ஞாயிறு, 21 ஜூன், 2009

பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.


கூவும் குயில் கூட்டம் குலவ வில்லையே,எந்த
சேவல் கூவும் குரலும் எங்கும் குவியவில்லையே,
ஆவல் தாங்கி ஆற்றும் அந்த அரங்கமில்லையே,ஆயின்
தாவல் ஓங்க செழிக்கும் தாய் மடியும் சுரக்கவில்லையே.

காவும் காந்த கயலாழை காணவில்லையே,
காதல் கனித்து காலை காட்டும் காளை ஏகவில்லையே,
மேவும் மேனி ஆய்ந்த ஆலை இலங்கவில்லையே,மீதில்
பாவும் பாச கோயில் குரலும் கூட கொழிக்கவில்லையே,

கூதல் கூட்டும் குளிரும் இங்கே குதையவில்லையே,
சாதல் சாட்டும் சாலை இங்கே சலிக்கவில்லையே,
போதல் போக்கி எங்கள் பூமி புலரவில்லையே,
ஆதல் ஆக்கும் அந்த மறவர் ஆயுள் அகன்றுபோகுமோ?

நெய்தல் நெய்ந்த கடல் புலிகள் களம் காணுவார்,அன்று
கொய்தல் கூட்டும் கூட்டம் கலிகள் காலம் மொய்யுவார்,
வான் வகையறிந்த வைகையார் வலம் வந்தே தீருவார்,காண்
ஊன் வீழ்த்த எங்கள் உடைமை உரியர் உள்ளம் ஊட்டூவார்.

பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
கொய்தல் ஊக்க கொடும் பகையின் கோரம் மாற்றுவார்,
வைய்தல் வகைத்த வரம் வாழ்விழந்து வையகம் அகலுமே,
உய்தல் என்றே எங்கள் ஊர்க் களங்கள் உரங்கள் ஊட்டுமே.

செந்தமிழ் வாழ்விழந்த வாழ்க்கை தீற்றுமே,அங்கு
செம்மல்களின் சேர்க்கை சேர சேடம் செயலிழக்குமே,
பைந்தமிழில் பாகை பரந்து பலம் பரத்துமே,பார்
உந்தன் உறுதி பூண்ட உயிர்க் கலங்கள் உலகுலவுமே.

கன்னல் காக்கும் காலக் கலங்கள்,
மின்னல் மீட்டுமே,அன்ன
காவடிகள் ஆன காலம் கள மகலுமே,விண்ணதிர
வேலுப்பிள்ளை வேகம் வீட்டுவான்,எங்கள்

கண்ணெதிரே காலக் கதிரன் களமாற்றுவான்,அவன்
பண்ணொலிக்க பாரில் எங்கள் பாதை மீட்டுவோம்,போர்ப்
பேரிகைகள் பேதமகற்றி நாம் முழங்குவோம்,அந்த
ஆரியனின் அதமகற்ற நாம் ஆவன இழைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்