ஞாயிறு, 19 ஜூலை, 2009

வெள்ள முள்ளி வாய்க்கால் வாய் பாடை அகற்றாது.


விசனத்தின் விம்பங்கள்
சனத்தின் சன்னங்கள்
சத்தமது சாரம் சாருமா?சித்தமதின்
சிரமங்கள் சிராய்ப்பு சிதையுமா?இந்த
கர்மங்கள் காயம் ஆற்றுமா?

வினயமற்ற விகல்பம்
வியாக்கியன மாற்றும் விதங்கள்
விதண்டாவாதம் விசிக்கும்
விதியென்றே விகற்றும்
விற்பனங்கள் விதியாற்றுமா?விதிக்க
வித்திடும் விதமறிமாயா?

அரசியலாற்றும் அரங்கிதுதானா?
அசிங்கமேற்றம் அங்கமிதுவன்றி
அகம் அரத்தும் அறிவோனே,எந்த
யுகம் யுகத்த யூகம் யுதித்தாய்?எங்கள்
தக்கவரின் தரம் தரைக்க,மனிதமற்ற
அரக்கனே,நீ மாய மாட்டாயா?எங்கள்
மரபுகள் மனம் ஒலிக்க.

இன்றல்ல,என்றோ ஒருநாளும் அல்ல
காலர் காப்பெடுக்கும் காலம் காத்திரமாய்-உன்
காப்பரிக்கும்,
எங்கள் இனத்தின் இடர்கலந்த மூச்சது,
முறம் நிச்சயமாய் உன் முரசரிக்கும்-மூப்ப
சுட்டெரிக்கும் சூரியத்தின் சுயம்பு உன் சுயம் எரிக்கும்.

வேதனைகளின் உச்சத்தில் எங்கள் இனம்-வெறும்
வேதனையல்ல-
வேர்கொண்ட இனத்தின் இருப்பெறிந்ததானம்-
இன்று!
தார்ப்பாரியமின்றி தகவெல்லாம் சடங்கிழந்த
சாமான்னியம்,
எந்த மானியத்தாலும் மையம் திருப்பா திருப்பாதங்களது,

அணு,
அதற்குள் அடக்கி வைத்திருக்கும் வைராக்கியம்-வற்றாத
விறுமானங்களின் விதைகள் –என்றும் நீ
அணைத்தாலும் ஆரவாரமற்று அகந்தை அகற்றி
பேறு பெறும் பெரும் வேதமது-நீறு பூத்து
நெருப்பெறிந்து உன் மேதினியில் மேவும்-
உதிர்ந்தெல்லாம்
உருக்கொள்ளவே அழிந்தென்ற நியம் நீ நுதிக்க
பாய் விரிக்கும் பருவம் பரவ பகுக்கும் பாதை-இன்றல்ல
என்றோ ஒரு நாளுமல்ல-
நொதிக்கும் திராவகமாய்-
வீதி கீறி வரும் கலயம் நூதனம் தகைக்கும்.

விநாடிகள் நிமிடங்கள் ஆவது போல் ஒரு
விடிவெள்ளி அதோ-அந்த வெள்ள
முள்ளி வாய்க்காலிலே முளைக்கும்.
முத்திரை நீ முறிக்க-
எங்கள் பத்தரை மாறா
பவளங்கள் சொலிக்கும் சோகம் சொதையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்