திங்கள், 3 ஆகஸ்ட், 2009

சிரிப்பாய் நீ விரிப்பாய் இல்லை இருப்பாய் என்னை எரிப்பாய்.


சிருங்கார சிரிப்பினிலே
ரீங்கார அசைவிருக்கும்
நீங்காத உறவிருக்கும்-வண்ணம்
தூங்காத சுகம் இருக்கும்.
சின்னப்பூவே எந்தன் உயிரே-
சீண்டும் எந்தன் உயிர் பரப்பே.

அன்று இருந்தாய் அகம்
நிறைந்திருந்தாய்,
இன்று எங்கு சென்றாய்?
உறவில் விரிசல் கொண்டாய்,
சென்றிடும் நாளிலிலே என்ன சேதியை நீ இறைத்தாய்?
கனவா?கானலா?
உறவே விரிவா?
உணர்வே பிரிவா?

தினம் வந்து
காதில் சொல்லும்,
உந்தன் சிந்து
காயம் அள்ளும்-சின்னப்பூவே
எந்தன் வண்ணப்பூவே,
என்று,
என்றுன்னை காணுவேன்-எந்தன்
ஏக்கத்தை என்னென்று கூறுவேன்,
நீ வரும் வாசலை பார்த்திருப்பேன்-என்றும்
விழி மூடாமல் இமைகளால் பூத்திருப்பேன்,
இது
கனவாய்,
வெறும் கனலாய்
ஆகாமலே என்னை ஆகாசிப்பாய்,
எந்தன் நெஞ்சத்தின் ஆவலை ஆத்திருப்பாய்,

விழி சிகப்பாய்,
வழி கருப்பாய்
மொழி பேசும் இந்த மோகனத்தை-நீ
வரும் வாசல் கலைத்திருக்கும்-உந்தன்
காந்தழிதழ் அதை கரைத்திருக்கும்-காலம்
காயுமோ?காற்றது வீசுமோ?

பனிப்பூவே,கனிப்பாயா?இதம் இழைய
நீ வருவாயா?-
நீ வரும் நாளினை பாத்திருந்தேன்.
நிம்மதி யாவையும் இழந்திருந்தேன்,
யாழது இனிமையை இழந்திடுமா?
யாகங்கள் யாவும் யதித்திடுமா?
சின்னப் பூவே சிருங்காரமே.எந்தன்
உறவின் விழும் உயிரே.

காத்திருப்பில் எந்தன் காலம் செல்லும்-உந்தன்
பூத்திருப்பில் அவை புன்னகைக்கும்-உள்ளம்
வேர்த்திருக்கும்.
இந்த வேதினியில்-என்ன
வேரிருக்கும்
உன்னை
இழந்தால்,
உள்ளம் நெகிழ்ந்திருந்தால்
வளம் அத்தைனையும்,
வனம் இழந்து விடும்-நீ
வரும் நாளிலே
நிறைவிருக்கும்,
உன் வரவெல்லையில்
உறவிருக்கும்,
இந்த உயிரில்
உள்ள உணர்வில்.
உருகும்
உயிரே
உயிரே உயிரே.
சிரிப்பாய் நீ விரிப்பாய், இல்லை
இருப்பாய் என்னை எரிப்பாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்