வியாழன், 30 ஜூலை, 2009

சீலம் இனி தமிழன் வாழ்வின் சீண்டா எதிரி.


ஏந்துகின்ற ஏணத்தில் ஏதும் இல்லை-இவன்
சிந்துகின்ற சிந்தனையில் சிறப்பும் இல்லை
விந்துகின்ற வினையதில் விகைப்பும் இல்லை,
பந்தம் எல்லாம் பரப்புலகில் வசந்தம் என்று இவன்
கெஞ்சுகின்றான் கேனையன் அவன் கேவலம் சுரந்து.

சொந்த இனம் சோதனையில் சோகம் பாடும்-அந்த
குருதியிலே கூர்க்கர்களின் சுகம் தேடும்,இங்கிவர்கள்
மனிதம் மார்க்கும் பாக்கள் விரிப்பார்-அவலம்
ஆர்த்தெரிக்கும் மக்களை எவர் மனதில் கொள்வார்?

எடுத்த ஒவ்வோர் காரியமும் புலியின் முகம் என்பார்-இவர்
கெடுத்து எங்கள் களங்கள் எல்லாம் கலியென காய்வார்-
சிங்களனின் கால் கழுவும் காரியம் ஆய்வார்,பின்
திங்களாய் தான் திகழ்வதாய் தினமும் தின்பார்.
செங்களமது தேய்ந்த்ததால் செங்கம்பளம் விரித்தார்-தீயன்
சம்பளத்தின் மேலேதான் சன்னம் சாய்வார்.

யார் எக்கேடு கெட்டாலும் சுயநலம் சுரப்பார்-இவன்
ஈழ மக்கள் காவலனென்றே காய்கள் நகர்த்துவார்,
வேற்று வழி இல்லை இனி வேதம் உரைப்பார்-தமிழ்
சாற்றுகின்ற சாவினிலே சாயம் தோய்ப்பார்,

காலம் கரி காலம் என்றே கனைத்து காய்வார்-மக்கள்
கோலம் வேறு கொள்ள வழி இன்றி இரைப்பார்-எந்த
மேய்ப்பனும் இன்றி எங்கள் மேதினி நோகும்-யார்
காப்பார் எங்கள் காயமென்றே காலம் கருகும்.

சீலம் இனி தமிழன் வாழ்வின் சீண்டா எதிரி-இனம்
ஞாலம் என்றும் ஞாய்க்காது எங்கள் ஞாய நியதி
கீலம் கீர்த்து கீழ்த்தரமாய் கிழக்கு காண்போமா?-அந்த
கீர்த்தகர்கள் இல்லா உலகம் கிழக்கில் விடியுமா?

சாளரத்தில் வீசும் தென்றல் விடியல் விதைக்குமா,எங்கள்
பாழ் ரதத்தில் பதிந்த பரிவு விரிவு வீட்டுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்