சனி, 20 ஜூன், 2009

ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.


ஊரோடிப் போவதென்ன உறவா?எங்கள்
வோரோடி விழைந்த நிலம் கனவா?
ஆரோடு எங்கள் வளம் விழையும்?எந்த
நீரோடு அந்தக் களம் திறக்கும்.

சாவோடு வாழ்வதென்ன வாழ்வா?எங்கள்
சகவாசம் சார்வதென்ன சலிப்பா?
`பா``வோடு வாழ்வதெல்லாம் பாடா?,தமிழ்
பாடை இங்கே பரிகின்றதுவே பாவாய்.

கானலது கண் தெரியும் காட்சி,அங்கே
கைத்தறிகள் கலைந்திருக்கும் கலட்சி
புலமெல்லாம் பூரிப்பதுவா? புகழ்ச்சி,புலம்
பூவிரித்து புலர் வெய்துமா? புரட்சி.

பாலை வனம் பார்ப்பதில்லை பசுமை,நாம்
பாலைகளாய் பரிந்தோமே வெறுமை,
காலைகளில் கலந்திருக்கும் காட்சி,நாம்
கண்ணீரில் கலந்திருந்தோம் காட்டி,நாம்
கண்ணீரில் கலந்திருந்தோம் வறட்டி,சுதந்திர வறட்சி

தீனமின்றி தினமருந்தோம் திரட்சி,நாம்
வானமன்றி வரைந்திருந்தோம் வரட்சி, இனம்
ஈனத்துடன் இகைத்திருந்தோம் இரட்சி,மன
ஊனத்துடன் உடனிருந்தோம் உரசி.இரக்க
ஊனத்துடன் உடனிருந்தோம் உரசி,

வாய் திறந்து மொழி பகர பாதை,இங்கு
பாய் விரித்து பாடை கொண்ட உவாதை,உயிர்
ஏய்த்திருக்க ஏனம் ஏந்தும் ஏக்கம்,உடல்
உய்த்திருக்க மொய்த்திருக்கும் ஈனம்,உடல்
உய்த்திருக்க மொய்த்திருக்கும்.
ஈனம் உள ஊனம்.

நோயிருக்கும் மருந்தில்லை மார்க்கம்,விழி
போயிருக்கும் போக்கில்லை தாக்கம்,விடை
விதந்திருக்க வியல்பில்லை விதர்க்கம்,எங்கும்
குதந்திருக்கும் கூனலே குதர்க்கம்,எங்கள்
கூனலே கூற்றிருக்கும் குதர்க்கம்.
வல்ல குதர்க்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்