புதன், 10 ஜூன், 2009

அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?


சமூகம் யாதெனில் சனம் சார்ந்தது,அதன்இனம் சேர்ந்தது,ஊடக மொழி உளர்வது.ஒரு சகம் சாரும் சாரம்,அதன் கலை,கலாச்சார,பண்பாடு,
ஊடி ஆர்ந்திருப்பது,கோலாகலம்,களியாட்டம்,விருந்துபசாரம்,மேலும்
இதனோடு ஊடும் அத்தனையும் யாக்கும் அகமகிழ்வு,
அதன் அங்கமான சமூகத்தின் சாக்காட்டில்,இங்கு புலவாழ்வில் இந்த இனசனம் ஆலயம் அதன் லயம் தேர், இன்னபிற களியாட்டங்கள்,
இத்தனையையும்,தற்போது எம் இனம் சார்ந்த சுயம்,அதன்,மானம்,இன அழிப்பின் ஈரம்,அங்குசிந்தியகுருதியின்வெட்கை,அவமானம்,கருவழிப்பு,
வன்புணர்வுகள்,தொடரும் தமிழிவனழிப்பு அங்கு நாளும்,பொழுதும் நறைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில் புலம் பெயர் சமூகம் வன்னி மக்களின் வேதனையின் சாரத்தை போக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதை ஒத்தி வைத்துவிட்டு,அல்லது புறந்தள்ளிவிட்டு தான் படைத்த தாண்டவ தெய்வங்களையே தன்னைக்காப்பாற்ற வேண்டி அடி தொழும் முட்டாள் தனத்தை என்னென்பது,தானே களிமண்ணை எடுத்து பிள்ளையாரோ,ஏதோ ஒரு உருவத்தை உருவாக்கி விட்டு இன்று அந்த இல்லாத இவர்கள் கூறும் தெய்வங்களை பாதுகாக்க எவ்வளவு பணத்தை விரயம் செய்கின்றார்கள் என்பதை எண்ணும் போது எப்போ இவர்கள் விழிப்புணர்வு எனும் வீதத்திற்குள் விழைவார்களோ புரியவில்லை.

இந்த மாந்தர்கள் இப்படி அர்த்தமற்ற ரீதியில் பணத்தை வீண்டிப்பதை விட்டு இந்த பணத்தை அங்கு வாழும் எம் இனவாழ்விற்கு புனர்வாழ்விற்கு உதவினால் இதை இவர்களின் தேசியபாசையில் கூறினால் புண்ணியமாகும்,அத்துடன் எவ்வளவு நேரத்தையும்,காலத்தையும் விரயம் செய்கின்றார்கள் என்பதை எந்த கோணத்தில் கோலம் கொள்வது,

ஒரு சமூகத்தை நிர்ணயம் செய்வது அந்த இனம் தன் உணர்வுகளையும்,சிந்தனையையும்,நிலைப்பாட்டையும்,தன் இனமான சக மனிதன் உணர்ந்து கொள்ளகால பரிணமமாக உருவானதுதுதான் மொழியாகும். ஆகவே ஒரு இனத்தின்மூலக்கூறு மொழிதான் என்பதே யதார்த்தமாகும்,அஃதன்றி மதத்தை வைத்து மானிடம் உய்வுகொள்வதில்லை,இந்த கடைசி நேர முள்ளியவளையில் இடம் பெற்ற இனவழிப்பின் மூலமாவது இந்தமானிடங்கள் உணரவில்லையே.அந்த இறுதிக்கணத்தில் வன்னிமக்கள் வேண்டாத வேண்டுதாலா?இற்றைவரை இந்த மானிடங்கள் ஆராதித்த,ஆரோகணித்த,அல்லும்,பகலும் தேவாரமோ,திருவாசகமோ,இன்ன பிற தோத்திரங்களை ஆகித்து,யாசித்த பொன்னான வேளைகளில் போராட்டத்திற்கு உதவியிருந்தால் இன்று நிலைமையே வேறு,

இவர்கள் இராணுவத்தால் இறப்பெய்தாலும் இயக்கத்தில் இணைந்து போராடி ஒன்றில் வீரச்சாவு அன்றே வெற்றிச் சங்கு என்ற நிலைக்குள் தங்களை ஐக்கியப்படுத்தமுன்வந்திருந்தால் இகம் வாழும் வரை வாழ்ந்திருப்பார்கள்.ஆனால் இன்றோ வன்னிமக்களின் வதை நிலையை புலவாழ்வு ஓர் முன்னுதாரமாக கைக்கொள்ளவேண்டும்,ஆக இவ்வளவு பிரார்த்தனையும் கைகொடுக்காத நிகழ்கால நிர்தாட்சண்ணியங்களையும் மனங்கொண்டு ஆலயம்,ஆதாரம்,மதம்,இப்படியான அர்த்தமற்ற நிலைப்பாடுகளை ஓரளவேனும் தவிர்த்து மானிடம்,தமிழினம் என்ற ஓர் கட்டுமானத்தை தங்களின் முறையான ஒற்றுமையான ஓர் அணியில் திரண்டு தங்களின் இனவிடுதலைக்கான சாத்தியமான போராட்டங்களையோ அன்றி அங்கு வதையும் மக்களை எப்படி காப்பாற்றலாம்,அல்லது ஆதார்சமான உதவிகளை இவர்கள் வசமாக்கலாம் அதற்கு என்ன வகையான மார்க்கங்களை முன்னெடுக்கலாம் என்பதான ஒரு சாத்தியமான வழி முறைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே யதார்த்தமாகும்.

நோய் வந்தால் மருந்துதான் உபயோகிக்க வேண்டும்.அதைவிட்டு ஆண்டவனே காப்பாற்று என வேண்டுவது எப்படி யதார்த்மற்றதோ அதேபோல்தான்,நோயும் மருந்தும் தெரிந்தவர்கள் நேயமான மார்க்கத்தையே நுதம் கொள்வார்கள்,கொள்ளவும் வேண்டும்.தனக்கு பசியென்றால் தான் தான் உணவு உட்கொள்ளவேண்டும்.சும்மாவா சொல்வார்கள் தன்கு வந்தால் புரியும் தலையிடியும்,காய்ச்சலும் என்று.ஆக சாராம்சம் இவ்வளவுதான்,தன் சமூகத்தின் வேதனையிலும்,துன்பத்திலும் கைகொடுக்க முடியாதவர்கள் எப்படி ஒரு சாத்வீகமான சமூக இயங்கு தளத்தில் சாசுவதமாக இலங்கமுடியும்.மீண்டும் சொல்லவந்ததையே வலியுறுத்த சமூகத்தின் இன்பதுன்பங்களில் ஒன்றில் ஆத்மார்த்தமாக ஈடுபாடுகாட்டுங்கள் அதை செயல்முறைப்படுத்துங்கள்.அன்றி ஒரேயடியாக ஒதுங்கி இருங்கள்,மேலும் ஈடுபாட்டுடன் இயங்கும் சகமானவர்களை இப்படியான கலாச்சாரம்,பண்பாடு என்று அகச்சலவை செய்வதை விட்டு நடைமுறைகளை உள்வாங்குங்கள்,

நீ படைத்த அதாவது உன் முன்னோர்களின் முட்டாள்தனமான படைப்பான எந்த ஆண்டானும் உன் துயர் தீர்க்க அருளமாட்டான்..மேலும் அப்படியொன்றும் இந்த பிரபஞ்சத்தில் ஒன்றும் அதிசயம் நடந்ததாக சரிதமே இல்லை வேணுமென்றால் அங்கு இப்படியாம்,அங்கு அதிசயமாம் என விசமம் பண்ணமுடியுமே தவிர உண்மைநிலை இப்படியாக இல்லை என்பதே உண்மை.இதை 2004ன் சுனாமியிலேயே புரிந்திருக்கவேண்டும் ,அன்றி 2009 ஆமியின் அட்டகாசத்திலாவது புரிந்திருக்க வேண்டும்,அஃதின்றேல் சிங்களவன் மாதிரி இழந்த இடங்களெல்லாம் ஈசன் குடியிருந்த கோயில் என திரிப்பான வரலாற்றை எதிர்கால சந்ததிகளிற்கு விசம் அள்ளி பருக்கும் பகுத்தறிவற்ற போக்கிற்கு வெள்ளோட்டமாகவே இந்த ஆலய விழாவும்,,மலிவு விற்பனைத்தளமும் ஆகுதியாகும்.

ஆகவே உன் முன்னோர்கள் உனக்கு ஊட்டிய அர்த்தமற்ற பண்பாட்டின் முத்திரைகளை,உத்திரங்களை அடுத்த சந்ததிகளிற்கு காவும் காவியாக இல்லாமல் 21ம் நூற்றாண்டில் உலக இசைவுகளை,விஞ்ஞானத்தின் தேவைகளை அதனூடான தாய்நிலத் தேவைகளை இதன் மூலம் தேர்ச்சி கொண்டு சமூக,தமிழின மீள் மார்க்கம் அகக் கொண்டு செயலாற்றுவோம்.மூடக் கொள்கைகளை முதுகொலும்பாக்காமல் முதிர்வு கொள்ளுங்கள்.

மதம் என்ற போர்வையில் மதங்கொள்வதை தவிர்த்து மானம்,இனம் என்ற கோதாவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க சுயம் சூட்டுவோம்.இந்த மதமும்,களியாட்டங்களும்தான் எனை ஆடையாளப்படுத்தும் ஆதாரம் என்றால் அது எனக்கு மட்டுமல்ல என் சந்ததிகளிற்கே வேண்டாம்.நான் மனிதன் என்ற மகோன்னதத்தை மனக்கொண்டு மா மனிதம் பூணுவோம்.

எனவே!
எனதான புலம் பெயர் தமிழ சமூகமே உன்னை,உனைச்சுற்றி சுழலும் பஞ்சபூதங்களின் இசைவிலேயே உலகம் இயங்கும் என்ற யதார்த்தத்தை சாகவாசமாக இனம் காட்டும் இந்த அகிலத்தையும்,அதன் ஆசுவாசங்களையும் பரிபூரணமாக புரிந்து கொள்ளவும்.ஆலயம் அமைத்தல்,அன்னதானம் செய்தல் இதெல்லாம் எந்த சுகானுபவத்தையும் நிந்தனது இனத்திற்கு இங்கிதமாக்காது,மாறாக இல்லாதவனிற்கு இசைவான கல்வியறிவையோ அன்றி ஒரு கைத்தொழிலை கற்றுக்கொடுப்பதற்கு இந்த காசு பணங்கள் உதவினால் அதனால் ஒரு சந்ததி ஒரு கல்விமானாகவோ,அன்றி ஒரு தொழிலதிபராகவோ உருவாவதற்கு உன் இந்த உதவி பேருதவியாக இருக்கும்.வீணாக சாமிக்கு குளிப்பாட்டுவதும்,தான் வகை,வகையாக உண்ணுவதற்காக வித,விதமாக அவியல் ஆக்கி பண்டார வேலைகளைவிட்டு,திருவிழா,தேர் உலா என அநியாயமாக காசை இறைத்து உன் பணத்திமிரை காட்டுவதில் என்ன தர்மம் கண்டீர்.உன் உறவு அங்கே குடிப்பதற்கு பால் இல்லை,கற்சிலைக்கு நீ ஊற்றும் இந்த பால் எத்தனை ஏழைகளின் வயிற்றை நிரப்பும் அவர்களின் ஆசிகள் உன் இதயத்தை நிரப்பும் அந்த ஆத்ம சக்தி எந்த கடவுளாலும் உனக்கு நீட்சிக்கமுடியாத நுகர்ச்சி.

ஈய்!
என நான் இங்கே உன்னிடம் இரக்க வரவில்லை.உறக்கம் கொள்ளும் உன் இரக்க சிந்தனையை திறக்கவே இந்த வரைபு,இணங்கினால் இயங்குவாய்.இல்லையேல் உறங்கும் உன் சிந்தைனகள் நிரந்தரமாகவே தூங்க நீ நீலாம்பரி இசை.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகவும் இறுதியாகவும் உன் அகம் உறைக்க உரத்து கூறுகின்றேன்.
கேள்!
நிந்தனது இந்த ஆக்கபூர்வமற்ற பார்ப்பனிய பம்மாத்தை அடுத்த சந்ததிக்கு வில்லங்கமாக ஊட்டாதே.அவர்களாவது மனிதம் சூடும் மகாத்மியங்களாக மையம் இலங்கவிடு.அந்த வரைபில் அவர்கள் வரையும் அந்த ஆத்ம ஆரை புது பூம்புனலாகும்.நீ வாழ்ந்த இந்த அர்த்மற்ற இலங்குதளம் இவர்களால் புனரமைக்கப்படும் இது உறுதி.
வாழ்வின் மிகவும் முக்கியமான முத்துக்கள்.
1.புரிந்துணர்வு
2.விட்டுக்கொடுத்தல்(ஒத்துழைத்தல்)
3.சகிப்புத்தன்மை
4.பொறமை அகற்றல்(பொய்,சூது,வஞ்சகம்)
5.மிகவும் முக்கியமானதாக கல்வியறிவு.
6.சமூக சிந்தனை,விழிப்புணர்வு.
7.இனமான விழிப்புணர்வு (மொழி,தாயகம்)
8.சாதி,மத மறுப்பு.

இத்தனை எட்டுக்களும் எட்டட்டும் ஏந்துமே தேன் சிந்தும் சிந்தை,
உன் அகம் பற்ற இயங்கும் உன் உலகமே தனிதான்.இதிலெங்கே கடவுளும்,கத்தரிக்காயும்.இத்தனையும் ஆற்றும் மனிதபிமானம் இயங்கும் உலகில் ஒவ்வொரு நாளும் திருநாளே.
இங்கு ஓடட்டும் வண்ணத்தேர்,இங்கு பூக்கும் வசந்தத் திருவிழா,இங்கு ஒவ்வொரு நாளும் தீர்த்தத் திருவிழாதான்.

உடலாலும்,உறவாலும் உருவாவதில்லை ஊனம்.
உருவமற்ற உளத்தால் உருவானதே ஈனம்.
கருவாகும் முன்னே கருவழி, இல்லை
கருத்தறுத்து போவாய் உருவழி.
விக்கிரத்தால் விகாரித்தான் சிங்களன்.இந்தஉக்கிரத்தை உரவழிக்க நீ உருவளி,அக்கிரகாரம் போனானே மறுவழி,நீ ஆதங்கிக்கவில்லையே மறுமொழி.


மாவீரத் தேர் இழு
மனமெல்லாம் தோரணமிடு,
ஆர்த்தெழும் ஆரமிடு,
கூர்க்கட்டும் குதூகலத் திருவிழா.
கூனட்டும் கூனர் விழா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்