ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

வல்லான வலி நீக்கி வளமாகும் வகை யாப்போம்.


உபத்திரம் உத்திரம் உயர்த்தா!வலிச்
சித்திரம் சிந்தனை சீந்தா!
எத்திரை ஏற்பினும் முத்திரை முதிரோம்.
பத்தரை பதித்தே பாரதில் பதிப்போம்.
யுக்தியை யுகிப்போம் யாத்திரை யதிப்போம்.
எத்திசை ஏறினும் சிங்களன் முகத்திரை முறிப்போம்..

ஊக்கத்தை உதைப்பான்,
அதன் தாக்கத்தை தளையான்,
நீக்கத்தை நிறைப்பான்.
ஆயின் நியங்களை நிதிக்கான்,
இல்லாத ஒன்றை இறுமாப்பாய் இழைக்க,
வல்லாத!
வகைப்பை வகையாக பதிக்க,
பொல்லாத பொய்கையை பொறுப்பற்று பற்றும்.
நில்லாத நிறைவே இல்லாமல் போமோ?

காலச் சுழற்சியின் காத்திரம் கதைக்கும்.
சீலச் சிறப்பது சிகப்பாய் சிறக்கும்.
ஊழ உறுப்பை உறுப்பாய் உரைக்கும்,

எனினும்
ஈழ இழைவது இலங்கியே இயக்கும்.

அதன் காத்திரம் காப்வோம்-அந்த
வேயலை ஒற்றி எங்கள் நித்திலம் நியக்க,
புதன் பூப்பிக்க புத்துயிர் புனைப்போம்.
அதன் உத்திரம் உயிர்க்க.

உறுதியின் உயிர்ப்பில்,
பொறுதியை பொருத்தி,
பெறுமதி பெறுவோம். உரமாய் உழைப்போம்,
இழப்பதை இழைத்து, இயங்கலை இயப்போம்.

தொல்லை தொழாமல்,
இல்லாத பொழுதில்லை.
சொல்லாத சோகம் செரிக்க, ஈழம்
இலங்காமல் இனிமையில்லை.
வல்லான வலி நீக்கி வளமாகும்
வகை யாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்