ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பற்றுரைக்கும் பரமர்கள் பாதை விரியார்.


விளை நிலத்துப் பயிர்கள்.
களைகளால் களையிழந்த,
விளை நிலம்-என்று
புரையிழந்து விழைத்தேங்கும்?

காலத்தால் பயிர் செய் புன் நிலம்.
ஞாலத்தால் சபிக்கப்பட்டதா?
இல்லை!
எதற்கும் ஞாபிப்பற்ற எம் சில அயோக்கியர்களால்,
அறம் அதமமாக்க,
அழிக்கப்பட்டது.

சற்றே சிந்தனையை நிதானமாக ஞாயித்தால்,
ஞாயம் ஞாய்க்கும் நலிவுகளின் நர்த்தனம்.
விற்பனங்கள்,விவேகமற்ற வீண் விவாதங்கள்,
அடியோடொற்றும் அர்த்தமற்ற பழிகள்,இன்னமும் நெருங்க
வினைசாற்றும் சுய நலங்கள்,

ஆம்!
எங்கள் ஆதி முதல்-
முள்ளி வாய்க்கால்வரை?
வகுத்தெடுக்க வசதி சதியாக்கியது.
சுத்த
சுய நலங்களின் சீண்டலால் சூத்திரம்,
சூட்டியது
அத்தனையையும்.

சில வல்லூறுகளின் தொலை நோக்கற்ற,
ஒரு குறுகிய வட்டத்திற்குள்-
வகுந்தெடுத்து,
வையப் பரப்பில் வகை கனைத்த
ஒப்பியாரங்கள்,என்றும்-
எங்களிற்குள்
நன்றாக நயனங்கள் நாட்டும்.

பொது நலம் சீண்டாத சில சிற்றம்பலங்கள்?
கொற்றவன்-
கொலு விழந்தான்-மற்றதெல்லாம்
மறமிழந்து-இன்று
வெற்றிடங்களின் வேதினியில் சுற்றம் சூழும்
துயர் துய்க்கமால்-எதற்கும்
வக்கற்ற வைரியங்களின்,
வால் பின்னி எங்கள் தோல் போர்த்தும்.
விடியல்கள் இனி வெந்து.

பலமிழந்த
எங்கள் பராக்கிரமர்கள் வலம் வரும் வரை.
பற்றுரைக்கும் பரமர்கள் பாதை விரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்