வியாழன், 11 ஜூன், 2009

விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?


யாருடையோம்!
எங்கள் யாப்புரைப்போம்?
வேருடையோம் வெகு கால ஊருடையோம்,உறவுடையோம்,
பாரம் பாரிய நாடுடையோம்,பண்பிலே பாசமுடையோம்,
வீடுடையோம் வித்தக வீரமுடையோம்.

கல்வியில் செல்வமுடையோம்,
வேள்வியில் வேட்கையுடையோம்,
பள்ளியில் பாரமுடையோம்,யாக்கும்,
வேளாண்மை வேண்மியமுடையோம்,
பாழாண்மையற்ற பாண்புடையோம்.

காடுடையோம்,கடலுடையோம்,கற்பக நிலமுடையோம்,
நீருடையோம் நிழல் நிறத்த நியமுடையோம்,
பாடுடையோம்,பரணியாற்றும் பாங்குடையோம்,
மேடுடைய மேம்புடையோம் மேவி நின்ற தோளுடையோம்,
ஊடுடையா உறனுடையோம் உற்றதெல்லாம் உருத்துடையோம்,
காத்திரமான காவமலுடையோம் கானகத்திலும்,
கானம்,
இசைக்கும் காத்திரருடையோம்.

இத்தனை உத்தரங்களையும்,
பத்திரமாய் பதித்திருந்த பகலவனுடையோம்,
எத்தனை எட்டப்பர்களுடையோம் என்பதிலே,
அத்தனையையும் ஆரிய வசமிழந்தோம்,ஆகுதியாய்
வீழ்ந்துடைந்தோம்,
நுண்ணிய நிலைப்பின்னலுடையோம்,
நுகர்வதற்கான நுணுக்கம் தரித்தோம்,
ஆயினும் உறவாடிக் கெடுத்த உயரிய,
ராசதந்திரக் கழுகுகளுடையதால்,
கருத்து முதல் காவிய செம்மையான சேந்தல்களெல்லாம்,
விருத்து வீசமாய்ந்து விழலான வீதம் தரித்தோம்.

உருத்திருந்து உரமான ஊர் முதல் உளவளம் வரை,
கருத்திருந்தே நாம் காத்திரமாய் தோற்றிருந்தோம்,
நேற்றிருந்தோம்,இன்றிருப்போமா?என்ற நிலையெடுத்தே
வீற்றிருந்த இத்தனை வீதங்களும் விதையறுத்த,
விழுமியம் தாங்கும் விதமாக விரைப்புற்றோம்,
விகைப்போமா?
வீரியம் சுரப்போமா?அன்றி
விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
யார் காக்க எங்கள் அரியாசனம்?
யாக்கும் நிலை எவர் தகைப்பார்?

மேதினியே!
ஈழத் தமிழர் ஈகை வளம் இயைப்பாயா?அஃதன்றி
ஈன இனமென்றே இகமகற்றி இழைப்பாயா?
மரிக்கும் இந்த மகோன்னதமான ஈழவரை,
வரைபொன்று வரைந்தெடுத்து,
சிரிக்கும் சிலம்பேற்றி யுகம் தழுவ நெய்வாயா?இன்றி
எங்கள் தங்ககங்களை தாரை வார்க்க,
தகம் நீ தரிப்பாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்