வியாழன், 18 ஜூன், 2009

ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு


சுகந்தத்தில் கந்தகம் குந்தகமானது,
சுதந்திரத்தில் தந்திரம் தரித்திரமானது,
வசந்தத்தில் வந்தனம் நிரந்தரமானது
வதிந்திருந்தால் வாழ்வே நிம்மதியானது.

கன்னத்தில் கதப்புக்களே கனிமையானது.
வன்மத்தில் மதங்களே மலினமானது
துன்பத்தில் துயரமே தூணானது,
துகித்திருந்தால்,சகித்திருந்தால் சூன்யமானது.

வண்ணத்தில் எண்ணமே வருணமானது.
உள்ளத்தில் உருவமே உன்னதமானது,அது
திண்ணத்தில் திரண்டிருந்தால் திடமானது.
பள்ளத்தில் பருமமே பாதகமானது,பாளும்
வெள்ளத்தில் ஒளித்திருந்தால் ஓர்மமானது.

சாரளத்தில் தென்றல் நீவ நெருடலானது,அது
தெம்மாங்கு தேனிசைக்க தெவிட்டாதது.
புருவத்தில் பூத்திருக்கும் புன்னகைபோல அவை
பருவத்தில் பயிரானதே பசுமையானது.அது
மெருகற்று போயிருந்தால் அருகற்றது.

நீரடித்து நீரதுவோ விலகாதது,
வேரறுத்து மரம் வீழ்ந்தால் விழையாதது.அது
ஊரோடொத்து உலைக்கழித்தால் உயிராகுமா?யாவும்
உரிமையோடொத்து போரெடுத்தால் போகமாகுமே.இதை
தேரோடொத்து வடமிழுத்தால் வசமாகுமே,என்றும்
களமாகுமே வீசம் விசையாகுமே.

சன்னதத்தால் சனங்கள் சதி சாக்கண்டது.அது
சின்னத்தால் சித்தமகன்று சிறையானது.
உன்னதத்தில் உளமிருந்தால் உறுதியானது.வெறும்
உத்தகமே உறுத்திருந்தால் உலர்வானது,சித்த
வித்தகமும் விதைந்திருந்தால் வீறெய்துமே.
உரமிழக்கா .உறுதியையும் உரமுறத்துமே,உள்ளம் சீரெழுதி
ஊரெழுத மனம் சுரக்குமே புலர்வில் புதுப்பெய்துமே.

ஆக!
ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு,
அற்றதையெல்லாம் புறம் தள்ளு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்