சனி, 1 ஆகஸ்ட், 2009

வியப்பும் வியக்க விதையை விதைப்போம்.


எல்லாமே இங்கு அற்றதாய் அகமழும்
எம் ஆற்றாமை மைந்தர்களே!
சுயமான புத்தி ஒன்றை வியப்பும் வியக்க விதையை விதைப்போம்.
சுதாகரித்து-
சிந்தித்தால்,சிந்தும் பொய் முகம் போலி என்பதை
போர்வை அகற்றி கோர்ப்பாய்,
அதன் கோரமுகத்தை ஆரியனின்,பார்ப்பனனின்
பாவி முகத்தை.

எங்கள் மாமனித போர் முகத்தை,
அது விழுதெறிய விடாமல் அத்தனையையும்,
அங்கம் பிளந்து அடியோடழிக்க அவன் போடும்,
அத்திவாரத்தின் ஆழ் குழியதை.

மீள் குடியேற்றம் என்பது,
எங்களை மீளக் குடியேற விடாமல் விழுதழிப்பதாகும்.
வேறொன்றும் அங்கு வினையாற்றாது.
தமிழனை,
ஆழவேரோடும் அகப்பதை,அவனியில் அவன்
தாள தகமை தகைக்க
சிங்களன் சிலாக்கும் சீலாக்கியம் அது.
ஆவனவற்றை அவன் அற்புதமாகவே
அவன் வரையில் வரையறுத்து வாகிக்கின்றான்.

நாம்.
அவனின் போலிப் பொய்புனைகளில்,
எம் மெய் இழந்து,அங்கம் பதற,
வேதினியில் வேதனைகளையே-
வேதமாக,

ஏன்---
இந்த அவலம்?
உடைப்பதை, உடைக்காமல் உளி,
சிலை சீற்றாது,
வளைப்பதை வளைக்காமல்,
வகுப்பது வகையாது.
எரிப்பதை எரிக்காமல்,கொதிப்பதை
கோலம் கோர்க்க முடியாது.
சிரிப்பது சிறக்கின் சுமையில்லா-
சுயம் வேண்டும்.
சிறப்பது சிரிக்கின் சுயமில்லா-
சுமை வேண்டும்.

சுயத்தை சுருக்க சுமையும் சுரையும்,
இலக்கை இயக்க இமையும் இணையும்.
கயத்தை கலைத்து கடமையை கடைப்போம்,
வியப்பும் வியக்க விதையை விதைப்போம்.

அழுகப் பிறந்தவனில்லை
தமிழன் ஆழப் பிறழ்ந்தவன்.
இந்த நிலை அழித்து
அழகாய் பிறந்தவன்,ஈழத் தமிழன்
ஆழவும்,
ஆளவும் அவதரித்தான்,என
அவனியில் அவன் அருகதையை,
ஆற்றுமையால் ஆற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்