புதன், 10 ஜூன், 2009

பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..


தித்திக்கும் தினவெடு தினமெல்லாம் திரவமிடு,
எத்திக்கும் இனமெடு ஏந்தி நிற்க விறலெடு,
சித்திக்கும் சினமெடு சிந்தையெல்லாம் சிந்தவிடு,
முத்திக்கும் முகிழ விடு முத்தமெல்லாம் முழங்கவிடு,
சத்திக்கே சன்னமிடு வீர சந்நதியே சாதகமிடு.

ஈழ!
பக்திக்கே வழிவிடு பாரமெல்லாம் பதியவிடு,
உத்திக்கும் ஊழியமாய் உறவெல்லாம் உறையவிடு,
விக்கிக்கும் விரையவிடு விதையெல்லாம் விழையவிடு,
கர்ச்சிக்கும் கனையவிடு காலமாக்கி கனியவிடு,
மூர்ச்சிக்கும் முழையமதை மூசியே மூர்க்கவிடு,
முயற்சியே திருவினையாய் மூளையாய் முனைந்துவிடு.

வேழம் வெகிழும் வேளை வேல் கொண்டு பாய்ச்சிடு,
வாழும் வகையே எண்ணி வகையெல்லாம் பதியமிடு,
பாழும் பகையே சாய்க்க பலமெல்லாம் பதித்துவிடு,
சூழும் சுயங் களகற்றி சுகந்தமாய் சுரமெடு
ஈழ மலர்வே இலங்க இகமெல்லாம் இயங்கிடு,

ஆழி மீதில் அலுங்கும் கால கோளதனை,
ஊழி உறுத்து உலங்க வேளை கொள்வனவை,
பாளி மொழியான் பாரில் வேர்த்த வெப்பனவை,
காளி கையகப்படுத்திய வேலெறிந்தே வேட்கை தவிர்,
ஊழியம் ஆற்றும் உவப்பை உறுத்தெறி,
உலகம் புரட்டும் ஆரியக்கூத்தானின் அகந்தை அறுத்தெறி,

மீதி,
வெற்றியாக உன் வெப்பகம் ஆற்றும்.
காத்திரமான கந்தகம் நின் வாசல் தெளிக்கும்,
சூத்திரமெல்லாம் உன் வாசல் நழுவும்.
நேத்திரம் கொள்,
நிமிர்ந்தெழுந்து உபாத்தியான்யம் உரை,
உறுத்திரு,
நெறித்திரு,
கறுத்திருக்கும் காலம் கலயம் கரைக்கும்.
வெறுத்திருந்ததெல்லாம் வேணியம் பூணும்.வேதினியில்
வேய்ந்த பகை ஓய்ந்தே சாயும்.

பார்!
பகலாய் பார்த்திபன் பதித்த பாயிரம்.
பரவசம் பகுக்க ஊர்திரும்பும்
உன் உறவு ஞாலத்தில் ஞாயம் கவ்வும்.
ஞாயிறான ஞால திங்களவனின் திடம் சாற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்