சனி, 1 ஆகஸ்ட், 2009

இறவா இயங்கலது இலங்கும் இலட்சணையாய்.


சுத்தி,சுத்தி சுப்பரின் கொல்லைக்குள்
பத்தி,பத்தி தப்பவரின் தொல்லைக்குள்,
மெத்தி,மொத்தி தமிழன் தர்மத்தின் வற்றலில்,
புத்தி,அவன் பொத்தி,
புதைப்பானே எங்கள் சக்தி.

எந்தக் காரணங்களையும் ஏந்துவான்
அவன் இனவழிப்புக்கே வழி கோலுவான்,
தந்திரி மலையில் தாக்குதல் என்றான்-தன்
தந்திரத்தால் தமிழரை தாக்குகின்றான்,

குருவியின் கூதலை குறித்ததென்றான் ,தன்
ஒட்டு தகவலால் ஒற்றதென்றான்-இன்னும்
எத்தனை அகவலை ஆக்குவான்?-நோக்கம்
எங்கள் இனம் அழிக்கவே கதை யாக்குவான்.

வல்ல புலிகளின் வலை அமைப்பின்,
வாகிப்பாற்றலை வளைத்த தென்றான்,சில
வதந்தி கதை
களை
கலையவிட்டு-பல
மக்களை இவன் சிதைத்து நின்றான்-இன்னும்
வக்கணையாய் வகை வகுத்து நின்று-தமிழர்
மனதில் பொக்கணை பொதிய விழைவான்.இதை
எத்தனை பேர்தான் ஏற்று நிற்பார்,எங்கள்
வித்தக மைந்தர்களின் விதியை விறைக்க வைப்பான்,

முள்ளி வாய்க்கலில் முற்றாய் பலி புலிகளென்றான்-பின்
வெள்ளி முளைத்தது போல் எத்தனை புலிகள் விழைந்தார்-இதை
அத்தனையும் உண்மை என்றுரைக்க நாம் வித்தகம்
புரியா விரையரல்ல,

உண்மையின் ஊக்கை உருத்தெறிக்கும்-இவன்
உற்ற எங்கள் இனமழிக்க அத்தனை வழிகளையும்.
விறைப்பாய் விகல்பமாய் திறந்து வைத்து-
தமிழர் உதிரம் உறைய உருவழிப்பான்.
நெருப்பெரிந்து எங்கள் ஊனவழிக்கே
உறவுரிக்கும்.
நல்ல உள்ளம் மொண்டதாய் உரு ஊக்கும்.

கண்காட்சி ஜீவனாய் கருக வைத்து தமிழர்
காத்திரம் யாவையும் உருக வைத்து,
ஊண்!ஊனம்
ஊட்சி உயர்த்துமா?
உலகம்,
உலர தமிழ-
விழுதனை அழிப்பார் காயம் நிதர்சனம் பிளக்கும்,
பழுதற்ற பதாகைகள் விழி திறக்கும் வழி அவர் இழைக்க.
பழி---
பார்த்திபன் பாதையை பார் திறக்க வைக்கும்.

சத்திய வேட்கையின் வித்துக்கள் விழி திறக்கும்-அது
உத்தம உதயத்தை உதிக்க உறக்கும்.நித்திய
நேயங்கள் நொய்ப்பதில்லை வேதினியில் ஆங்கு
மத்திமம் மையித்து மடிவதில்லை,

எத்திசை ஏற்கிலும் எழில் இழவோம்-எம்
வித்திசை வேய்க்கவே பொழில் புனைப்போம்,எங்கும்
வேர் திசை மாறி புழல்வதில்லை அது நேர் திசை
நிணைய நீர்ப்பதில்லை,
பகலவன் பார் திசை
மாறிடுமா? நாம் பாமரர் ஆகியே பலி போகவோ?

மாறிடும் மார்க்கங்கள் நாம் மதிப்போம்-எங்கள்
போரிடும் போக்கினையே போற்றி நிற்போம்,நீரது
பாதை நிர்ணயிக்கும்.
தமிழ வேரது தரம்
தக்க வைக்கும் தமிழீழ வேதமதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்