
போர்க்கொடி அற்ற குடி
வேர்க்கொடி அறுந்துவிடும்,இதை
பார்க்கொடியில் பார்த்திருந்தும்,
கார்க்கொடி கொள்ளல் தகுமோ?
நீர்ச் செடியாக நித்திலத்தில்,
நிலைப்பதிலே என்ன பயன்?
வாரி வரையறுத்து கோர்க் கொடி,
கொத்திழைத்து கொதித்தெழல் அத் தணல்
பார்த்திழைத்து பரம பதமெடுக்க பாய்
விரிக்கும் பார் பார்த்திருத்தலை பாடை வீச.
வித்தெடுத்தார் விடுதலை விழுமியங்களை,
விலை பேசி விரித்தெடுத்தார்,இப்படி
எத்தனை முத்தெடுத்தார்,விகை விலக
பத்தினை பலமிழக்க பாவியவன் பாரில்,
தத்தெடுத்த தலைமைகளை பரமெடுத்தான்,
தாவி ஈழர் ஆவி அலைக்க.
உற்று உறுதுணை உவந்தழித்த உவப்பில்லா,
கொத்தாணிக் குண்டுகளை,கொத்தோடழிக்க,பொல்லா
பொஸ்பரசு பொதியங்களையும் சோடிய சோதாக்களையும்,
உஸ்ப்பெஸ்க்கித்தானின் உருவழிப்பு உலோகங்களையும்.
கஸ்டமின்றி கரைத்தழிக்க கருவூலங்களாக.
இத்தனை இன(ழ)வழிப்புக்களையும்,
இகமிங்கு இயக்கவில்லையாம்,இருப்பாய்ந்து
இணைத்தார்கள் இலங்கையின் இனவெறி இராட்சியத்தின்
இதமில்லா இருப்பழிப்பை.
கொத்தாக கொலைந்த எம்
இனவர்களை இகம் மறந்தாலும் ஈழ இளவல்களே,நீவிர்
இதை மறந்து இருட்டிப்பிற்கு இணையலாமா?
வற்றாத வளம் மறந்து உற்றதான உவப்பிழந்து,
பற்றா ளர்களெல்லாம் பரமலோகம் பற்றெடுக்க
உற்ற துணையானானே உலக உறுப்பு உரமர்
கற்ற காதம் கலைத்தெறிய காலம் மொள்ளும்,
பெற்ற வரம் பொறுப்பெடுத்து போர் தரிக்க பாரமெடு.
விட்டால்,
விதையெல்லாம் விசமாகும்,வீரியமற்ற தரமாகும்.
பட்டால்,
பாரில் பரம குடி பாழெய்தும்,
தொட்டால் உன் தோழமை
வலுப்பெய்தும்,
வரம் வகுக்கும் வாதை பொறுப்பறிந்து போரிட
உளக் கொள்ளு,மல்லுக் கட்டும் மரபுறுத்து.
புலத்தில், உன் புலத்தில்,
பூங்காற்று புளகாங்கிதம் புலமேற்ற,
கலமேந்தும் எங்கள் காரியர் கரம் கட்டு,
குலமேந்தும் குதம் குலுங்க,
வலம் வருடும் வதம் வறட்ட,
மலத்திலும் மலருவோம்,
மணம்தானே!
மகுடம் மாட்டும்,
குணம் கொற்றோம் குலம் குருவேந்த,
ஆவணம் என்றும் அலைவதில்லை,அது
கோவணம் போல் கொலு மாறுவதில்லை,
சாவண்ணம் சரித்தாலும் சலிப்பதில்லை,
நாவண்மை நலிந்தாலும் நாடேற்றும் நாற்றிட,
பாவண்மை பரிந்தெடுக்கும் பார்,கோலாண்மை
கொலுவீற்றிருக்கும் கோமேதகம் கோலோச்சும்,
புலமே,
உன் புலத்தை புடமிட அகமெடு,
ஆர்த்தாடு ஆரணியெல்லாம் ஆற்றாக அறமிடு,
கூர்த்தாடும் குலையன்,குலமழிக்கும் கோரியன்
ஆரியனின் அதமத்தை அழித்தெடுக்க,
புலமே பூடகமாய் உன் புலத்தை பூர்வாங்கம்
புலட்சி புரட்சி போரிடு,
விரியட்டும் விதைந்த வீரியர்களின் வீரம்,
சரியட்டும் சதியர்களின் சாதக சாதகம்,மரிய
மரிக்கட்டும் மனிதமற்ற மாபாதகம்,தெரிய
செரிக்கட்டும் தேமதுர தெம்பாங்கு பாட்டெடுக்கும்,
தாரணித் தமிழமுதம் தாற்பாரிய தகமை சூட்டி,
வேரணித்து வேயட்டும் வேதினியில் வேகாத் தமிழ்,
சூடட்டும் சூசகமான சூரியத் தலைவனின்,
பாடறிந்த பாட்டெடுத்து பாரினில் பழுதடைத்து.
உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக