்,,,,,
தடுமாற்றம் தவிர் தாக்கம்,
தகையாமல் தனம் தாங்குமா?
எந்தன் அவையாவும் அதை ஏற்குமா?சீந்த
சிதைவுகள் சிரம் சீர்க்குமா?சின்ன
சிறெகென்று அதை நீர்க்குமா?

வெஞ்சினங்கள் கொள்வதிலே
வேதங்கள் ஏதுமில்லை.
இழை ஈர்ப்புக்கள் எல்லாம் தொல்லை?
மழையாகும்,
மனமாகும்,
இவள் ஊர்க்கும் உதயம்,
கார் காலங்கள் கரையட்டுமே,இந்த
பார் பாலங்கள் பரியட்டுமே,பதி
சார் சாலங்கள் சரியட்டுமே,
புலர் பூங்காவாய் பூக்கட்டுமே.

என்ன இது காரணங்கள்?
ஏதில் இது வாரணங்கள்?
எங்கும் அவள்,
தோரணங்கள் தோற்றி விட்டு
மாற்றியவள் மாய்வதுவும்,
மாயங்கள் புரியவில்லை,அது மனதிற்கும்
புரியவில்லை.

காட்சி ஒன்று கண்டுகொண்டால்,
சாட்சி அது சாவிரித்தால்,
சரியான சாற்றல் வேண்டும்,அதில்
புரிதல்கள் பூக்கவேண்டும்.இந்த
புலங்கள்
எனை புதைக்கும்
அந்த
வலங்கள் எனை
வதைக்கும்
வார்ப்புக்கள் வதையட்டுமே அந்த
பாரங்கள் பதையட்டுமே.

நேற்றுவரை நேரிழையாள்,
ஊற்றுப் போலே உடன் இருந்தாள்,
மாற்று ஒன்று மனம் இறைக்க
மதியதனை மாற்றி வைத்தாள்,
மங்கை அவள் நெஞ்சமது,,,,,,
மாற்றுரைக்கும் மாய மத்து,,,,
மனதிற்குள் மகிக்கவில்லை,எந்தன்
அகத்திற்கு அதுதான் தொல்லை.

வெஞ்சினங்கள் ஏற்றி வைத்தாள்
வேக உளம் ஆக்கி வைத்தாள்,
அஞ்சனங்கள் ஆர்த்து ஆர்க்கும்.
வேர்த்துளிகள் வேர்த்து வெட்கும்.
எங்கே அந்த கங்கை என்று
என் மனமே எனை எரிக்கும்
வாதைகள் வலம் மாறுமா?இந்த
பாதைகள் பரிபாலமா?இந்த
பாதைகள் பரிபாலமா?
புரியாத போது புரியாத பூவை.

வலைப்பதிவு காப்பகம்