புதன், 1 ஜூலை, 2009

புரியாத போது புரியாத பூவை.


வஞ்சி என்னை
வஞ்சிப்பது,
கொஞ்சி என்னை கொல்கின்றது,
அஞ்சி,அஞ்சி
தினம் வெந்து
சாவது சாவல்லவா,
இதில் வாழ்வது வதமல்லவா?
தினம் ஆள்வது அவளல்லவா?

கெஞ்சி,கெஞ்சி
இதம் கெஞ்சி,கெஞ்சி
கேவுது என் நெஞ்சமே இசை கேட்பது உன்
நெஞ்சமே இதம் கேட்பது உன் நெஞ்சமே,
இதன் மார்க்கம்,,,,,,
இதழ் தேடும்,,,,,,
இவள் ஆக்கம்,,,,,
தடுமாற்றம் தவிர் தாக்கம்,
தகையாமல் தனம் தாங்குமா?
எந்தன் அவையாவும் அதை ஏற்குமா?சீந்த
சிதைவுகள் சிரம் சீர்க்குமா?சின்ன
சிறெகென்று அதை நீர்க்குமா?

வெஞ்சினங்கள் கொள்வதிலே
வேதங்கள் ஏதுமில்லை.
இழை ஈர்ப்புக்கள் எல்லாம் தொல்லை?
மழையாகும்,
மனமாகும்,
இவள் ஊர்க்கும் உதயம்,
கார் காலங்கள் கரையட்டுமே,இந்த
பார் பாலங்கள் பரியட்டுமே,பதி
சார் சாலங்கள் சரியட்டுமே,
புலர் பூங்காவாய் பூக்கட்டுமே.

என்ன இது காரணங்கள்?
ஏதில் இது வாரணங்கள்?
எங்கும் அவள்,
தோரணங்கள் தோற்றி விட்டு
மாற்றியவள் மாய்வதுவும்,
மாயங்கள் புரியவில்லை,அது மனதிற்கும்
புரியவில்லை.

காட்சி ஒன்று கண்டுகொண்டால்,
சாட்சி அது சாவிரித்தால்,
சரியான சாற்றல் வேண்டும்,அதில்
புரிதல்கள் பூக்கவேண்டும்.இந்த
புலங்கள்
எனை புதைக்கும்
அந்த
வலங்கள் எனை
வதைக்கும்
வார்ப்புக்கள் வதையட்டுமே அந்த
பாரங்கள் பதையட்டுமே.

நேற்றுவரை நேரிழையாள்,
ஊற்றுப் போலே உடன் இருந்தாள்,
மாற்று ஒன்று மனம் இறைக்க
மதியதனை மாற்றி வைத்தாள்,
மங்கை அவள் நெஞ்சமது,,,,,,
மாற்றுரைக்கும் மாய மத்து,,,,
மனதிற்குள் மகிக்கவில்லை,எந்தன்
அகத்திற்கு அதுதான் தொல்லை.

வெஞ்சினங்கள் ஏற்றி வைத்தாள்
வேக உளம் ஆக்கி வைத்தாள்,
அஞ்சனங்கள் ஆர்த்து ஆர்க்கும்.
வேர்த்துளிகள் வேர்த்து வெட்கும்.
எங்கே அந்த கங்கை என்று
என் மனமே எனை எரிக்கும்
வாதைகள் வலம் மாறுமா?இந்த
பாதைகள் பரிபாலமா?இந்த
பாதைகள் பரிபாலமா?
புரியாத போது புரியாத பூவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்