செவ்வாய், 2 ஜூன், 2009

கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.


சங்கம் வளர்த்த தமிழினத்தின் சங்காரக்குடி இவன்,
அங்கம் பிளந்தங்கு ஈழ தமிழரின்,
தங்ககம் அகற்றியதான தகமையாய் இன்று,
எங்கும் ஏதிலியாய் தமிழன் மாள சங்கம் திறந்து,
சங்கூதித் தமிழர்க்கு சவக்காடு ஏற்றிய சந்தோசம்,
உன் தேகம்,ஆக்கிய அகம்,
தலைக்கேற கொண்டாடுகின்றான்,தான் பிறந்த சாரம் மறந்து.

கோலகலத் திரவியங்கள் கோலேந்திக் கொண்டதனால்,
ஆலகால விசங்கொண்ட மகிந்தாவின் மகோற்சவனாய்,
காலம் பல காலம் வாழ்கவென காங்கிரசும் கரங்சொறிய,
வீழா வல்லா வீசகங்கள் விதைத்து நீ வாழ்கவென,
மகிந்தாவும் மனம் கொண்டான்,ஆதலால் நீ
உதி(றை)த்(ந்)த நாளில் உற்சாக திருவிழா தமிழரை வதைத்த
வெ(ற்)றி விழா,உன் அகம் மகிழ ஆரியனின் ஆத்மார்த்த பரிசு.

கொலைக்களம் கண்ட எம் வன்னி சொந்தங்களும்,
போர்க்களம் சூழ்ந்த போர்முகம் நீக்கி,தீர்க்கவல்லா
தீவினையும் தீர்த்த எம் தீ முகக் கருண நிதியே,
உன் கருணைக்கு நீ கொண்ட கருண நிதி வாழியவே.
பதவியின் சுகங்களை பத்திரமாய் உன் புத்திரனிற்கு,
பாங்காய் நீ பேணிக் கொடுத்த பவிசை யாம் என்னென்போம்?

விலை பேசி நூதனமாய் நூர்த்துவிட்டாய் எம் பகையை,
வலை வீசி வீழ்த்தி விட்டாய் வஞ்சகமாய் எம் துணையை,
நிலை மாறிப்போனாலும் நீர்க்காது எங்கள் களம்,
உலை வைத்து எரித்தாலும் எரியாது எங்கள் போர்க்குணம்,
மலை போல எதிர் வந்தாலும் மசியாது கொண்ட கொள்கை,
சிலை வைத்து சீவியம் காண சீலம் கொள்ளோம்,
உளம் கொள்ளு.

வீரக்,
கலைக்கெல்லாம் காவியம் சூட்டும் கரிகாலன் பேர் உரைத்தோம்,
நிலைக்காக தானை நூர்க்கா நிர்ணயன் அவன் தாள்க்கொப்போ நீ,
சந்ததி வாழ எமை எரித்தாய் தகுமோ பார் உன் சந்நதி.
இலையான் போல் அலைவோனே இல்லையென்றே ஆவானா?
அலை எறிந்து ஆழி அகமதை சிதைத்தாலும்,
அலாக்காயதை ஆர்த்தெறிந்து ஆகியிருப்போம் அணைத்ததனை.
வீரத்தின் விழுமியத்தின் விற்பகனை,
எம் இத்தக வீரன்.

முலை வாயில் நீ மொவ்வ முரசம் அறைவோனே.
வலை வேயில் வகைந்திட வசமாமோ வேலுப்பிள்ளை.
குல வாழ்வை கோர்ப்போனே,
குணவானைக் கலைப்பாயா?,
நல வாழ்வை உன் நலங்கார்க்கு நகைத்திருந்தாய்,
தலப் பாகை நீ மொய்ய ஈழத்தமிழன்,
என்றும் தமிழ் அகத்தானில்லை.

விலைப்பலகை போட்டு வைத்து,
வீசகம் ஓர் தட்டு வைத்து,
விற்க நாம் பொருளில்லை.
சல,சலத்து நாம் குலைய நீ கொடுத்த,கொடையில்லை,
வெல,வெலத்துப் போக நீ நமைத்த நாரீசமில்லை,
குடு,குடுக்கும் வயதிலும் கூர்ப்பெய்ய நினைப்போனே,
வெடு,வெடுக்கும் உடம்பதனை,வேர்க்கும் வயததனை,
நிலைத்து,

நீ,
நிமிர்வெடுக்க நின்றதெல்லாம் அறுத்தாயே.
உறுப்பாயா?உணர்வதைக் கொன்ற வயதில்,
அரசியலைத் துறந்திருந்தால்!
அகிலமே வாழ்த்தெழுதும்,
அகவையை நீ இழந்தாயே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்