ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெள்ளி நிலா தெறித்த நிலம்
விடிவெள்ளியில் விளைந்த பலம்
கல்வியில்,கேள்வியில் கலந்த வளம்-இன்று
கலவியிலும்
களவியலிலும்---?

பள்ளி செல்லா பாலகரை
காணாத பட்டயம் எம் நிலம்.
முள்ளில் நடந்தாலும்
முடங்காமல் சென்று
கள்ளமகற்றி கல்வி பயின்ற பாட்டயம்.

இன்று
வேலிகள் சரித்த,
வேள்வியால்,
பாலியலிலும், பாடலியலிலும்
பாடை காவுவது
பெளசாகுமா?

நாளெல்லாம் நலிவான சேதி தாங்கி
நாணயம் இழந்த நடை தளருமா?
தளர்த்தும் தாயமில்லா தகமெங்கள்
தாங்கு நிலம் கொதித்தெழுமா?

அஃதன்றி
இதுதான் விதியென
வீதி பரவி-எம்
பாரம்பரியக் கல்விகள் களைந்து
குறியில்லா குதமெழுத குவியுமா?

எம்
நிலம் எங்கள் வசமில்லா பொழுதெல்லாம்
பலமிழந்த பாசறையாய் பறை தட்டும்
பார்ப்பனியம் புரியுமா?
அது அவாளின் வதிவிடமில்லையென
வாசிப்புக்கள் களர
காத்திரம் பேணும் கனம் வேண்டும்.

யார்?
எப்போது?
எப்படி?
ஏனங்கள் ஏந்த ஒரு விடிவெழுதும்
வேதியர் வருவாரா?
நாளெல்லாம்
நாளமெழுதும் நாணங்கள் இவை.
நா நயங்கள் சுரக்க
நாணயமெழுதும்
நாயகர்களை தேடுகின்றேன்.

நாடிகள் இப்படித்தான்
சுற்று வட்டத்தில் சுரம் தேடுகின்றது.
பேடிகளை களையும் பேழம்
கபடிகள் ஆடாது.
மூக்கணங் கயிறறுத்து
முதுசம் பேணும் பாதைகள் அழுகின்றன!

அருவங்களிற்காய் -நாம்
காத்திருப்பது?
தெரிவெழுதி தேடுவதுபோல்
மருளது அகல "மா"
அருளர்கள் அருளது சொரிய
சாலை
சலனமாய் காத்திருக்கின்றது.

விடியுமா
எம் தேசமென
தாயவள் கலங்கும்
சாவொலியில் எம் சாசனங்கள்
சங்கமம் களைந்து, கலைத்து
கரிக்கப்படுகின்றன.

எந்த ஒரு சாமியினதும்
சாபமில்லாமல்.

வலைப்பதிவு காப்பகம்