செவ்வாய், 30 ஜூன், 2009

எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..


அன்றொருநாள் என் அயலவன்,
ஏன்? என் சொந்தக் குருதியின் சொத்தவன்,
இன்றுவரை எங்கென்று இல்லாதிருப்பவன்,
வெறும் நினைவுகளிற்குள்
இப்போது!
எப்போதாவது இதயம் நெருட,
உண்மையை கூறினால்,
வெறும் சிலாகிப்பிற்குள் மட்டும் செழிப்பானவன்,

நடந்த சம்பவம் ஏறக்குறைய
இற்றைக்கு இருபதிற்கு மேல்
ஆண்டுகள் அவ்வளவு அசுரத்தனமாக,
அகலம் ஆற்றி அகிலம் ஆர்க்க ஆருமின்றி.

பிறப்பிடம் என்னிடம்தான்
என் ஊர் அதுதான் தும்பையூர்,
அங்குதான் பிறப்பில் இருந்து
பிடிமான படிப்புவரை,

தொடர்ந்து படிக்கும் வாசல் அவன் வீடுவரை
நிலைக்கவில்லை,
பொருளாதாரம் அவனை துரத்த
தொழில் தேடவேண்டிய தேடல்
வாகன ஓட்டியாக ஒருவாறு தன் தாயின்
சாமர்த்தியத்தால் அந்த தடையை தாண்டுகின்றான்.

சீட்டு!
ஊரில் இவர்களின் உன்னதமான ஓர் மாற்று வருவாயின்,
மைல்கல்.
உண்மையும் இதுதான்,
சொந்தமாக தொழிலாற்ற ஓர் வாகனம் ஒன்று,
தன் காலில் தாங்கி தரமேற்ற உற்றவகையென,
ஒற்றைக்காலில் நின்று,
தன் தாயின்,
சீட்டு வருவாயையும்,
சகோதரியின் கை,செவி வழி நகைகளையும்,
பணமாக்கி கையில் பத்திரமாகத்தான் ரூபா
ரொக்கத்தையும்,

ஒரு விவேகமான விடையாக தன் வாழ்வின்,
சகோதரங்களின் எதிர்காலமும் தன் கையில்,
இந்தப் பணமூலமே மூலதனமாக வண்டி ஏறி
வன்னி கடந்து வவுனியா வந்தடைந்தான்.
தகப்பனின் உறவுமுறை ஒருவர் மூலமும்,
இன்னமும்
வாகனம் பற்றி வாசம் தெறித்த
எவர் என்று தன் மைத்துனன் மூலம் அறிமுகம்
ஆற்றப்பட்ட ஓர் அகத்தானுடனும்,
வவுனியில் வாசம்.

சில,பல வாகனங்களை
சிரமமாக சிரம் கொண்டான்,
விலை என்ன என்பதையும் விவேகமாகவே
விகன்றான்,
முயல்வான முடிவான முற்றான தொகை கொண்டு
மற்ற நாள் பொழுதில் வருவதாக தகம் கொண்டான்.

அன்றுதான் அவன் ஆவியின் அற்ப ஆயுள் என்பதை
என்றுதான் எவர் எப்படி எடுத்தறிவார்?
தன் கைப்பணத்துடன்
தரமான,தனக்கு தகமான வாகனம் இதை எப்படியும்
எனதான ஏற்றமாக்கும் எண்ணத்தின்
வண்ணத்துடன் வாகனம் ஒன்றில் வாசமறியாத
வவுனியாக வாழ் வாசி ஒருவருடன்?

ஏன்?
எப்படி என்பதைக்கூட விளக்கமான விளக்கம் வீட்டி,
தன் மூலதனமான முழுப் பணத்தையும் கொண்டு
முன் முகமன் மூட்டியவனின் வாகனத்தில்
தனதான வாகனம் வாங்கும் வாசையான வகையுடன்

இடையில் இராணுவம் இவர்களை மறிக்க,
சோதனை என்பதான சோடினைகளிற்குள் இவன்
சோதாரப்படுத்தப்பட,
இவனின் இருந்த இத் தொகைப்பணம்
இயமனின்
இருண்ட நாக்காய் தொங்க
விசாரணை என்ற பெயரில் இவன் தனியாகவே
தனிமைப்படுத்தப்பட்டு,

ஒட்டுக் குழுவின் ஓங்கார துணையுடன்
வெட்டுவான்களின் வேக முகாமிற்கு அல்லது?
ஏதும் தரவற்ற தமைப்பில்
போனவன் இன்றுவரை எங்கென்றில்லாமல்????

இது போன்ற போக்கற்ற போக்குகள்
இன்றுவரை வன்னியில் அதுவும்
புயல்களின்
புண்ணிய பூமியில் வன்னியில் வாகம் வகைந்ததாக,
புலர்ந்ததாக
எந்த புண்ணியவானும் புனைகதை கூட
வெறும் வாய் மொள்ள முடியாது.
புலர்விற்கு கூட புயற்ற முடியாது,

இன்று செய்தி,
வன்னியில் என்றாவது முகாமில்
முகம் மூட்டும் முகவரி இழந்த தமிழன்
சுயாதீனமாக குடியேறுமிடத்து????
கூடவே ஆரியனின்
அறுப்பழிக்கும் ஆமியும்
அங்கு வதியுமாம்.

பலம் வற்றிப் போனால்,
வலம் வறண்டு போகும்.
புலம் புலர்ந்து போன எம்
பூமிப் புதல்வரிற்கு,
பூடகமாக புலையர் பூட்டும்
பூதாகரமான புனர் வாழ்வை
புலம் வாழும் நாம் எந்த ஏற்ற வழியை
கலம் கொண்டு கரமேற்றப் போகின்றோம்?

மேலே வரைந்த வாதை ஒன்றும்
கற்பனையில்லை,
காலக் கொள்வனவில் இன்றும் எம்மில்
காதம் கருக்கும் சதையுடன் சாறிய சாரம்.
இதைவிட இன்னமும் எத்தனையோ?
நெஞ்சம் நெரிக்கும் வஞ்சகக்கதைகள்,

இதை நான் இப்போ வரித்ததன் வாசம் வருடும்
நோக்கமே இனியும் இராணுவத்துடன்,
ஒட்டுக் குழுவின் ஒற்றர்களே எம்மை
வற்ற வைக்க,வதைக்க வயமாக இயங்கப்போகின்றான்.
இராணுவத்தின் இரும்புக்கரங்களை இதம் இறுக்கும்
இரையல்கள்,இரையர்கள்.

காலங்கள் எம் காத்தை முந்திய மூச்சடைத்த
முகவரிக்கே முகமாட வைத்துள்ளது,
நாம் மீண்டும் முப்பது வருடத்திற்கு முந்தைய
முகவரி மூட்டும் முயல்விற்குள்,
எந்த ஆர்ப்பனவுகளும் எமை ஆட்கொள்ளாது.
இயலாமை இருளிற்குள் இதம் இயற்றப் போகின்றோமா?

இல்லை,
எனக்கும் என் சிற்றறிவிற்கும் ஏதும் சிந்தையில்
சிலாகிக்கவில்லை.
உனக்குள் உறையும் உற்ற வழியிருந்தால்?????

என் சுற்றமே!
சுடு மொழியால் சுட்டு,
ஓற்றுமையின் ஓரம் தறித்த
ஒட்டுண்ணிகளே!
ஒட்டுக் குழுக்களே!

சுதந்திரத்தின் சூட்சுமம் சூரிக்கா சுரையர்களே!
சுந்தரர்களின் சுயங்களை தன்
இந்திரியத்திற்காக இழையறுத்த ஈனர்களே!
சிறு மதியர்களே சிங்களவனின் சீலம் சிரித்த,தரித்த
தற்கர்களே!

இனியும் உனக்கு ஏதும் உதயமாக வேண்டாம்,
நாயிற் கிடையாய் கிடந்த கீனர்களே!கீர்த்த
எம் வீரம் விழைத்த வீரியத்தை
அகமாற்றா அற்பர்களே!

கொற்றமே!
விறபனம் விதைக்கும் விகற்பமே!
குற்றமது கூற்றம் குறைக்க
குயல்வாயா?எம்
அயல்களெல்லாம் தம்
வயல்களில் கயல்கள் காக்க?

திங்கள், 29 ஜூன், 2009

இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?



அம்மா என்னும் ஆதங்க குரலெழுப்பும்,
ஆ``இனத்தை காணவில்லை.
அதிகாலையில் ஆரவாரம் ஆற்றும்,
புள்ளினங்களின் புள்ளிகளையும் காணவில்லை.
ஆனந்தக் குரலெழுப்பும் குயிலினத்தையும்,
குலவும் கூட்டங்களையும்,

அதிகாலை சேவலும்,அதனூடு,
அலையவைக்கும் நாயினையும்,அருகருகாக
ஒட்டி,ஒதுங்கி,வழிதவற வாயால்
வகிடெடுக்கும் கோழியையும்,
துள்ளியோடும்,துணையுடன்
மல்லுக்கட்டும் என் மறியாட்டையும்,

சலங்கை ஒலி சத,சதக்க
சாணம் முதல் ஆட்டு பிழுக்கை வரை
எரு ஏற்ற வரும் அந்த ஆதித்தனின்,
அட்டகாசமான அழகான வண்டில்
காளைகளின் கம்பீரங்களையும்,
காட்டு விறகு ஏற்றி வரும் காந்தனின்
கம்பீரத்தையும்,கிடுகு விற்ற கிரந்தமாக
கிழக்கிருந்து வரும் கந்தனையும் காணவில்லை.

காலை உணவினை கட,கடவென விற்க வென
சந்திகளெல்லாம் சாரத்துடன் சகடமுரைக்கும்
என்
சக தோழனையும்,
ஏன்?
பள்ளி தொடங்கமுன்னே பர,பரப்பாக
வீட்டு வேலைகளை அப்பத்தான்
அவசரமாக செய்து முடிக்க சேந்தன்
வரும் சேதியையும் காணவில்லை,

ஓ,
பால் மொண்டு பாலன் பர,பரக்க
உந்துருளியில் உலா போகும் உருவத்தையும் காணவில்லை,
நல்ல தண்ணி அள்ள செல்லும்
நங்கையர் கூட்டங்களையும் நான் காணவில்லை,

ஓ,
நேரமாச்சே
பள்ளிக்கு பாங்காய் பசுமைகளாய்
கைலாகு கலந்த படி கல,கலப்பாய்
நேர் செல்லும் எம் நேசனின் பால் மாறாக்
குழந்தைகளையும்,அழுது அடம் பிடித்து
உள் செல்ல மறுக்கும் உவன் உலகனின்
உற்ற செல்வி செந்தழலையும் காணவில்லை.

காலை நேரம் களை கட்டும் சாலை
இங்கு காய் கறி சுமந்து உந்த சந்தைக்கு செல்லும்
தட்டி வானையும்,மாட்டு வண்டிகளையும்
இன்றும் ஏனோ காணவில்லை?
எங்கே? ஏதாவது?
செல்லடிபட்டு,ஆமியின் அட்டகாசமிறைந்து,
ஆ,
அப்படி ஏதும் இந்த
வன்னியில் வாரக்கணக்கா
இல்லை வருடக் கணக்காக இல்லையே,
ஏன்?
இந்த சடுதியான மாற்றம்?

யாரும் மாவீரர் ஆனார்களா?
இப்போ,
போர் ஓய்வு காலம்தானே,
என்னதான்
இங்கு நடக்கின்றது?
எங்குமே என் இன சனத்தையே காணோம்?
நான் இப்போ எங்கிருக்கின்றேன்?

ஆ,ஆ
நான் யார்?இது எந்த இடம்?
என்ன இது?
என்னை சுற்றி இங்கு என்ன நடக்குது?
இல்லை
ஒன்றுமே புரியவில்லையே.

அன்று ஆமியின் செருப்புக் காலால்
வன்னியை விட்டு தொழில் நிமித்தம் சென்ற சோமனின்
செவியில் வீழ்ந்த செப்பலான அடியின் வீரியம்,
இன்று காந்தலாய் கனதி குறைய
தான் இழந்த எதனையும் தாக்கமாய் தாங்கும்
தகமையிழந்து
வெறிச்சோடி இவன் வேதனைகள் நுரைக்க

கடந்த கால எந்த சம்பவங்களையும்
நினைக்கும் ஆற்றல் இழந்து,
தான் கடைசியாக கண்ட காட்சிகளையே
இன்னமும்,இன்னமும் கண் விரியும் காட்சியாக
அனுதினமும்
இந்த ஏக்கத்தின் தாக்கத்துடன்,
எல்லாவற்றையும் இழந்த இவன்
என்றுமே இழக்காத அந்த நினைவுகளின்
தழும்புகளுடன்,

நினைவே என் அகமெரிக்கும்,
இவனிற்கு ஆர் துணை?
வெந்தால் தின்னவும்,
வெகுண்டால் அரற்றவும்,
துண்டில்லாதா துயர்ப் பரப்பில்,
இவனைப் போல் இருப்போர்க்கு!
எவன் ஏற்றமும் எரியா விளக்கே!

எந்த மாற்றமும் துணையாதிருப்பே,
முந்தியென்றால் முகப்புக்கள்,
வேண்டாம்,
வேதனைகளை தின்னும் தீண்டாமை ஒழிக்க
வாதனைகளை வறட்டும் வகையாற்ற
என்ன செய்யப் போகின்றோம்?

இவன் ஒருத்தனெண்டால் பத்தோடு ஒன்றாக,
பாவி உளம் கொள்ளான்,
இனமே இந்த மூச்செறிந்தால்,
நாம் வீச்சிழத்தல் தகுமோ?
ஆற்றல் உள்ள ஐம் புலத்தோரே,
ஆக்கமுற ஆவன ஆற்றுவீரா?
தேக்கமற்ற தேற்றம் தேற்ற
ஊக்கமெடுத்து உய்ய வழி ஊட்டுவாயா?

இன்னும் எத்தனை தங்கங்களை
தரமிழக்கப் போகின்றோம்?

ஞாயிறு, 28 ஜூன், 2009

உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.


போர்க்கொடி அற்ற குடி
வேர்க்கொடி அறுந்துவிடும்,இதை
பார்க்கொடியில் பார்த்திருந்தும்,
கார்க்கொடி கொள்ளல் தகுமோ?

நீர்ச் செடியாக நித்திலத்தில்,
நிலைப்பதிலே என்ன பயன்?
வாரி வரையறுத்து கோர்க் கொடி,
கொத்திழைத்து கொதித்தெழல் அத் தணல்
பார்த்திழைத்து பரம பதமெடுக்க பாய்
விரிக்கும் பார் பார்த்திருத்தலை பாடை வீச.

வித்தெடுத்தார் விடுதலை விழுமியங்களை,
விலை பேசி விரித்தெடுத்தார்,இப்படி
எத்தனை முத்தெடுத்தார்,விகை விலக
பத்தினை பலமிழக்க பாவியவன் பாரில்,
தத்தெடுத்த தலைமைகளை பரமெடுத்தான்,
தாவி ஈழர் ஆவி அலைக்க.

உற்று உறுதுணை உவந்தழித்த உவப்பில்லா,
கொத்தாணிக் குண்டுகளை,கொத்தோடழிக்க,பொல்லா
பொஸ்பரசு பொதியங்களையும் சோடிய சோதாக்களையும்,
உஸ்ப்பெஸ்க்கித்தானின் உருவழிப்பு உலோகங்களையும்.
கஸ்டமின்றி கரைத்தழிக்க கருவூலங்களாக.

இத்தனை இன(ழ)வழிப்புக்களையும்,
இகமிங்கு இயக்கவில்லையாம்,இருப்பாய்ந்து
இணைத்தார்கள் இலங்கையின் இனவெறி இராட்சியத்தின்
இதமில்லா இருப்பழிப்பை.
கொத்தாக கொலைந்த எம்
இனவர்களை இகம் மறந்தாலும் ஈழ இளவல்களே,நீவிர்
இதை மறந்து இருட்டிப்பிற்கு இணையலாமா?

வற்றாத வளம் மறந்து உற்றதான உவப்பிழந்து,
பற்றா ளர்களெல்லாம் பரமலோகம் பற்றெடுக்க
உற்ற துணையானானே உலக உறுப்பு உரமர்
கற்ற காதம் கலைத்தெறிய காலம் மொள்ளும்,
பெற்ற வரம் பொறுப்பெடுத்து போர் தரிக்க பாரமெடு.

விட்டால்,
விதையெல்லாம் விசமாகும்,வீரியமற்ற தரமாகும்.
பட்டால்,
பாரில் பரம குடி பாழெய்தும்,
தொட்டால் உன் தோழமை
வலுப்பெய்தும்,
வரம் வகுக்கும் வாதை பொறுப்பறிந்து போரிட
உளக் கொள்ளு,மல்லுக் கட்டும் மரபுறுத்து.

புலத்தில், உன் புலத்தில்,
பூங்காற்று புளகாங்கிதம் புலமேற்ற,
கலமேந்தும் எங்கள் காரியர் கரம் கட்டு,
குலமேந்தும் குதம் குலுங்க,
வலம் வருடும் வதம் வறட்ட,
மலத்திலும் மலருவோம்,
மணம்தானே!
மகுடம் மாட்டும்,
குணம் கொற்றோம் குலம் குருவேந்த,

ஆவணம் என்றும் அலைவதில்லை,அது
கோவணம் போல் கொலு மாறுவதில்லை,
சாவண்ணம் சரித்தாலும் சலிப்பதில்லை,
நாவண்மை நலிந்தாலும் நாடேற்றும் நாற்றிட,
பாவண்மை பரிந்தெடுக்கும் பார்,கோலாண்மை
கொலுவீற்றிருக்கும் கோமேதகம் கோலோச்சும்,

புலமே,
உன் புலத்தை புடமிட அகமெடு,
ஆர்த்தாடு ஆரணியெல்லாம் ஆற்றாக அறமிடு,
கூர்த்தாடும் குலையன்,குலமழிக்கும் கோரியன்
ஆரியனின் அதமத்தை அழித்தெடுக்க,
புலமே பூடகமாய் உன் புலத்தை பூர்வாங்கம்
புலட்சி புரட்சி போரிடு,

விரியட்டும் விதைந்த வீரியர்களின் வீரம்,
சரியட்டும் சதியர்களின் சாதக சாதகம்,மரிய
மரிக்கட்டும் மனிதமற்ற மாபாதகம்,தெரிய
செரிக்கட்டும் தேமதுர தெம்பாங்கு பாட்டெடுக்கும்,
தாரணித் தமிழமுதம் தாற்பாரிய தகமை சூட்டி,
வேரணித்து வேயட்டும் வேதினியில் வேகாத் தமிழ்,
சூடட்டும் சூசகமான சூரியத் தலைவனின்,
பாடறிந்த பாட்டெடுத்து பாரினில் பழுதடைத்து.
உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.

வெள்ளி, 26 ஜூன், 2009

அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.


பச்சோந்திகளின் உச்சம் பரவ உருவேந்தும்,
மச்சம் மருவ மதியிழக்கும் மனிதங்கள்,
உச்சம் தலை உறுத்தும் உயிரழிவுகள்,
பிச்சை பிசிறாமல் பிரவகற்றும் பிரமேத்திகள்.

கச்சை கரமேந்த கர்மம் களிக்குமா?
சொச்சை சொருக்கிழைய சோகம் சொரிக்குமா?
பச்சை பரிந்தெடுத்து பருவம் பகையழிக்குமா?
உச்சி குளிர்வெடுத்து உகாரம் உதிர்க்குமா?

களராத கனமிருக்கும் தளராத தளிர்விருக்கும்,
வளராத வனமிருக்குமா?வானம் வனம் வதைக்குமா?
மிரளாத மான் மீண்டும் மீகம் மீளுமா?ஆழி
புரளாத அலை மீண்டும் கரை காருமா?

உறளாத உரம் வேண்டும் உளம் ஊட்டுவாய்.மேனி
குறளாத குதம் வேண்டும் அதை ஆற்றுவாய்.
பிரளாத பிறையில்லை புவி பூட்டுவாய்,மேவி
அரளாத அறம் ஆற்றும் ஆவி ஆக்குவாய்.

அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்,நீயும்
அனிச்சையாக புறம் புரத்து புவி மீளுவாய்,
கனிச்சதெல்லாம் களிப்பதில்லை கால நதியிலே,இசை
பனிச்சதெல்லாம பரவுவதில்லை பரணி பார்ப்பிலே.

இளிச்வாயாய் இரந்திருக்கும் இகத்தின் இருப்பினிலே
புளிச்சவாயாய் புரந்திருக்கும் புகத்தின் புருவத்திலே,
வளிச்சு இவர்கள் வகர்ந்திருக்கும் வகையின் வழியிலே,
நெளிச்சு என்ன நேர்மை நகர்ப்பார் பகை நெய் நிலத்திலே.

களித்து இங்கு கணக்கு கனக்க கொடுக்கல் வாங்கலா?
கெளித்து இங்கு கொய்யம் கொய்ய கொதிக்கும் கோலமய்யா,
விழித்து விதவும் விரசம் விதிக்க வீதி வேறய்யா?
விளித்து வீரம் விரித்து விதைப்பை வீத மேற்றய்யா!.

இனம்!
இகத்தில் இழைந்து இதயம் இறுக்க இமயம் இருத்துவாய்.
போர் புலத்தின் புன்மம் புரிந்து புயங்கள் பூட்டுவாய்,பகை
நெரித்தெடுத்து பாரில் எங்கள் பாகம் மீட்டுவோம்,ஈழ தாகம்
ஈற்றுவோம்,
எங்கள் ஈகம் இயற்போம்.
மார்க்கும் மார்க்கம் மகிப்போம்.

குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவாயா?


நெஞ்சமெல்லாம் விஞ்சும் நெருப்பெரிக்க,
அஞ்சாத அந்த ஆத்ம ஆதங்கம் அதைத்த,
விஞ்சாத எங்கள் வித்தக கவியாம்,
உலைக்கள வியாசனை எந்த உத்திரத்தில் ஊடுவேன்,

நஞ்சாடும் நகையணிந்த நர்த்தனர்களின் நாமம் நேர்த்தவன்,
துஞ்சாத துணியணிந்த தூமங்களின் துணை தூய்த்தவன்,
பஞ்சாக பலமிழக்க பகையின் பன்முகம் பரிந்தவன்,
வெஞ்சமராடும் வேதியர்களின் வேகம் வேர்த்தவன்.

கிஞ்சித்திற்கும் கீர்த்தி கிளியா கீர்த்தனவன்,
பஞ்சத்திற்கும் பாகம் பரியா பார்த்தனவன்,
அஞ்சி,அஞ்சி ஆள அகம் ஆற்காதவன்,வேதினியில்,
நெஞ்சிலிலே நேர்த்த நோத்திர முகை முரசானவன்.

சந்நிதி தோறும் சாக்காடகற்ற சாதகம் சார்த்த சாதகன்,
எந்நிதி எய்தாலும் ஏற்காத ஏற்றமுடையவன்,அந்நிதி
ஆக்கமுறும் தேசம் சேர சேயானவன்,பூக்க புன்முறுவலுடன்
தேக்கமுறா தேகம் தேற தேனானவன்,பாக்களால்

ஊக்கமுற உளம் நெருடும் தேச சோகம் சுறள,
குறளூட்டிய குலக் குன்றோன்,புதுவை
பூக்களால் மட்டுமா புலம் பூரித்தான?,வலம் வாகை
வகைக்க வற்றில்லா வாதை
வரிந்த, வன்மம் வரிக்க, ஒப்பிலா ஓர்மம் ஒப்பேற்ற
ஓலை ஓர்த்த ஓங்காரன்.

புதுவை பூரிக்க புலமை எனக்கு பூர்வாங்கம் போதாது,
அகவை அரிக்க ஆர்தெடுக்கும் ஆர்வம் ஆதங்கிக்க,
எதுகை ஏந்தும் ஏதனங்களை எள்ளியபடியை ஏற்புடைய
மோனைகளையும் மோதியபடியை மேய ஆயுள் என் அகமெரிக்க
தானைப் புயலவனின் தாற்பாரியம் தகைக்க.

ஆர்த்தெடுக்கும் ஆழியனவனை ஆராதிக்க ஆற்றுமோ?ஆயுள்
ஊர்த்தெடுத்த ஊழியன் உறங்கா காவிய காலோன்,
மார் தட்டி எந்த அவைகளிலும் எங்கள் அறுப்புக்களை,
யாரதட்டி கேட்கவும் யதார்த்தம் யதைத்த யாப்பியனவன்,

போர்ப் புலத்தில் போகம் அறுக்க வீறு கொண்டெழுந்த விகற்பன்.
கார்ப் புலத்திலும் கண்ணியம் கரைக்கா காவியன்,
நார்ப் புலத்திலும் நாம் நரைத்த நாணம் நனைத்தவன்,
யார் புலத்திலும் யாழ் இசைக்கும் யாப்புடையவன்.

ஊர் கூடி வடம் பிடிக்க ``பா`` புனைந்தான்.ஊனம்
உற்றவரின் உளம் உதைத்து உறுதியிழைத்தான்,
கூர் கூட்டி கூனம் குதைக்க குவியம் குளிர்ந்தான்,வேரின்
வேதமது வேதினியில் வேர் விதைக்க வேதம் படைத்தான்.

யாராகிலும் யாகம் யாக்க யதைகள் யதைத்தான்,
பாரேகிலும் பதியம் பரத்த பாதை படைத்தான்,
ஊரேகி ஊடாமல் உதயம் உரைத்தான்,பாரில்
தூரேகி துளையாத தூபம் துளிர்த்தான்,தமிழ் தானம் தகைத்தான்.

கவி எடுத்து காத்து காக்க கலைகள் கடிந்தான்,
ஆவி அடுத்து ஒன்று உண்டெண்டாலும் அதையே ஆர்த்தான்,
நீவி நீர்க்கும் நிலையை நிலைப்பில் நினைத்தே நரித்தான்.
காவி காக்கும் களமே கனதியென்று காத்திரம் கலந்தான்.

புலத்துப் பூக்கள் பூரிப்படைய புத்தெழுச்சி புனைந்தான்,
புலந்திவர்கள் புலம்பா வண்ணம் புலமை பூத்தான்,வாரி
வலந்தி இவர்கள் வயமை வரியா வானம் வளைத்தான்,
சிலந்தி சிரத்தில் சீட்டி,சீட்டி சிரமம் சீர்த்தான்.

உங்களத்தில் உலவும் உசாவை உயர்த்தி உரைத்தான்,
வெங்களத்தில் வேயும் வேணவாவை வேக வெறித்தான்,
செங்களத்தில் கதிர்கள் கலவ கங்குல் களித்தான்,கால,
மங்களங்கள் மதியூகம் மலைக்க மாந்தல் மழித்தான்.

பன்முகத்து பகலவனின் பாதை பதித்தான்,
பகை பார் முகத்து பாறை பரித்து பண்ணிசைத்தான்.
மூகை முகிழ்கள் மொள்ளும் முகூர்த்தம் மூசமிசைத்தான்.
வாகை வளங்கள் வார்த்தெடுத்தே வதனம் வரிந்தான்,வீரர்
விதங்கள் விதந்தான்.

களங்களாடும் கானகங்கள் கனக்க கவித்தான்,காக்கும்
காவியர்கள் கவியரங்கை காத்து கனந்தான்,சீர்க்கும்
சீவியர்கள் சினங்கள் சிரத்தும் சீர்மை சீர்ந்தான்,அவர்
ஆதனங்கள் அவைகள் அவைக்க ஆக்கம் அமைத்தான்.
சூட்சுமங்கள் சுமைத்த சூத்திரங்கள் சுரந்த
சுட்டிகைகளை சூரிக்க சுமையும் இந்த சுமைகளை,
வேட்டிசை வேர்த்து வேட்டினானா வேசை ஆரியன்,இல்லை
காட்டிசைக்கும் காரப் புலத்தில் கலந்தானா எங்கள் காரியன்?

ஊகங்கள் என்றும் உவப்புரைக்காது,
மதியூகங்கள் இங்கு மதிப்பளியாது,
காகங்களிற்கு களிப்பாய் கனியும் காரியங்கள்,
எங்கள் கனதிக்கு கலவாத
ஏகங்கள்,ஏதனம்
என்றோ ஓர் நாள் நூதனர் நிரப்பி வரும்,
அதுவரை,
ஐயங்களை
அகமொதுக்கி ஆதங்கமாய் அணிந்நிருப்போம்,எங்கள்
சூரியர்களின் சூலத்துடன்,அந்த
உலைக்கள வியாசனின் உத்திரத்திற்கு,
வேலிமைகள் வேட்டி வைப்போம்,
வேயும் வேதனைகள் தாமொதுக்கி.

சீரமைக்கும் சீவியங்கள் சீலத்து,
காரமைப்பு காவியங்களை காவி உலா மேவிவர.
மெய்சிலிர்க்கும் மேதினியர்களின்,
மெய்ப் புலத்து, பொய் கரைக்கும் போரரங்கு.
உவந்துரைக்கும் உறம் மொய்வோம்,அகவும்வரை

ஆதங்கங்கள் தங்ககங்களிற்குள் தாய்மையாய்
தூதர் சங்கங்களின் தூய்மையை துவர்த்தியபடி,
மாதவம் மனம் மௌவ்வ மானம் மகிமை மாற்றும்.
ஆதவம் ஆற்றுவோம் அருகிருப்பார் நாளையென.

குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவாயா?

இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்குமா?


இசையுலகின் இளவரசன்,
இளமையில் முதிர்ந்த முகூர்த்தன்,
செழுமைகளை செம்மையாக செகம் சேர்த்தவன்,
முழுமையான முகமாக்கி முத்தாரம் முகிழ்த்த
முதல்வன்.

திசை திரும்பும் திக்கெல்லாம்,
திகட்டாத இசை வெள்ளம் தினம் மாந்தர்
திரளாய் செபம் பண்ண பண்ணிசைத்த பாரியன்,
திவ்வியத்தின் திறம் தீந்தாக தீட்டியவன்.

இள வயதில் இகம் வென்றான்,இதை
இசையாலே இனம் கண்டான்,
ஓசையின் ஒப்பற்ற ஓங்காரமாய்,
ஒலித்த ஒலியன் நடனத்தின் தடம் தாற்றிய தவனன்,

மிகையாற்ற மிக்காரும்,தக்காரும் இல்லா தகவன்,
உவகையை உலகாற்றிய உலவன்,
ஊனம்,உறவு,இனம்,இழவு, இத்தனை வேற்றத்தையும்
வேகவைத்த வேயிலியன்,செவிலியன்,

சேதாரங்கள்! சேடிகளால் சேமிக்கப்பட்டவன்,
ஊதாரங்களின் உபத்திரத்தையும் உறுப்பேற்ற உசாவவன்,
மாதர்களின் மையலில் மையப்பூவாய் மயிலாசனம் மகித்தவன்,
காதர்களின் கனிமங்களிற்கும் களிப்பூட்டிய கவிக் காத்திரன்.

விழுமியங்களின் விதற்ப்பிற்கு வித்தேற்றியவன்,
குழுமியங்கள் குவியா குமுதமவன்,அமுதன்
ஆதலால் அகிலத்தின் ஆடலாசான்,குரல் குங்கிலியத்தால்,
இகம் இலங்கும் இசை இளவரசன்,

தென்றலின் நீவலிற்கும்,தெவட்டாத இசையதற்கும்
குன்றாத குழையமவன் கன்றானவன் காலக் கலையானவன்,
மென்றிடும் துயர் தீர்க்க மெழுகானவன் மேதினியில்
தின்றிடும் தீமம் துரத்த தூய அகமெய்த அவன் ஆத்மத்தையும்

வஞ்சமில்லாமல் வாதை யேற்றி தின்ற காலக் கொடியோனின்
பஞ்சமில்லா பாத்திரத்தில் முகம் கொள்ளா மூலிகை ஒன்றிருந்தால்
அஞ்சாத அகம் விரித்து ஆதங்கமாய் அந்த ஆயிழைக் குயிலிற்கு,
ஆக்ஞையாய் அளித்திருப்பேன் ஆயினுமிது ஆகுமா என்றேந்தும்
விக்ஞைகள் விரித்துரைக்கும் விதியை யான் என்னென்பேன்?

இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்குமா?

வியாழன், 25 ஜூன், 2009

உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.


அகம் சுரக்கும் ஆதங்கம் அறிவாயா?
நுகம் இழந்த நூதனம் நுகைந்தாயா?
சுகம் இங்கு சுகிக்க நீயும் சுழற்பாயா?
இகம் இழைய இதமாக இணைப்பாயா?

கால நேரம் கடந்திடும்,
களைவாயா?
சாலச் சக்கரம் சடங்கிட,
சகிப்பாயா?
கோலக் கொடுமைகள்,
கோடிட கொதிப்பாயா?
மீள இவைகளை மீட்டிட மிளிர்வாயா?

எங்கெங்கோ சிந்தனைகள்,
ஏகம் ஏய்க்க எழுவாயா?
ஏய்த்து விட்ட நிந்தனைகள்,
மாய்த்து விட மகிப்பாயா?
உய்த்து இனம் உளமேற,
ஊக்கமாய் உழைப்பாயா?
காய்த்து,கருகும் கனதிகள்
களமேற்ற களைப்பாயா?

சிந்தனைகள் இந்த சிறைகளிலே,
சிரம் கொள்கின்றன,
வந்தனை வகைக்க வாய்ப்பில்லை,
வழியில்லை,
நிந்தனைகள் நிதம் நிறைக்கும்,
நீட்சி கரைக்க நியம் இல்லை.

சேய்ந்தனே சேவிக்கும் சேடிகளை,
செவியறைந்து,
கூய்ந்தனை குவலமெல்லாம் கூடி,
சாய்ந்தனையோ?இல்லை
வேய்ந்திடும் வெயிலெடுத்து,
ஆய்ந்திடும் ஆயிலத்தை,
பாய் விரித்து பகடெடுக்கும்,
பாகத்தை பரிந்தனையோ?

இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.


ராச பார்வை ராகம் ரசம் ரணந்ததா?
வீச வீணில் விகம் விரயமாய் விழுந்ததா?
ஊச உன்னி உள்ளகம் உழக்கி உழுததா?
நீச பார்ப்பனிய பாதையால் பரவி பழித்ததா?

சாய,சரித்திரம் சாய,
மேய தரித்திரம் மேய,
காய கனத்திரம் காய,
ஓய ஒளித்திரள் ஒளிக்குமோ?

ஓயா,அலைகள் ஓய,
வேயா வேனில் வேய,
மாயா மனிதம் மாய,
காயா கர்மம் காய,
தூயா துன்பம் தீய்க்க,
தீயாய் தீரம் திறக்குமோ?

தாள உள்ளம் தாள,
மேளா மௌனம் மேள,
ஊனா உறுதி ஊள,
ஊக்குமோ?உரத்தி உறுக்குமோ?

தணிய தாகம் தணிய,
பணிய பாகம் பணிய,
அணிய அகங்கள் அணிய,
துணியுமோ?துய்க்க துணியுமோ?

கருக காலம் கருக,
உருக உறுதி உருக,
பருக பகையும் பருக,
மெருகுமோ?உணர்வு மெருகுமோ?
பெருகுமோ?பேளாய் பெருகுமோ?

ஊனம் ஊறும் உள்ளம்,
ஈனம் இறுக்கும் ஈகம்,
மானம் மருக்கும் மௌவ்வல்,
கானம் கலக்குமா?கறுவி கனக்குமா?
காதத்தை காக்குமா?காலம் கலையுமா?

புதன், 24 ஜூன், 2009

குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்


சிந்தையது சீண்ட,சீண்ட,
சீலம் சிதைகின்றது.
சொந்தமெல்லாம் சோகம் பேள,
கந்தகம் கோர்க்கின்றது,
விந்தை இது தீருமா?
வீரியங்கள் தேறுமா?
கந்தலாக,நொந்து,நொந்து,
மனம் காய்க் காய,

இந்தியர்கள் ஈனம் ஈய்ந்தார்,
முந்தியவர் எம் மூலம் மிதித்தார்,
எந்தையர்கள் ஏந்திய,
சிந்தி அவர் சீவித்த,
எங்களது தங்ககங்கள்
எங்கள் நிலம்,எங்கள் வளம்,
எல்லாமே,
எரிந்து ஏனம் ஏந்ததே,
எங்கள் ஏகமெல்லாம் எறித்ததே.

பந்தியெல்லாம் பாறி பதைத்தார்,
குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்,
எங்கள் எச்சங்களை,
சொச்சங்களை,
மிச்சங்களை,
துச்சமென்றே துகில் உரித்தே எரித்தான்.
துஞ்ச,துஞ்ச,
துயர் தீருமோ?சுகம் சூளுமோ?
இந்த.
ஏக்கத்திலே ஆயுள் கரையுமோ?
துக்கத்திலே எம் துயரம் தூருமோ?

அச்சமின்றி ஆற்றலுடன் ஆனந்தமாய்
வாழ்ந்த எங்கள் வாகை மீள மிகையுமோ?,
வாதையின்றி இனி ஒரு பாதை வகையுமோ?
வதை வையுமோ?
கதை பொய்யுமோ?
இதை இகம் இயம்ப இறுக்குமோ?
இல்லை,
இழவுகாண் இனமென்றே எமை
இழக்குமோ?
ஈரம் ஈனமாய் இழையுமோ?இகையுமோ?

செவ்வாய், 23 ஜூன், 2009

அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.


வியாக்கியானங்களிற்கு விடை கொடு,
விதைந்தோரை வீரியம் கொள்,
அகந்தோறும் ஆரை ஆற்றும் ஐவரை அகம் கொள்,
ஆக்கமான தாக்கம் தகப்போரை தரமேற்று,

பத்மாநாதனின் பத்ம வியூகத்தில் பரவு,
உருத்திரன் உண்டாக்கும் உருத்திரத்தை உள் வாங்கு,
பருத்திரளான பாதம் பதி,பாரதில் பரவி விரி,
வெருளித்தனமான வெப்பகத்தை வெளியேற்று,

உத்தமர்களின் உள்ளக்கிடக்கைக்கு உரம் ஊற்று,
செத்தவர்களாகவே சேடமிழுக்காமல் செம்மனம் சேர்,
புத்திரர்களின் பூடகம் பூச்சொரி,வித்தகங்களை அவர்
வித்திட விவேகமேற்று.

எத்தனை நாள் இன்னும் சொத்தை ஏற்றுவாய்?
காத்திரமாய் களமியங்க கற்ற காதை கடை,
சுத்தமாக சுயமாக இலங்கு,சூழ்நிலையை சுளி,
பாதையின் பாவத்தை பரிந்தெடு,விட்டு,விட
விவாத விதங்களை விகல்வு,

இருப்பது,
இல்லாமல் இருப்பது,
இவை இப்போ இருள்.
செருப்பது போல் சேர்த்திருப்பதை செருக்கு,
கருப்பான காத்திரம் கருக்க களமானதை கனம் காவு,
விருப்பான விதமிருந்து வீதம் விடிவேற்ற விகை,

ஒற்றுமையின் ஒருங்கமைப்பை ஒப்பேற்று,
வேற்றுமையின் வேதியங்களை வெறுப்பேற்று,
பற்றுமையுடன் பதியங்களை பரப்பேற்று,
உற்றுமையுடன் உதயங்களை உறுப்பேற்று.

சாற்றும் சாரங்களின் சாதூரியங்களை சாதி
நூற்று எம் நுதங்களை நொருக்காமல்,நெறி,
மாற்று வழியமைக்கும் வாசல் வருடு,
போற்று அந்த போதியர்களின் பேற்றை போற்றி.

தீற்றும் திறவர்களின் திறனில் தீரமாய் திளை.
வற்றும் வரமேற்ற வக்கணையாய் வதி
சுற்றம் சூழ பற்றுறுதியுடன் பாகையை பகிர்
கொற்றம் கொலுவேற கொள்கை கோர்ப்போரின்
இற்றுப்போகாத இகத்தை இயல்பாய் இருப்பேற்று,

நற்றுணை நாற்றிட நால் வகை நாண நதி,
குற்றம் குரைப்பதை குறி விலக்கு,
சற்றும் சளைக்காமல் சாதகங்களை சார்,
ஒற்றும் ஒற்றங்களை ஓர்மமாய் ஒதுக்கு,

விற்றுப் பிழைக்கும் வினையற்றவர்களை விதியகற்று,
சிற்றறிவு சீவியர்களை சீலம் விலத்து,
நெற்றலில் நெரிக்கும் நெற்றற்றதை நெரி,
தெற்றித் தெற்றி தேகம் தேசிப்பதை தெறி,
வற்றிப் போகா வல்லமை வகையாக்கு,

ஊற்றெடுக்கும் ஓடை ஊர் சேர உறவாடு,
நாற்றெடுத்த நாற் புயங்களை நாவேற்றி நாடேற்று,
ஆற்றெடித்து அற்றாக்கியதை ஆக்க அகமெடு,
காற்றடித்த காரமெல்லாம் கலந்தாடுவதை கரி,

பேறு வேறென்ன பெற்றோமென பேதமை பேதி,
ஊறு உற்றென்ன உற்றோமென உறங்கல் உரி,
ஈறு இற்றென்ன ஈற்றோமென ஈதல் ஈய்,
வீறு வீற்றவன் கொற்றத்தை கோல,

மாறு மாற்றான மாற்றத்தை மகிக்க,
தேறு தேற்றவன் தேசத்தை தேகிக்கும்,
தோற்றத்திற்கு தோகையாக தோள் கொடு.
ஊற்றாக உந்தன் உறுதுணை உறுக்க உறு,

காப்பகம் காற்றும் காத்திரம் கன,
தோப்பகம் தோரணிக்க தோத்திரம்,
தோக்கும் அந்த தோரணிக்கு தோரமான,
ஊக்கம் உள வளமாக உள்ளவரை உதவு.

ஆக்கமது ஆற்றும் ஆதங்க கணை அணை,
போக்கமது போக்காமல் போகிக்க போதி அணை,
தாக்கமது தாக்காமல் தளமிக்க,
தாக்க மிக்க தரமிணை,
நீக்கமது நீக்காமல் நிறைந்திருக்கும்,
நிமிர் நிலைக்க நினையிணை.

ஞாயிறு, 21 ஜூன், 2009

நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.


காலக் காய்ச்சல் கதிரோனைச் கற்கவே களமியக்கும்,
கோல விழுமியங்கள் கொலைந்ததாக கொள்கையை கொறிக்கும்,
சீல சிந்தையரின் சிறப்புக்களை சீலம் இழைக்கும்,எங்கள்
மூலவர்கள் மூளையெல்லாம் மூலமாய் மூர்க்கும்.

வேளை ஒன்று வேண்டும் என்றே வேதம் இசைக்கும்,
காளை கலவக்கூட காலநேரம் கலவ வேண்டும்,
மாள அத்தனையும் மறைக்க மர்மம் மதைக்கும்,
சூழ சூர்ப்பனங்கள் சூட்டிய சூரம் சுகைக்க சுழிக்கும்,

மாலை ஒன்று மாயப் புலத்தில் மாயை அகற்றும்,
ஓலை ஒன்றல்ல ஓராயிரமாய் ஓர்மம் ஒற்றும்,
சீலை இழந்ததெல்லாம் சீராகவே சீலம் சிகைக்கும்,
மூலை மூண்டதாக முரசறைந்த மூலம் அகலும்.
காலைக் கதிரவனின் காத்திரத்தால் காலம் கயலும்.

ஊளை அங்கு உலர்ந்ததாக ஊரே உயரும்,
பாளை பார்ப்புலத்தில் பரவலாக பசுமை பரப்பும்,
கூளை குதிர்ந்த கூனர் கூலம் குதிய குரவுவார்,
காளை காத்திரர்கள் கனம் மேவ களமேவுவார்.

வேர்ப் புலத்தில் வேர்த்த ஈனம் வேதம் மடிக்கும்,ஈழ
கூர்ப் பலத்தில் குதிர்ந்ததாக கூடி குலவும்,நீச
போர்ப் புலங்கள் போடியாக வாடி வகைக்கும்,தீர
தீர்ப்புலங்கள் திகைய தீரர் திசையாய் திரும்பும்.

சார் புலங்கள் சாராக் கொள்கை சாதகம் சார்த்தும்,
நார் புலங்கள் நலிந்ததாக நாட்டியம் நயக்கும்,
தேர்க் கலங்கள் தேசியத்தின் வடம் தேர்க்கும்,அங்கு
நீர்ப் புலங்கள் ஆனதாக நிணல்கள் நியத்தும்.நீர்க்கும்
நியங்கள் நிரத்தும்,ஈழ இலங்குகள் இயங்கும்.

உறை நிலையில் உறைந்ததெல்லாம் ஊரகம் உலைக்கும்,
கறை நிலையை காத்தவர்கள் காரகம் கரத்தும்,மேவ
பறை பலத்த பாரியத்தை பார்த்தியங்குவார் பகற்ற,
குறை கூர்த்த கூர்ப்பனத்தின் கூரியங்கள் கூட்டுவார்,

நெகிழ நேரிழைத்-
தாக்கு வாரியங்கள் தகமீட்டுவார்,தகைய த(ள)மி(ழி)யங்குவார்.
வேர் வேர்க்கா வேதினியர்களின் கார்
விலக கார்த்திகை களம் கனலும்.

பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.


கூவும் குயில் கூட்டம் குலவ வில்லையே,எந்த
சேவல் கூவும் குரலும் எங்கும் குவியவில்லையே,
ஆவல் தாங்கி ஆற்றும் அந்த அரங்கமில்லையே,ஆயின்
தாவல் ஓங்க செழிக்கும் தாய் மடியும் சுரக்கவில்லையே.

காவும் காந்த கயலாழை காணவில்லையே,
காதல் கனித்து காலை காட்டும் காளை ஏகவில்லையே,
மேவும் மேனி ஆய்ந்த ஆலை இலங்கவில்லையே,மீதில்
பாவும் பாச கோயில் குரலும் கூட கொழிக்கவில்லையே,

கூதல் கூட்டும் குளிரும் இங்கே குதையவில்லையே,
சாதல் சாட்டும் சாலை இங்கே சலிக்கவில்லையே,
போதல் போக்கி எங்கள் பூமி புலரவில்லையே,
ஆதல் ஆக்கும் அந்த மறவர் ஆயுள் அகன்றுபோகுமோ?

நெய்தல் நெய்ந்த கடல் புலிகள் களம் காணுவார்,அன்று
கொய்தல் கூட்டும் கூட்டம் கலிகள் காலம் மொய்யுவார்,
வான் வகையறிந்த வைகையார் வலம் வந்தே தீருவார்,காண்
ஊன் வீழ்த்த எங்கள் உடைமை உரியர் உள்ளம் ஊட்டூவார்.

பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
கொய்தல் ஊக்க கொடும் பகையின் கோரம் மாற்றுவார்,
வைய்தல் வகைத்த வரம் வாழ்விழந்து வையகம் அகலுமே,
உய்தல் என்றே எங்கள் ஊர்க் களங்கள் உரங்கள் ஊட்டுமே.

செந்தமிழ் வாழ்விழந்த வாழ்க்கை தீற்றுமே,அங்கு
செம்மல்களின் சேர்க்கை சேர சேடம் செயலிழக்குமே,
பைந்தமிழில் பாகை பரந்து பலம் பரத்துமே,பார்
உந்தன் உறுதி பூண்ட உயிர்க் கலங்கள் உலகுலவுமே.

கன்னல் காக்கும் காலக் கலங்கள்,
மின்னல் மீட்டுமே,அன்ன
காவடிகள் ஆன காலம் கள மகலுமே,விண்ணதிர
வேலுப்பிள்ளை வேகம் வீட்டுவான்,எங்கள்

கண்ணெதிரே காலக் கதிரன் களமாற்றுவான்,அவன்
பண்ணொலிக்க பாரில் எங்கள் பாதை மீட்டுவோம்,போர்ப்
பேரிகைகள் பேதமகற்றி நாம் முழங்குவோம்,அந்த
ஆரியனின் அதமகற்ற நாம் ஆவன இழைப்போம்.

சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.


சந்தனப் பூவெடுத்து எங்கள் சாலைக்கு,
மாலை கட்டு,
வந்தன வாழ்த்தெடுத்து அந்த வாகைக்கு
வாழை கட்டு,
எந்தனவன் ஏற்ற வாகை ஏட்டினிலே,
சூட்டி வைத்து,
மந்தார மலரெடுத்து அந்த மகிமைக்கு மாலை மாட்டு.

உந்தனதன் உவப்பெடுத்து,
உள்ளத்திலே உரமெடுத்து,
வந்த பகை பாய் பரத்தி பார்த்தனவன்,
பகை முடித்து பார் புகழ பூத்திரு.

பாட்டெடுத்து பாமுடித்து,
பாய்ந்த புலி பதமெடுத்து,
பாடையர்கள் பார்த்த பார்வை,
பந்தத்திலை பதித்த பாதை,
விந்தகத்தின் வீரியமாய்,
விநோதங்கள் விசைமுடுக்க,
விரிந்து நின்றான் விதந்து நின்றான்,

யார் விரித்த வீசமது,கார் விரித்து
கனந்ததுவே,
ஆரியர்கள் அகமெடுத்து ஆர்ப்பரித்து,
அணைந்து நின்று அடையெரித்தான்,
ஆற்றி நின்ற அகமெரித்தான்,ஆயினவை
அத்தனையும்,
ஆறாமல் அலைத்தெரித்தான்,

எஞ்சி நின்ற ஏதனத்தை,
விஞ்சி நின்ற விந்தகத்தை,
அஞ்சி நின்ற அகந்தத்தை,
கொஞ்சங்கூட இரக்கமின்றி,
வெஞ்சமரின் வெப்பகத்தில் வேதினியே
கலங்கி நிற்க,களமெரித்தான்,எங்கள் கனமெரித்தான்,
உள்ளங்களின் உபாதைகளை,உடலங்களின் காயங்களை,
கள்ளமற்ற கருக்களை,காத்து நின்ற காப்புக்களை,
தள்ளாடிய தாத்தர்களை,பாட்டிகளை,பூட்டர்களை,
அள்ளியவன் ஆத்திரமாய் ஆன அந்த எந்திரத்தால்,
உடலுதற,உளமெரிய,கடலதில் கந்தகத்தின்,கைத்துணையால்
கருணையது கடுகளவுமின்றி காந்தர்கள் கரைத்து காந்தான்,

இடைத்தங்கல் முகாமென்று அடைக்கலமாய் ஆனவர்களை,
இடையின்றி துடைத்தெடுத்து,இரவிரவாய் இல்லாதொழித்தான்,
இன்னும் இன்னல் இழையவில்லை,
தின்னும் தீங்கும் தீயவில்லை,
மின்னும் தன் சிந்தனையில்,எண்ணும் எந்த நேரத்திலும்,
கன்னியர்கள்,காளையர்கள்,காலம் உதிர்ந்த மேனியர்கள்,
என்னும் என்ன என்றில்லா எத்தனவன் ஏகத்திலே.
புன்னும் தன் புளகாங்கிமாய் புறமள்ளினான்,அல்லும்,பகலும்
இதையே ஆற்றினான்,

மிஞ்சும் எம் மேனியர்கள் மீதமுள்ளாரா?
அஞ்சும் அந்த போதினிலே அகமகிழ்வாரா?
கெஞ்சும் அந்த கெந்தலிலே தஞ்சம் விலகுவாரா?
விஞ்ஞ,விஞ்ச எங்கள் விகிதம் குறைப்பாரா?
மஞ்சம் தன் மகிழ்வென்றே எங்கள் மானம் மரிப்போரே.

கேள்,அவதானங்கள் அற்றோரே,அற்போரே,
மனிதாபிமானம் என்ற மகத்துவம் மரித்தோரே,
பனிதானும் பனிக்க பாதை விரித்த எங்கள்
பாதம் புரியாரே,
மெத்தனங்கள் எங்கள் மேனி தடவ,
உத்தனங்கள் உறுப்போரே,
சித்தனங்களை நீ சீவி சிரைத்தாலும்,
எத்தனங்களை நீ எள்ளி விரவினாலும்,
அத்தனங்களால் எங்கள் ஆவி அரைத்தாலும்,
புத்தனங்களால் எங்கள் புவி புரைத்தாலும்,

புத்தனின்,பல்லிற்கு
புது மாளிகை புனர்ப்போரே!
வித்தனங்கள் விலவ எங்கள் வீரியர்கள்,
உங்கள் சொத்தலங்கள் அத்தனையும் சோபை மருக
கைத்தலங்கள் கலக்க காலம் கொள்ளும்,கரிகால
உத்தமர்கள் உறையும் உன் எதிரில்
சத்தமின்றி சாகசமாய் உன் சபை மொள்ளுவார்கள்,
சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.

சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.


சித்திரம் சிதைந்திருக்க,
உத்திரம் உறைந்திருக்க,
காத்திரம் கதிரறுக்க,
சூத்திரம் சூட்டும் சுயங்கள்,

இன்று!
தோத்திரம் தோத்ததாக,
தோரணங்கள் தான் கலைத்து,
வாரணங்கள் வரிப்பதற்கு,
வடக்கு வசந்தமென வாய்த்திருக்கும்,
வரிப்பெடுத்து வாசல் வரப்போகின்றார்,
உங்கள்,
ஊனம் சொரியப் போகிறார்,
ஈனம் தகைத்த ஊனர்களுடன்
ஊகம் உரியப் போகின்றார்,

உசார்!
உறவுகளே,
உறங்கும் உங்கள் தேக சேமத்தை,
பாறாங் கல்லெடுத்து ஏலம் வீசப்போகின்றார்,
ஏதிலிகளின் ஏக்கம் ஏய்க்கப் போகின்றார்.
விறல்களெல்லாம் விதைந்தென்றே,
விசம் வீசப் போகின்றார்,உங்கள்
அகம் நீசப் போகின்றார்.

தேசத்தின் நேயங்களை,அது சூரித்த நாயனங்களை,
ஆதர்சத்தின் அங்கங்களில் ஆசுவாசம் அமர்த்தி,
ஆதங்கமான ஆயுட்காலங்களின்,
ஆர்த்தெடுப்பில் அறம் அகற்றி,
தேமாங்கின் தேசக்கூட்டில் தேர்வென்ற ஊர்வன உலக்கி,
பாமாங்கின் பவித்திரத்தில் பவ்வியமாய் பகடை உருட்டி,
சோம பானத்து சோதியரின் சேக்கிழத்தை,
வாம பாக வகிடெடுத்து வாரிவிடப்போகின்றார்,உங்கள்
வயல் வரப்போகின்றார்.

சித்திக்கும் உங்கள் உத்திலத்தை உரம் வைக்கப் போகின்றாயா?
இல்லை,
எத் திக்கிலும் எப் போரரங்கிலும் விக்கித்து போகாத வீரியர்கள்,
உன் திக்கில் உடன் வர உசாவெடுத்து உறுதுணை உரக்க,
அத் திக்கின் அரங்கத்தை ஆசுவாசம் அரவணைத்து,
முத் திங்களாய் முகி யெடுக்கும் முத்தாரம் சூட்டி உன்,
பத் திங்களாய் பரிந்தெடுத்து அவர் பரம பாதம் பதியவிடப் பாதை,
பரிந்தெடுக்கப் போகின்றாயா?
பார பதமதை பங்கெடுக்கில்.நீ
பாக்கியன்,உபாத்தியன்.உக்கிரன்.

பார்!
அதன் பாரம் பாரியங்கள் பவ்வியம் பரக்க,
இதன் ஈரங்களைல்லாம் இவ்வியம் இரக்க,
புதன் புரண்டு பூவிதழ் புன்னகைக்க அங்கு
வதன் அலங்கும் வதனங்கள் வாகை சூடும்.
திவ்வியம் இதன் திரவியம் தீட்டு.

தேர்.
அது தேசவலம் வர வலமான வாத்சான்யம் வகு,
ஊர் அது உலா அமைக்க ஓர் உத்யான்யம் உகு,
கார் அதன் கவ்வியங்களை கானல் ஆக்க கலனெடு,
போர்,
அதன் போகங்களே அன்றும்,என்றும்,இன்றும்
தாக்கம் தகித்த தார்மிகம் தகித்தது,

வரலாறு வகுத்த பாதை பார்.
குரலாறு கூறும் குதம் குறி,
மதலாறு மைக்கும் மையம் மறி,
உரலாறு உதிக்கும் உன் மத்தம் உறி.
வரலாறு மீண்டும் மௌவ்வும்,

மன ஆற்றலை மகத்துவமாக்கு,
மரணிக்கும் எம் மௌனம் மரிக்க,
திரளான உன் திடமதை திறன் தீட்டு.
அருளானனின் ஓளவ்வியம் அகம் ஆற்றும்.

பிரளாத பிரம்மியம் பிறை,
வெருளாத வெம்மியம் வெகு
குருளாத குவியம் குவி,
மருளாத மானம் மகத்துவம் மாற்றும்.
சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.

மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.

சனி, 20 ஜூன், 2009

பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.



கீத்தாடும் தென்னை கூத்தாடும்,
பூத்தாட புன்னை புனலாடும்,
ஈத்தாடும் ஈனம் ஈக மீடும்,
கூத்தாட குலம் கூட ஆடுமா?

வேர்த்தாடும் வேர் வேகாது,
ஆர்த்தாடும் அவர் ஆணவத்தாலும்,
பேர்த்தாடும் பேரினவாதம் பேயாலும்,
கூர்த்தாடும் அவர் குலம் குதித்தாடும்.

வார்த்தாடும் வகை வயமாக்கும்,
பார்த்தாடும் பகை பயமாக்கும்,
ஊர்த்தாடும் ஊக்கை உலர்த்தாடும்,
ஈர்த்தாட சிங்களக் கை ஈகமாடுவான்.

கார்த்தாலும் களம் கலைந்தாலும்,
மூர்க் கோலம் மூட்டியே முடம் மூட்டினாலும்,
யார்த்தாலும் யாகம் யகித்தாலும்,
போர்க்கால போகமது போகம் போதிக்கும்.ஆரிய
சீர்க்காலம் அது சீக்காளம் சிக்கும்.

மார் தட்டிய மடை மரவ மருவும்.
ஆர் தட்டிய அடை அரவ அருகும்.
ஊர் தட்டியதாய் உரவ உருகும்.
பார் பட்டியலிலே பரவ பகை பருகும்.
கார் கட்டிலே கரக காதை கதையும்.

ஞாலத்தில் ஞான்றும் ஞாயம் ஞானிக்கும்.
சீலத்திலே சீண்டும் சீலம் சிலிர்க்கும்.
பாலத்திலே பதிந்த பாதம் பரிக்கும்.
காலத்திலே கனந்த காதம் கரிக்கும்.

கரிகாலன் கனித்த காலம் கடக்கும்,
விரிவாலன் வினித்த வீதம் விடக்கும்.
பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்,பாரில்
உரிதான எங்கள் உதிரம் உரக்கும்.
உளக்க
எரிதான எங்கள் ஏகம் ஏறும்,புரியாத
அந்த
பூரிப்பிலே பூகம்பம் புரக்க,
பூடகம் பூக்கும் புவி பூத்தாடும்.

ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.


ஊரோடிப் போவதென்ன உறவா?எங்கள்
வோரோடி விழைந்த நிலம் கனவா?
ஆரோடு எங்கள் வளம் விழையும்?எந்த
நீரோடு அந்தக் களம் திறக்கும்.

சாவோடு வாழ்வதென்ன வாழ்வா?எங்கள்
சகவாசம் சார்வதென்ன சலிப்பா?
`பா``வோடு வாழ்வதெல்லாம் பாடா?,தமிழ்
பாடை இங்கே பரிகின்றதுவே பாவாய்.

கானலது கண் தெரியும் காட்சி,அங்கே
கைத்தறிகள் கலைந்திருக்கும் கலட்சி
புலமெல்லாம் பூரிப்பதுவா? புகழ்ச்சி,புலம்
பூவிரித்து புலர் வெய்துமா? புரட்சி.

பாலை வனம் பார்ப்பதில்லை பசுமை,நாம்
பாலைகளாய் பரிந்தோமே வெறுமை,
காலைகளில் கலந்திருக்கும் காட்சி,நாம்
கண்ணீரில் கலந்திருந்தோம் காட்டி,நாம்
கண்ணீரில் கலந்திருந்தோம் வறட்டி,சுதந்திர வறட்சி

தீனமின்றி தினமருந்தோம் திரட்சி,நாம்
வானமன்றி வரைந்திருந்தோம் வரட்சி, இனம்
ஈனத்துடன் இகைத்திருந்தோம் இரட்சி,மன
ஊனத்துடன் உடனிருந்தோம் உரசி.இரக்க
ஊனத்துடன் உடனிருந்தோம் உரசி,

வாய் திறந்து மொழி பகர பாதை,இங்கு
பாய் விரித்து பாடை கொண்ட உவாதை,உயிர்
ஏய்த்திருக்க ஏனம் ஏந்தும் ஏக்கம்,உடல்
உய்த்திருக்க மொய்த்திருக்கும் ஈனம்,உடல்
உய்த்திருக்க மொய்த்திருக்கும்.
ஈனம் உள ஊனம்.

நோயிருக்கும் மருந்தில்லை மார்க்கம்,விழி
போயிருக்கும் போக்கில்லை தாக்கம்,விடை
விதந்திருக்க வியல்பில்லை விதர்க்கம்,எங்கும்
குதந்திருக்கும் கூனலே குதர்க்கம்,எங்கள்
கூனலே கூற்றிருக்கும் குதர்க்கம்.
வல்ல குதர்க்கம்.

வெள்ளி, 19 ஜூன், 2009

தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்

தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின் அனல் கதிர்

கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.


அழிவு காலம் அரும்பியதுவோ?அன்றி
அலைக்கும் ஆய்வு அருகி ஆயுமோ?
கொழித்த காலம் கொற்றறுந்ததுவோ?
இலைகள் இரந்து இழைத்து போயினவோ?

கழிவு கலைத்து கரந்த எங்கள்
ஒழிவு ஒற்றி ஓர்ந்த ஓர்மம்.
பழித்து பரந்து பாயினவோ?பாரில்
செழித்த செங்களம் செருகிப் போயினவோ?

உருக்கும் நெஞ்சை உருக்கும்.
உளவு எல்லாம்,
உரத்து உரைக்கும் உண்மை ஒன்று.
உள்ளம் நொருக்கி ஊனம் பெருக்கி,
உள்ள அகம் உய்யுமோ?

வருகும் வர்க்கம் வார்ந்து வளர்ந்து,
கருக்கும் கயமை கார எந் நாள் கூடும்?
பெருக்கும் இந்த பேயே பெருகும்,வருந்தும்,
உருந்தும் எங்கள் இனமெல்லாம் உருத்தும்.

தோப்பும், துரவுமாய் தோற்ற தோன்றல்,
மப்பும், மந்தாரமாய் மகித்த மரபுகள்,
உப்பும் வெப்ப காற்றிலெல்லாம் உரமாய்,தடமாய்,
கப்பும் எல்லா காரிருளிலெல்லாம் கனதி திடமாய்,
தீட்டி, திகட்ட, தினமாய் திரண்ட திவ்வியமெல்லாம்,
ஊட்டி,உலர்த்தி,உறுத்தி ஊன்றிய உரங்களெல்லாம்,
மாய்ந்து போயினவோ?மலடர் மார்பில் மடிந்தனவோ?

தப்பும் தாளமென்று தாள மிழைக்குது,
சப்பும் சாவிலெல்லாம் தமிழர் வாழ்வு தரையுது,
நப்பும் நரம்பிலெல்லாம் நாடு நலிந்து நரைக்குது,
ஒப்பும் ஒயிலத்திலே ஓம்பி ஒலிக்குது,சிங்களர்
சிலப்பும் சீலத்திலே சீலம் சிரித்து சிறக்குது.

நெம்பது முறிந்தால் நெகிழுமா நிறைகள்?
கொம்பது குறைந்தால் கொடிக்குமா?
கொழு கொம்புகள்!
ஆயின்!
தான் படர படி தேடி பதிக்குமா பதியங்கள்?
இல்லை!
இகமதில் இல்லையே இல் வாழ்வென
சகிக்குமா?சலிக்குமா?
அஃதும் அவித்து,
ஆழ வேரோட ஆகிக்குமா?ஆதங்கிக்குமா?
ஆர்த்த ஆடியெடுத்து ஆய்க்குமா?
அவர் பணிகள்?

விடை தெரியா வினாக்களே,
உடை தரிக்கும் ஊக்கம் உரக்கும்,
பற்றெடுக்கும் பாதை விரிக்க பகுப்பெடுக்கும்,இது
பாரில் பதிந்த பரி,
இதை நூற்பவன் நோற்பான்,நுனிப்புல்
மேய்பவன் நுதலான்.

கடை விரிக்கும் காலமல்ல,இனி
கரிகாலனின் காலமும் அல்ல,
விரிவடைவாக்காமல் விதம் விதர்த்தும் விதானத்திலே
பரிவடையும் பக்குவம் ``பா`` எழுதும்.
இல்லையேல்!
பாரில் பார்ப்பனின் பாப்பகத்தில்
ஈழத்தமிழரின் இன்னல்கள் இதம் கொள்ளும்,
இனம் கண்டால் மனம் கொள்வோம்,இனம்
பிரித்தால் இடர் கொள்வோம்.

சுய பரிசோதனைகள் சுயம் சுரிக்க,
மயம் மரிக்கா மனம் தரிக்க,
வயம் வரையும் வைப்பகத்தை,
வயல் கொள்வோம்,அன்றில்,
கயல் கரைத்தே கனமிழப்போம்.
களமகன்றே காலம் கரைப்போம்

சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.


சொற்பதத்தினுள் உனை செதுக்க சிதைந்தேன்.
மற்பதமாகவே மருக சிலிர்த்தேன்.
உற்பவங்கள் உதிர்க்கும் உரையே,
நிற் பதங்கள் நிலைக்க நிழல்வாயா?

ஆற்பனாக நான் ஆகியே ஆதிர்ந்தேன்.
நூற்பனாக நீ நுகைக்க நுகைந்தேன்.
பாற்பனாக நீ பதிக்க பதைந்தேன்.
வேற்பகனாக உன் வேதினியில் வேர்த்தேன்.
கூற்பனாகி குலவி குயில கூடினேன்.

அற்பனாக நான் ஆகியே அனந்தேன்,
கற்பனாக கனிய கனிந்தே கனித்தேன்.
குற்றாலத்து கொத் தருவியாகி தானே,
விற்பனங்கள் விதைய விரவியவளே.நிந்தன்
பொற்பாதங்கள் பொதியத் தகுமோ?இந்த
சிற்றாளனை சீவிய சிலையே.

வற்றாமல் வருடும் வாரக வதியே.
நற்றாமரையின் நாணிய இதழ்போல்,
பெற்றாள் அவள் தன் பேறு நகையே,
உற்றால் தகுவேன் உற்பவளே.
கற்பாய் என்னை கனிவாய் கற்பாய்.

தற்பன வெல்லாம் தகையே தணிந்தே,
சிற்றறி வெல்லாம் சிலையே நிலையே,
வற்றறியா வகையே வனையே,
பெற்றிருந்தேனே பெருந்தகையே பேறே.
உற்ற உன் உளமெல்லாம் உறுதி உடுத்தே,

கற்பனுக்கு காலம் கலையோ?கடையோ?
மற்றெல்லாம் மறைக்க மறையோ?முறையோ?
விற்பனமெல்லாம் விதமோ? விதையோ?
முற்றெனமெல்லாம் முகமோ? முதிர்வோ?
சுற்றனமெல்லாம் சுகிப்போ?சுவையோ?

சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.

எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?


வாகைகள் வதைந்தால் வாதைகள் வயலும்,
கூகைகள் கூடி குதமெல்லாம் குதைக்கும்,
மேதைகள் என்றே தம் மெய் பரப்ப மேயும்,
உபாதைகள் அனு தினமும் உயரமாய் உரியும்.
பாகைகள் இன்றி பாதைகள் விரியும்.

வேர்ப்புலமெல்லாம் வேகவே வெரிக்கும்.
மாய்ப்புலமாகி மற்றெல்லாம் மடியும்,
பேய்க்கதை கட்டி பேதமையே விழைக்கும்.
வாய்த்த்தையெல்லாம் வகையின்றியே வதைக்கும்.
மூப்பெய்ததாக எம் முகமெல்லாம் முகைக்கும்.

பலத்தின் பாலம் பதைக்கவே பறிக்கும்.
மலமள்ளி எறிந்து எம் மார்பெல்லாம் மதைக்கும்.
களமள்ளி எரித்த காரியம் கனக்கும்,
குலமெல்லாம் கொய்த கோத்திரமே குறிக்கும்
வலம் வந்த எம் வாதமெல்லாம் வதையும்.

வன்னியில் இதுவே வளமாக வலையும்,
புன்னகை மரத்து புனிதமெல்லாம் புதையும்,
கன்னியின் கற்பும் கலவியே கறக்கும்
மென்னியை திருகி மேனியெலாம் திறக்கும்.
எண்ணி,எண்ணி மனம் ஏந்தலே ஏகிக்கும்.

புன்னகை மறந்த தேசம் புல்லரால் புதையும்.
வன் பகை வதைத்தே வன்மம் திண்ணரால் திரைக்கும்.
மென்னகை மெருக மேனி மேதினியை மேயும்
மேய்ப்பனை இழந்ததாலே மெய்யெல்லாம் மேவும்.

உய்ப்பவன் உறைந்ததால் உய்வேற்றி உலவும்
பொய்ப்பனவாக போகி பொய்ப்பேற்றி பொதியும்.
வைப்பகம் வைத்த வள்ள வலமேற்ற வையும்,
கைத்தலம் கரந்ததாலே கைப்பது கலக்கும்.
தைத்தலம் தடவ தடங்கள் தக்கனையே தகக்கும்.

இத் தலத்தில் இனியெம் ஆளுகைகள் இரையும்,
பொய்த்தலமாய் போயினவோ?
போகமெல்லாம் பொய்க்கும்,
மெய்த்தலம் மேதினியில் மருகியதுவோ மாய்க்கும்.
வாய்த்தலங்கள் ஆங்கே வகை,வகையாய் வாதிக்கும்.
எம் தலங்கள் எமை நோக்க எந்த,
எந்தனரை ஏந்துவோம்????

வியாழன், 18 ஜூன், 2009

ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு


சுகந்தத்தில் கந்தகம் குந்தகமானது,
சுதந்திரத்தில் தந்திரம் தரித்திரமானது,
வசந்தத்தில் வந்தனம் நிரந்தரமானது
வதிந்திருந்தால் வாழ்வே நிம்மதியானது.

கன்னத்தில் கதப்புக்களே கனிமையானது.
வன்மத்தில் மதங்களே மலினமானது
துன்பத்தில் துயரமே தூணானது,
துகித்திருந்தால்,சகித்திருந்தால் சூன்யமானது.

வண்ணத்தில் எண்ணமே வருணமானது.
உள்ளத்தில் உருவமே உன்னதமானது,அது
திண்ணத்தில் திரண்டிருந்தால் திடமானது.
பள்ளத்தில் பருமமே பாதகமானது,பாளும்
வெள்ளத்தில் ஒளித்திருந்தால் ஓர்மமானது.

சாரளத்தில் தென்றல் நீவ நெருடலானது,அது
தெம்மாங்கு தேனிசைக்க தெவிட்டாதது.
புருவத்தில் பூத்திருக்கும் புன்னகைபோல அவை
பருவத்தில் பயிரானதே பசுமையானது.அது
மெருகற்று போயிருந்தால் அருகற்றது.

நீரடித்து நீரதுவோ விலகாதது,
வேரறுத்து மரம் வீழ்ந்தால் விழையாதது.அது
ஊரோடொத்து உலைக்கழித்தால் உயிராகுமா?யாவும்
உரிமையோடொத்து போரெடுத்தால் போகமாகுமே.இதை
தேரோடொத்து வடமிழுத்தால் வசமாகுமே,என்றும்
களமாகுமே வீசம் விசையாகுமே.

சன்னதத்தால் சனங்கள் சதி சாக்கண்டது.அது
சின்னத்தால் சித்தமகன்று சிறையானது.
உன்னதத்தில் உளமிருந்தால் உறுதியானது.வெறும்
உத்தகமே உறுத்திருந்தால் உலர்வானது,சித்த
வித்தகமும் விதைந்திருந்தால் வீறெய்துமே.
உரமிழக்கா .உறுதியையும் உரமுறத்துமே,உள்ளம் சீரெழுதி
ஊரெழுத மனம் சுரக்குமே புலர்வில் புதுப்பெய்துமே.

ஆக!
ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு,
அற்றதையெல்லாம் புறம் தள்ளு

செவ்வாய், 16 ஜூன், 2009

துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்


வழுதி!
யார் இவன்?
புழுதி வாரி புவன வலம் வரும்,
இந்த பச்சோந்தி!
வழு சுமக்கும் வகை ஏந்தி
வன்னியில் ஏதோ பகை களம் வாடி,
நோத்தது போலொரு தோற்றம் சூட்டி
தோத்ததாக தோரணம் தோண்டும் இந்த தோல்புலி.

வாரணங்கள் வதைய வதை களம் வலந்தானா?
காரணங்கள் கற்பிதமாக்கி கள நிலை இதுதனோ என
பூரணமாக ஓர் புதுக் கவி புனைகின்றான்.
வீபரணமாக வித,விதமாக வித்தகம் வீட்டுகின்றான்.
மாரணங்கள் மத,மதக்க மரித்ததாக மரணக்கதை கட்டுகின்றான்.
மாறாத வடுச்சுமந்து வலியதன் வாதை வதைக்க,
பாறாங் கல்லொடுத்து பவிசாக பரப்புகின்றான்.

பாவி!
இவன் இழைப்பதெல்லாம் இறையாண்மைக்கு ஒப்பாத
வெற்று ஒப்பாரிதானொன்று ஓடுதளத்தாலே ஓதுகின்றான்.
வேற்று முகவேடதாரி இவன்,
காற்றுக் கூட களமேற கனதியிழக்கும்
கரிகாலன் கட்டளை பீடத்தில் இவன்
பீறு நடை போட்டானா?
பீதி பிதற்றி பிழையாக பிறழுகின்றான்.பிதற்றுகின்றான்.

வாசி,அப்புறம் யோசி,
வழுதி இயற்றிய வழுக்கவி வழுக்கியே வலம் சாய்கின்றது.
எழுதி இவன் என்ன நோற்றான்? என எம் சனம் காய்கின்றது.
கனதியான சேதியேதும் களம் கலக்கவில்லை,
உழுதி எங்கள் உள்ளம் உராய்த்து
மெழுகி இவன் மெய்யெல்லாம் புதைக்க புலம் ஓர் கட்டுரை,
முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3
யார்?
எவர்?
களயதார்த்தம் கனமாகவே புலமும் புரியும்.
குரைப்பதையெல்லாம் எங்கள் குதம் நிறைக்க,நாமொன்றும்
நாதியற்ற, புரிந்துணர்வற்ற, போக்கற்றவர்களில்லை.

சுயபுத்தி.
எங்களின் சூத்திரம்.
ஆயின்,
கேள் புத்தி?
எந்த ஆதங்கத்தையும்,
அரங்கம் நிறைக்குமா அரைக்குடம்?
விபரத்தின் விரலிலே கோலோச்சிய,
வித்தகனை விரவி நிற்கும் நெஞ்சகமிது.
புத்தனின் மெத்தனைத்தையும் மத்தையாக்கும்,
அத்தனை சித்தகத்தையும் சிரசேற்றிய சீரஞ்சீவிகள்.

இத்துணைதான் இங்கு அரங்கமாகிய சதுரங்கமென
இணயத்தில் இவன் இணைத்த சூட்சுமங்களின் சிரசறிவோம்.
ஆதலால்,
அறிவகற்றி எங்களை நீ அகம் தடவ,
ஆக்கமிழக்கும் அகவையின் முகாந்திரத்தை,
மூசிப்பாய்.
விலகு வழுதியே உன் விழுதான வழு தழுவி.
விதைக்கும் உன் வீச்சின் விதமறிவோம்.இன்னமும்
நாகரீகமாய்த்தான் உன் நாவெரிக்கின்றேன்.
நாம் உலவும் எம் களம் நீ காரும் கணம் விலகு,

காத்திரமாய் உன் கண்ணுக்கும்,மெய்,வாய்,செவிக்கும்,
சேடம் இழுக்கும் உன் நாவிற்கும்,
உபத்திரம் மேலும் மேயவிடாமல்,
பத்திரமாய் நீ உன் பக்தியை,
உறவாடிக் கெடுக்கும் எழுத்தாணி
ராஜ ம(த)ந்திரத்தை உன் மேனி காக்க,
நீ,
மகிந்தாவின் மையத்தில் வேணிக் காக்க,
வேயும் இந்ந மாந்த புத்தியை அங்கு நீ அடைவு வை,
வையத்தில் அதுதான் உன் வசந்தத்தின்
வளை,
உன் வளமான காப்பு,
வசமான வாகை
எல்லாமே,
ஆரியனின் அந்தப்புரத்தில்.
தமிழினம் சாவிரித்த அவன்,
சொந்தப்புரத்தில்,
எதிரியை எகிற எரிப்போம், ஆயின்!
துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்.

காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்


நிமிர்த்தி,
நெஞ்சு நெகிழ,
ஆசுவாசிக்க மனம் தீண்டும்.
நினைவுகள்!
என்னை சுற்றி எவ்வளவோ?
காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்,
கனதியான மாற்றத்திற்குள் மாற்றம் முகாம் அமைக்கும்.
விஞ்ஞானத்தின்,சமூகத்தின்,கலாச்சாரத்தின்,
இன்னும்,இன்னும் எத்தனையோ,,,,,,,,,
பொத்தாம் பொதுவான,அன்றாட நிகழ்வுகளின்,
ஆச்சரியமான,
அதே சமயம் என் புல வாழ்வின்,
புனருத்தாரணங்களை கூட,
புசிக்க புலம் பூப்பின்றி,
சுகிக்க மனம் மார்க்கமின்றி!

என் தேசத்துறவுகளின்,
நீச வாழ்வுபற்றியே,
பரக்க,பரக்க மனம் மவ்வும்
ஏதாவது ஒரு விடிவை என்
உறவுகளின் ஏகாந்த வாழ்வுகள்
மைத்து களிக்க ஒரு மாயம் நடக்காதா?
அற்புதம் ஆக்கும் ஆரம் ஒன்று,
ஏதோ ஒரு வகையில்,
எப்படியோ ஓர்ம விதையில் ஔவியம் தடவாதா?

இப்படி,இப்படி எத்தனையோ வாதுக்களை
இதயம் கரிக்க சுமந்தபடி,
உறையும் நினைவுகளை,உறங்கா உண்மைகளை,
மறைக்க!
மனமோ!
மணம் அலரும் மலரின் மையம் இல்லயே.
செப்படி வித்தையொன்று செங்களம் விரிக்காதா?
அங்ஙனம் ஆரியனின் அவையெல்லாம் அழிக்காதா?
அப்படி ஓர் ஆடுதளம் அலை,அலையாய் அலைக்காதா?
அக்கணமே இடும்பர்களின் இதயங்களை ஊடுருவி,
எங்ஙனமும் இந்த இடுபகை வேதினியில்,
இனியொரு காலமும் இனவதையாக்காமல்
அத்தனையையும் அனல் வேரோடு அழித்து,
களைகூட விளையாத காரமண்ணாய்,
சிங்களவன் தேசமது சிதை வீழ்ந்து நொருங்காதா?
இங்ஙனமே என் எண்ணம் இரவுகளில் காணும் கனா?!.
என்றாவது ஒரு நாள்,,,,,,,,,,,
ஏக்கமும்,சுய பச்சாதபமுமாக,சுடர் விட்டு சுடர்வதை.

சுயங்களை வென்றெடுக்காவரை சூத்திரமாகாது
என்பதான,
சூத்திரத்தை சூரியதேவர்களின்றி சுரமமைக்கமுடியாது.
இந்த நியங்கள் மனதெரிக்கும் மையத்தால்,
மீண்டும் எனை ஆ சுவாசப்படுத்தி,
அசையும் அடுத்த,
விநாடிகளிற்குள் சராசரி மனிதனாவே
நானும் ஒருங்கி ஒடுங்கி,
அண்ணாந்து,முகடு நோக்கி,
என் ஆளுமை அகன்ற அகத்திரையின்,
மூடி திறக்க என் நித்திலர்களை
நிதம் எதிர்பார்க்கின்றேன்,

நீல வானம் வெண் பஞ்சு முகில்,
நிர்மலான நீர்நிலை,
ஆழ் கடலின் அமைதியான அலைகள்,
வேப்ப மர நிழல் வெது வெதுப்பான,
இதமான இளங்காற்று,
மூச்சு நிரப்பும் முகாந்திரம்,
முகிக்க தேமாங்கிசைக்கும் தென்னங் கீற்றசைவுகள்
மயிர் கூச்செறிந்து மயிலாட,
மாங்குயில் துணைதேட,
மல்லாக்காய் மனிதம் தன் ஈகத் தேசத்தில்
இறும்பெய்தி இருக்கும் நாள்,
நிர்மலாக நிதம் நியம் தேடும்,
ஊடும் தேதி சேதியா(க்)குமா?

இப்போ,
நடந்ததெதுவும் கனவில்லை,
ஆம்,
கானலும் இல்லை,
ஆயின்!
நடக்கப்போகும் நுதம்தான்,
இனி காரியனிற்கு கதமாக விடியும்,
ஒன்றும் கற்பனை சுரக்கும் சுரமில்லை,
சூனியமாக்கும் சூரமுமில்லை,
விழுதுகள் பற்றும் பாரம்,
தொழு கொம்பாய் தோள் தூக்கும் தோரணை,
ஆழியம் அகற்றும் இதுவரை விதைந்த,
அந்த ஆளுமைகளின் ஆளுமைகள் கைப்பற்றி,
அகிலத்தில் அரக்கர் அதம் அகற்றி
சில்லென்ற தென்றல் தன் தேசம் தீண்ட,,

விடுதலையின் விவேகங்களை,
விஞ்ஞானமும் விஞ்ச விழுதெறிந்த,
சோழன் செங்கூட்டுவனின்,
சேர பரம்பரை பகுத்த பாரியன்,
வகுத்த வாஞ்சையான்,
பகலவன் பிரபாவின் பிரம்மக் கரம்,
இயைந்து இலங்கும் இளைய இதமான,
சமூகத்தின் சாரங்கள் இயல்பான இலக்கணம்
ஈட்டி,

ஈழத்தின் இசைமீட்க
இனியர்களின் ஈடில்லா இலட்சியம்,
இகத்தில் வரையும் புதுப் பூம்புனல்,
புவி மீதொரு பூபாளமிசைக்கும்,.
இனிய தேமாங்காய் எங்கள்
தேசத்துடன் ஈழ நேயம் இயையும்.

புலத்தில் உள்ளதான புத்துணர்வு,
வலத்தில் வள்ளல் வயக்கும் வனப்பு,
களத்தில் கனம் கலக்கும் கலப்பு,
ஆளுமையின் ஆக்கிர காரம்
மௌனிப்பு அருக,

கருக் கொள்ளுமே,கயமை ஒழிப்பு,
காலத்தேவை கருதி கனிப்பு.விதம்
வேற்று நிறம் ஐக்கி ஐதாக்கும் ஆக்கிரமிப்பு மிதப்பு,
காற்று நாளை கைங்காரியமாய் காவி வரும்.
பிறப்பு ஈழ மேனி தழுவ.

ஞாயிறு, 14 ஜூன், 2009

விழித்திரு அன்றி விலை போவாய்.


இதனால் சாரம் கவளும் காதம் யாதெனில்,
சோரம் உட்புகுத்த சேதாரமாகாமல் உளப்பணியாற்ற உடன் புலனுறவுகள் உற்பவம் கவிழாமல் கனதி பொங்க களப்பணிக்கு கை கொடுக்கவேண்டிய தார்மீக பொறுப்பை பொதிக்காமல் பொறுமையாக அதே சமயம் விவேகமாக செயல்படவேண்டும்,

எங்கள் தலைமை உடைந்ததாக உசா,உலாவரும் ஊகங்களை குருத்தெடுத்து கருத்தெறிக்காமல் காரிய சிந்தை வேணி காலப்பணியை கச்சிதமாக,கட்டுமானம் குலையாமல் கவனம் கொள்ளவேண்டும்.முன்னைநாள் போராளிகள் என்ற முதுகெலும்பற்ற மார்க்கங்களை மாதிரி உருக்கொள்வோரையும் கவனமாக கருத்திற் கொண்டு காரணப் புற நிலைகளையும் கருத்தில் நுகர்ந்து உறவாடிக்கொடுக்கும் உன்மத்தர்களையும் உள்ளகம் கொய்க.

நாம் ஒரு சுய பரிசோதனையை காலக் கிரமம் சார்ந்து சுய சூட்சுமம் செய்யவேண்டும்,எதுவாகிலும் இறுதிப்போரின் அறுதியை,அது தழுவிய அகத்தை மையப்படுத்தியே வடம் இழுக்கிவேண்டிய புறநிலைப யதார்த்தம் உள்ளது.ஒவ்வொருத்தரும் இங்கு இணையத்தளத்தில் தங்களின் உருவகத்திற்கு கற்பனையெனும் காலத்திற்கு ஒவ்வாத ஊகங்களை உருமாற்றி தான் ஏதோ களத்தில் இருந்து கடைசிவரை கனம் கொண்டதாக ஏதேதோ தங்களின் வசதிக்கேற்றமாதிரி கயிறுவிட்டு மனம் வாடும் எங்களை நோக்கி கயிறு திரித்து தமிழீழ தேசியத்தை புறம் பாடும்,அல்லது எல்லாமே முடிந்துவிட்டது போலவும்,தேசியத் தலைமையும் லெப்டின்ட் கேணல் தமிழ்ச்செல்வனும் தேசத்தின் குரல் அன்ரன் பாலா அண்ணனும் ஏதோ மாபெரும் வரலாற்று தவறை செய்துவிட்டதாகவும் வரம்பற்ற வக்கணையற்ற எந்தவிதமான மனித நாகரீகத்திற்கும் அப்பாற்பட்ட பொய் புனைகதைகளை களம் வலவிட்டு துரோகத்தின் தோரணைகளை நிதம் போலியாக இங்கு இணையத்தளங்களில் வெறும் பொயப்புரட்டல்களை ஏந்தியவண்ணம் எதிரியின் வலைப்பின்னல்களிற்குள் தாங்கள் வீழ்ந்துவிட்டதை சொல்லாமல் சொல்கின்ற வித்தகத்தை விதம் கொள்கின்றனர்.

அதாவது தேசியத் தலைவர் ஒன்றும் உலக ஒழுங்கை தன் சிந்தைக்குள் சொருக தவறவிட்டதுபோலவும் அதனால்தான் இந்த தோல்வி என்பதுபோலவும் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவர்கள் சரியான தகவலை தேசியத் தலையையுடன் தர்க்கிக்கவில்லை என்பதான ஒரு சூன்னியமான சூத்திரத்தை தாங்கள் ஏதோ எல்லாம் வல்ல தேசியப்பணிகளால் தேசமீட்புப்பணியை ஆற்றியதாகவும் தேசியத் தலைமை தங்களின் தார்மீகமான செயலாக்கங்களை செவிமடுக்காததாகவும் இது சார்ந்த அர்த்தமற்ற ஆக்கங்களை நாள்தோறும் வெளிவிடுவதன் மூலம் தமிழீழதேசியத்தை நேசிக்கும் மக்கள் எல்லாரையும் மாந்தைகளாக்கும் முட்டாள்தனத்தை மையம் நாட்டி விசவிதை விதைக்கும் அநாகரீக செயலில் ஈடுபாடுகாட்டி எங்களின் விடுதலை வேட்கையின் இதயத்தில் சிலுவை அறைய சிரம் கொள்வதை புலம் பெயர் உறவுகள் வெகு சிரத்தையாக உளம் கொளவேண்டும்.
இந்தவகையில் தன்னை முன்னைநாள் போராளியென கூறிக்கொள்ளும் சாத்திரி எனப்படுபவர் கூறும் தலையங்கம்
வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா,
இதில் இவர் கூறும் மகத்தான எதிர்பார்ப்பு
கீழ்வருமாறு அமைகின்றது.
தலைவன் சாற்றிலைட் மூலம் தன் இருப்பை இனம் காட்டியிருக்கலாமாம்.
எப்படியுள்ளது?
இவரெல்லாம் போராளியா?

புறநிலை யதார்த்தங்களை புரிந்து கொள்ளாத அல்லது கிரகிக்க முடியாத முட்டாள்தனத்தின் முகை என்பது இதிலிருந்தே புரிகின்றதல்லவா?
மேலும் எங்கள் தேசியத் தலைமையை களமகற்ற இப்படியானவர்கள் தங்கள் கற்பனை மூலம் தான் முனைவதும் மேலும் தலைவனை இயக்கம் இழந்துவிட்டது என்றே இவனது ஆக்கம் ஈனத்தனம் சுமந்து வலம் வர எத்தனிக்கின்றது.

கள்ளன், காவலன் விளையாட்டல்ல!
கண்டுபிடி ஒளிக்கிறேன் என்பதான சிறுபிள்ளைத்தனமான சீவியம் இல்லை.இது என்பதைக்கூட புரியாத இவனெல்லாம் முன்னைநாள் போராளியாம்.எந்த இயக்கம் என்பது விரைவில் நியம் காட்டும்.

கடந்த காலங்களில் எத்தனை தரம் எதிரியானவன் எங்கள் தலைமையை
தன் நிலைக்கேற்றவாறு தரம் கொண்டான் என்ற வரலாற்றை வகிக்காத,அல்லது ஊகிக்காத ஊனர்கள் அல்ல. நாம் ஈழத்தலைவனின் தோள் கொடுக்கும் உண்மைத் தொழுவர்கள் நாம்.யாருடைய ரட்சிப்பையும் ரகம் கொள்ளா சிந்தையர்கள்.
ஆகவே இப்படியான முகவர்களை, ஈனர்களை, இனம் கண்டு இவர்களை இடம் கலைப்போம்.விழித்திரு அன்றி விலைபோவாய்.

மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்


ஆகுதியாயினவாம் ஆர்த்த தமிழின விதப்பு,
ஆரியன் கொள்கின்றானாம் ஆதலால் மிதப்பு,
வேரோடொழிந்து போகினுமோ?
அகிலம் புகழ்,ஆரத்திறள்,ஆய்வகற்றும் ஆரம்பு,
வேலுப்பிள்ளை பிறப்பு,
ஆரோடடித்து புலம்புவது இந்த பிழைப்பு?

சீரோடு,வெகு சிறப்போடு,
ஊரோடு பெரு மிதத்தோடு,
பாரோடு பெரும் பாரம் பாரியத்தோடு,
வேரோடு பெருங்கிளையோடு,ஊடான விழுதோடு,
வியாபித்த மாபெரும் விதிப்புக்களின் வினைப்பு.

தியாகங்களின் தீர்ப்போடு,
வியாபங்களின் வியப்போடு,
நியாயங்களின் நித்தியத்தோடு,
உபாயங்களின் உத்திரத்தோடு,
உள்வாங்கிய மாபெரும் கட்டுமானத்தோடு,
மையம் விசாலித்த வைராக்கியம்!

பயங்கரவாதம் என்ற பரப்புரையால்,
வயங்கொண்ட வாகிப்போடு,
லயங்கள் லாபிக்க விசாலித்த விதப்புரையின்
மொளனமான மனிதாபிமானங்களின் மதப்பினிலே,
மருக் கருத்த மற்ற அயலாரின் ஆதரவுத் தளத்தோடு,
அதனூடான அங்கீகாரத்தோடு,

மாபெரும்!?
மேதினியில்,
மேகங்கொள்ள மெட்டுக்களோடு,அதனூடான,
பொஸ்பரசென்னும் பெரும் அழிவுக் கழி(ரு)வுகளோடு,
கொத்தாணிக்குண்டோடு கந்தகக் கனிமமோடு,
களமெரித்த ஆரியக் கும்பல்,

எதை சாதித்தான்?
எங்கள் இனசனமெல்லாம் சொந்த பந்தமெல்லாம்,
ஒரு விதசோர்வுமின்றி மனிதபிமானமகற்றி மைதிட்டு அழித்தான்,
எரித்தான்,வன்புணர்வோடு வலியபகைக் களம் மேய்ந்தான்,
எஞ்சியவரை எந்திரக் கைதியாக்கினான்,சுரம் சுதைத்தான்,
காலம் உள்ளவரை காரக் கழுகுமரமேற்றினான்.

ஆயின் இவன் கற்றது?
காலக் கரம் நீட்டியது என்ன?
தீட்டியதிட்டத்தின் சாரம் மொய்ந்தானா?
இல்லையே,
சாரும் எங்களின சனம் வாழ்ந்த,
வதிந்த இடமெல்லாம் இடரேற்றியதைத்தவிர,
ஈந்த ஈகம் என்ன?

முடிசூடா தமிழின விடுதலை குரலழித்தானா?
கூடிக்குரலேந்திய குதம் அழித்தானா?
மாந்த மனிதாபிமானமாற்றிய மையம் மதம்கொள அழித்தானா?
எதை அழித்தான்?,
எங்கள் இனம் தவிர,எங்கள் இனம் சுவைத்த சூட்சுமம் தவிர,
ஆங்காங்கே ஆயிலயமாய் ஆர்த்தெரியும்,
விடுதலை வித்தழித்தானா?

சங்கம் அமைத்து சமைத்த தமிழ்,
வங்கம் முதல் இமயம்வரை ஈர்த்தெடுத்த ஈகைத் தமிழ்,
தங்ககம் தரணி சூழ சமைந்த தமிழ்,எந்த
அங்கத நாட்டு அரக்கர்களாலும் ஆய்வறிந்து,
களமகற்றினாலும்,
தளமகலா தைரியத்தின் தாற்பாரியத்தை,

எந்த வெற்றிச் சங்கூதி எவனழிப்பான்?
ஈய்விரக்கமில்லா பேரினவாதி,புத்தனின் புயமறியாப் பாவிகள்,
அகிலத்தின் அரவாணிகள்,
போர்த்தர்மம் இம்மியளவேனும் இதயம் சுரவா சூனியர்கள்,
ஆரமிட்ட அழிவுகளின் ஆத்மியம் அரவணைக்க,
தங்கத் தமிழன் தார்மீகச்,
சூரியனை சுட்டதாக சுரமிறிக்க,
தமிழ்ச் சுற்றங்களை,
சூனியமாக்கிய துரோகச் சூனியமே!

பந்து இப்போது உங்களின் பரம பாதத்திற்குள்ளென,
விந்தகம் வகைக்கும் விதப்பேற்றிகளே,
விடியும் தேசம் புலர வித்தகர்கள் விசைமீட்டி,
திசையெல்லாம் திகழ தினைவேற்றி திரும்புவார்கள்,
விசையும் உன் வினைகளற்ற,

பூப்புனல் புடைசூற்ற புதிய புதிர்களாய்,
விடியும் கதிர்களாய் கனலேற்றி கனதியாய்,
காலத் திகழ்வின் கற்பகத் தலைவன்,
ஒப்பற்ற ஒர்மத்தின் ஒப்பீட்னிற்குள்
ஔவியம் தடவும் அகமருத்தான்,
மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்,
ஒவ்வும் ஒவ்வொன்றும் ஓரணியாகி,

சனி, 13 ஜூன், 2009

எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,


துயர வங்கிகள் என்றும் துயர் தீர்க்காது,
வியர் வங்கியே விகல்பம் வீற்றும்,
அயர் வங்கி அகலவே ஆக்கம் ஆகர்சிக்கும்,
பெயர் வங்கி ஓங்கவே பேணும் பலம் வேணும்.

மயிலொன்று அகன்றால் மாளுமாம் கவரிமான்,
துணையொன்று இழந்தால் துறக்குமாம் மாடப்புறா,
இணையொன்று இயக்கவே இயங்குமாம் ஈனப்பிறவி,நாம்
எத்தனையிழந்தாலும் ஏகித்திருத்தல் தகுமோ?

மானல்ல,மயங்கும் பறவைக் கூட்டமுமல்ல,
மானுடம் மகித்த மா மனிதர்கள்,
விழ,விழ வீரியம் சூட்டும் வீரியர்கள்,விவேகிகள்,
சிதையலாமா?சிதம்பலாமா? உற்றதெல்லாம்
அற்றாலும்,அகமாய் அங்கீகரித்து ஆய்வெடுத்து,ஆங்காரமாய்
ஓங்காராம் ஒலிக்கும் ஓதியர்கள்,வேதியர்கள்.

ஓயலாமா?ஒதுங்கலாமா?மாயலாமா?மயங்கலாமா?
பாயலாம் என பாய்விரிப்போம்,ஓய்வின்றியே ஓதிய அங்கம்,
ஓரிப்போம்.
தீயெலாம் திகைந்து தீரம் தீட்டிய தீந்தமிழ் தீர
வழி வந்த வல்லவர்கள் பாதை வயமிழக்கலாமா?
விதி விதந்து விரக்தி விரவி மொய்யலாமா?

பாதி வழி வந்ததாக பழி சூட்டலாமா?
மீதி வழியில் மிதக்க விட்டதாக மிதம் கேட்கலாமா?
ஊதி,ஊதி பகை வீழ்த்த நாம் ஒன்றும் ஊனர்களில்லை,
வேதினியில் எங்கள் வேர்க்காத பலம் மீட்போம்,பாரினிலே
பார்ப்பன பகை வீழ்த்தி பாரம் சுமப்போம்,

பரம்பரையான எம் பரம பதம் நீட்டி,
வரம்பெழுதி வரும் நாள் வகை செய்வோம்,அதுவரை
பாரமெல்லாம் பரம் பொருளே என்று வேற்று முகம்
தரிக்காமல் எங்கள் வேர் மொள்ளுவோம்,திருநாள் வர
ஊர் கூடி தேர் இழுப்போம்,வடம்பற்றி இப்போ வன்னிக்கு உதவுவோம்,
வகையான நாள் சேர எங்கள் வளம் மீட்போம்.

எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
அங்ஙனம் அவர்கள் சுவாசிக்க சூட்டுவோம்,
இங்ஙனம் எங்கள் அஞ்ஞாதவாசமும் அகமகற்றும்,
கங்கணம் கனலும் உறங்கு தளம் உரம் ஊட்ட,
போர்முகம் கொள்ளும் வியூகம் விதந்துரைக்கா வேதம் சுரக்க.

அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.


லாவண்யம் சிலாபிக்க லாவகம் வேண்டும்,
வியாபிக்கும் விறல் இருந்தால் விற்பனங்கள்,
களம் திறக்கும்,
தளம் கொள்ளும் தானங்கள் ரூபம் கொழிக்கும்,
வினயங்கள் விடங் கொள்ள விகிதங்களும் முகம் கொள்ளும்,

கொள்ளுகின்ற விகிதங்கள் ஊனங்களை உடன் திறக்கும்,
அள்ளுகின்ற அவதியிலே அவசரங்கள் முகம் தெளிக்கும்,
மொள்ளுகின்ற மோகத்திலே மேகங்களே அகம் தெறிக்கும்,
கிள்ளுகின்ற திடனதனால் கிறக்கங்களே நிதம் தறிக்கும்,

தறிக்கின்ற நிதமதனால் தரமெல்லாம் தடம் புரளும்,
முறிக்கின்ற முகம் தானங்கு முகாரிக்கு முகாம் அமைக்கும்,
பறிக்கின்ற பதமதுவே பதவிகளை பதம் பார்க்கும்,
நெறிக்கின்ற நெறியதனால் நேயமெல்லாம் நெகிழ் நொதுக்கும்,

நொதுக்கின்ற நெகிழ்வதனால் நோயங்கே நுகம் சுரக்கும்,
மதுக்கிண்ணம் மனம் நாட மனமதுவே மடம் நிரப்பும்,
நொதிக்கின்ற நோவதுவே நோன்பாக மனம் அறுக்கும்,
வதிக்கின்ற வலமகன்று வதைமுகமே வரம் வறட்டும்.

வறட்டுகின்ற வரமதுவே வாழ்வதனை வதம் கொள்ளும்,
திறக்கின்ற மனமகன்று பாழ்வதனை பாரமெடுக்கும்,
உறக்கின்ற உளமகன்று உயர்வங்கு கீழிறங்கும்,
மறக்கின்ற மனம் வேண்டி மதியதுவே இமை மூடும்,

மூடுகின்ற இமையதனால் முடிவென்றே மூப்பெய்தும்,
பாடுகின்ற பதம் மறந்து பரம பதம் பாவியாகும்,
ஊடிநின்ற உறவெல்லாம் உளமகன்று மையம் நீங்கும்,
வாடி நிற்கும் வசமெல்லாம் வாசமகன்று வரைபு வசம்பும்.

வசம்பி போகும் வரைபெல்லாம் வந்தகன்ற காலம் மீட்கும்,
கசங்கி அது காய்ந்ததாக கற்பனையே கரம் குதறும்,
நிசங்கள் அகன்ற கடந்த காலம் கனிவகற்றி காலம் உதறும்,
உசாத்தி நின்ற உறுதுணையோ ஒதுங்கி நின்றே உன் வசம் பறிக்கும்.

பறிக்கும் வசம் வைரியாய் வாழ்வெல்லாம் வாசல் தெளிக்கும்,
நெறிக்கும் நேயம் உதிர்ந்ததாக காலம் கடந்து ஞானம் தோன்றும்,
படித்து,படித்து படித்த பாடம் பல்லவியை பதம் பார்க்கும்,
பாவி உன் பாதகத்தால் பதமிழந்த பலம் கேட்கும்.

ஆதலால்!
அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.

வியாழன், 11 ஜூன், 2009

விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?


யாருடையோம்!
எங்கள் யாப்புரைப்போம்?
வேருடையோம் வெகு கால ஊருடையோம்,உறவுடையோம்,
பாரம் பாரிய நாடுடையோம்,பண்பிலே பாசமுடையோம்,
வீடுடையோம் வித்தக வீரமுடையோம்.

கல்வியில் செல்வமுடையோம்,
வேள்வியில் வேட்கையுடையோம்,
பள்ளியில் பாரமுடையோம்,யாக்கும்,
வேளாண்மை வேண்மியமுடையோம்,
பாழாண்மையற்ற பாண்புடையோம்.

காடுடையோம்,கடலுடையோம்,கற்பக நிலமுடையோம்,
நீருடையோம் நிழல் நிறத்த நியமுடையோம்,
பாடுடையோம்,பரணியாற்றும் பாங்குடையோம்,
மேடுடைய மேம்புடையோம் மேவி நின்ற தோளுடையோம்,
ஊடுடையா உறனுடையோம் உற்றதெல்லாம் உருத்துடையோம்,
காத்திரமான காவமலுடையோம் கானகத்திலும்,
கானம்,
இசைக்கும் காத்திரருடையோம்.

இத்தனை உத்தரங்களையும்,
பத்திரமாய் பதித்திருந்த பகலவனுடையோம்,
எத்தனை எட்டப்பர்களுடையோம் என்பதிலே,
அத்தனையையும் ஆரிய வசமிழந்தோம்,ஆகுதியாய்
வீழ்ந்துடைந்தோம்,
நுண்ணிய நிலைப்பின்னலுடையோம்,
நுகர்வதற்கான நுணுக்கம் தரித்தோம்,
ஆயினும் உறவாடிக் கெடுத்த உயரிய,
ராசதந்திரக் கழுகுகளுடையதால்,
கருத்து முதல் காவிய செம்மையான சேந்தல்களெல்லாம்,
விருத்து வீசமாய்ந்து விழலான வீதம் தரித்தோம்.

உருத்திருந்து உரமான ஊர் முதல் உளவளம் வரை,
கருத்திருந்தே நாம் காத்திரமாய் தோற்றிருந்தோம்,
நேற்றிருந்தோம்,இன்றிருப்போமா?என்ற நிலையெடுத்தே
வீற்றிருந்த இத்தனை வீதங்களும் விதையறுத்த,
விழுமியம் தாங்கும் விதமாக விரைப்புற்றோம்,
விகைப்போமா?
வீரியம் சுரப்போமா?அன்றி
விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
யார் காக்க எங்கள் அரியாசனம்?
யாக்கும் நிலை எவர் தகைப்பார்?

மேதினியே!
ஈழத் தமிழர் ஈகை வளம் இயைப்பாயா?அஃதன்றி
ஈன இனமென்றே இகமகற்றி இழைப்பாயா?
மரிக்கும் இந்த மகோன்னதமான ஈழவரை,
வரைபொன்று வரைந்தெடுத்து,
சிரிக்கும் சிலம்பேற்றி யுகம் தழுவ நெய்வாயா?இன்றி
எங்கள் தங்ககங்களை தாரை வார்க்க,
தகம் நீ தரிப்பாயா?

வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?


நிலைத்தெடுக்க நிரையிருந்த நித்தியம், இன்று
கலைந்தாய்ந்த காவியமாய் கச்சிதம் கலைந்து போயினவோ?
வலைந்தெடுத்து வகையறுத்து வரைபு மீறி வற்றியதாய்,
புலமடைத்து புயமகன்று புவனமே புறம் காட்ட,
வகையடைத்து நிற்பதுவே வையகத்தில் நிலையாமோ?

பரபரத்து போன நெஞ்சம் பசுமை இனி வேணுமோ?
கரகரத்துபோன குரல் காஞ்சீரம் இசைக்குமோ?
வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
கயலிழந்த கடலெல்லாம் கானமினி இசைக்குமோ?
செயலிழந்த செவ்வீரம் இழைந்து சேய் வளம் சேருமோ?

மரமரத்து போனதய்யா மானம் அது மாய்ந்த்ததய்யா,
வெலவெலத்து போக உள்ளம் வெம்பியே உளம் காய்ந்த்ததய்யா,
பொலபொலத்து போனதுவாய் போகமெல்லாம் பொசிந்த்ததய்யா,
போக்கிடமற்ற இனம் பொறியினுள்ளே பொதிந்த்ததய்யா,
வக்கற்ற வகையினமாய் வதையகத்தில் வதைந்த்ததய்யா.

சீலம் நிறை ஞாலமிங்கு நாம்,
சிறப்பறுத்து சீந்துவதை,
சீரிய நிலை களைந்து சிரம்
மரத்து சிதறுவதை,
ஆற்றும் திறனங்கு ஆய்விழந்து அகலுவதை,
தேற்றும் நிலையிழந்தோம் தேடும் நிலை நாம் இழந்தோம்.
வாட்டுகின்ற வதைகளெல்லாம் வார்த்தெடுத்து வாஞ்சையுடன்,
ஊட்டுகின்ற உளம் வேண்டி உலகவலம் ஊடுகின்றோம்.

மாற்று விதியுரைப் போரே,
தோற்று விதை விதைப்பீரோ?
காற்றும் எமை காலனாக கருத்துக்கள் காட்டுவதை,
போற்றும் புவி போதகரே புலன் கொளமாட்டீரோ?
பொதுவிதி இதுதானென்றே புலம் மறைத்து போவீரோ?

நல் நம்பிக்கை ஊட்டுவதாய் நாவில் ஒன்றுரைப்பீரே,
வல் வளைப்பு வதை முகாமை முகம் கொளமாட்டீரோ?
சொல்லில் வீரம் காட்டா சோதியரை காண்பீரா?
சொதம்பி வாழும் வாழ்வினையை செருக்கியடக்க சொல்வீரா?
சோகம் பொய்த்து போகவல்ல சேதிகொண்டு வருவீரா?

சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.


இலவம் காத்த கிளியாய் இருப்பதை மாற்று,
புலவும் பூத்த கலியை மாற்று,
அலவும் ஆய்த்த அரவாணியாய் அகப்பார்,
நிலவும் நீட்டும் நீட்சிப்பை நிமிர்த்தி,
உலவும் உரச ஊகம் உறுத்து,
பலதும் பரப்பும் பலப்பை பரத்து.

உயரம் உகுத்த உணர்வை உய்த்து,
துயரம் தூக்கும் துக்கிப்பை துவர்த்து,
வயிரம் வகுத்த வகுப்பை வரித்து,
உருகும் உளவை உயர்ப்பாய் உயிர்ப்பாய்.
கருகும் கணிப்பை கசக்கி கனித்து.

பருகும் பாலில் பாசம் ஊட்டு
பருப்பும் சோறும் பந்தம் காட்டும்,
நெருப்பை நெகிழ்த்தி விருப்பை யாண்டு,
கருப்பை பூண்ட கலத்தை யாசி,
விருப்பில் மூண்டு விதப்பை விருத்தி.

கலப்பை இல்லா உழவும் உரட்டும்,
சலப்பை இல்லா சாத்வீகம் சரட்டும்,
நினைப்பை ஏந்தும் நிபுணம் நீந்தும்,
வினைப்பை ஈய்ந்தால் விதியே விதியும்.
சுனைப்பு இல்லா சுகந்தம் சுருக்கி.

ஆய்ந்த ஆய்வு அகத்தல் அறிவு,
மாய்ந்த மாய்வு மதித்தல் மதிப்பு,
சாய்ந்தால் சாயும் சர்வம் சரிக்கும்,
பாய்ந்தால் பதியும் பகையும் பணிக்கும்,
ஓய்ந்தால்,ஒளிந்தால்,ஒலியும் ஓயும்.

வீழ்ந்தால்,விதிந்தால்,முகிழ்ந்தால் முதிர்வு.
ஒழுங்கால்,உதித்தால் உராய்ந்தால் உயர்வு,
மகிழ்வாய் மகித்தால் மனமே மனைப்பு.
மகிந்தா மதித்தால் மனமே மறைப்பு,
ஈன,மானதாகவே ஈழ நினைவே ஈக்காடு.

சூரியம் சுரந்தால் சூனியம் சுரிக்கும்,
வீரியம் விரித்தால் விடையே வினைக்கும்,
காரியம் காய்க்க கடையே திறக்கும்,
மாரீசமெல்லாம் மயங்கி மரிக்கும்.
சாரீரமெல்லாம் சகமாய் சுகிக்கும்.

புதன், 10 ஜூன், 2009

பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..


தித்திக்கும் தினவெடு தினமெல்லாம் திரவமிடு,
எத்திக்கும் இனமெடு ஏந்தி நிற்க விறலெடு,
சித்திக்கும் சினமெடு சிந்தையெல்லாம் சிந்தவிடு,
முத்திக்கும் முகிழ விடு முத்தமெல்லாம் முழங்கவிடு,
சத்திக்கே சன்னமிடு வீர சந்நதியே சாதகமிடு.

ஈழ!
பக்திக்கே வழிவிடு பாரமெல்லாம் பதியவிடு,
உத்திக்கும் ஊழியமாய் உறவெல்லாம் உறையவிடு,
விக்கிக்கும் விரையவிடு விதையெல்லாம் விழையவிடு,
கர்ச்சிக்கும் கனையவிடு காலமாக்கி கனியவிடு,
மூர்ச்சிக்கும் முழையமதை மூசியே மூர்க்கவிடு,
முயற்சியே திருவினையாய் மூளையாய் முனைந்துவிடு.

வேழம் வெகிழும் வேளை வேல் கொண்டு பாய்ச்சிடு,
வாழும் வகையே எண்ணி வகையெல்லாம் பதியமிடு,
பாழும் பகையே சாய்க்க பலமெல்லாம் பதித்துவிடு,
சூழும் சுயங் களகற்றி சுகந்தமாய் சுரமெடு
ஈழ மலர்வே இலங்க இகமெல்லாம் இயங்கிடு,

ஆழி மீதில் அலுங்கும் கால கோளதனை,
ஊழி உறுத்து உலங்க வேளை கொள்வனவை,
பாளி மொழியான் பாரில் வேர்த்த வெப்பனவை,
காளி கையகப்படுத்திய வேலெறிந்தே வேட்கை தவிர்,
ஊழியம் ஆற்றும் உவப்பை உறுத்தெறி,
உலகம் புரட்டும் ஆரியக்கூத்தானின் அகந்தை அறுத்தெறி,

மீதி,
வெற்றியாக உன் வெப்பகம் ஆற்றும்.
காத்திரமான கந்தகம் நின் வாசல் தெளிக்கும்,
சூத்திரமெல்லாம் உன் வாசல் நழுவும்.
நேத்திரம் கொள்,
நிமிர்ந்தெழுந்து உபாத்தியான்யம் உரை,
உறுத்திரு,
நெறித்திரு,
கறுத்திருக்கும் காலம் கலயம் கரைக்கும்.
வெறுத்திருந்ததெல்லாம் வேணியம் பூணும்.வேதினியில்
வேய்ந்த பகை ஓய்ந்தே சாயும்.

பார்!
பகலாய் பார்த்திபன் பதித்த பாயிரம்.
பரவசம் பகுக்க ஊர்திரும்பும்
உன் உறவு ஞாலத்தில் ஞாயம் கவ்வும்.
ஞாயிறான ஞால திங்களவனின் திடம் சாற்றி.

அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?


சமூகம் யாதெனில் சனம் சார்ந்தது,அதன்இனம் சேர்ந்தது,ஊடக மொழி உளர்வது.ஒரு சகம் சாரும் சாரம்,அதன் கலை,கலாச்சார,பண்பாடு,
ஊடி ஆர்ந்திருப்பது,கோலாகலம்,களியாட்டம்,விருந்துபசாரம்,மேலும்
இதனோடு ஊடும் அத்தனையும் யாக்கும் அகமகிழ்வு,
அதன் அங்கமான சமூகத்தின் சாக்காட்டில்,இங்கு புலவாழ்வில் இந்த இனசனம் ஆலயம் அதன் லயம் தேர், இன்னபிற களியாட்டங்கள்,
இத்தனையையும்,தற்போது எம் இனம் சார்ந்த சுயம்,அதன்,மானம்,இன அழிப்பின் ஈரம்,அங்குசிந்தியகுருதியின்வெட்கை,அவமானம்,கருவழிப்பு,
வன்புணர்வுகள்,தொடரும் தமிழிவனழிப்பு அங்கு நாளும்,பொழுதும் நறைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில் புலம் பெயர் சமூகம் வன்னி மக்களின் வேதனையின் சாரத்தை போக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதை ஒத்தி வைத்துவிட்டு,அல்லது புறந்தள்ளிவிட்டு தான் படைத்த தாண்டவ தெய்வங்களையே தன்னைக்காப்பாற்ற வேண்டி அடி தொழும் முட்டாள் தனத்தை என்னென்பது,தானே களிமண்ணை எடுத்து பிள்ளையாரோ,ஏதோ ஒரு உருவத்தை உருவாக்கி விட்டு இன்று அந்த இல்லாத இவர்கள் கூறும் தெய்வங்களை பாதுகாக்க எவ்வளவு பணத்தை விரயம் செய்கின்றார்கள் என்பதை எண்ணும் போது எப்போ இவர்கள் விழிப்புணர்வு எனும் வீதத்திற்குள் விழைவார்களோ புரியவில்லை.

இந்த மாந்தர்கள் இப்படி அர்த்தமற்ற ரீதியில் பணத்தை வீண்டிப்பதை விட்டு இந்த பணத்தை அங்கு வாழும் எம் இனவாழ்விற்கு புனர்வாழ்விற்கு உதவினால் இதை இவர்களின் தேசியபாசையில் கூறினால் புண்ணியமாகும்,அத்துடன் எவ்வளவு நேரத்தையும்,காலத்தையும் விரயம் செய்கின்றார்கள் என்பதை எந்த கோணத்தில் கோலம் கொள்வது,

ஒரு சமூகத்தை நிர்ணயம் செய்வது அந்த இனம் தன் உணர்வுகளையும்,சிந்தனையையும்,நிலைப்பாட்டையும்,தன் இனமான சக மனிதன் உணர்ந்து கொள்ளகால பரிணமமாக உருவானதுதுதான் மொழியாகும். ஆகவே ஒரு இனத்தின்மூலக்கூறு மொழிதான் என்பதே யதார்த்தமாகும்,அஃதன்றி மதத்தை வைத்து மானிடம் உய்வுகொள்வதில்லை,இந்த கடைசி நேர முள்ளியவளையில் இடம் பெற்ற இனவழிப்பின் மூலமாவது இந்தமானிடங்கள் உணரவில்லையே.அந்த இறுதிக்கணத்தில் வன்னிமக்கள் வேண்டாத வேண்டுதாலா?இற்றைவரை இந்த மானிடங்கள் ஆராதித்த,ஆரோகணித்த,அல்லும்,பகலும் தேவாரமோ,திருவாசகமோ,இன்ன பிற தோத்திரங்களை ஆகித்து,யாசித்த பொன்னான வேளைகளில் போராட்டத்திற்கு உதவியிருந்தால் இன்று நிலைமையே வேறு,

இவர்கள் இராணுவத்தால் இறப்பெய்தாலும் இயக்கத்தில் இணைந்து போராடி ஒன்றில் வீரச்சாவு அன்றே வெற்றிச் சங்கு என்ற நிலைக்குள் தங்களை ஐக்கியப்படுத்தமுன்வந்திருந்தால் இகம் வாழும் வரை வாழ்ந்திருப்பார்கள்.ஆனால் இன்றோ வன்னிமக்களின் வதை நிலையை புலவாழ்வு ஓர் முன்னுதாரமாக கைக்கொள்ளவேண்டும்,ஆக இவ்வளவு பிரார்த்தனையும் கைகொடுக்காத நிகழ்கால நிர்தாட்சண்ணியங்களையும் மனங்கொண்டு ஆலயம்,ஆதாரம்,மதம்,இப்படியான அர்த்தமற்ற நிலைப்பாடுகளை ஓரளவேனும் தவிர்த்து மானிடம்,தமிழினம் என்ற ஓர் கட்டுமானத்தை தங்களின் முறையான ஒற்றுமையான ஓர் அணியில் திரண்டு தங்களின் இனவிடுதலைக்கான சாத்தியமான போராட்டங்களையோ அன்றி அங்கு வதையும் மக்களை எப்படி காப்பாற்றலாம்,அல்லது ஆதார்சமான உதவிகளை இவர்கள் வசமாக்கலாம் அதற்கு என்ன வகையான மார்க்கங்களை முன்னெடுக்கலாம் என்பதான ஒரு சாத்தியமான வழி முறைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே யதார்த்தமாகும்.

நோய் வந்தால் மருந்துதான் உபயோகிக்க வேண்டும்.அதைவிட்டு ஆண்டவனே காப்பாற்று என வேண்டுவது எப்படி யதார்த்மற்றதோ அதேபோல்தான்,நோயும் மருந்தும் தெரிந்தவர்கள் நேயமான மார்க்கத்தையே நுதம் கொள்வார்கள்,கொள்ளவும் வேண்டும்.தனக்கு பசியென்றால் தான் தான் உணவு உட்கொள்ளவேண்டும்.சும்மாவா சொல்வார்கள் தன்கு வந்தால் புரியும் தலையிடியும்,காய்ச்சலும் என்று.ஆக சாராம்சம் இவ்வளவுதான்,தன் சமூகத்தின் வேதனையிலும்,துன்பத்திலும் கைகொடுக்க முடியாதவர்கள் எப்படி ஒரு சாத்வீகமான சமூக இயங்கு தளத்தில் சாசுவதமாக இலங்கமுடியும்.மீண்டும் சொல்லவந்ததையே வலியுறுத்த சமூகத்தின் இன்பதுன்பங்களில் ஒன்றில் ஆத்மார்த்தமாக ஈடுபாடுகாட்டுங்கள் அதை செயல்முறைப்படுத்துங்கள்.அன்றி ஒரேயடியாக ஒதுங்கி இருங்கள்,மேலும் ஈடுபாட்டுடன் இயங்கும் சகமானவர்களை இப்படியான கலாச்சாரம்,பண்பாடு என்று அகச்சலவை செய்வதை விட்டு நடைமுறைகளை உள்வாங்குங்கள்,

நீ படைத்த அதாவது உன் முன்னோர்களின் முட்டாள்தனமான படைப்பான எந்த ஆண்டானும் உன் துயர் தீர்க்க அருளமாட்டான்..மேலும் அப்படியொன்றும் இந்த பிரபஞ்சத்தில் ஒன்றும் அதிசயம் நடந்ததாக சரிதமே இல்லை வேணுமென்றால் அங்கு இப்படியாம்,அங்கு அதிசயமாம் என விசமம் பண்ணமுடியுமே தவிர உண்மைநிலை இப்படியாக இல்லை என்பதே உண்மை.இதை 2004ன் சுனாமியிலேயே புரிந்திருக்கவேண்டும் ,அன்றி 2009 ஆமியின் அட்டகாசத்திலாவது புரிந்திருக்க வேண்டும்,அஃதின்றேல் சிங்களவன் மாதிரி இழந்த இடங்களெல்லாம் ஈசன் குடியிருந்த கோயில் என திரிப்பான வரலாற்றை எதிர்கால சந்ததிகளிற்கு விசம் அள்ளி பருக்கும் பகுத்தறிவற்ற போக்கிற்கு வெள்ளோட்டமாகவே இந்த ஆலய விழாவும்,,மலிவு விற்பனைத்தளமும் ஆகுதியாகும்.

ஆகவே உன் முன்னோர்கள் உனக்கு ஊட்டிய அர்த்தமற்ற பண்பாட்டின் முத்திரைகளை,உத்திரங்களை அடுத்த சந்ததிகளிற்கு காவும் காவியாக இல்லாமல் 21ம் நூற்றாண்டில் உலக இசைவுகளை,விஞ்ஞானத்தின் தேவைகளை அதனூடான தாய்நிலத் தேவைகளை இதன் மூலம் தேர்ச்சி கொண்டு சமூக,தமிழின மீள் மார்க்கம் அகக் கொண்டு செயலாற்றுவோம்.மூடக் கொள்கைகளை முதுகொலும்பாக்காமல் முதிர்வு கொள்ளுங்கள்.

மதம் என்ற போர்வையில் மதங்கொள்வதை தவிர்த்து மானம்,இனம் என்ற கோதாவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க சுயம் சூட்டுவோம்.இந்த மதமும்,களியாட்டங்களும்தான் எனை ஆடையாளப்படுத்தும் ஆதாரம் என்றால் அது எனக்கு மட்டுமல்ல என் சந்ததிகளிற்கே வேண்டாம்.நான் மனிதன் என்ற மகோன்னதத்தை மனக்கொண்டு மா மனிதம் பூணுவோம்.

எனவே!
எனதான புலம் பெயர் தமிழ சமூகமே உன்னை,உனைச்சுற்றி சுழலும் பஞ்சபூதங்களின் இசைவிலேயே உலகம் இயங்கும் என்ற யதார்த்தத்தை சாகவாசமாக இனம் காட்டும் இந்த அகிலத்தையும்,அதன் ஆசுவாசங்களையும் பரிபூரணமாக புரிந்து கொள்ளவும்.ஆலயம் அமைத்தல்,அன்னதானம் செய்தல் இதெல்லாம் எந்த சுகானுபவத்தையும் நிந்தனது இனத்திற்கு இங்கிதமாக்காது,மாறாக இல்லாதவனிற்கு இசைவான கல்வியறிவையோ அன்றி ஒரு கைத்தொழிலை கற்றுக்கொடுப்பதற்கு இந்த காசு பணங்கள் உதவினால் அதனால் ஒரு சந்ததி ஒரு கல்விமானாகவோ,அன்றி ஒரு தொழிலதிபராகவோ உருவாவதற்கு உன் இந்த உதவி பேருதவியாக இருக்கும்.வீணாக சாமிக்கு குளிப்பாட்டுவதும்,தான் வகை,வகையாக உண்ணுவதற்காக வித,விதமாக அவியல் ஆக்கி பண்டார வேலைகளைவிட்டு,திருவிழா,தேர் உலா என அநியாயமாக காசை இறைத்து உன் பணத்திமிரை காட்டுவதில் என்ன தர்மம் கண்டீர்.உன் உறவு அங்கே குடிப்பதற்கு பால் இல்லை,கற்சிலைக்கு நீ ஊற்றும் இந்த பால் எத்தனை ஏழைகளின் வயிற்றை நிரப்பும் அவர்களின் ஆசிகள் உன் இதயத்தை நிரப்பும் அந்த ஆத்ம சக்தி எந்த கடவுளாலும் உனக்கு நீட்சிக்கமுடியாத நுகர்ச்சி.

ஈய்!
என நான் இங்கே உன்னிடம் இரக்க வரவில்லை.உறக்கம் கொள்ளும் உன் இரக்க சிந்தனையை திறக்கவே இந்த வரைபு,இணங்கினால் இயங்குவாய்.இல்லையேல் உறங்கும் உன் சிந்தைனகள் நிரந்தரமாகவே தூங்க நீ நீலாம்பரி இசை.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகவும் இறுதியாகவும் உன் அகம் உறைக்க உரத்து கூறுகின்றேன்.
கேள்!
நிந்தனது இந்த ஆக்கபூர்வமற்ற பார்ப்பனிய பம்மாத்தை அடுத்த சந்ததிக்கு வில்லங்கமாக ஊட்டாதே.அவர்களாவது மனிதம் சூடும் மகாத்மியங்களாக மையம் இலங்கவிடு.அந்த வரைபில் அவர்கள் வரையும் அந்த ஆத்ம ஆரை புது பூம்புனலாகும்.நீ வாழ்ந்த இந்த அர்த்மற்ற இலங்குதளம் இவர்களால் புனரமைக்கப்படும் இது உறுதி.
வாழ்வின் மிகவும் முக்கியமான முத்துக்கள்.
1.புரிந்துணர்வு
2.விட்டுக்கொடுத்தல்(ஒத்துழைத்தல்)
3.சகிப்புத்தன்மை
4.பொறமை அகற்றல்(பொய்,சூது,வஞ்சகம்)
5.மிகவும் முக்கியமானதாக கல்வியறிவு.
6.சமூக சிந்தனை,விழிப்புணர்வு.
7.இனமான விழிப்புணர்வு (மொழி,தாயகம்)
8.சாதி,மத மறுப்பு.

இத்தனை எட்டுக்களும் எட்டட்டும் ஏந்துமே தேன் சிந்தும் சிந்தை,
உன் அகம் பற்ற இயங்கும் உன் உலகமே தனிதான்.இதிலெங்கே கடவுளும்,கத்தரிக்காயும்.இத்தனையும் ஆற்றும் மனிதபிமானம் இயங்கும் உலகில் ஒவ்வொரு நாளும் திருநாளே.
இங்கு ஓடட்டும் வண்ணத்தேர்,இங்கு பூக்கும் வசந்தத் திருவிழா,இங்கு ஒவ்வொரு நாளும் தீர்த்தத் திருவிழாதான்.

உடலாலும்,உறவாலும் உருவாவதில்லை ஊனம்.
உருவமற்ற உளத்தால் உருவானதே ஈனம்.
கருவாகும் முன்னே கருவழி, இல்லை
கருத்தறுத்து போவாய் உருவழி.
விக்கிரத்தால் விகாரித்தான் சிங்களன்.இந்தஉக்கிரத்தை உரவழிக்க நீ உருவளி,அக்கிரகாரம் போனானே மறுவழி,நீ ஆதங்கிக்கவில்லையே மறுமொழி.


மாவீரத் தேர் இழு
மனமெல்லாம் தோரணமிடு,
ஆர்த்தெழும் ஆரமிடு,
கூர்க்கட்டும் குதூகலத் திருவிழா.
கூனட்டும் கூனர் விழா.

வெள்ளி, 5 ஜூன், 2009

மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்

உளம் தழைத்த உத்தமனே,
உரும்பிராய் நகரின் உத்வேகனே,
விரும்பி வீச்சுடன் ஈழநகை ஈர்த்தவனே,
அரும்பி ஆக்கி ஆக்ரோச விதை விதைத்தவனே,
வேழனே,தமிழீழ வேந்தனே,உந்தன்
வேட்கையை வேகம் தணிக்காமல்,
வெங்கள வேதினியில்,
சிங்கள சீற்றர்களிடம் சிறிதும் சிறையாமல்,
சீட்டிய உந்தன் சிகர சிந்தனையின்,
அகரத்தை ஆகுதியாக்கிய,
அமரனே,

நீ விதைத்த விடுதலைத் நெருப்பு,
உன் ஆத்மாவின் ஆவி தழுவி,
வியாகம் கோர்த்து,வீரியம் பொழிந்து,
தியாகத்தின் தினையில் திவ்வியம் சுரந்தது,
வானுலக வாழ்வது மெய்யென்றால்,நீ
மேவி சிலிர்த்திருப்பாய்,உன்
ஆவி குளிர்ந்திருப்பாய்.ஆகுதிகளின்,
ஆய்வினிலே ஆ தங்கியிருப்பாய்,இந்த
சாசுவாதமான எண்ணங்களிலே ஏகித்திருப்பாய்.

ஆனால்,
இன்று இதுதான் நியமோ? என்பதான வீசத்தில்,
கோலங்கள் அழிந்ததுபோல் ஒரு தேற்றம்,
ஞாலத்தின் ஞாயமற்ற அசைவில் பல உதிர்வுகள்,
உள்ளம் உருக்கும் உறைவுகள்தான்,
வீழும்போதில் விறைத்துத்தான் போனோம்,ஆயினும்
அற்றவைகளின் ஆகுதிகள் மேலொரு ஆற்றல்,
கூற்றம் அழித்து கூடும் குவியம்,குகைய,
மாற்றத்தின் மையத்தில் மகிமை மாற்றுவோம்.
காலம் என்றும் இன்று போல் இயங்காது,

இயங்கு தளத்தின் கையகம் இலங்கும் நாள் குறிப்போம்.
வியங்கள் சூழ விதிவகை மாற்றியோர் புயங்கள் பூட்டுவோம்.
தயங்காத தகையின் மயங்காத மார்க்கம் மையல் விரிப்போம்.
பூத்திடும் ஈழத்திற்காய புதுப்புனல் பாய்ச்சுவோம்,
நேர்த்திடும் போதில் உன் பூ முகம் பூணுவோம்.
காத்திரு,
கார்த்திகை தீபத்தில் உன் காணிக்கை ஆக்குவோம்.
வேர்த்திராத எங்கள் வேணியம் வெகுப்போம்.

மாவீரன் சிவகுமாரின் 36ம் நினைவு அகவை நினைந்து.

வியாழன், 4 ஜூன், 2009

வாகை எம் கைவசம் வசமாகுமா?


விரிந்து,விரவி, நீட்சித்த வானம்,
விதிர் விதிர்த்து,விக்கித்து விகல்ப,
சரிந்த உடலங்களின் சத்திய சாட்சியாய்,
உதிர்ந்த உயிர்களின் உத்தகங்களை,
உள்வாங்கியபடி வானம் வகையின்றி,
வெப்பியாரம் சூடியகதை வெந்தெடுத்த வதைமாறுமா?

படுகாயங்களின் பச்சை ரத்தங்களை,
படுதலம் தாங்கிய பாச(வி) மண்,
கொடுமைகளின்,கொலைவலயங்களில்,
கோரமாக,விக்கித்து,ஜீரணித்த,ஜீவிதங்களின்,
சாட்சியம்,சாசுவதமான வதந்தானா?
கொலைக்களங்கள்,
இவ்வகை கோரங்களை கோர்க்கவில்லை.
இது இகத்தில் வரலாறு,
தமிழன் வதைந்த வரலாறு.

பாரில்,
பரந்த இவ்
வையகத்தில்,
மனிதம் இன்னமும் மகோன்னதம்,
சூடியதான சூசகங்கள் சூம்பி சொதக்கிய,
சோகத்தை விஞ்சிய வேரடி மண்ணழிப்பின்,
பாகங்கள்,அதன் வதங்கள்,
முடியவில்லை,மனதாலும்,நினைவாலும்,
நிழலாக என் மனம் மரிக்கும்.

காரும் கந்தக சிந்தனையின் கனதிகளை,
ஊரும்,உறவும்,என் இன பந்தங்களும்,
ஊரோடு எரித்த பகையின் பாங்கினை,
மனிதத்துவம்,
மனமரிக்கும் அவலங்களை,
வகைக்க மறுக்கும், வசப்படாத கோரங்களை,
கோலி,குழாமள்ளி,குருதியின் குருத்துக்ளையும்,
வலிமையிழந்த என் சமூகங்களை,
வரிந்தெறிந்த ஏவுகணைமுதல்,எரிவாயு ஈறாக,
பொஸ்பரசு,கொத்தாணிக்குண்டுகள் ஊடாக,
ஏகத்திற்குள் அப்பாற்பட்ட எம்மகங்களை,
எரித்து இருப்பழித்த, வடுமைகளை,
ஊனமாக்கப்பட்ட உறவுகளின் சோகம் தாங்க,
அவர் யாகம் தீர்க்க,

நெடு வீதி சூழ்த்தி வஞ்சகர்கள்,
நாளும்,பொழுதும்,நாலுபக்கமும் முட்கம்பி சூழ்த்தி,
ஆவல் அழித்து ஆற்றாமை சூட்டித்து,கயமை
ஆற்றும் கனதியை எவர் கணக்கெடுத்தார்?

விடுதலையின் பூக்களை,
தறுதலைகள்,
தரம் பிரித்தல் எனும் தளத்தில்,
ஊறு உலைத்து உறுப்பறுத்து,உய்வெல்லாம் அவர் வசமகற்றி,
பேறு கொண்ட பிறப்பதனை பேதலிக்க முடித்து வைக்கும்,
கூறுகளை என்னென்பேன்,
கூற்றனவன்,
குதூகலத்தை என்னென்பேன்?.

கூடி,உறவாடி,கூம்பாக குலமுயர்ந்த குலம் இன்று,
வாடி,வகை பிறழ்ந்து,கூழாகி,குதம்பி,
நாடும்,இதை நாளும் இழந்த நாற்புலத்தை என்னென்பேன்.
கூடும் இனியில்லை,
கூட உறவில்லை,
தேட நாதியில்லை,
தேடி தேம்பி அழக்கூட தெம்பில்லை,
உணர்வில்லை.உயர்வில்லை,உயிரில்லை,

முட்கம்பி போலவே,
இவர் வாழ்வும் முறுகலாற்றும்,
முகையில் இவர் வாழ்வு இனி,
முடிவடைந்தே முற்றாகிவிடுமோ?


இந்த வையகத்தில் வலிமையுள்ள,
நெஞ்சங்கள் இல்லையா?நெருடுதே,
ஊடறுத்து,உயிர்ப்பளித்து,உத்வேகம் உரமேற்ற,
எங்கள் உள்ளம்,
நெடுவீதி பார்த்து நெடுமூச்செறியும்,
நெஞ்சகத்தை,
வாஞ்சையாய் கோதி,நியமாக ஒற்றி,ஒன்றி,
ஆக்ஞாபிக்கும்,அறம் அதன் லயம்.
வருடிவிடும் வகை தேடுகின்றோம்,
வாகை எம் கைவசம் வசமாகுமா?
காலம் களித்து கரை ஏற்றுமா?இல்லை
காலன் கரைத்ததாய்!
காதை கலமிடுமா?

வலைப்பதிவு காப்பகம்