வெள்ளி, 19 ஜூன், 2009

கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.


அழிவு காலம் அரும்பியதுவோ?அன்றி
அலைக்கும் ஆய்வு அருகி ஆயுமோ?
கொழித்த காலம் கொற்றறுந்ததுவோ?
இலைகள் இரந்து இழைத்து போயினவோ?

கழிவு கலைத்து கரந்த எங்கள்
ஒழிவு ஒற்றி ஓர்ந்த ஓர்மம்.
பழித்து பரந்து பாயினவோ?பாரில்
செழித்த செங்களம் செருகிப் போயினவோ?

உருக்கும் நெஞ்சை உருக்கும்.
உளவு எல்லாம்,
உரத்து உரைக்கும் உண்மை ஒன்று.
உள்ளம் நொருக்கி ஊனம் பெருக்கி,
உள்ள அகம் உய்யுமோ?

வருகும் வர்க்கம் வார்ந்து வளர்ந்து,
கருக்கும் கயமை கார எந் நாள் கூடும்?
பெருக்கும் இந்த பேயே பெருகும்,வருந்தும்,
உருந்தும் எங்கள் இனமெல்லாம் உருத்தும்.

தோப்பும், துரவுமாய் தோற்ற தோன்றல்,
மப்பும், மந்தாரமாய் மகித்த மரபுகள்,
உப்பும் வெப்ப காற்றிலெல்லாம் உரமாய்,தடமாய்,
கப்பும் எல்லா காரிருளிலெல்லாம் கனதி திடமாய்,
தீட்டி, திகட்ட, தினமாய் திரண்ட திவ்வியமெல்லாம்,
ஊட்டி,உலர்த்தி,உறுத்தி ஊன்றிய உரங்களெல்லாம்,
மாய்ந்து போயினவோ?மலடர் மார்பில் மடிந்தனவோ?

தப்பும் தாளமென்று தாள மிழைக்குது,
சப்பும் சாவிலெல்லாம் தமிழர் வாழ்வு தரையுது,
நப்பும் நரம்பிலெல்லாம் நாடு நலிந்து நரைக்குது,
ஒப்பும் ஒயிலத்திலே ஓம்பி ஒலிக்குது,சிங்களர்
சிலப்பும் சீலத்திலே சீலம் சிரித்து சிறக்குது.

நெம்பது முறிந்தால் நெகிழுமா நிறைகள்?
கொம்பது குறைந்தால் கொடிக்குமா?
கொழு கொம்புகள்!
ஆயின்!
தான் படர படி தேடி பதிக்குமா பதியங்கள்?
இல்லை!
இகமதில் இல்லையே இல் வாழ்வென
சகிக்குமா?சலிக்குமா?
அஃதும் அவித்து,
ஆழ வேரோட ஆகிக்குமா?ஆதங்கிக்குமா?
ஆர்த்த ஆடியெடுத்து ஆய்க்குமா?
அவர் பணிகள்?

விடை தெரியா வினாக்களே,
உடை தரிக்கும் ஊக்கம் உரக்கும்,
பற்றெடுக்கும் பாதை விரிக்க பகுப்பெடுக்கும்,இது
பாரில் பதிந்த பரி,
இதை நூற்பவன் நோற்பான்,நுனிப்புல்
மேய்பவன் நுதலான்.

கடை விரிக்கும் காலமல்ல,இனி
கரிகாலனின் காலமும் அல்ல,
விரிவடைவாக்காமல் விதம் விதர்த்தும் விதானத்திலே
பரிவடையும் பக்குவம் ``பா`` எழுதும்.
இல்லையேல்!
பாரில் பார்ப்பனின் பாப்பகத்தில்
ஈழத்தமிழரின் இன்னல்கள் இதம் கொள்ளும்,
இனம் கண்டால் மனம் கொள்வோம்,இனம்
பிரித்தால் இடர் கொள்வோம்.

சுய பரிசோதனைகள் சுயம் சுரிக்க,
மயம் மரிக்கா மனம் தரிக்க,
வயம் வரையும் வைப்பகத்தை,
வயல் கொள்வோம்,அன்றில்,
கயல் கரைத்தே கனமிழப்போம்.
களமகன்றே காலம் கரைப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்