சனி, 8 ஆகஸ்ட், 2009

விதைக்க எங்கள் விதைகளை விரைகிள்ளி.


விரிசல் சுமக்கும் உள்ளம்,
உணமைகள் சுடும்,
இருந்தாலும் இருளகற்றும் திறன் வேண்டும்.
கரிசல் காட்டு களமாக,
இந்த தளம்,
தளம் மட்டுமா?
எங்கள்
தாளங்கள்,மேளங்கள்,ஏன்?
தமிழ்,
வானங்களும் கூட,

வானர சேனை பூமரங்களிற்குள்-
புகுந்தால்,
வாகை எதுவும்-
பாகை பகற்காது,
உலக மண்டலத்தில் இது
ஒன்றும் புதினமில்லைதான்.

உரசும் எந்த சக்கியும்
ஏணம் அகற்றும்,
பார்த்திபன்-
படை என்றாலும்,அந்த
கார்த்திகேயனே களம் கலந்தாலும்.
விசம் வீசும் எந்த வித்தகனும்,
வீரியம் கொள்வான்,

இப்போது.
இந்த விசம் களத்தில் மட்டுமா கலயம்
சுமந்தது?
இன்றும்,இனியும்,
இனி என்றும்,
முகாந்திரம் முகிழ்த்த முட்கம்பி முகங்கள்,
முக்திக்கு இந்த முகமனே முன் நிற்பான்.
இழைய
எந்த சக்தியும் ஏடம் ஏற்றாது,இது
சத்திய சாரம்.

பாவி,இவன் பார்க்கும் பார்வை எல்லாமே,
ஆவி,இவன் ஆர்க்கும் ஆரத்திலும் அதுதான்,
மேவி,இந்த தளம் நகர்க்கும் தகமை அற்றோம்,
பாவி,இவன் பாளம் பரத்தும் பரனையே பற்றினோம்.
சாவி இவன் திறக்க,இல்லை சாதித்து,
நாம் உறக்க உற்ற ஊற்று
எங்கு உண்டு?
காவி,இனம் காவி,
சாவில் தினம் சாவு,

பிச்சை மட்டும் ஏந்த-
இந்த பிறவிகள் அவன் அதமத்திற்குள்,
ஏன் என்று ஏதும் கேட்கா,
அகிலம் கூட இவனிற்கு நிதிக்கடல் நீட்டும்.
எந்த,
சிந்தையை இகம் இழைக்கின்றது?
இந்த வித்திலத்தின் விபரம் சாகித்தியமாய் என்-
சந்தைக்குள் விரியவில்லை.

அள்ளி,அள்ளி-
அமெரிக்கன் முதல்,
ஐரோப்பிய நாடுகள் வரை,
எந்த வரைமுறைகளுமின்றி,
எந்த சொப்பனத்தை செதுக்க,இந்தியா
முதல்,
இத்தாலி வரை-
வரைபின்றி-
வைப்பகம் நிரப்புகின்றது?

இந்தியா!
புரிகின்றது இதன் புரி,
ஆயின் அகிலத்தின் அந்தம்!
எந்த?
சந்தையை தரை தழுவ
ஸ்ரீலங்காவின் சிரசை
சீதளமாக சிந்து சீட்டுகின்றது?

ஓ,
வியாபாரம்!
விளையுமென்றால் எந்த-
வித்தகத்தையும்,
விழுக்கொள்ளும் வித்தையை,
வியாபித்த வித்தகர்கள்,இனியும்
எங்கள் சாக்காட்டில் தங்கள்
சந்தங்களை சாவகாசமாக.
விதைக்க எங்கள்,
விதைகளை விரைகிள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்