வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

செஞ்சோலை செங்குருதி, வஞ்சினமாற்ற வகிடெடுக்கும்.


செஞ்சோலையின் செங்குருதிகள்
ஆக்ஞைகள் இழந்த மூன்றாண்டு,
அந்த,
பசுஞ்சோலையில் பஞ்சோலையாய்
பாடைவிரித்தான்,
இது!
இனி வரும் காலங்களின் எச்சரிக்கை-
என்பதான கந்தகக் கலவையை,
காலம் கழித்தே எங்கள் களம் கொண்டோமா?

மாஞ்சோலை கிளிகளாய்,
மகிழ் விரித்த மார்க்கமெல்லாம்
மனிதம் இழந்த`மா` பாவியரால்
பாழான பத்திரமாய் எங்கள்
உத்திரங்கள் உதிரம் உறைய,
சத்திரத்து சதைப்பிண்டங்களாக,என்ன
முத்திரை முதிர்க்க மூர்க்கன் முகிழ் விரித்தான்?

ஆயுள் ஆட்கொண்டாலும்
ஆறாத வடுவல்லாவா.
மாயுள் மனைவிரிந்த ஈனரின் இலக்கு.
பிஞ்சும் காயுமாய் எங்கள் காத்திர
இளையோர் இழைத்த இழப்பு.எந்த
முகாந்திரமுமற்ற மூர்க்கரின் மனைப்பு.

இந்த ஈனத்திற்கே
ஏனென்று கேளா அகிலம்,
ஈனனின் ஒத்திகைக்கு
ஒத்திசைவேற்றதா?
அப்படித்தான் அகிலம்
ஆயிலியம் ஆய்ந்ததோ?
இல்லையெனில் நாம் முள்ளி வாய்க்கால்வரை,
முகமழிய,மூச்சிழக்க,முற்றும்
சுற்றம் சூழ சிதைந்து,
அதன் சிங்காரமெல்லாம்,
அவனின்
சங்காரமாக,சதிப்புனல்சார
ஓங்காரமாய் ஒப்புவமையற்று,,,,

எங்களின்
வாசல்களை வயமிழக்க
நைவேத்தியம் நயந்த அவனி,
தமிழ் வாசலிற்கு எந்த வசந்தத்தை
வைப்பகமாற்றப் போகின்றது?
சிந்திக்கும் சிகமகற்ற சிந்தையகற்றும்,
சந்தைகளை நாம் இந்த விந்தகத்திற்கு-எந்த
விந்தையில் விடையிறுக்கப் போகின்றோம்?

நினைவகலா,
நெகிழ்ச்சிகள் அல்ல நீண்ட
நெடுமூச்சுக்கள் நெட்டுயிர்க்க,
இந்த
படு பாதக படுகொலைகளை
ஆம்,
கிட்லர் கூட களமாக்கா கொலைக்களமது.

நீதி
நிட்டுயிர்க்கும் நீட்சி நிரப்பும்,
பட்டதெல்லாம் பழி பரக்க,
நிரவும் நினைவுகள்
கொலைஞனின் கொடுவாளை
கரம் கைக்கொள்ள கலவும்,கனவும்.
காத்திரங்கள் என்றோ ஓர் நாள்
அல்ல நியமாகும் நனவாக.
இந்த இளையோர் ஈகங்கள்,

சத்தியமாய் இந்த நித்திலத்தில்
நீதி நிர்ணயிக்கும்,
நித்தியம் இது நிச்சயமென்றால்,
எங்கள் கொற்றவனின் மாசற்ற மாசிலங்கள்.
செஞ்சோலை செங்குருதி,
வஞ்சினமாற்ற வகிடெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்