வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

வீழும் இந்த வெந்தகத்தை வேயல்கள் விரித்து.


நினைவழியா நாட்கள்-இனி
நினைவெழுதும் நாட்களா?எந்த
பூக்களை சூட்டி அதன் பூபாளத்தை இசைப்பது?
கனவாகி,கானலாகி,வெறும் கற்பனையாய்-எங்கள்
களம் ஆகாதா?நெஞ்சகத் தளத்தைத்தான்
இங்கு நினைவுகள் தாற்பாரிக்கும் வளத்தை.

புழுதி வீசிய இந்த புலம் பழுது தீர்க்காதா?
மெழுகி அந்த வனத்தை மேம்பாடாக்காதா?தினமும்
உழும் ஈர நெஞ்சகத்தை நீவும் நேயங்கள்.
வீழும் இந்த வெந்தகத்தை வேயல்கள் விரித்து,
வேதினியில் வெம்மை நீக்கி வயல் வரம்பை,
வகுக்க வலம் வார்க்காதா?

இன்னமும் எத்தனை தலைமுறைகள்-இந்த
சலனங்களிற்குள் தங்கள் சாவீடுகளை தனம்,
தார்ப்பது?
புன்னை மரத்து புளகாங்கிதம் கூட இந்த,
தென்னைகளிற்கு இல்லையெனில்-எந்த
சன்னல்களிற்குள் என் சனம் முகம் சாய்ப்பது?

வல்லாளன் வகைத்த வாகை-இந்த,
பொல்லாளனை எம் பூமியில் பொய்கை-
பூட்டச் சொன்னது?
ஆட்கொள்வதற்கு ஆளில்லை என்றால் யாரும்,
மீட்பாரில்லாத மிதவைகள்தான்-ஆதலால்தான்
கோட்பாடொற்றி எங்கள் கோலம் கொற்றோம்.பகையின்
ஊட்பாடகற்றி எங்கள் முற்றம் வீற்றோம்.

ஆனால்!
அத்துமீறி எங்கள் அவயங்களை,
ஆதியோடந்தமாக அநியாயமாக.நாம்
அவலம் சூட்ட அத்தனையையும் சுட்டான்.
அகிலம் அங்கலாய்க்கவோ,இல்லை
அவலங்களையோ எந்த முக்கண்ணாலும்
முகங் கொள்ளவில்லை,ஆயின் நாம்
நேயங்கள் கலைந்த தேசங்கள் கலைந்த,
மேக மூட்டமாய் எந்த வையத்தில் எங்கள்
வைப்பகத்தை வலம் கொள்வோம்?

வீடிழந்து,வீதியிழந்து எங்கள் வலிமையின்-
விதிழியந்து இன்னும் என்ன இழக்க,
இருப்பு இருக்கின்றதென்பதையும் இழந்து.
ஓ வானகமே,
உன் அகன்ற விரிசல்தான்,
எங்கள் வாழ்வகமென்றால்—எங்கள்
வனப்புக்ள் எல்லாம் ஏதிலியின் வாசமா?

காட்டாற்றின் கனதிகள் எந்த கானகத்தை,
நெட்டாற்றும்?ஊற்ற உற்ற போராட்டம் பொழுது,
கரைக்கவா நாம் போராயுதம் போகித்தோம்?இல்லை
என்றாகின் எந்த முகாந்திரத்தை இனி-
மொய்யெழுதப் போகின்றோம்?
உரிமையின் உரசலிழந்த உப்பாற்று தென்றலிலா?
எங்கள் தேகம் இனி காலமகற்றும்?
கரிமைகளின் காத்திரங்கள் எங்கள் பரிணாமத்தை,
புரியகற்றி பூப்பெய்துமா?சரியாகின் எந்த
சதிர்க்களம் தமிழின் சரியாசனத்தை சன்மானமாக்கும்?

துன் மார்க்கனின்!
மார்க்கத்தில் எந்த மாமனித மார்க்கம் மையல் மகிழ்க்கும்?
சன்மார்க்கமாய் துய்க்க சுதந்திரம் ஒன்றும்,
சுக்குத் தண்ணியில்லை.அது வைப்பகம் வேதிக்கும்.
வைடூரியம் அதை எந்த வல்லாளனும் சும்மா
வகிடு பிரித்து எங்கள் வயல் வகுக்கான்,

அதுவும் பேரினவாதத்தின் அட்டைப் பிரிவில் கூட-
அடக்கமாக்கப்பட்ட ஆயிலியம்-ஆதலால்
எதுவும் எங்கள் வசமாக்க ஆயுத போராட்டம் தவிர,
போதிக்க வேறு மார்க்கம் ஏதும் அறவே இல்லை.
சத்தியமான இந்த நித்தியம்.
வேறு சாலையாக விரைவில் எம் சாதகம் தரிக்கும்.
இதை பாலையாக எண்ணும் பாதகத்தை,
பரணெறிந்து பக்குவாய் பகரும்-
உகரம் வித்தகமாய்
அகரம் ஆய்க்கும்,இன்றோ அல்லது
நாளையோ?

இந்த நாயம் கோர்க்கும் நாயகர்கள் நயமாய்
நாளை எம் நாண் ஏற்றுவார்.வேளை வேற்று
வான் வயல் வகுப்பார்.
நெஞ்சகம் நேற்ற நோவகற்ற
வஞ்சகம் பூத்த வரம்பகற்ற தஞ்சகம் தகற்றி
விஞ்சும் விறுபங்களை விதைப்பாக்க,
துஞ்சாத பிஞ்சகங்கள் மஞ்சமகற்றும்
ஆரிய வெற்றியின் அகம் அறைந்து
வீரியம் விளம்பலகற்றி சூரியம் சூட்டும்.

விழ,விழ எழுந்த அலையாய்,
தொழுவகற்றி விழல்கள் விறைக்க,
பழுதில்லா பன்முகங்கள் பார் ஏற்ற,
விழுதெறிந்த மௌனங்கள்---
செழிப்பேற்றும் சேந்தனின் பழுதகற்றி,
விழிப்பேற்றும் வியாபகங்கள் வியாசம்-
வரைய.

வெறும் வெற்றல்கள் வேயாத,
பொறுப்புக்ளை புலம் பலம் பௌவ்வும்.
வெறிச்சோடிய வானகம் ஊறும்.
வேதங்கள் ஒப்புவமையகற்றி மீதங்கள்-
பாதங்கள் பரப்பும் வையக வையல்களாக்கி.
பூப்பரவும் புனிதம் புன் மார்க்கம் புலத்தும்.

நினைவெழுதும் நாட்களன்று.
நினைவழியா நாட்கள் நன்னும்.
தினைவெடுத்து அந்த திரவியர்கள்,
வினை முடிக்க வினையாற்றும் திடம் தீற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்