சனி, 13 ஜூன், 2009

எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,


துயர வங்கிகள் என்றும் துயர் தீர்க்காது,
வியர் வங்கியே விகல்பம் வீற்றும்,
அயர் வங்கி அகலவே ஆக்கம் ஆகர்சிக்கும்,
பெயர் வங்கி ஓங்கவே பேணும் பலம் வேணும்.

மயிலொன்று அகன்றால் மாளுமாம் கவரிமான்,
துணையொன்று இழந்தால் துறக்குமாம் மாடப்புறா,
இணையொன்று இயக்கவே இயங்குமாம் ஈனப்பிறவி,நாம்
எத்தனையிழந்தாலும் ஏகித்திருத்தல் தகுமோ?

மானல்ல,மயங்கும் பறவைக் கூட்டமுமல்ல,
மானுடம் மகித்த மா மனிதர்கள்,
விழ,விழ வீரியம் சூட்டும் வீரியர்கள்,விவேகிகள்,
சிதையலாமா?சிதம்பலாமா? உற்றதெல்லாம்
அற்றாலும்,அகமாய் அங்கீகரித்து ஆய்வெடுத்து,ஆங்காரமாய்
ஓங்காராம் ஒலிக்கும் ஓதியர்கள்,வேதியர்கள்.

ஓயலாமா?ஒதுங்கலாமா?மாயலாமா?மயங்கலாமா?
பாயலாம் என பாய்விரிப்போம்,ஓய்வின்றியே ஓதிய அங்கம்,
ஓரிப்போம்.
தீயெலாம் திகைந்து தீரம் தீட்டிய தீந்தமிழ் தீர
வழி வந்த வல்லவர்கள் பாதை வயமிழக்கலாமா?
விதி விதந்து விரக்தி விரவி மொய்யலாமா?

பாதி வழி வந்ததாக பழி சூட்டலாமா?
மீதி வழியில் மிதக்க விட்டதாக மிதம் கேட்கலாமா?
ஊதி,ஊதி பகை வீழ்த்த நாம் ஒன்றும் ஊனர்களில்லை,
வேதினியில் எங்கள் வேர்க்காத பலம் மீட்போம்,பாரினிலே
பார்ப்பன பகை வீழ்த்தி பாரம் சுமப்போம்,

பரம்பரையான எம் பரம பதம் நீட்டி,
வரம்பெழுதி வரும் நாள் வகை செய்வோம்,அதுவரை
பாரமெல்லாம் பரம் பொருளே என்று வேற்று முகம்
தரிக்காமல் எங்கள் வேர் மொள்ளுவோம்,திருநாள் வர
ஊர் கூடி தேர் இழுப்போம்,வடம்பற்றி இப்போ வன்னிக்கு உதவுவோம்,
வகையான நாள் சேர எங்கள் வளம் மீட்போம்.

எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
அங்ஙனம் அவர்கள் சுவாசிக்க சூட்டுவோம்,
இங்ஙனம் எங்கள் அஞ்ஞாதவாசமும் அகமகற்றும்,
கங்கணம் கனலும் உறங்கு தளம் உரம் ஊட்ட,
போர்முகம் கொள்ளும் வியூகம் விதந்துரைக்கா வேதம் சுரக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்