ஞாயிறு, 21 ஜூன், 2009

சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.


சந்தனப் பூவெடுத்து எங்கள் சாலைக்கு,
மாலை கட்டு,
வந்தன வாழ்த்தெடுத்து அந்த வாகைக்கு
வாழை கட்டு,
எந்தனவன் ஏற்ற வாகை ஏட்டினிலே,
சூட்டி வைத்து,
மந்தார மலரெடுத்து அந்த மகிமைக்கு மாலை மாட்டு.

உந்தனதன் உவப்பெடுத்து,
உள்ளத்திலே உரமெடுத்து,
வந்த பகை பாய் பரத்தி பார்த்தனவன்,
பகை முடித்து பார் புகழ பூத்திரு.

பாட்டெடுத்து பாமுடித்து,
பாய்ந்த புலி பதமெடுத்து,
பாடையர்கள் பார்த்த பார்வை,
பந்தத்திலை பதித்த பாதை,
விந்தகத்தின் வீரியமாய்,
விநோதங்கள் விசைமுடுக்க,
விரிந்து நின்றான் விதந்து நின்றான்,

யார் விரித்த வீசமது,கார் விரித்து
கனந்ததுவே,
ஆரியர்கள் அகமெடுத்து ஆர்ப்பரித்து,
அணைந்து நின்று அடையெரித்தான்,
ஆற்றி நின்ற அகமெரித்தான்,ஆயினவை
அத்தனையும்,
ஆறாமல் அலைத்தெரித்தான்,

எஞ்சி நின்ற ஏதனத்தை,
விஞ்சி நின்ற விந்தகத்தை,
அஞ்சி நின்ற அகந்தத்தை,
கொஞ்சங்கூட இரக்கமின்றி,
வெஞ்சமரின் வெப்பகத்தில் வேதினியே
கலங்கி நிற்க,களமெரித்தான்,எங்கள் கனமெரித்தான்,
உள்ளங்களின் உபாதைகளை,உடலங்களின் காயங்களை,
கள்ளமற்ற கருக்களை,காத்து நின்ற காப்புக்களை,
தள்ளாடிய தாத்தர்களை,பாட்டிகளை,பூட்டர்களை,
அள்ளியவன் ஆத்திரமாய் ஆன அந்த எந்திரத்தால்,
உடலுதற,உளமெரிய,கடலதில் கந்தகத்தின்,கைத்துணையால்
கருணையது கடுகளவுமின்றி காந்தர்கள் கரைத்து காந்தான்,

இடைத்தங்கல் முகாமென்று அடைக்கலமாய் ஆனவர்களை,
இடையின்றி துடைத்தெடுத்து,இரவிரவாய் இல்லாதொழித்தான்,
இன்னும் இன்னல் இழையவில்லை,
தின்னும் தீங்கும் தீயவில்லை,
மின்னும் தன் சிந்தனையில்,எண்ணும் எந்த நேரத்திலும்,
கன்னியர்கள்,காளையர்கள்,காலம் உதிர்ந்த மேனியர்கள்,
என்னும் என்ன என்றில்லா எத்தனவன் ஏகத்திலே.
புன்னும் தன் புளகாங்கிமாய் புறமள்ளினான்,அல்லும்,பகலும்
இதையே ஆற்றினான்,

மிஞ்சும் எம் மேனியர்கள் மீதமுள்ளாரா?
அஞ்சும் அந்த போதினிலே அகமகிழ்வாரா?
கெஞ்சும் அந்த கெந்தலிலே தஞ்சம் விலகுவாரா?
விஞ்ஞ,விஞ்ச எங்கள் விகிதம் குறைப்பாரா?
மஞ்சம் தன் மகிழ்வென்றே எங்கள் மானம் மரிப்போரே.

கேள்,அவதானங்கள் அற்றோரே,அற்போரே,
மனிதாபிமானம் என்ற மகத்துவம் மரித்தோரே,
பனிதானும் பனிக்க பாதை விரித்த எங்கள்
பாதம் புரியாரே,
மெத்தனங்கள் எங்கள் மேனி தடவ,
உத்தனங்கள் உறுப்போரே,
சித்தனங்களை நீ சீவி சிரைத்தாலும்,
எத்தனங்களை நீ எள்ளி விரவினாலும்,
அத்தனங்களால் எங்கள் ஆவி அரைத்தாலும்,
புத்தனங்களால் எங்கள் புவி புரைத்தாலும்,

புத்தனின்,பல்லிற்கு
புது மாளிகை புனர்ப்போரே!
வித்தனங்கள் விலவ எங்கள் வீரியர்கள்,
உங்கள் சொத்தலங்கள் அத்தனையும் சோபை மருக
கைத்தலங்கள் கலக்க காலம் கொள்ளும்,கரிகால
உத்தமர்கள் உறையும் உன் எதிரில்
சத்தமின்றி சாகசமாய் உன் சபை மொள்ளுவார்கள்,
சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்