வியாழன், 13 ஆகஸ்ட், 2009

துலங்கும் துயரங்கள் துகிலுரித்து.


ஊர் உலவ உள்ளம் உந்தும்-எங்கள்
வேர் தழுவ வேகம் விழுதேங்கும்!
பார் முழுதும் பரவச பாட்டு-எந்த
நார் நயந்து இந்த லயம் நாடும்?

முன்பென்றால் முந்தி எம் பயணம் முகிழும்-இன்று
எந்த மூப்பெழுதி சந்தி சகாயம் சாரும்?
விழுதெல்லாம் வியர்க்கும் விதி நோக,சிந்தும்
செழிவெல்லாம் சேதம் சேந்த-இதயம்
விழி வியர்க்கும் வீதி பார்க்க.

சிரம் என்றும்,
சுத்தி எந்தன் கொல்லைக்குள் கொசுவம்
சொருகும்,
கரம் இந்த கர்மம் கலவ
இயல்பாக இலங்கும்,
வரம் இந்த வையகம் எமக்களித்த-அவலக்
களிப்பெய்தவா கலயம் மொள்ளும்?.

விடுமுறை?
இந்த வீதியை எங்கள்
உறவுகளுடன் உவகையாய் உறுப்பமைக்க
உள்ளம் உயர்ந்த அந்த உயர்வுகள்,
எல்லாம்,
இனியும் காலக் கனவாகவா கருக்கொள்ளும்?
எந்த
உருவமைத்து எங்கள் வயல்
வளப்போம்?

நாளும்,பொழுதும்
எம்மை ஆளும் சேதிகள்-எந்த
வல்லமையையும்
எங்கள் வசமாக்க உசாவழிக்கவில்லை,
ஆயினும்,
வசமாகும் வல்லமை வயக்க
உள உரணை இன்னமும் உரம் ஊட்டி,
உற்ற வழி ஆக்கும் எங்கள் உருத்திரர்களை,
பற்றுவோம் பாதை பரவ இந்த உபாதை உலர.

சிந்தனைகள் சோர்வளித்தால்-எந்த
வந்தனைகளும் வசம் விரிக்காது.
கற்பனைகளை கன்னா பின்னாவென்று
களம் இறக்கும் இந்த
காதகத்தை கொன்று,
உற்ற வழி அமைக்க_நிற்கும்.
விற்பனர்களை பெற்ற பேறாக்க,
ஒற்றுமையாய் ஓர்மம் ஓங்குவோம்.

குற்றம் கீறும்,
குதர்க்கங்களை முற்றாக மூச்சடைக்க,
ஒற்றும் ஒற்றங்கள் ஓரளவேனும் ஒதுங்க,
சிற்றம்,சுற்றம்,சீராக்க சிந்தனையின்,
சிறப்புக்களை சுரம் சூட்டுவோம்.

எங்களில் உலவும் நக்கீரங்களின் நகல்களை,
நாமாகவே நச்செரிக்க வியக்கும்.
வித்தகங்கள் எம் வாசல் விரிவாகும்.
தமிழ் வாசலிற்கு வரவு நக்கீரங்களல்ல-வித்தகம்
விதைக்கும் உத்தம வசிட்டர்களே.

களம் காத்த எங்கள்,
வீஷ்மர்களை புறம் கூறும்.
பிறைகளை பின் தள்ளி,
ஊகத்தில் உறையும் ஆக்கங்களை அகம் அகற்றி-
தமிழ் வேரெடுக்கும் வேதங்களை வேகமாய்,
விவேகம் விகற்றுவோம்.

ஊர் போக உளம் உந்தும்,
வேர் தழுவ வேகம் விழுந்தோங்கும்,
தேர் இழுக்க இலங்குவோம்.
இயங்குவோம்.

பார் பாடும் தாலாட்டை,
பாங்குடனே பயனேற்ற,எங்கள்
ஊரோடு ஊடாடி பேரோங்க
தூரெடுப்போம்.
துலங்கும் துயரங்கள் துகிலுரித்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்