புதன், 24 ஜூன், 2009

குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்


சிந்தையது சீண்ட,சீண்ட,
சீலம் சிதைகின்றது.
சொந்தமெல்லாம் சோகம் பேள,
கந்தகம் கோர்க்கின்றது,
விந்தை இது தீருமா?
வீரியங்கள் தேறுமா?
கந்தலாக,நொந்து,நொந்து,
மனம் காய்க் காய,

இந்தியர்கள் ஈனம் ஈய்ந்தார்,
முந்தியவர் எம் மூலம் மிதித்தார்,
எந்தையர்கள் ஏந்திய,
சிந்தி அவர் சீவித்த,
எங்களது தங்ககங்கள்
எங்கள் நிலம்,எங்கள் வளம்,
எல்லாமே,
எரிந்து ஏனம் ஏந்ததே,
எங்கள் ஏகமெல்லாம் எறித்ததே.

பந்தியெல்லாம் பாறி பதைத்தார்,
குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்,
எங்கள் எச்சங்களை,
சொச்சங்களை,
மிச்சங்களை,
துச்சமென்றே துகில் உரித்தே எரித்தான்.
துஞ்ச,துஞ்ச,
துயர் தீருமோ?சுகம் சூளுமோ?
இந்த.
ஏக்கத்திலே ஆயுள் கரையுமோ?
துக்கத்திலே எம் துயரம் தூருமோ?

அச்சமின்றி ஆற்றலுடன் ஆனந்தமாய்
வாழ்ந்த எங்கள் வாகை மீள மிகையுமோ?,
வாதையின்றி இனி ஒரு பாதை வகையுமோ?
வதை வையுமோ?
கதை பொய்யுமோ?
இதை இகம் இயம்ப இறுக்குமோ?
இல்லை,
இழவுகாண் இனமென்றே எமை
இழக்குமோ?
ஈரம் ஈனமாய் இழையுமோ?இகையுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்